privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைஆதார் இல்லாமல் இனி சாக முடியாது - மனுஷ்யபுத்ரன்

ஆதார் இல்லாமல் இனி சாக முடியாது – மனுஷ்யபுத்ரன்

-

தார் எண் இல்லாவிட்டால்
எனக்கு மரண சர்டிஃபிகேட் தர முடியாது
என்று சொல்லிவிட்டார்கள்.

நான் சரியாக
இன்று மாலை ஆறு மணிக்கு
இறக்கவிருப்பதாக முடிவெடுத்து
அனைவருக்கும் சொல்லி அனுப்பி விட்டேன்.

கடைசி நேரத்தில் வழிமறித்து
ஒரு எண்ணைக் கேட்டு
நிர்பந்திக்கிறார்கள்.

என்னிடம் இறப்பதற்கு
போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன
சாதிச்சான்றிதழ் இருக்கிறது
மதச் சான்றிதழ் இருக்கிறது
ரேஷன் கார்டு இருக்கிறது
கல்விச் சான்றிதழ் இருக்கிறது
எல்லாவற்றுக்கும் மேலாக
பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது
நான் பிறந்திருப்பதாலேயே இறக்க நேர்கிறது
என்பதையாவது
அரசரே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறது
நான் இன்று இறந்து விடுவேன் என்று
என் நண்பர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை
நான் நிறைவேற்றியே தீரவேண்டும்.

அரசரே
உங்கள் அக்கறை எனக்குப் புரிகிறது
நான் சொர்கத்திற்கு போவதாக இருந்தாலும் சரி
நரகத்திற்குப் போவதாக இருந்தாலும் சரி
அங்கே என் ஆதார் எண்ணைக் கேட்பார்கள்
என்பதற்காகத் தானே நீங்கள் அவசரப்படுகிறீர்கள்
நான் எங்கும் போகாமல்
இங்கேயே ஆவியாக சுற்றித் திரிந்தாலும்
ஆதார் எண் தேவை என்பதை
எனக்கு நீங்கள் புரிய வைக்கிறீர்கள்.

ஒரு மனிதன் இறந்து விடுகிறான்
அரசரே நீங்கள் அவனிடம் வருகிறீர்கள்
அவனது விழித்திரையை
திறந்து பார்க்கிறீர்கள்
அதை படம் எடுத்துக் கொள்கிறீர்கள்
பிறகு அந்த பிரேதத்தை படம் எடுக்கிறீர்கள்
பிறகு அந்தப் பிரேதத்தின் படத்தை ஒட்டிய
ஒரு ஆதார் அட்டையை
அதன் கையில் திணிக்கிறீர்கள்
இந்தக் காட்சி பயங்கரமாக இருக்கிறது
நீங்கள் பிணங்களிடமிருந்து திருடுகிறவர்களை போல
ஏன் நடந்து கொள்கிறீர்கள்?
அல்லது பிணங்களிடமிருந்து திருடும் பழக்கத்தை
ஏன் உங்களால் கைவிட முடியவில்லை?

அரசரே
ஆதார் எண் இல்லாமல்
என்னைச் சாக அனுமதியுங்கள்
சாவுக்கு பிறகு எனக்கு நிறைய
ரகசியத் திட்டங்கள் இருக்கின்றன
நான் ஒரு பூனைக்குட்டியாக பிறந்து
என் காதலிகளைத் தேடி செல்லவிருக்கிறேன்
ஒரு கழுகாக பிறந்து
உங்கள் தலைக்கு மேல் பறக்க விரும்புகிறேன்
கடவுள் எனக்கு இழைத்த அநீதிக்காக
அவரை வீடு தேடிச் சென்று பழி தீர்க்க திட்டமிட்டிருக்கிறேன்

நீங்கள் என்னை ஆதாரில் இணைத்துவிட்டால்
சாவுக்குப் பின் நான் செய்யக்கூடிய
அனைத்தும் கண்காணிக்கலாம் என்பது தானே
உங்கள் திட்டம்

அரசரே
சாவு என்பது அந்தரங்கமானது
சாவு என்பது அதிகாரத்திலிருந்து விடுபடுவது
சாவு என்பது தண்டனைகளை புறக்கணிப்பது
சாவு என்பது சட்டங்களுக்கு வெளியே இருப்பது
சாவு என்பது ஒழுங்குகளை கடைபிடிக்காதது
சாவு என்பது பூர்வீக நிலைகளுக்கு திரும்புவது
சாவு என்பது அரசர்கள் இல்லாத ஒரு தீவில் தனித்திருப்பது

அரசரே
நேற்று நீங்கள் என்னை
வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள்
இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்

மனது வைய்யுங்கள்
எனக்கு இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கிறது

நன்றி: மனுஷ்யபுத்திரன்

  1. \\நீங்கள் என்னை ஆதாரில் இணைத்துவிட்டால்
    சாவுக்குப் பின் நான் செய்யக்கூடிய
    அனைத்தும் கண்காணிக்கலாம் என்பது தானே
    உங்கள் திட்டம்\\

    அற்புதம், இந்த முழு ஆதார் திட்டத்தையே மனிதர்களுக்கு சிப் ஏற்றும் அமெரிக்க திட்டத்தின் முன்னோடியாகவே பார்க்க வேண்டியுள்ளது. அவர்களுக்குத்தான் அற்புதமான ஒரு அடிமைப்பண்ணை இருக்கிறதே தெற்காசியாவில். மருந்திலிருந்து மக்களின் கூட்டு மனநிலை சோதனை வரை எல்லாவற்றையும் செய்து பார்க்கலாம்.

  2. பிறக்கும் போதே ஆதார் உடன்தான் பிறக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமே…..

  3. 1அருமை. ஆனால் திமுக இப்போது அவாள் உரிமையோடு முறையிடும் கட்சி ஆயிற்றே. மனுசுக்கு இது ஓக்கேவா ?

  4. ஆதவ் நண்பா திmuக வில இruந்தாluம் இப்படி எழத muடியம்.அதிmuக என்ற காவிக்kooட்டத்தில் இthu சாத்தியமாguமா?

  5. ஆம் அதிமுக வெளிப்படையான காவிக்கூட்ட அடிமை. திமுக சின்ன வீடு. அண்மையில் லியோனியின் விவாதம் ஒன்றில் ஒரு பெண் பேசினார்….தாமரையை நோக்கி சூரியன் போகாது தாமரை தான் சூரியனை தேடி வரவேண்டுமாம். இதன் அர்த்தம் என்ன? நிர்வாகத்திற்கு தெரியாமலா இந்த பேச்சு வந்திருக்கும்? அப்போ அவர்களாக வந்தால் சேர்த்தி???

  6. சின்னா அவர்களே திmuக கட்சியம் அரசியல் சந்தர்ப்பவாத கட்சியே.ஆனால் அதன் ஆரம்பகால அடித்தளம்தான் இன்றய்க்kkuம் மனஸ்யppuத்திரனாய் வெளிப்படகிறthu.ஆகவேதான் அப்பாvu அவர்கள் மக்கள் அதிகாரம் மாநாட்டில் விவசாயிக்காக பேச muடிகறthu.கட்சிகluக்கான வேறபாட்டய் நாம் பகத்தாய்ந்thu அதய் மக்களின் விduதல்ய்க்காக நாம் பயன்பduத்திக்கொள்வthu என்பதம் அரசியல் நடவடிக்கயே.

    • அப்படியானால் 2G ஊழல் சரிதான்..
      ஆசிய பணக்காரன் ஆவதும் சரிதான்..
      பாட்டாளி வர்க்க புரட்சியும் சரிதான்..

  7. நன்றி ஆதவ் நண்பா.அவாள் உரிமய்யோdu muரயிdumபோthu அதய் கேள்வி கேட்கவம் மனஷ்யppuத்திரன் போன்றவர்கள் எதிர்கொள்ள வேண்duம் என்ற உங்களின் பார்வyuம் சரியே.

  8. அருமையான கவிதை. ஆதார் எண் பிரயோகம் / வேகமும் நம் நாட்டில் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

    இறந்தவரின் ஆதார் எண் தவறாக பயன்படுத்துவதை தடுக்க இது உதவும்.

    மருத்துவ மனையில்நினைவு இல்லாதநபரின் கை ரேகையை தேர்தல் பாரத்தில் (form) வைக்கும் மக்கள் உள்ள தேசமல்லவா நம் தேசம்.

  9. ராஜ்குமார் நண்பா 2ஜி ஊழலில் திமுகவை முன் நிறுத்தீயதே முதலாளிகள் அடித்த கொள்ளையை திட்டமிட்டை மறைக்கத்தான்.தர்க்கவியலாகப் பார்த்தாலும் ஜெயா சசி கும்பலுக்கு இருக்கிஜ்ற திராட்சைே தோட்டங்கள் எல்லாம் கருணாநிதிக்கு இல்லை .தாக்குதலீல் தேர்தல் பலி ஆனது திமுக .ஆனாலும் திமுக ஊழலற்ற கட்சீ என்று யாரும் வாதிட முடீயாது.ஆ.ராசாவையும் நாம் காப்பாற்ற நினைக்க வில்லை.இந்த கோணத்தில் பரிசீலியுங்கள்.குஜராத் மாடலுக்கு பலியாகி மோடியை பிரதமர் ஆக்கீயவர்கள்தான் இன்று அவறுக்கெதீராகவே திரும்பியிருக்கிறார்கள்.அவர்களை நாம் மறுதலித்தால் அது சரியாகுமா? தீனுதி

  10. ஏன் இந்த தொல்லை — ? அரசருக்கு ஒரு ஆலோசனை — அடிக்கடி – எல்லாவற்றிற்கும் சாவு உட்பட ” ஆதார் ” தேவையென்றான பின் — லேடிக்கு பிறகு ” ஸ்டிக்கர் புகழ் அரசரே ” எல்லோருக்கும் — பிறக்கும் குழந்தைகளுக்கும் ஆதார் ஸ்டிக்கர் என்றும் மறையாமல் இருக்கும்படி — பச்சை குத்துவது போல — அவனவன் முதுகில் அல்லது தாங்கள் விரும்பும் இடத்தில் குத்திவிட்டால் — தேவையான போது விலக்கி பார்த்துக்கொள்ள எளிதாக இருக்கும் ….. இந்த குத்தும் காண்ராக்ட்டை தங்களின் விருப்பமான கார்ப்பரேட்டுகளுக்கு அளித்து குதூகளியுங்கள் …. எப்படி நம்மளோட ஐடியா …. !!!

Leave a Reply to சின்னா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க