privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைவெள்ளக்காரங்கிட்டயே அடிமையா இருந்திருக்கலாம் !

வெள்ளக்காரங்கிட்டயே அடிமையா இருந்திருக்கலாம் !

-

சுதந்திர தினம் குறித்து மக்களின் கருத்தறிய காஞ்சிபுரம் நகரத்தை பெரும் மழையில் வலம் வந்தோம்.

சிலர் சுதந்திர தினம் குறித்து சுதந்திரமாக கருத்து தெரிவிக்கத் தயங்கினர். மக்கள் தங்களது பிரச்சினைகைளக் கூறினாலே “ஆன்டி இன்டியன்” என்று முத்திரை குத்துகிறார்கள் காவிக் கட்சியினர்.  அதனாலென்ன? “என் போட்டவோட நான் சொன்னத கொட்ட எழுத்துல போடு.. கொண்டாடுறவனுங்க என் வீட்டுக்கு வரட்டும் நான் பாத்துக்கிறேன்,  என்கிறார்கள் உழைக்கும் பெண்கள்!  சிலரோ எந்த பேப்பர்ல போடுவீங்க? நாளைக்கே போட்டுடுவீங்களா? போலிஸ் பிடிச்சுக்குமே என்று கேட்டனர்!

சுதந்திர தின கேள்வி, பேட்டி என்றதுமே போலீசிடம் சிக்கிய கைதி போல அச்சப்படும் தொழிலாளிகள், “நாட்டு நடப்பு அப்படி இருக்குதுப்பா. உண்மைய சொன்னா எங்களுக்குதான் சிக்கல்” என்று ஆரம்பித்து உள்ளக் குமுறலை கொட்டுகிறார்கள். அவர்களில் சிலரை சந்தியுங்கள்.

சங்கர், எம்.பி.ஏ, தனியார் நிறுவன ஊழியர்

நம்ம சுதந்திரத்த நம்ம தான் பாத்துக்கணும். யாரையும் நம்பி பிரயோஜனம் கிடையாது. வெள்ளக்காரன் அப்ப இங்கிருந்து ஆண்டுட்டு இருந்தான். இப்ப, அவன் நாட்டலருந்தே ஆளுறான். அவன் அரசியல்வாதிய ஆளுறான். அரசியல்வாதி நம்மள அடிமையா நடத்துறான். என்ன பொருத்த வரைக்கும் 71 வருசமெல்லாம் ஒரு பெருமை கிடையாது. படிப்புக்கேத்த வேலை இல்லை, சம்பளமும் இல்ல. 71 வருக்ஷம் சுதந்திரம் கிடைச்சு என்ன பலன் சொல்லுங்க?

மாலா, ஜெயா – மருத்துவமனை துப்புரவு தொழிலாளிகள்.

சுதந்திரமா?…(சிரித்துவிட்டு…) வெள்ளக்காரன்கிட்டயே அடிமையா இருந்திருக்கலாம்.. அடிச்சுட்டு ரொட்டியாவுது கொடுத்திருப்பான். இவனுங்க சுதந்திரனுமுட்டு இருக்கறத எல்லாம் புடுங்குறானுங்க.

ரெண்டு ரூமு, பிரிட்ஜ் இருந்தா ரேஷன் கிடையாதாம். கஷ்டபட்டு வயித்த வாய கட்டி கௌரவமா இருக்க ஒரு வீடு கட்டுனா ரேஷன் கட்டாம். அப்ப.. ரோட்டுல பொங்கி… தின்னுட்டு.. நடுத்தெருவுல தான் படுத்துக்கணும் போல. GST -னா இன்னானே தெரியல. இட்லி சாப்பிட்டதுக்கு 40 ரூபான்றான். இனி, பசிக்கு சாப்பிட கூட முடியாது போலருக்கு. என்ன மாதிரியான வேல செய்யுறோம். வீட்லயும் நிம்மதி இல்ல. இவனுங்களும் அவன் பங்குக்கு சாவடிக்கிறானுங்க…

நான் சொன்னதெல்லாம் கொட்ட எழுத்துல ஃபோட்டோவோட போடுங்க..சுதந்திரம் கொண்டாடுறவனுங்க எங்க வீட்டுக்கு வரட்டும் பாத்துக்கறேன்!

விஜய குமார், வயது-40,  ஆட்டோ டிரைவர்

சுதந்திரமல்லாம் எங்களுக்கு கிடையாதுன்னு எழுதிக்கோங்க. இந்த ஆட்டோ என் தெய்வம். இ்ப்ப ஒரு சவாரி போனேன். இறக்கி விட்டுட்டு மீதி வாங்குறதுக்குள் ஒரு போலீஸ் முன்னாடி லத்தியிலயே ஓங்கி அடிச்சுது. புது ஆட்டோ அப்படியே பெரிய கீறல் விழுந்துடுச்சு. கேட்டா,எவ்வளவு நேரம் இங்கயே நிறுத்துவ-ன்னு கேக்குறான். 200 ரூபாயயும் புடுங்கிட்டான். அது மட்டும் இல்ல. அந்த கீறலுக்குடிங்கரிங் பண்ணி பெயிண்ட் அடிச்சா 1000 ரூபா ஆயிடும்.

இதுல எங்கங்க எங்களுக்கு சுதந்திரம்? வயித்துக்கு சாப்பிட முடியல. GST -ன்றான் , வெல எல்லாத்தயும் ஏத்திட்டான். 400 ரூபா சம்பாதிச்சா 200 ரூபா மாமூல். எப்படி கேள்வி கேட்பேன்? குடும்பத்த கவனிக்கனுமே. எவ்ளோ பிரச்சினைகள் இருக்கு.. எத சொல்றதுன்னு தெர்ல.. எப்படி தீக்கிறதுனும் தெரியல.. எல்லா ஆட்டோ காரங்களுக்கும் இதான் நிலை. என்ன சுதந்திரம் இருந்து என்ன பிரயோஜனம். வயித்த கழுவ எதயும் கேள்வி கேட்க முடியல…

குமார், வயது-50, நகராட்சி ஊழியர்

நாடு நாடா சுத்தி நம்ம நாட்ட விக்கிறத தவிர வேற எந்த வேலையயும் செய்யல பிரதமரு. நம்ம நாட்டுல என்ன வளர்ச்சி இருக்கு. ஒண்ணும் கிடையாது.

சின்ன கொழந்தயக் கேட்டாக்கூட சொல்லும், சும்மா ஊர சுத்துர மோடிய பத்தி…வெளிநாட்டு முதலாளிங்க கூட கூட்டு வெச்சு நம்ம நாட்டுல வெளிநாட்டு பொருள விக்கிற ஏஜென்டா இருக்கற மோடியப் பத்தி எனக்கு தெரியாதா? (இப்படியெல்லாம் பேசினா நாளைக்கு உன்ன கூண்டுல போட்றுவாங்க என அருகில் இருந்தவர் சொல்ல) அவன் அப்பவூட்டு காசுலயா எனக்கு சம்பளம் வருது… நான் பயப்பட. வரிப்பணத்துல சம்பளம் தர்றான்.. எனக்கு பயமெல்லாம் கிடையாது. சுதந்திரம் எல்லாம் சும்மா!

விநாயகம்,வயது- 25, சலூன் கடை

என்னோட கருத்து வேற மாதிரி இருக்கும். நம்ம அரசியல்வாதிங்க சரி கிடையாது. சுத்தி, சுத்தி எத்தன கட்சி, எத்தன தலைவரு ஆனா ஜனங்க கஷ்டப்பட்டாதான் சோறு. எல்லாரையும் போலத் தான் நானும்.. வீடு கடை, முடிஞ்சா பிக்பாஸ்னு போய்டுவேன். ஜல்லிகட்டுக்காக சேர்ந்த கூட்டம் ஏன் விவசாயிகளுக்காக சேரலன்றதுதான் என்னோட ஆதங்கம்.

நீ ஏண்டா கொழந்தைக்காக போராடுற மொதல்ல? அம்மாவ காப்பாத்துடா. கொழந்தய அம்மா காப்பாத்திக்கும். அம்மாதான் விவசாயி அவனோட குழந்த மாடு; அம்மாவே இல்லாம குழந்த என்னங்க பண்ணும்? சரி.. சுதந்திர நாள சுதந்திரமா கொண்டாடுறமா? இல்ல, ஏழு அடுக்கு பாதுகாப்பு, எட்டு அடுக்கு பாதுகாப்பு னு போட்டு கொண்டாடுறானுங்க.. விவசாயிய காப்பாத்தவே வழி இல்லாத இந்த  நாட்டுல சுதந்திரத்த டிவி -யிலதான் கொண்டாடணும்.

மகேஷ், லோடு வண்டி டிரைவர்

என்ன பொருத்தவரைக்கும் பணக்காரன் கொள்ள அடிக்கறதுதான் சுதந்திரம். குழந்தைக்கு ஒரு கிராம் நகை எடுக்க போனா ஆயிரத்தெட்டு வரி, கூலினு எல்லாத்தையும் நம்ம கிட்ட புடுங்குறான். அதையே திருப்பி கொடுத்தா பாதி விலைக்கு கூட எடுக்க மாட்டான். என்ன மாதிரி டிரைவருங்களுக்கு சவாரிய பொருத்து தான் சாப்பாடு. 35 ரூபாயில முடிய வேண்டிய சாப்பாடு இப்போ 48 ரூபா ஆகுது. கேட்டா GST -யாம். என்ன எழவுன்னே தெர்ல; வரி போடுறோம். ஆனா விலையெல்லாம் ஏறாதுன்னு சொன்னான். இப்போ எத பாத்தாலும் வாங்க பயமா இருக்கு.

வண்டிக்கு பாக்கி கட்டணும். அதுக்கு GST -யும் சேர்த்து கட்ட சொல்றான். ஆனா என்னுடைய வருமானம் மாறவே இல்ல. கவர்மென்ட் எங்க இருக்குன்னு தெரியில. எந்த வேலைக்கு போனாலும் அலைய விடுறான். ஒரு சர்டிபிகேட்ட வாங்க அங்க போ இங்க போன்னு துரத்துறான். அரசியல்வாதிங்க கிட்ட, அவனுங்கள பத்தி  நா சர்டிபிகேட் கேட்டுருக்கணும். அப்படி கேக்காம ஓட்டு போட்டது நம்ப  தப்பு!

செய்தி, புகைப்படம் : வினவு செய்தியாளர்

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. இந்த இந்த விரக்திகளையும் , வெறுப்புகளையும் , கோபங்களையும் சுயநலமாகவும் சுய பச்சதாபமாகவும் மதவெறியாகவும் perversion எனப்படும் மக்களின் கீழ்தர மிருக சிந்தனைகளை தூண்டிவிட்டு ஒன்று சேரவிட விடாமல் தடுக்கவே மது சினிமா கிரிகெட்டு பிக் பாசு யோகா சோதிடம் மற்றும் பாஸ்கரன் போன்றவை. அறிந்து கொள்ளுங்கள் மக்களே. அறிந்து கொள்வது மட்டுமில்லை களத்தில் இறங்குங்கள். மதுக்கடைகள் போல் எல்லாவற்றிக்கும் வீதியில் இறங்கினாலே தீர்வு இனி.

  2. நடப்பதை எதார்த்தமா ..தைரியமா கூறிய மக்களுக்கு ஒரு சலூயூட் … அடக்குமுறையை எதிர் காெள்ள மனயுறுதி படைத்த மக்களிடம் எந்த காெம்பனும் நெருங்க முடியாது … !

  3. மணிகண்டனுக்கு ஏன் இவ்வளவு கோபம், மக்கள் கண்டிப்பா இந்த நாட்ட விட்டு விரட்டுவாங்க வினவ இல்ல கார்ப்பரேட்டு கால நக்கி பிழைக்கும் *******…

  4. மணிகண்டன் போன்ற பிஜேபிகாரர்கள் துப்புரவு வேளைகளில் ஈடுபட்டு விட்டு வந்து மேல் உள்ள வியாகானத்தை கூறினால் சரியாக இருக்கும். செய்வாரா மணிகண்டன்?

    //துப்புரவு பணியாளர்களை தெருத் தெருவாக சென்று தமிழகம் முழுக்க சந்தித்து பாருங்கள். அப்போது தான் கள நிலவரம் புரியும். அதில் Bc mbc இருப்பதாக தொடர்ந்து கூறப்படட்டு வருகிறது. ஆம் உண்மை தான் யாரும் மறுக்க வில்லை. தங்கள் ஆதிக்கத்தை பயன்படுத்தி Sweeper என கிட்டதட்ட 20000ரூ சம்பளம் வரக் கூடிய அரசு பணியை பெற்றுக் கொண்டு வரும் ஆதிக்கத் சாதியினர், பெரும்பாலும் துப்புரவு பணி செய்வதில்லை. அந்த சம்பளத்திலிருந்து 6000 ரூபாயை ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த மக்களுக்கு அளித்து மேல் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, தங்களுக்கு பதில் ஆளாக அவர்களை தான் துப்புரவு பணி செய்ய வைக்கிறார்கள், அவர்கள் வேறு வேலை செய்து கொள்கிறார்கள். தமிழகம் முழுக்க துப்புரவு பணியில் இருக்கும் “பதில் ஆட்கள்” ஏதோ ஒரு Bc, Mbcன் sweeper என்கிற அரசு பணியை 5000, 6000 கூலிக்கு செய்து கொண்டு வருகிறார்கள் என்பதை களத்தில் இறங்கி தெரிந்து கொள்ளுங்கள். ஆதிக்க சாதியினரின் இந்த ஆதிக்கம், அயோக்கியத்தனமானது.இந்த கள எதார்த்தம் புரியாமல் பேசுவது துரதிஸ்டவசமானது.
    ( கக்கூஸ் Rti Report களை, அரசு மற்றும் Ngo தரும் பொய் அறிக்கைகளை மட்டும் நம்பாமல் களம் கண்டு எடுக்கப்பட்டது.)//

    • அவரா? வேண்டுமென்றால் புதிதாக ஈசான மூலையில் இருக்குமொரு வேப்பமரத்தின் தளிர்களை பறித்து ஜலம் விட்டு அலம்பி சூர்ய ஒளியில் உலர்த்தி மந்திரம் சொல்லி கொண்டு வந்து ரோட்டில் கொட்டி விடுங்கள், புதிய விளக்குமாறால் பெருக்கி விட்டு செல்வார்.

      உம்மை பார்த்தால் பீ அள்ள சொல்வீர் இல்ல சாக்கடையில் அடைப்பெடுக்க சொல்வீர் போலுள்ளதே ?

    • ஆதாரங்கள் இருந்தால் அதை நீதிமன்றம் எடுத்து செல்லுங்கள் குற்றவாளிகளை தண்டியுங்கள் அப்படி செய்யாமல் சும்மா வெட்டியா புரளி பேசிக்கொண்டு இருக்க வேண்டாம்.

  5. தோழர்களுக்கு வணக்கம் மதுவுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வரவேற்க்க தக்கவை தான் சரியானது தான் இந்த சமூக சீரழிவுக்கும், குடும்ப வன்முறைக்கும் இன்னும் பல பிரச்சினைக்கு மது தான் முக்கிய காரணம் உண்மை. ஆனால் தன் கணவர் குடிக்கும் மதுவுக்கு போராட்டம் நடத்தும் பெண்கள் தன் தவற்றை மறைத்து மது குடிப்பது என்பதை முன்னிலைப்படுத்துகின்றார்கள். பெண்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பதில் ஆடம்பரத்தேவைக்கு மக்கள் மாறினார்கள் அதற்கு காரணம் பெண்கள். தொடர்களை பார்த்துவிட்டு அதைபோன்று நாமும் வாழ வேண்டும் என்று கணவில் குடும்ப உறவுகளை சீரழித்தது யார்? ஆண்கள் சம்பாதிக்கும் வருமாணத்திற்கு ஏற்றார்போல் தனது தேவைகளை பூர்த்தி செய்யாமல் ஆடம்பரத்தேவைக்கு ஆண்களை வதைத்தது பெண்கள் தான். குடும்ப உறவுகளை சீரழித்தது யார். குடும்ப வண்முறைக்கு யார் காரணம். தாய் தந்தை மாமனார் மாமியார் கூட்டுகுடும்ப உறவுகளை உடைத்து விட்டு பெண்கள் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள் கேவலம். போராடும் பெண்கள் அனைவரும் குடும்ப உறவுகளை ஒன்றினைத்து நன்மை தீமைகளை கண்டறிந்து அதற்கேற்றார்போல் குடும்பங்களை வழிநடத்துகிறார்களா இவர்களை என்ன செய்வது. மதுவுக்கு எதிராக போராட வந்துவிடுகிறார்கள். அவரவர் தன் குடும்பத்தை ஒற்றுமை குலைக்காமல் காத்தால் மது என்ற வாடை மறைமுகமாக தான் இருக்கும். அது வெளிப்படைத்தன்மை அடையாது. மதுகுடிப்பவர்கள். மதுஅடிமைகள், கௌரவ குடிகார்கள் என பல்வேறு வகை உண்டு. தன் பிள்ளைகள் சரியான நண்பர்களோடு தான் உறவாடுகிறார்களா, தன் கணவன் சரியான பாதையில் தான் செல்கிறாரா, தன் பெண்பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், வெளியில் சென்று வந்த கணவனையோ, பிள்ளைகளையே அவர்களின் களைப்பு நீங்க அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது கிடையாது. தொலைக்காட்சி தொடர், அதை சார்ந்த வெட்டி பேச்சு, வாய் சவடால். தனது தேவைகளை தெரிவிப்பது போன்ற பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல். குடிக்கிறார்கள் குடித்துவிட்டு பிரச்சினைகள் நடக்கின்றது. என்று புலம்புவதில் அர்த்தமில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக திருந்தாமல் தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் சகோதரத்துவம் என்ற கண்னோட்டத்தோடு இருந்தால் அவன் மதுவின் பின்னால் செல்லமாட்டான். மது மறைவாகவே தான் நடக்கும்.

  6. மது சமூக சீரழிவு, குடும்பவன்முறை, உடல்நலக்கேடு என்ற பல்வேறு காரணங்களாக சொல்லப்படுகின்றது. பெண்கள் படிக்கும் பள்ளிகள் அருகில் மதுக்கடைகள் இருக்கின்றது. பெண்கள் தனியாக சென்று வரமுடியவில்லை. என்றெல்லாம் முகம் சுலிக்கும் பெண்கள் இந்த அவலத்திற்கு யார் காரணம் என்பதை மறந்து விடுகின்றார். ஏனென்றால் தான் செய்த தவற்றை மறைத்து விட்டு மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி தான் நல்லவன் என்று காட்டிக்கொள்ள துனிகின்றார்கள். இந்த வகையினர். பள்ளி படிக்கும் மாணவன் மது அருந்துகின்றான். யார் காரணம் பெற்றோர்கள். சமீபத்தில் வாட்ஸ்அப்பில் பள்ளி மாணவிகள் மது அருந்துவது போல் புகைப்படம் வெளியானது. இதற்கு யார் காரணம் பெற்றோர்கள். ஆபாசமான உடைகளை தன் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்தவர்கள் இவர்கள் தானனே, சரியான முறையில் வளர்க்க தவறியவர்கள் இவர்கள்தானனே. இதை எல்லாம் மறைத்துவிட்டு மதுக்கடைக்கெதிராக போராடுகிறார்கள் வெட்ககேடான விசயம். அதை விட கேவலமான செயல்கள் தங்கள் பிள்ளைகள் செய்யும் போது அதை கண்டிப்பதோ. தவறை உணர்த்தி நல்வழிப்படுத்துவதோ கிடையாது. அது தான் பிரச்சினை மதுக்குடிப்பவர்களால் ஏற்படும் சமூக சீரழிவை காட்டிலும் மிகவும் படுக்கேவலமானது மதுக்குடிக்காமல் ஏற்படுத்தும் சமூக சீரழிவை. இதை உணர்ந்தால் தான். தானும் தவறு செய்கின்றோம். அதனால் தான் இந்த பிரச்சினை வருகின்றது என்ற உணர்வு வேண்டும் அது வளராத வரை மதுக்கெதிரான போராட்டும் என்பது காகிதப் புலி ச(சீரழிவை தடுப்போம் என்ற வாய்ச்சவடால்)

  7. குடும்ப உறவுமுறையில் இருந்து பெண்களை பிரித்தார்கள், பிறகு குடும்பத்தலைவனை பிரித்தார்கள், பிறகு குழந்தைகளை பிரித்தார்கள். இதற்கு யார் வழி விட்டது இந்த பெண்கள் தான். பெண்களை அத்தியாவசிய தேவைக்கு பதிலாக ஆடம்பரத்தேவைக்கு பயன்பட்டன, ஆண்கள் மது பாலியல் வன்முறை சீரழிவுக்கு பயன்படுத்தப்பட்டனர், குழந்தைகளை கூடா நட்பு, சமூகசீரழிவு,பிற்போக்குதனம் போன்றவற்றால் பிரிக்கப்பட்டனர் இதனால் தான் இந்த பேராபத்து நிகழ்ந்தது. மதுவுக்கு எதிராக போராடும் பெண்கள் முதலில் குடும்பங்களை ஒன்றினைந்து சமூகவாழ்வை ஒன்றுபடுத்த போராடட்டும் அதற்கெல்லாம் தயார் அல்ல. அது குற்றமாகும் அதெல்லாம் முடியாது என்பார்கள். ஏனென்றால் என்னை யாரும் குற்றம் சொல்லக்கூடாது. மற்றவர்களை நான் குற்றம் சொல்லாம். என்பது தான் அனைவரின் சிந்தனையாக உள்ளது. நன்றி

  8. தினகரன்,
    மிக மிக மிக தவறான பார்வை. தெரிந்தோ தெரியாமலோ மூல காரணிகளை விடுத்து பெண்களை சாடுகிறீர். எல்லாவற்றிக்கும் காரணம் முதலாளித்துவம் திணிக்கும் நுகர்வு வெறியும் அதை நாள்தோறும் திணிக்கும் தொலை காட்சியும், அதை பார்ப்பதே ஓய்வு வேலையாக பெண்களுக்கு இருக்க செய்த பெண்ணடிமைத்தனம். பாருங்கள் முரண்நகை, பெண்கள் தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்து குடும்ப அமைப்பை சீரழித்ததாக சொல்கிறீர், இது அதே நாடகங்களில் வரும் எண்ணற்ற மருமகள் – மாமியார் வீண்பழி சுமத்தும் காட்சிகளை நினைவு படுத்துகிறது உங்களின் பழியை பெண்கள் மேல் சுமத்துவது. இந்த முதலாளித்துவ நஞ்சால் மக்கள் அனைவரும் தான் corrupt ஆக்க பட்டிருக்கிறார்கள்.

    நுகர்வுவெறியால் கொலை செய்யும் அளவுக்கு போய்விட்ட நிலையில் ஆண்களென்ன பெண்களென்ன ?

    //ஆண்கள் சம்பாதிக்கும் வருமாணத்திற்கு ஏற்றார்போல்//
    அஹும் எப்படி எப்படி சுரண்டலையும் நாளுக்கு நாள் பறிபோகும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்காமல் சிக்கனமாக எத்தனை நாள் ஐயா குடும்பம் நடத்துவது? ஆடம்பர பொருட்களை விடுங்கள், அத்தியாவசிய பொருட்களே இப்போது கிடைக்காதாமே? ரேசன் வெட்டு கேஸ் வெட்டு..எல்லாம் வருகிறதே ஐயா? இதற்கும் பெண்களா காரணம்?
    ஏன் தண்ணி இல்லா ஊரில் கூட ஓடி ஓடி மதுக்கடை திறக்கும் அரசின் மற்றும் அரசை இயக்கம் முதலைகளின் நோக்கம் என்ன? மக்களின் ‘குடிக்கும் ‘ சுதந்திரம் பாதுகாக்க பட வேண்டுமென்பதா?
    இதையெல்லாம் விட்டுவிட்டு குடுமபங்கள் ஒன்றிணைந்து சமூக வாழ்வை ஒன்று படுத்த போராடுவதா? அப்படி என்றால் என்ன? கொஞ்சம் விளக்குங்கள்.

    • முதலாளித்துவம் திணிக்கின்றான் என்று அவன் மீது பழி போடுகின்றீர்கள். அது முற்றிலும் தவறு தோழரே ஒரு முதலாளி தன்னுடை பொருட்களை சந்தைபடுத்துதலில் நோக்கம் கொள்ளை இலாபம். மக்கள் ஒரு நுகர்வோன் அவ்வளவு தான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது பெண்களை குறை சொல்வது கிடையாது தன்னுடைய கடமையில் இருந்து தவறி நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகுகிறார்கள் என்கின்றேன். சாதாரணமாக அரிசி வாங்கி மாவைரைத்து இட்லி சாப்பிடும் பழக்கம் குறைந்து கடையில் ரூ15,20. 25 விலைகளில் மாவை வாங்கி ஊற்றி கொள்ளலாம். என்ற எண்ணம் இது யார் தவறு முதலாளியா? பெண்களா?
      சமூக காரணங்களை தனிநபர் ஒழுக்கத்தோடு இணைக்காதீர்கள். ரேசன் வெட்டு, கேஸ்மானியம் வெட்டு என்பது அரசு சாதாரண மக்களின் மீது ஏவப்படும் அடக்குமுறை அதற்கு மாற்று கருத்துகிடையாது. ஆனால் நான் சிக்கனமாக குடும்பம் நடத்துவது வேறு. தனது வருமாணத்திற்கு ஏற்றார்போல் குடும்பம் நடத்துவது என்பது வேறு. மக்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யாமல். ஆடம்பரத்தேவையை பூர்த்திக்கு சென்று வீடுகிறார்கள். அரசு மருத்துவமனை தரமானது கிடையாது என்பார்கள். கிளினிக் சென்று 500.1000. கொடுப்பார்கள் . உயர்ரக ஸ்கேன் எக்ஸ்ரே என்றால் அரசு மருத்துவமனைகளை நாடுவது. அரசு பள்ளி என்றால் கல்வி தரம் கிடையாது மெட்ரிக்குலேசன் பள்ளியின் கல்வி தரம் உயர்வானது என்கிறார்கள். சாதாரண அடிப்டை மாதசம்பளம் 17.000 வாங்கும் கார் ஓட்டுநர் . பி ரி கே ஜி சேர்க்க சிபிஎஸ்சி பள்ளியில் 3 வயது உடைய குழந்தையை ரூ1.00.000 கட்டணமாக சேர்கின்றார். நன்கொடையோடு சேர்த்து தான். வேறு யாரும் கிடையாது எனது நண்பர் தான். அவர் வருமாணத்திற்கு ஏற்றார்போல் சாதாரண பள்ளியில் சேர்க்கும் எண்ணம் போய்விட்டது. இது முதலாளி உருவாக்கும் திட்டமா? அதன் மீது மோகம் கொண்டது யார் குற்றம். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் தோழரே நான் சொன்னது சிறு விவரம் தான் இது போல் தன் மகன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றும் பிள்ளைக்கு 1.47.000 என்பீல்டு பைக் எடுத்து தரும் குணம் முதலாளியா கொடுத்தான் இல்லை. இங்கு தான் முதலாளியின் சூழ்ச்சியும் அடங்கியுள்ளது. தங்கள் வருமாணத்திற்கு உகந்ததா இல்லையா என்று யாரும் யோசிப்பதில்லை. இங்கு தான் மக்கள் தன்னுடைய அத்தியாவசிய தேவைக்கு பதிலாக பணத்தை ஆடம்பத்தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.
      9ம் வகுப்பு படிக்கும் மாணவணிடம் 14.000 ஓபோ போன் எதற்கு யார் வாங்கிகொடுத்தது. முதலாளி வந்து உன் மகள் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு போன் வாங்கிகொடுங்கள் என்றானா. இன்று பள்ளியில் படிக்கும் பெரும்பாலும் மாணவனிடம் உயர் ரச செல் போன் வைத்திருக்கினறான். தோழரே கொஞ்சம் நாம் செய்யும் தவறையும் சீர்தூக்கி பாக்க வேண்டும் முதலாளி செய்கின்றான். நுகர்வு கலாச்சாரம் உருவாக்கின்றான். என்று அவன் மீது பழியை போட்டுவிட்டு தாம் தப்பித்துக்கொள்கின்றோம். இங்கு தான் முதலாளித்துவம் வளர்கின்றது. மனிதர்கள் அடங்கிவிடுகின்றார்கள்.

      • ம்ம் ஆடு தானாகத்தான் வந்து மஞ்சக்குளித்து மாலை போட்டு கழுத்த நீட்டுது ஏன் பூசாரியை நோவான் என்கிறீர்…
        சரி பிரித்து மேய்வோம் –

        //ஒரு முதலாளி தன்னுடை பொருட்களை சந்தைபடுத்துதலில் நோக்கம் கொள்ளை இலாபம். மக்கள் ஒரு நுகர்வோன் அவ்வளவு தான்.//

        தினகரன், பிரச்சனை என்னவென்றால் முதலாளி வெறுமனே ‘சந்தைப்படுத்தவில்லை’ மறைமுகமாக முதலாளிதானே தானே சந்தையையே உருவாகுகிறான்??! அரசு ஊடகம் எல்லாம் அதன் கருவிகள்தானே? கடமையிலிருந்து தவறுவது என்ன? தலைமுறை தலைமுறையாக இதே அமைப்புக்கு பழக்கபட்ட மக்கள் அடிமையாவதில் அவர்களை நோக கூடாது. மக்களுக்கு தான் மாற்று என்பதே பிரக்ஞையில் இருந்தே அகற்றி விட்டார்களே.

        .//சாதாரணமாக அரிசி வாங்கி மாவைரைத்து இட்லி சாப்பிடும் பழக்கம் குறைந்து கடையில் ரூ15,20. 25 விலைகளில் மாவை வாங்கி ஊற்றி கொள்ளலாம். என்ற எண்ணம் இது யார் தவறு முதலாளியா? பெண்களா?/

        இன்று நீங்கள் கூறுவதை போல் அரிசி வாங்கி மாவரைத்து இட்லி சாப்பிடாமல் கடையில் மாவாங்கி ஊற்றியாக வேண்டியளவு வாழ்கையை பரபர நெருக்கடியாகியது எது?
        பெண்களா முதலாளிகளா? ஹிஹி இதில் என்ன அது தனி நபர் ஒழுக்கம்?

        //ரேசன் வெட்டு, கேஸ்மானியம் வெட்டு என்பது அரசு சாதாரண மக்களின் மீது ஏவப்படும் அடக்குமுறை அதற்கு மாற்று கருத்துகிடையாது. ஆனால் நான் சிக்கனமாக குடும்பம் நடத்துவது வேறு. தனது வருமாணத்திற்கு ஏற்றார்போல் குடும்பம் நடத்துவது என்பது வேறு//

        அரசு என்பது என்ன? இந்த நாட்டு அரசு முதலாளிகளின் அரசு, அதற்கு வேறாக மூளை இல்லை, முதலாளியின் மூளையே அதன் மூளை. முதலாளிகளின் நோக்கம் இதுதான் புரிந்து கொள்ளுங்கள் – அரசு எனும் கருவியின் செலவீனத்தை குறைப்பதே அதற்குதான் இந்த மக்களின் வயிற்றில் அடி. அரசு இப்போது வெறும் காவல் மற்றும் ராணுவம் எனும் இரு பற்கள் கொண்ட ஒரு ஜந்துவாக இருந்தால் போதும் என்பதே. இதில் என்ன ‘அரசு அடக்குமுறை’ , இது நேரடியாக முதலாளித்துவம் அடிக்கும் அடி. சிக்கனமா இருப்பதா?

        //மக்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யாமல். ஆடம்பரத்தேவையை பூர்த்திக்கு சென்று வீடுகிறார்கள். அரசு மருத்துவமனை தரமானது கிடையாது என்பார்கள். கிளினிக் சென்று 500.1000. கொடுப்பார்கள் . உயர்ரக ஸ்கேன் எக்ஸ்ரே என்றால் அரசு மருத்துவமனைகளை நாடுவது. அரசு பள்ளி என்றால் கல்வி தரம் கிடையாது மெட்ரிக்குலேசன் பள்ளியின் கல்வி தரம் உயர்வானது என்கிறார்கள். //

        யார் இப்போது அப்படி தினகரன்? ஒருவேளை நடுத்தர வர்க்கத்தை சொல்கிறீர் என நினைத்தாலும் அவர்களே இப்போது சிங்கியடிக்கிரார்களே? அரசு அரசு ஆஸ்பத்திரி பள்ளி எல்லாம் நார விடுவது ஏன்? வினவில் தனியார்மய புகுத்தல் பற்றி எண்ணற்ற கட்டுரைகள் இருக்கின்றன, படியுங்கள் உங்கள் பார்வை மாறும். நானும் முதலில் உம்மை போல் மக்களை நொந்த பேர்வழி தான். அரசு முதலாளிகளின் நலன் என்ற ஒரே காரணத்துக்காக கல்வி மருத்துவம் போன்றவற்றை வேண்டுமென்றே சீரழிய விடுவதால்தனே மக்கள் நீர் சொல்வது போல் கிளினிக் மெட்ரிகுலேசன் போகிறார்கள்? இதில் தூண்டப்படும் சுயநலமும் உண்டு, இவற்ற்றை பற்றி தனியார்மயம், நுகர்வு பகுதியில் அருமையான கட்டுரைகள் உள்ளன. படிக்கவும்.

        போகவும் வரவும் மட்டுமே பயன்படும் ஓர் பொருள் பைக் என்ற ஒரு உண்மையை விடுத்து பைக்கில் போனால் பெண்கள் எல்லாம் பின்னால் ஓடிவருவார்கள் என்று பசங்களுக்கும், ஓடி போகுமளவு பெண்மையை பொருளாக்கியும் கீழ் சிந்தனையை தூண்டும் விளம்பரம் யார் போடுவது? பிள்ளை ஏன் வேலை இல்லாமல் சுற்றுகிறான் ?
        முதலாளித்துவம் இப்போது கொஞ்சும் நடுத்தர வர்க்க பெற்றோர் போன் வாங்கி கொடுத்திருக்கிறார்கள், உழைக்கும் மக்கள் பிள்ளைகள் எல்லாம் அப்படியா? வருமானமே நாளுக்கு நாள் சுருங்கி கொண்டும் நிரந்தரம் இல்லாமலும் போகும்போது எப்படி தினகரன் வருமானத்துக்கு உகந்ததா என கணக்கு பார்க்க முடியும்? பச்சை தண்ணீருக்கு கூட சொற்ப வருமானத்தில் ஒதுக்க வேண்டிய நிலையில் எப்படி சிக்கனம் பார்ப்பது ? காற்றை குடிப்பதா? இந்த நிலைக்கெல்லாம் காரணம்?

        • தோழரே நீங்கள் ஒரே பக்கம் இருந்து பார்க்கீறிர்கள். முதலாளி உருவாக்குகின்றான் செயற்கையாக உருவாக்குகின்றான். அதெல்லாம் உண்மைதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை தன்னுடைய வருமாணத்தேக்கு ஏற்றா் போல் ஏன் செலவீனங்களை கூடுதலாக்குகிறார்கள். சரி நடுத்தர வர்க்கம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிப்பதை பற்றி நான் சொல்லவில்லை. ஆனால் சாதாரண அடித்தட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளை பெரும்பான்மையாக மெட்ரிக்குலேசன் பள்ளியில் தான் படிக்க வைக்கிறார்கள். நடுத்தர வர்க்கமும் மெட்ரிக்குலேசன் பள்ளியில் இருந்து தற்போது சிபிஎஸ் க்கு மாறுகிறார்கள். வருமாணம் சுருங்கிக்கொண்டு இருக்கின்றன என்கீறீர்கள் அது முட்டாள் தனமான பேச்சு சாதாரணமாக அடித்தட்டு மக்கள் ஒரு எலக்ட்ரிசியன் ஒரு நாள் கூலி 500 – 700 வரை, சராசரியாக மாதம் 18.000, பெயின்டர் 600 – 800 வரை சராசரியாக மாதம் 21.000. கொத்தனார் கூலி 800 – 1000 சராசரியாக 27.000, பிளம்பர் 1000 மாதம் சராசரியாக 30.000, சாதாரண கூலி வேலை செய்பவரி வருமாணம் என்பது உயர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு கொத்தனார் கூலி 150 மட்டுமே. எலக்ட்ரிசியன் நாள் கூலி 80 -100 மட்டுமே. இதை போன்று அடுக்கிக் கொண்டே போக முடியும் அதுவல்ல மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பதிலாக ஆடம்பரத்தேவைகளுக்கு தன்னை தானே மாற்றிக்கொண்டு விட்டார்கள். கௌரவம், மரியாதை என்ற பொய்யான மாய தோற்றத்திற்காக தன்னை மாற்றிக்கொள்கிறார்கள். நண்பரே மீண்டும் மீண்டும் தாம் செய்கின்ற தவற்றையெல்லாம் மறைத்து விட்டு சமூகத்தின் மீதும் முதலாளிகள் மீது போடுகின்றீர்கள். அரசு என்பது ஒடுக்கு முறை கருவிதான். தனியார் மயத்தின் கோர முகம் எனக்கும் தெரியும். நான் அதை பற்றி பல கருத்தரங்குகளில் நானே பேசியிருக்கினறேன். ஆனால் மக்கள் செய்யும் தவறு தான் அடிப்டை. ஒவ்வொரு தனி மனிதனும் பகுத்தறிவாதிகளாக மாறவேண்டும். சமூகம் சார்ந்த அக்கறை இல்லையென்றாலும் சரி.தான் செல்ல வேண்டிய வழியை தீர்மானித்துக்கொள்ள வேண்டும் அப்போது தான் இந்த இந்த அரசையும் அரசமைப்பு பற்றியும் அவனுக்கு தெளிவு பிறக்கும்.

          • இடையில் குறுக்கிட மன்னிக்கவும்…. போறபோக்குல அடிச்சு நெவுத்திட்டு போறீங்க….. கொஞ்சம் கூட ஈவு இறக்கம் கிடையாதா பாஸ் உங்களுக்கு….

            ஒரு எலக்ட்ரிசியன் ஒரு நாள் கூலி 500 – 700 வரை, சராசரியாக மாதம் 18.000 —

            சரி சின்ன கணக்கு. அவர், அவரது மனைவி, ரெண்டு குழந்தைகள் என நாலு பேர் வைத்தாலும் ஆளு ஒன்னுக்கு மாசத்துக்கு 4,500 தான் வருது. ரெண்டு குழந்தைகளையும் ஒரு ஆளா வெச்சா கூட 6000 தான் வருது. அதுவும் 30 நாளும் வேலை செஞ்சாதான் அது கிடைக்கும்.

            முன்ன இருந்த விலைவாசி என்ன இப்ப இருக்குற விலைவாசி என்ன…
            அப்புறம் சமூகம் சார்ந்த அக்கறைப் பற்றி உங்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆசைபடுகிறேன்.
            ————

            என்னோட புரிதலை சொல்லிவிடுகிறேன்.

            ஒரு விவசாயி….விவசாயம் செய்யறாரு….நாம சோறு சாப்புடுறோம்.\

            ஒருத் தொழிலாளி நமக்கு சட்டை தைக்கராறு, செருப்பு தேசு கொடுக்குறாரு,சாக்கடை சுத்தம் செய்யறாரு, மலம் ஜலதைஎல்லாம் கூட சுத்தம் செய்யறாங்க. குப்பையா எடுத்துட்டு போறாங்க.

            கொத்தனார் வீடு கட்டறாரு. நாம காசு கொடுத்தோ வாடைகைக்கோ அங்க பொய் தங்கறோம்.

            ஒரு பேருந்து ஓட்டுனர் பேருந்து ஓட்டறாரு நாம நாலு எடத்துக்கு போறோம் வரோம்.

            ஒரு ஆசிரியர் புள்ளைங்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கிறாரு. நாம நம்ம புள்ளைகள பள்ளிக்கு அனுப்புறோம்.(தனியார்/அரசு விவாதம் இங்கே வேண்டாம்)

            அல்லது பொதுமக்கள் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுகிறார்கள். விலைவாசி உயர்வுக்கு எதிராக போராடுகிறார்கள். PF க்காக போராடுகிறார்கள். நாம் அதனால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பலனடைகிறோம்.

            இன்னும் நெறைய சொல்லலாம்..

            இவர்கள் எல்லாம் தங்களை சமூக அக்கறை உள்ளவர்கள் என்று கூறிக்கொண்டா இதெல்லாம் செய்கிறார்கள்?. ஒவ்வொரு மனிதரும் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும்….இதெல்லாம் செய்கிறார்கள். ஆனால் பலன்களை அவர்கள் மட்டுமா அறுவடை செய்கிறார்கள்? ஒட்டுமொத்த மனித சமூகமுமே அதை உய்த்துணர்கிறது.
            ————–

            தனியார் பள்ளிகளை நோக்கி மக்கள் ஏன் தள்ளப்படுகிறார்கள் என்பதற்கு வினவிலும் நிறைய கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கிறது. பலரும் எழுதி உள்ளார்கள். பாரதி தம்பி கற்க கசடற என்று ஆனந்த விகடனில் ஒருத்தொடரே எழுதி இருக்கிறார். முடிந்தால் படிக்கவும்.

            எனவே வழியற்று தள்ளப்படும் இந்த இழிந்த வாழ்க்கையையே ஆடம்பரமாக தாங்கள் கருணையுடன் பார்கின்றீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் ஒரு தெய்வப்பிறவியாக தான் இருக்க வேண்டும்.

  9. உண்மையிலேயே எனக்கு வினவு கூட்டங்கள் மீதான வெறுப்பு மேலும் மேலும் அதிகமாக இருக்கிறது. ******* இவர்கள் நாளை பெற்ற தாயை கூட விற்க தயங்க மாட்டார்கள்.

    ******

    காரி துப்புவதற்கு கூட தகுதியில்லாதவர்கள்

    • உங்கள் பார்வையில் மாடு தாயாக இருக்க, அந்த பெற்ற தாயை-மட்டை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி என்ற பெயரில் வெட்டி கூறு போட்டு விற்க்கும் நயவஞ்சக கூட்டத்தை சேர்த்தவர் தானே நீங்கள் மணிகண்டன்? மாடுகளை அம்மாவுடன் ஒப்பிட முடிந்த உங்கள் மாட்டு மூளையால் அதே அம்மாவை(மாட்டை) வெளிநாட்டுக்கு வெட்டி ஏற்றுமதி செய்யும் போது அந்நிய செலவாணி கிடைக்குமென்று மகிழ்கின்றதே! இதற்கு பெயர் என்ன மணிகண்டன்? பச்சோந்தி தனமா? விப்சாரபுரோக்கர் தனமா? அல்லது இரண்டுமா மணிகண்டன்?

    • திரு மணிகன்டன் அவரகளோ வினவு கூட்டத்தின் மீது வெறுப்பா? அல்லது வினவு வெளிப்டுத்தும் கருத்தின் மீது வெறுப்பா? என்ற கேள்வி ஒருவரின் மீது வெறுப்பு கொள்வது என்பது தவறானது. அதாவது ஒருவர் வெளிப்படுத்தும் கருத்தின் மீது வெறுப்புக் கொள்வது என்பது அறியாமையே. நீங்கள் மாற்று கருத்தை முன்வைங்கள். அவ்வளவு தான் உங்கள் கருத்தை தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அல்ல இது விவாதம் செய்யும் இடம் அவரவர் அவர்களின் கருத்துக்களை ஆழமாக சொல்லாம் அதை விட்டுவிட்டு வெறுப்பு வருகின்றது என்றால் கருத்து சொல்லாதீர்கள்.

  10. மணிகண்டன் தயவுசெய்து காறித்துப்பி விடாதீர்கள்.உங்கள் எச்(ராஜா)சிலிலும் விஷம் இருக்க வாய்ப்பிருக்கிறது.

  11. உண்மையில் நைச்சியமாக குழப்பும் சிலரை விட நேரடியாக உள்ளதை கொட்டும் மணிகண்டனை பிடித்திருக்கிறது. ஆனால் பாவம் மணிகண்டன் தான் போகிற போக்கை பார்த்தால் இந்த நாத்தம் புடிச்ச வினவு கூட்டத்தால் மன நோயாளிஆக போகிறார் போல.

  12. நண்பரே இரு பக்கம் பார்த்து பேச நாம் என்ன சாலமன் பாப்பையா பட்டிமன்றமா நடத்துகிறோம்? நமக்கு ஒரே பக்கம் தான் மக்கள் பக்கம், மக்களின் பிரச்சனைக்கு காரணமானவர்ககளின் பக்கம் இருந்து என்ன ‘பார்ப்பது’? லிபெரல் போர்வையால் மூடிக்கொண்டு முதலாளிக்கு பக்க வாத்தியம் வசிப்பதை போலவா?
    அதுதான் ஏற்கனவே சொன்னேனே , ஏற்கனவே இவர்கள் படுத்தும் பாட்டில்தானே பிள்ளைகளாவது நல்ல கல்வி பெறட்டும் என்று தலையால் நடந்தாவது மெட்றிகுலேசனில் சேர்கிறார்? அதை ஆடம்பரம் என சொல்வீர? அரசு ஒழுங்காக தரமான கல்வி வழங்கினால் இது நடக்குமா? அரசு ஏன் செய்யதேன்கிறது , ஏனெனில் முதலாளி செய்யதே என்கிறான்.

    தினகரன் வருமானம் சுருங்கியது என்று கூறியது நான் பணவீக்கத்தையும் பொருள் விலையுயர்வையும் கருத்தில்கொண்டு, கொத்தனார் பத்தாண்டுகளுக்கு முன்பு தனது வருமானத்தில் வாங்கியவை இப்போது வருமானத்தில் அதேயளவு வாங்க முடிகின்றதா???
    சிம்பாப்வேயில் கூட பட்டினி கிடக்கும் பில்லியனர்கள் இருக்கிறார்கள், அவர்களின் ‘வருமானமும்’ உயர்ந்து விட்டது என்பீரா? நான் கேட்பதெல்லாம், ஏழைகளின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே போகிறதே? என்னங்க நீங்க மக்கள் ஆடம்பர தேவைகளுக்கு போகிறார்கள் என்கிறீர்? ஆடி கார் விலை குறையும்போது மளிகை சாமான் எல்லாம் விலை கூடுகிறதே? கச்சா எண்ணெய் அடிமாட்டு விலைக்கு போகும் பொது இங்கே ஏன் பெற்றோலிய விலை குறையவில்லை? முதலாளிகள் எல்லாம் விரல் சூப்பிகொண்டிருந்தனர் என வேண்டாம். நீங்கள் சொல்லும் கௌரவம் மரியாதை மாயத்தோற்றம் எல்லாம் சாட்சாத் நடுத்தரவர்கதினதே, உழைக்கும் மக்களின் பிழைப்பே நாய் பிழைப்பாக இருக்கிறது, இதில யாருங்க இதெல்லாம் பாக்குறாங்க?

    அதென்ன ‘//சமூகத்தின் மீதும் முதலாளிகள் மீதும் பழி….//
    ஒருவேளை நடுத்தர வர்க்கத்தை தான் ‘சமுகம்’ என்று மென்று முழுங்கி சொல்கிறீரோ ?
    ஹிஹிஹ் கவலை வேண்டாம், அந்த நழுவல் தான் நமக்கு தெரியுமே. ச்சே ச்சே நாம் பழி போடுவதெல்லாம் முதலாளிகள் மீதே. அந்த ‘சமுகம்’ வேண்டுமென்றால் பிஸ்கட்டை தின்றுவிட்டு குறைக்காமல் இருக்கும் நாய் என்று எடுத்துகொள்வோம் சரிதானே?

    //ஆனால் மக்கள் செய்யும் தவறு தான் அடிப்டை. ஒவ்வொரு தனி மனிதனும் பகுத்தறிவாதிகளாக மாறவேண்டும்//
    பார்த்தீர்களா மறுபடியும் மக்கள் மீதே வந்து இறங்குகிரீர், மக்கள் தவறு செய்யவில்லை, மக்களுக்கு வேறு வழியில்லாமல் சுருக்கு கயிற்றை இறுக்கி கொண்டே வருகிறார்கள், ஆம் செல்ல வேண்டிய ஒரே வழி இந்த முதலாளிகளின் ஆட்சியை தூக்கி எரியும் வழி.

  13. நண்பரே உங்கள் கருத்து புரியுது. நான் அதை மறுக்கவில்லை. நீங்கள் சொல்லும் போது தெளிவாக தெரிகின்றது கார்பரேட் நிறுவனங்கள், முதலாளிகள் நடத்தும் மெட்ரிகுலேசன் பள்ளியில் தான் தரமான கல்வி தருகின்றார்கள் என்றும் அரசு தரமான கல்வி தரவில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்கள் அது முற்றிலும் தவறு. நீங்கள் முதலாளித்துவத்தை ஆதரிப்பது தான் அது. நான் நம் நாட்டில் நடப்பதை சிம்பாப்வே நாட்டோடு ஒப்பீடுகிறீர்கள். அது முற்றிலும் தவறு. இங்குஆடிகார் விலை குறைவு பற்றி நமக்கு தேவையில்லை. நான் முன் வைக்கும் கருத்து என்பது. சாதராண மக்கள் அத்தியாவசிய தேவைகளில் இருந்து ஆடம்பரத்தேவைக்கு மாறிவிட்டார்கள் என்பது தான். வருமாணத்தின் தன்னுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு அவன் பயன்படுத்தினால் அவனது வாழ்க்கைத்தரம் உயரும். உங்களிடம் சொல்வது தவறு என்பதை உணருகின்றேன் ஏனென்றால் அரசு தரமான கல்வி கொடுத்தால் ஏன் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்று ஒரு புறம் முதலாளிகளுக்கு ஒத்து ஊதுறீங்க இதிலிருந்து தெரிகின்றது. முதலாளித்துவம் என்று பேசிக்கொண்டு நல்ல வேலை செய்றீங்க நண்பா. சாதாரண மக்கள் ஆடம்பர தேவைகளுக்கு பணத்தை செலவு செய்ய தயார் அதனால் முதலாளி அதை பிடுங்க பார்க்கிறான்.
    ஒரு சிறி செய்தியை சொல்கிறேன் யாரையோ ஒப்பீடுவது கிடையாது சிறிய பகுதியை மட்டும் தான் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்கள் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள். அவர்களின் வருமாணத்தில் போதாது கடன் வாங்கி தன் பி்ள்ளைகளை படிக்க வைக்கின்றார்கள். அதாவது சாதாரணமாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ரூ45.000 மூன்று மாத கட்டணம். நான்கு தவனைகள். அவர்களது வருமாணம் என்பது கணவன் மனைவி சேர்ந்து மாதம் வருமாணம் ரூ20.000. அங்கு அவன் கடனாளியாகுகின்றான் அந்த கடனை அடைக்க அவன் மேலும் உழைக்க வேண்டியுள்ளது. இங்கு தான் தவறு நடக்கின்றது. அது மட்டுமின்றி இருசக்கர வாகனம் கடன் தன் தேவைகளுக்கு வாங்காமல் விலையுயர்ந்த வாகணம். அந்த கடனை அடைக்க கூடுதல் கடனாளி. இது போக செல் போன் தன் தேவைகளுக்கு பதிலாக ஆன்டிராய்டு போன் இங்கு அவன் மேலும் கடனாளி ஆகுகின்றான். அது மட்டுமின்றி கடனிள் 42 அளவு கொண்ட எல் இ டி இப்படி அடுக்கிக் கொண்டேய போகலாம் அங்கு தான் முதலாளிகளின் சூட்சுமம் அடங்கியுள்ளது. அதற்கு சாதரண மக்கள் தெரிந்தே பலியாகின்றார்கள் என்பது தான் எனது கருத்து. நான் கூறுவது எனக்கு தெரிந்த சில குடும்பங்களை பற்றி நான் பட்டியலிடுகின்றேன். பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை. சாதரணமாக இன்று அடித்தட்டு மக்களிடம் அனைத்து வசதிகளும் வந்து விட்டது. இருந்தாலும் அவன் அடிமை யாருக்கு முதலாளிக்கு அதான் உண்மை நண்பரே. பொருளாதார ரீதியாக இன்று அடித்தட்டு மக்களை தான் முதலாளித்துவம் குறிவைக்கின்றது. நடுத்தர வர்கம் தெளிவாக இருக்கின்றான்.

  14. //முதலாளிகள் நடத்தும் மெட்ரிகுலேசன் பள்ளியில் தான் தரமான கல்வி தருகின்றார்கள் என்றும் அரசு தரமான கல்வி தரவில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்கள் அது முற்றிலும் தவறு. நீங்கள் முதலாளித்துவத்தை ஆதரிப்பது தான் அது//

    என்னங்க தினகரன் இப்பிடி திரிக்கிறீங்க?
    நான் மெட்ரிகுலேசன் நோக்கி மக்களை தள்ளவே வேண்டுமென்று அரசு பள்ளிகளை சீரழிய விடுகிறது என்றுதானே சொன்னேன், மெட்ரிகுலேசன் கல்வி சிறந்ததென்று உருவாக்கப்பட்ட மனநிலையே முதலாளி உருவாகியது அதை நம்பியே மக்கள் அங்கு போகிறார் என்றுதானே சொன்னேன், அதை விடுத்து மெட்ரிகுலேசன் கல்வியே சிறந்தது என்றா கூறினேன்?? என்னங்க முதலாளிய இந்த வாங்கு வாங்குறேன் என்னை போய் முதலாளிதுவத்தை ஆதரிப்பதாக சொல்கிறீர்?

    //நம் நாட்டில் நடப்பதை சிம்பாப்வே நாட்டோடு ஒப்பீடுகிறீர்கள். அது முற்றிலும் தவறு//
    நீங்கள் நம் மக்களுக்கு ‘வருமானம்’ உயர்ந்துவிட்டது, நான் முட்டாள்தனமா பேசுவதாக சொன்னதற்கே யார் உண்மையில் பணவீக்கம் பொருள்விலை உயர்வை கணக்கில் எடுக்காமல் வருமானம் பற்றி முட்டாள்தனமாக பேசுவது என காட்ட ஒரு உதாரணமே. சிம்பாப்வேயில் கூட வருமானம் பில்லியன் ஏன் தெரியாத ‘இல்லியன்களில்’ கூட இருக்கிறது, என்ன இந்தியாவில் கொஞ்சம் நிலைமை பெட்டர், அவ்வளவு தான். அதைபோய் வருமானம் உயர்ந்துவிட்டது என்பீரா? அதுசரி, அப்படியே சிம்பாப்வேயோடு ஒப்பிட்டாலும் என்ன தவறு? ஆப்பிரிக்க பிச்சைக்கார நாடென்றா? அமெரிக்காவோடு ஒப்பிட்டால் ஓகேவா?

    //இங்குஆடிகார் விலை குறைவு பற்றி நமக்கு தேவையில்லை//
    ஹிஹிஹி…. ஏனுங்க? அதெல்லாம் உசந்த மக்கள் சமாச்சாரமா?
    இந்த தொடர்பைஎல்லாம் இங்கே விளக்க வினவு கட்டுரைகளைத்தான் மீண்டும் நான் இங்கு எழுத வேண்டும்போளிருகிறது.

    //உங்கள் இறுதி பத்தி//
    ஓகே அப்போ நாம் இருவரும் ஒத்த கருத்துக்கு வந்துவிட்டோம் தானே. அடித்தட்டு மக்கள் கூட தெரிந்தே முதலாளிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிறார். கடன் வாங்க வைத்து சிக்க வைக்கிறான். வெல் டன் தினகரன். ஆனால் ஒரு சின்ன பிரச்சனை – மக்களுக்கு வேறு வழியில்லாமல் செய்துதானே இவற்றை நடத்துகிறான் முதலாளி, அப்போ குற்றஞ்சாட்ட பட வேண்டியது யார்? மக்களா முதலாளியா?

    ஹிஹிஹி அதெப்படி தினகரன், ஆரம்பத்தில் என்னை முதலாளித்துவத்தை ஆதரிப்பதாக சொல்லிவிட்டு நீங்கள் உங்கள் எல்லா பதிலிலும் முதலாளியை காப்பாற்றவே பகீரத பிரயத்தனம் செய்கின்றீர், நண்பரே இங்கு நாம் வீணாக மொக்கையாக வேண்டியதில்லை, உங்கள் அடிப்படை கருத்தான ‘மக்களே அடிப்படை தேவைகளை விட்டு ஆடம்பர தேவைகளை நிறைவேற்றுகின்றனர், சிக்கனமாக வாழ்ந்தால் வாழலாம்’ என்பது இந்த நாடும் நாட்டில் உழைக்கும் மக்களின் நிலையும் போகும் போக்குக்கு மிக மிக நகைப்புக்குரியது.நிறுத்துங்கள்.தயவுசெய்து.

Leave a Reply to சின்னா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க