privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரEnglishஐடி துறை ஆட்குறைப்பு தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை !

ஐடி துறை ஆட்குறைப்பு தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை !

-

மென்பொருள் நிறுவனங்களில் ஆட்குறைப்பு தொடர்பாக
தமிழ்நாடு தொழிலாளர் துறை, நிறுவனங்கள், ஊழியர் சங்கம் இடையே முத்தரப்பு பேச்சு வார்த்தை !
பத்திரிகை செய்தி
இடம் : சென்னை
நாள் : ஆகஸ்ட் 24, 2017

மேற்சொன்ன பிரச்சனையை விவாதிப்பதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 28, 2017 அன்று சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத் துறை கட்டிடத்தின் 6-வது மாடியில் தொழிலாளர் இணைச்  செயலாளர் முன்னிலையில் நடைபெறும் என்று தமிழ்நாடு தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

டி.சி.எஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள அவர்களது நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யவிருப்பதாக வெளியான செய்திகள் குறித்து விளக்கமளிப்பதற்கு காக்னிசன்ட், டி.சி.எஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஐ.பி.எம் நிறுவனங்களும் மென்பொருள் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமும் அழைக்கப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையில் ஐ.டி ஊழியர்கள் சார்பாக ஐ.டி ஊழியர்கள் மன்றமும், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவும் கலந்து கொள்ளவுள்ளன.
காக்னிசன்ட், விப்ரோ நிறுவனங்களில் பெருமளவில் ஆட்குறைப்பு நடப்பதாக வணிக நாளிதழ்களில் செய்தி வெளியான முதலே பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு அதற்கு எதிரான தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மே 16 -ம் தேதி தொழிலாளர் ஆணையருக்கும், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை செயலருக்கும் எமது சங்கத்தின் சார்பில் மனு கொடுத்தோம். தொழிலாளர் செயலரை நேரில் சந்தித்து எமது சங்க உறுப்பினர்கள் நிலைமையை விளக்கினார்கள்.
ஐ.டி துறையில் சட்ட விரோதமாக பெருந்திரள் ஆட்குறைப்பு நடைபெறுவது குறித்து பத்திரிகைகளுக்கு தெரிவிக்கும் வகையில் மே -17 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினோம். மே 18 -ம் தேதி சோழிங்கநல்லூரில் ஐ.டி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
மே 18 -ம் தேதி சோழிங்கநல்லூரில் ஐ.டி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட விப்ரோ, காக்னிசன்ட், எச்.சி.எல், எம்ஃபசிஸ் ஊழியர்கள் சென்னையிலும் கோவையிலும் தமது வேலை நீக்கத்துக்கு எதிராக தொழிலாளர் துறையிடம் மனு தாக்கல் செய்து வாதிடுவதற்கு வழிகாட்டி உதவி வருகிறோம்.

 விப்ரோ ஊழியர்களின் புகார்களை தொடர்ந்து நிர்வாகத்துக்கு எதிராக தொழில்தகராறுகள் சட்டம் 1947 -ன் பிரிவு 2K -ன் கீழ் தொழிலாளர் துறையில் மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் பகுதியாக தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட 68 ஊழியர்களின் பட்டியலை (தமிழகத்திலிருந்து 25 பேர்) சமர்ப்பித்திருக்கிறோம்.
ஐ.டி ஆட்குறைப்பு தொடர்பான கட்டுரைகளையும், பதிவுகளையும் எமது இணையதளம் மூலமாகவும் (new-democrats.com), பேஸ்புக் பக்கத்திலும் பிற சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு வருகிறோம். பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, டெல்லி போன்ற இடங்களில் பணி புரியும் ஊழியர்களின் குழுக்களுடன் ஒருங்கிணைந்து ஐ.டி ஊழியர்களின் பிரச்சனைகளுக்காக போராடி வருகிறோம்.
பணி பாதுகாப்பு தொடர்பாக ஐ.டி ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நாங்கள் தொழிலாளர் இணை ஆணையர் முன்பு ஐ.டி நிறுவனங்களுடன் நடைபெறவிருக்கும் பேச்சு வார்த்தையில் முன்வைத்து தீர்வு கோரவுள்ளோம்.
ஊழியர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை combatlayoff@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டு ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பரவலாக கொண்டு சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு
 சியாம் சுந்தர்
(தலைவர்)

***

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு பற்றி
பு.ஜ.தொ.மு கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி வரும் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கம் ஆகும். பு.ஜ.தொ.மு-வின் ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஜனவரி 10, 2015 அன்று தொடங்கப்பட்டது.
நாங்கள் பெங்களூரு, ஹைதராபாத், புனே, கொல்கத்தா மற்றும் பிற நகரங்களிலும் ஐ.டி ஊழியர்களை அணி திரட்டி வருகிறோம்.
எமது நடவடிக்கைகளின் பகுதியாக நாங்கள் ஊழியர்களுக்கு பின்வரும் உதவிகளை செய்து வருகிறோம்.
  1. நியாயமற்ற வேலை நீக்கத்துக்கு எதிராக போராடுவது, அதை எதிர்த்து தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 2A-ன் கீழ் தொழிலாளர் துறையில் மனு தாக்கல் செய்ய வழிகாட்டுவது.
  2. பணி தொடர்பான பிரச்சனைகளில் கூட்டு பேச்சுவார்த்தை உரிமைகளை பெறுவது
  3. நிர்வாகத்துடனான கூட்டு பேச்சுவார்த்தை பிரச்சனைகளில் தொழில்தகராறுகள் சட்டம் -1947-ன் பிரிவு 2K-ன் கீழ் மனு தாக்கல் செய்வது

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர் பிரிவு,
தொடர்புக்கு – 90031 98576

***

Tripartite meeting of Tamil Nadu Labour Department, Software Company Managements and Labour Union on the issue of Retrenchment of employees by Software Companies

PRESS RELEASE
Place : Chennai
Date : August 24, 2017
Greetings from New Democratic Labour Front – IT Employees Wing.
The Tamil Nadu Labour Department has announced that “a meeting will be held before Joint Commissioner of Labour, Chennai in the 6th floor of Labour Welfare Board Building, D.M.S Compound, Chennai – 6 on 28-09-2017 at 11 am” to discuss the above issue.
Managements of Cognizant, TCS, Wipro, Infosys, IBM are invited by the JCL to discuss newspaper reports “that the managements of TCS, Wipro, IBM and Infosys Ltd have planned to reduce number of employees in their establishment in Taminadu”. IT companies association NASSCOM is also invited.
Forum For IT Employees and New Democratic Labour Front – IT Employees Wing are invited to the meeting to represent IT Employees.
Ever since the news of mass layoffs by CTS and Wipro broke in business dailies, NDLF – IT Employees Wing has been conducting a vigorous campaign against the illegal mass retrenchments.
On May 16, 2017 we gave a representation to the Labour Commissioner and the Secretary, Labour and Employment, Government of Tamil Nadu.
On May 17, 2017 we conducted a press conference to apprise media persons about illegal and mass retrenchment of employees in IT sector.
On May 18, we held a demonstration in Sholinganallur in solidarity with IT employees.
We provide guidance to many employees from Wipro, Cognizant, HCL, Mphasis etc, illegally retrenched through forced resignations to file petitions in various labour offices in Chennai and Coimbatore.
We filed a grievance petition under section 2K of Industrial Disputes Act against Wipro management and submitted names, employee IDs and details of more than 68 Wipro employees (including 25 from Tamil Nadu to labour department.
We publish articles and posts about this issue through our website (new-democrats.com), facebook page (NDLFITEmployeesWing) and other social media platforms.
We also co-ordinate with groups of IT Employees in Bangalore,  Hyderabad, Pune and Kolkata to take up joint fight on the concerns of IT employees.
We call upon all IT Employees to send their complaints regarding job security by email to combatlayoff@gmail.com . We will present the complaints at the meeting with JCL and IT company managements on behalf of employees.
We request all media organizations to give wide publicity to this news.
for NDLF IT Employees Wing
Shyam Sundar
(President)

***

About NDLF IT Employees Wing
NDLF is a registered trade union and for the past 20 years we are organizing workers in Tamil Nadu and Puducherry. The IT Employees Wing of NDLF was formed on January 10, 2015.
We are also organizing IT Employees in Bengaluru, Hyderabad, Pune, Kolkata and other cities to register as unions in the respective states.
As part of our activities, we help employees in
  1. Fighting against unfair terminations and file grievance petition under section 2A of Industrial Disputes Act.
  2. Seek collective bargaining rights for employees on employment related issues.
  3. File petition under section 2K of Industrial Disputes Act for collective bargaining disputes with companies.

_____________

ஐடி நிறுவன ஆட்குறைப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி