privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரவினாடி வினாஇந்திய வரலாறு : பொது அறிவு வினாடி வினா !

இந்திய வரலாறு : பொது அறிவு வினாடி வினா !

-

சென்ற முறை தமிழகத்தின் விவரங்களை வினாடி வினாவில் கேட்டிருந்தோம். மொத்தம் 14 கேள்விகளுக்கும் சரியாக பதிலளிப்பது சிரமம் என்றாலும் பத்திற்கும் மேற்பட்டோர் இலக்கை எட்டியிருந்தனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பதினெட்டு நாடுகளில் இருந்து நண்பர்கள் இப்பகுதியில் பங்கேற்றிருக்கிறார்கள். சென்னை, இந்தியா போக அமெரிக்கா, இந்தோனேசியா, வளைகுடா நாடுகளில் இருந்து கணிசமான தமிழ் மக்கள் இப்போட்டியில் பங்கேற்றிருக்கிறார்கள்.

இக்கேள்விகள் அதிகம் எண்ணிக்கையில் வருவதால் நினைவில் வைத்திருப்பது சிரமம் என்றார் ஒரு தோழர். அதை கணக்கில் கொள்கிறோம். இன்று இந்திய வரலாறு குறித்து சில கேள்விகள். கூடுதலாக கேள்வியின் வரலாற்றுக் குறிப்பையும் தந்திருக்கிறோம். இது இன்னும் அழுத்தமாக அந்த செய்தியை  நினைவில் நிறுத்த பயன்படும். படிவத்திற்கு கீழே கேள்விகளையும், அதற்கான குறிப்புக்களையும் தந்திருக்கிறோம். அதை நிதானமாக படித்து விட்டு படிவத்திற்கு வாருங்கள்! வாழ்த்துக்கள்!

 

1. பார்ப்பனியத்தின் சதி – உடன்கட்டை ஏறும் பழக்கத்தை தடை செய்த ஆங்கிலேய ஆட்சியாளர் யார்?

பிற்கால வேதங்களில் சதி பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் மன்னர் குலத்தில் இருந்த இக்கொடிய பழக்கம் பின்பு சில ‘இந்து’ சமூகப் பிரிவுகளில் பரவ ஆரம்பித்தன. கி.பி 1815 -ம் ஆண்டில் வங்கத்தில் 378 ஆக இருந்த சதி படுகொலை கி.பி 1818 -ல் 839 ஆக அதிகரித்தது.

2. இந்தியாவின் முதல் ஆங்கில தினசரி எது?

கி.பி 1780 -ல் இவ்வாரப் பத்திரிகையை ஹிக்கி எனும் ஐரிஷ் நாட்டவர் ஆரம்பித்தார். அப்போது இருந்த கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் -ஐ விமரிசித்த இப்பத்திரிகை கிழக்கிந்திய கம்பெனி அலுவலர்களின் ஊழலை வெளியிட்டு வந்ததால் இரு ஆண்டுகளில் பலவந்தமாக நிறுத்தப்பட்டது. அதனால்தான் என்னவோ இன்றைக்கும் பெரும்பாலான ஆங்கிலப் பத்திரிகைகள் ஆளும் வர்க்கத்தின் நலனையே செய்திகளாக வெளியிடுகின்றன.

3. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ரௌலட் சட்டத்தை அமல்படுத்திய ஆங்கிலேய வைஸ்ராய் யார்?

The Anarchical and Revolutionary Crimes Act, 1919, எனப்படும் ரௌலட் சட்டம் அப்போதிருந்த இந்தியாவின் போராளிகளை கைது செய்து விசாரணையின்றி சிறையலடைப்பதற்கு ஆங்கிலேய அரசால் கொண்டு வரப்பட்டது. இன்றைக்கு இருந்த தடா, பொடா சட்டங்களின் முன்னோடி. சிட்னி ரௌலட் எனும் நீதிபதி கமிட்டியின் பரிந்துரையின் பெயரில் நிறைவேற்றப்பட்ட சட்டம்.

4. பாஜக -விற்கு பிடிக்காத தாஜ்மகாலைக் கட்டிய தலைமைப் பொறியாளராக கருதப்படுபவர் யார்?

உ.பி மாநிலத்தின் ஆக்ராவில் மொகலாய கட்டடக் கலையின் அழகோடு இருக்கும் தாஜ்மகால் சந்தன மற்றும் வெள்ளை மார்பிளால் கட்டப்பட்டது. யமுனைக் கரையில் கி.பி 1632 -ம் ஆண்டில் மொகலாயப் பேரரசர் ஷாஜகானால் திறந்து வைக்கப்பட்டது. இப்போது 2014 -ம் ஆண்டு கணக்கின் படி தாஜ்மகாலைப் பார்த்தோர் எண்ணிக்கை சுமார் 80 இலட்சம் பேர்.

5. உலகம் ரசிக்கும் தாஜ்மகாலை கட்டுவதற்கு எவ்வளவு வருடங்கள் ஆயிற்று?

இன்றைய மதிப்பில் சுமார் 52.8 பில்லியன் ரூபாயில் தாஜ்மகால் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 20,000 தொழிலாளிகள் பங்கேற்றிருக்கின்றனர். 1983 -ம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பால் “உலகில் பாரம்பரிய சின்னமாக” அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்துமதவெறியர்கள் இச்சின்னத்தை உ.பி சுற்றுலாக் கையேட்டில் இருந்து எடுத்து விட்டிருக்கின்றனர். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!

6. இந்தியாவை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய கோட்டை எது?

கி.பி 1644 -ம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியால் கட்டப்பட்ட கோட்டை. அவர்களது வணிக நடவடிக்கைகள், நிர்வாக பேச்சு வார்த்தைக்காக கட்டப்பட்டது.

7. அக்பர் நாமா எனும் அக்பரின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் யார்?

கி.பி 1556 முதல் 1605 வரை ஆண்ட அக்பரின் வரலாற்றை பெர்சிய மொழியில் கூறுகிறது இந்நூல். ஏழு வருடங்களில் எழுதப்பட்ட இந்நூலில் விவரணைகளோடு அரிய ஓவியங்களும் இருந்தன. தற்போது இதன் பிரதி ஒன்று 116 அரிய ஓவியங்களோடு லண்டனில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

8. வங்கமாதாவிற்காக எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடல் இடம் இடம்பெற்ற நாவல் எது?

முசுலீம் குறுமன்னர்களை எதிர்த்து இந்து விவசாயிகள் போராடுவதான இக்கதையில் வரும் வந்தே மாதரத்தை காங்கிரசு கட்சி முதலில் அரசியலில் அறிமுகப்படுத்தியது. இதில் மாதாவை உருவகப்படுத்த வரும் இந்து மத தெய்வங்களால் அப்போதே முசுலீம்களால் எதிர்ப்பு தெரிக்கப்பட்டது. இந்திய அரசியலில் இந்துத்துவம் நுழைக்கப்பட்டதில் வந்தே மாதரத்திற்கும் முக்கிய பங்குண்டு.

9. இந்துமதத்தை சீர்திருத்துவதற்காக 1875-ம் ஆண்டில் “ஆர்யா சமாஜ்” இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்?

ஆங்கிலேய ஆட்சியில் கல்வி அறிவு பெற்ற இந்தியர்களின் பெருமிதத் தேடல்களின் விளைவில் இதுவும் ஒன்று. வேதங்களின் புனிதத்தை ஏற்றுக் கொண்ட சமாஜம், சில சீர்திருத்தங்களுக்காக பிரச்சாரம் செய்ததாலும் அடிப்படையில் வருண தர்மம் அல்லது சாதிய அமைப்பை ஏற்றுக் கொண்டது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்து முசுலீம் பிரிவினையின் போது சமாஜம், இந்து தர்மத்திற்காக பரிந்து பேசியது.

10. தற்போதைய ஐ.ஏ.எஸ் எனப்படும் இந்திய குடிமைப் பணி பதவிகளை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய கவர்னர் யார்?

கி.பி 1858 -ல் ஏற்படுத்தப்பட்ட இப்பதவி அப்போது இந்தியன் சிவில் சர்வீஸ் என அழைக்கப்பட்டது. வரிவசூல் உள்ளிட்ட அனைத்து ஆட்சிப் பணிகளையும் இக்கலெக்டர்கள் மேற்கொண்டார்கள். 1947-ம் ஆண்டில் 322 இந்தியர்களும் 688 ஆங்கிலேயர்களும் கலெக்டர்களாக இருந்தனர். மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் இன்றைய மாவட்ட ஆட்சியர்களின் பயிற்சி அனைத்திற்கும் இத்தகைய வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

11. மதம் கடந்து வங்கதேசிய ஒற்றுமையால் பிணைக்கப்பட்ட வங்கத்தை பிரிக்க முடிவெடுத்த ஆங்கிலேய வைஸ்ராய் யார்?

கி.பி 1905-ம் ஆண்டில் வங்கம் பிரிக்கப்பட்டது. முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு வங்கமும், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் மேற்கு வங்கமும் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக பிரிக்கப்பட்டன. ஆனால் மக்கள் மதம் கடந்த ஒற்றுமையுடன் இப்பிரிவினையை எதிர்த்துப் போராடினர். அதன்பிறகு 1911-ம் ஆண்டில் வங்கம் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு இப்போராட்டம் ஒரு சான்று.

12. இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியை 1885-ம் ஆண்டில் துவக்கியவர் யார்?

இன்றைக்கு சோனியா காந்தியின் தலைமையில் இருக்கும் காங்கிரசுக் கட்சி 1885-ம் ஆண்டில் துவக்கப்பட்டது. நவீன இந்தியாவின் முதல் அரசியல் இயக்கம் என்று அழைக்கப்பட்டாலும் இது வெள்ளையர்களிடம் கருணை மனு கொடுத்து தமது பிரச்சினைகளை இந்திய மக்கள் தெரிவிப்பதற்காகவே முதலில் துவக்கப்பட்டது. இன்றும் அதன் பாரம்பரியம் உலக வர்த்தக கழகம், உலக வங்கி, அமெரிக்கா என்று தொடர்கிறது.

13. யாருடைய ஆட்சிக் காலத்தில் சீனப் பயணி யுவான் சுவாங் இந்தியாவிற்கு வந்தார்?

கி.பி 602-ல் பிறந்த யுவான் சுவாங் – சென் இ – கி.பி 664-ல் மரணமடைந்தார். புத்த துறவியான இவர் சீனாவில் இருந்து இந்தியா வந்து இங்கே பல மொழிகளைக் கற்று ஏராளமான புத்த இலக்கியங்களோடு சீனா சென்றார். அக்காலத்தில் இது அபராமான சாதனை. இவரைப் பற்றிய ஆங்கிலப் படம் 2016-ம் ஆண்டில் வெளிவந்தது.

14. பகவான் கிருஷ்ணனால் நாகஸ்வரன் கொல்லப்பட்டதை மக்கள் கொண்டாடுவதே தீபாவளி எனும் புராண விளக்கத்தின் சமூகவியல் பின்னணி என்ன?

பூர்வகுடி இந்திய பழங்குடிகளை ஆரியர்கள் போரிட்டு வென்றதன் குறியீடு
நல்ல சக்தி கெட்ட சக்தியை அழித்ததன் குறியீடு
வாழ்வில் ஒளியேற்றும் மங்களகரமான நாளின் துவக்கம்
மோட்சம் செல்வதற்கு கடவுளிடம் கோரிக்கை வைக்கும் நாளின் குறியீடு

_____________

இந்தக் வினாடி வினா பகுதி உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!