privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாமெர்சல் : ஒரு மசாலா மெசேஜ் உண்மை பேசுமா ?

மெர்சல் : ஒரு மசாலா மெசேஜ் உண்மை பேசுமா ?

-

மெர்சல் படம் வசூல்ல ஏறக்குறைய வெற்றிதான்னு ஊடக விமர்சகர்கள் சொல்றாங்க. ரசிகர்களைப் பொருத்தவரை ஏற்கனவே தெரிஞ்ச மசலான்னாலும், மெசேஜ் ஸ்ட்ராங்கா இருக்குன்னு ரசிக்கிறாங்க. படத்துல மருத்துவ உலகின் ஊழல், பிரச்சினைகளை மக்கள் பார்வையில சொல்றதாலா பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. அதுல ஆங்காங்கே மத்திய, மாநில அரசு மீது விமர்சனம் வருவதால கொஞ்சம் தைரியமா படம் பேசுதுன்னு அவங்க நினைக்கிறத புரிஞ்சுக்குறோம்.

ஆனால் மருத்துவத்துல பிரச்சினைன்னு காட்டுறதும், தீர்வுன்னு சொல்றதிலும் சில விமர்சனங்களை உங்கள் முன்னாடி வைக்கிறோம்.

படத்தோட இறுதிக் காட்சியில கோர்ட்டு முன்னாடி விஜய் பேசுற சீன் வரும். அதுல “7% ஜி.எஸ்.டி வரி வாங்குற சிங்கப்பூர்ல மருத்துவத்தை இலவசமா மக்களுக்கு தர முடியுறப்போ, 28% ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் இலவசமாக மருத்துவத்த தர முடியலை” -ன்னு விஜய் கேட்கிறார். இது நியாயமான கேள்விதானேன்னு மக்கள் சந்தோஷப்படுறாங்க. அந்தப் படி பாத்தா பாஜக தலைவருங்களுக்கு எரிச்சல் வந்துதானே ஆகணும்?

படத்துல மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் குறை சொல்லப்படுவதை கண்டிப்பதாக பாஜக தமிழிசை பொங்குறாரு. ஒருவேளை போன 2014 பாராளுமன்றத் தேர்தல்ல மோடி தமிழகத்திற்கு வந்த போது நடிகர் விஜய் கோவை விமான நிலையத்தில் காத்திருந்து பார்த்தவர்தானேன்னு ஒரு இளக்காரம் தமிழிசைக்கு இருக்கலாம்.

ஆனா இந்த சிங்கப்பூர் ஜி.எஸ்.டி விவகாரத்தை தமிழிசையும் அலசுறாரு. அதாவது சிங்கப்பூர்ல 80% மக்கள் வரிகட்டுவதாகவும், இங்கேயும் அப்படி கட்டுவதற்கு (பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி) மோடி அரசு முயற்சிக்கும் போது இப்படி விமர்சிக்கிறார்களேன்னு அவரும் நியாயம் பேசுராறு.

தமிழிசையும், நடிகர் விஜயும் சிங்கப்பூர் நாட்டை ஒத்துமையா ஆதரிக்கிறாங்க!

இப்ப விசயத்துக்கு வருவோம். படத்தில பேசுற விஜயும் சரி, வெளியே பேசுற தமிழிசையும் சரி இரண்டு பேருமே சிங்கப்பூரை ஆதரிச்சு பேசுறாங்க! அதுல அவங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது. ஆனா நம்மளப் பொறுத்த வரைக்கும் அவங்க இரண்டு பேரோட கருத்துமே அதாவது சிங்கப்பூர் ஏதோ ஒரு ஆசிய சொர்க்கம்ங்குற கருத்து தவறுங்கிறதோடு, உண்மையை உங்களுக்கும் சொல்றோம்.

சிங்கப்பூர்ல இலவச மருத்துவம்னே ஒண்ணு கிடையாது. நம்மூரு ஆரம்ப சுகாதார நிலையம் மாதிரி சிங்கப்பூர்ல அரசாங்கத்தோட பாலி கிளினிக்னு ஒண்ணு இருக்கு. அங்க போனா ஒரு சராசரி கட்டணத்தை வசூலிப்பாங்க. அத குறைவும்னு சொல்ல முடியாது. அதிகம்னு சொல்ல முடியாது. ஆனா நிச்சயம் இலவசம்னு ஒண்ணும் கிடையாது. நம்மூரு நிலவரத்த வைச்சு பாத்தா அந்த குறைஞ்ச கட்டணம் ஒரு சராசரிக் கட்டணும்னு சொல்லலாம். ஆதாரம் கேட்குறவங்க, “ஹெல்த்கேர் சிஸ்டம் இன் சிங்கப்பூர்னு” விக்கிபீடியாவுல தேடிப்பாருங்க.

இலவசம் இல்லேங்கிறது மட்டுமில்ல, எல்லா சிகிச்சைக்கும் ஒரே மாதிரியான கட்டணமும் கிடையாது. நோய்க்கு தகுந்த மாதிரி கட்டணமும் கூடும் குறையும். ஏன் இப்படி இலவசமாக கொடுக்கலியேன்னு கேட்டா, பொது சுகாதரத்துறையின் நிதி ஒதுக்கீட்டை அப்படி காலி பண்ண முடியாதுன்னு சிங்கப்பூர் அரசாங்கம் ஆரம்பத்திலேயே முடிவு எடுத்திருக்காம்.

அதிகம் செலவு பிடிக்கிற சிகிச்சைன்னு வந்தா சிங்கப்பூர்ல கொஞ்சம் மானியம் கொடுக்கிறாங்க. ஆனா குறைவான செலவு சிகிச்சைன்னு வந்தா அங்க மானியமே கிடையாது. அதாவது ஒரு சாதாரண காய்ச்சல், சளி, வயிற்று வலின்னு அரசோட பாலி கிளினிக் போனீங்கன்னா தனியார் மருத்துவமனை மாதிரியான கட்டணத்தையே வசூலிக்கிறாங்க. அதுக்கு டிஸ்கவுண்டு கிடையாது.

அப்புறம் அங்க சம்பளத்துல மருத்துவத்துக்குன்னு கண்டிப்பா ஒரு தொகையை பிடிப்பாங்க. அந்த தேசிய காப்பீட்டுத் திட்டத்தோட பேரு Medisave மெடிசேவ். அந்த தொகையை வெச்சு அந்தந்த ஊழியரோட குடும்பம் மருத்துவ செலவுக்கு பயன்படுத்திக்கலாம். இது இந்தியாவிலும் இருக்கு, அமெரிக்காவிலும் இருக்குது. ஆனா எங்கேயும் இது நிச்சயமா இலவசம் கிடையாது. ஏன்னா உங்க சம்பளத்துல இருந்து மாதாமாதம் ஒரு தொகையை பிடிச்சுகிட்டு தேவை வரும்போது அதை நீங்க செலவழிக்கலாம்கிறது எப்படி இலவசமாகும்?

சிங்கப்பூரில் இலவச மருத்துவம்கிறது ஒரு வடிகட்டிய பொய்!

மெடிஷீல்டுன்னு (Medishield) இன்னொன்னு காப்பீட்டு திட்டமும் அங்க இருக்கு. ஆனா இதை வெச்சு ஒரு நோயை சிகிச்சை செய்ய முடியாது. தொகை பத்தாது. இன்னும் மெடிஷீல்டு லைஃப்ன்னு ஒரு காப்பிடும், எல்டர்ஷீல்டுன்னு முதியோருக்கு ஒரு காப்பீடும் அங்க இருக்கு. அதே நேரம் இந்த காப்பீட்டுத் திட்டத்துல மிகவும் அபாயகரமான நோய்கள், சிகிச்சைகள் எல்லாம் மறைமுகமாக தவிர்க்கப்பட்டிருக்கு. அப்படிப் பாத்தீங்கன்னா சிங்கப்பூர் குடிமகனுக்கு அப்படி ஒரு நோயோ பிரச்சினையோ வந்தா அவர் அதிகம் காசு செலவழிச்சே ஆகணும்,

சிங்கப்பூர்ல நிறைய தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் இருக்குது. அங்க வெளிநாட்டு நோயாளிகள், வசதியான சிங்கப்பூர் குடிமக்களுக்கு அதிக கட்டணத்துல சிகிச்சை பாக்குறாங்க. சிங்கப்பூர் குடிமக்கள், இந்த தனியார் மருத்துவமனைகளில் ஒரளவுக்கு கட்டணத்துல தள்ளுபடி பெறலாம்னாலும், மொத்தத்துல இங்க கட்டணம் அதிகம்தான். ஆனா நம்ம தமிழ்நாட்டுல இருந்து ஒரு தொழிலாளி அங்க பிழைக்கப் போய் பெரிய நோய் வந்தா அவருக்கு இங்கே மானியம், தள்ளுபடி எதுவும் கிடையாது. ஏன்னா அவர் ஒரு ஃபாரினர்.

சிங்கப்பூரோட மொத்த தேசிய வருமானத்துல இருந்து 1.6% -த்தை பொது சுகாதரத்துறைக்கு ஒதுக்குறாங்க. இந்தியாவுல 1.4% ஒதுக்குறாங்க! புள்ளி இரண்டை வெச்சு மட்டும் சிங்கப்பூர் தரமானது இல்லீங்க.

இப்டி காஸ்ட்லியான சிங்கப்பூர் மருத்துவத்தைத்தான், உலக சுகாதார நிறுவனம் 2000-ம் ஆண்டின் கணக்குப்படி ஆறாவது ரேங்கில் வைச்சுருக்கு. ஒருக்கால் மருத்துவம் இலவசமாகவும் தரமாகவும் கொடுத்து சாதனை படைச்ச நாடுன்னா அது கியூபாதான். சிங்கப்பூர் இல்லை.

அடுத்து தமிழிசை சொல்ற சிங்கப்பூர்ல 80% மக்கள் வரி கட்டுற இலட்சணத்தை பார்ப்போம். சிங்கப்பூருங்கிறது வளைகுடா மாதிரி பிழைக்க வந்த மக்களோட உழைப்புல வாழ்ற நாடு. அதனால் சிங்கப்பூர் குடிமக்களுக்கு கொஞ்சம் வசதி, வாய்ப்பு இருக்கலாம். ஏன்னா சிங்கப்பூர்ல மத்த நாட்டுல இருக்குற மாதிரி சட்டப்படியான குறைந்த பட்ச கூலின்னே ஒண்ணு கிடையாது. இந்தியாவுல கூட குறைந்த பட்ச கூலி இவ்வளவு கொடுக்கணும்னு சட்டம் இருக்கு. பீகாருல ரூ 160 -ன்னும், கேரளாவுல ரூ 750 -ன்னும் அந்த தொகை மாறுபடுது. இன்னும் விவசாய தொழிலாளிகளுக்கும் இந்தியா முழுவதும் சட்டப்படி இவ்வளவு கொடுக்கணும்னு இருக்கு.

உலகத்திலேயே அப்படி ஒரு சட்டம் இல்லாத நாடுன்னு சொன்னா அது சிங்கப்பூர்தான். 2014-வது வருசத்துலதான் துப்புறவுத் தொழிலாளிகளுக்கு 1000 -ம் டாலரும்னு, செக்யூரிட்டி வேலைக்கு மாதம் 1,100 டாலரும்னு சட்டம் கொண்டு வந்திருக்காங்க. இது போக மத்தவங்களுக்கு முதலாளிங்க எவ்வளவு கம்மியா சம்பளம் கொடுத்தாலும் அதை யாரும் தட்டிக் கேக்க முடியாது.

சிங்கப்பூரோட ஒரு டாலருங்கிறது இந்திய ரூபாயில 48 ரூபாய் வரும். ஒரு சாதாரண காய்ச்சலுன்னு இந்த தொழிலாளிங்க அரசோட பாலி கிளினிக் போனா குறைஞ்சது 30 டாலராவது செலவாகும்கிறாங்க. அதாவது இந்திய மதிப்பில் 1,400 ரூபாய் செலவழிக்கணும்.

பெப்சி தொழிலாளிங்க ஸ்ட்ரைக் நடந்தப்போ, விஜயோட கவலை மெர்சல் ஷூட்டிங் பத்தித்தானே ஒழிய, தொழிலாளர் ஊதிய்ம் பற்றி அல்ல!

மெர்சல் படம் ஷூட்டிங் நடக்கும் போது பெப்சின்னு சினிமா தொழிலாளி சங்கம் ஸ்ட்ரைக் பண்ணாங்க. அவங்க கோரிக்கை என்னங்க? மூணு வருசத்துக்கு ஒரு முறை சம்பளத்த கூட்டணும்னு விதி இருக்கும் போது இன்னும் ஏன் கூட்டலை, இப்ப விக்கிற விலைவாசியில குறைஞ்ச சம்பளத்துல வேலை பார்த்து ஓட்ட முடியுமா, எல்லா நாளும் சினிமா வேலை கிடைக்காத போது கம்மியான சம்பளம் நியாயமா – இதுதான் அவங்க கோரிக்கை.

ஆனா சினிமா முதலாளிங்க இதுக்கு ஒத்துக்கல! தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் இருக்குற நடிகர் விஷாலு, எங்களுக்கு பெப்சி சங்கமே தேவையில்லை, வெளிய இருந்து தொழிலாளிகளை ஏற்பாடு பண்ணிக்கிறோம்னு மிரட்டுனாரு. வேலை நிறுத்தம்தான் தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தைன்னு ரஜினிகாந்த் சொன்னாரு, இப்ப தளபதின்னு பேரு போட்டுறுக்குற விஜய் அப்ப வாயைத் திறக்கவே இல்லை. ஏன்னு யாராச்சும் கேட்டீங்களா?

சிங்கப்பூருல தொழிலாளிக்கு சட்டப்படி சம்பளம் இல்லேங்குற மாதிரி அங்க முதலாளிக்கு சட்டப்படியே வரியே கட்டவேண்டாம்கிற அளவுக்கு ஏகப்பட்ட சலுகை கொடுத்திருக்காங்க. அதனாலதான் வெளிநாட்டுல இருக்குற பல பண முதலைங்க சிங்கப்பூருலயும் கொஞ்சம் சொத்துக்களை மாத்தி வெச்சிருக்காங்க. நிறைய பேரு செட்டிலாகியிருக்காங்க. இது தொடர்பா எங்க வினவு தளத்துல நிறைய கட்டுரைங்க இருக்குது, படிச்சுப் பாருங்க!

பெப்சி தொழிலாளிகளுக்கு எதிராக நடிகர் விஷால்!

இந்தியாவுலயும் மறைமுக வரியை அதிகம் போட்டு மக்கள் மேல சுமத்துற மோடி அரசு, முதலாளிகளுக்கான நேரடி வரியை ரொம்பவே குறைச்சுட்டாங்க. இதைத்தான் சிங்கப்பூரு மாதிரி இங்கயும் மோடி முயற்சிக்கிறாருன்னு தமிழிசை சொல்றாங்க. தளபதி விஜயும் சிங்கப்பூருல இலவச மருத்துவம்னு அடிச்சு விடுறாரு!

ஆக இவங்க இரண்டு பேருக்கும் சிங்கப்பூரு மேட்டருல கருத்து வேறுபாடு கிடையாது. சரி, சாதாரண விக்கிபீடியா மேட்டர் அறிவு கூட இல்லாம இயக்குநர் அட்லி இப்படி ஒரு வசனத்தை ஏன் சேத்தாருன்னு உங்களுக்கு தோணலாம்.

7 சதவீத சிங்கப்பூருல மருத்தவம் இலவசம்னா, 28 சதவீத வரி கேக்குற இந்தியாவுல முடியாதான்னு ஒரு வாட்ஸ் அப் வதந்தியை பார்த்திருப்பாரு. நம்ம மக்கள் பலர் சிங்கப்பூரோட போக்கு வரத்து, வேலைக்கு போனவங்கங்கிறதால இங்க சிங்கப்பூர்னா ஒரு மரியாதை இருக்கு. அத வெச்சு அந்த மேட்டர் பொய்யா வந்தாலும் நம்ம ஆளுங்க அத உண்மைன்னு நம்புறாங்க. ஆனா ஒரு படத்தோட இயக்குநரும், நடிகரும் அத நம்புறாங்கன்னா இவங்களோட அறிவு, அரசியல், மேட்டரெல்லாம் என்ன லெவல்ல இருக்கும்கிறத நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!

ஜி.எஸ்.டி-யை வெச்சு இந்த படத்துல தைரியமாக பாஜகவை எதிர்க்கிறாங்க-கிறது உண்மையா?

ஃப்ரோ, இன்னி தேதிக்கு பாஜக-காரனே ஜி.எஸ்.டி-யை எதிர்த்துப் பேசறான். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹான்னு ஏகப்பட்ட பேரு ஜி.எஸ்.டி சரியில்லேன்னு பேசுறாங்க. மத்தபடி எல்லா மக்களும், கட்சிகளும் ஜி.எஸ்.டியை கட்டி உரிச்சு உப்புக் கண்டம் போட்டு புதைக்கிறதுக்கு காத்திருக்காங்க. ஒரு தீப்பெட்டி வாங்குனாலும், தீபாவளி பட்டாசு வாங்கினாலும் ஜி.எஸ்.டி வரியால பாதிக்கப்படாத ஆளே எங்கேயும் இல்லை.

விஜயோட சினிமா உலகமும் கூட அந்த வரி அதிகம்னு சொல்லி பேசுனாங்களா இல்லையா? மத்தவங்களுக்கு எப்படியோ எங்களுக்காச்சும் குறைக்கணும்னு கமல்ஹாசன் கூட பணிவா பேட்டி கொடுத்தாருல்ல! மத்தபடி இந்த படம், ஜி.எஸ்.டி வரி கொடுமையானதுன்னோ, மக்களை வதைக்கிதுன்னோ, மோடி அரசு மக்களை ஒடுக்குதுண்ணோ சொல்லலை! இவ்வளவு வரி வாங்குறீங்களே, மருத்துவத்தை இலவசமாக கொடுக்கலாம்லன்னு கெஞ்சுது! அவ்வளவுதான். மக்களே ஜி.எஸ்.டி வரியே சாதாரண மக்களைப் பிழிந்து திரட்டப்படுற ஒரு கொள்ளை. அதை வாங்குற அரசாங்கத்த கண்டிக்காம, அதுல இருந்து இலவசம் கேப்பானா எவனாவது?

இன்னிக்கு பாத்தீங்கன்னா தமிழ்நாடே டெங்குவால பீதியில உறைஞ்சு போயிருக்கு. செத்தவங்களோட கணக்கை குறைக்கிறதுலதான் அரசாங்கம் கருத்தா இருக்கு. இதுக்கு முன்னாடி சிக்கன் குனியா, மலேரியா, காலரா, மூளைக் காய்ச்சல்னு சீசனுக்கு ஒரு வியாதியில நம்ம மக்கள் பட்ட கஷ்ட்டம் கொஞ்ச நஞ்சமில்லீங்க.

ஈழத்துலயோ, காஷ்மீரிலயோ, ஈராக்கிலயோ போரின் ஒடுக்குமுறையால வீட்டுக்கு ஒரு இழப்பு இருக்குங்கிற மாதிரி, தமிழகத்துல வீட்டுக்கு வீடு ஒரு மருத்துவ கஷ்டம் ரொம்பவே இருக்கு. இதுல முதல் கஷ்டம் பணம், அடுத்து அரசு மருத்துவமனையில வசதி இல்லாதது, பிறகு மருத்துவருங்க செய்யுற தவறுகள்னு பட்டியல் போடலாம்.

மெர்சல் படத்துல அப்பா விஜய் மீசை, வீபூதி வேட்டி சகிதமா “மதுரைக்கு போகாதடி” பாட்டு கெட்டப்புல இருக்காரு. அவரோட கிராமத்துல தீ விபத்துல பாதிக்கப்பட்ட குழந்தைங்கள காப்பாத்த முடியல. உடனே பஞ்சாயத்து கூடி விஜய் தலைமையில மருத்துவமனை கட்ட முடிவு செய்து தாய்மார்களெல்லாம் நகைகளை கழட்டி தாராங்க. கொஞ்சம் வசதியான கிராமம்தான் போல இருக்கு. ஏன்னா தற்கொலை செஞ்சுகிட்ட நீட் அனிதா வீட்ட பாத்தீங்கன்னா குடிசையும், மண்தரையும்தான் இருக்கு. சரி, சினிமான்னா கொஞ்சம் ரிச்சாத்தான் இருக்கணும் போல.

இலவச மருத்துவமனை இல்லாம மக்கள் கஷடப்படுறத, பாரின் டூயட் கால்ஷீட் போக இருக்குற கேப்புல காமிக்கிறாங்க, பேசுறாங்க.

அந்த புதிய மருத்துவமனைக்கு டாக்டராக வந்த வில்லன்கள் இரண்டு பேரு விஜய ஏமாத்தி ஆஸ்பத்திரியை கைப்பத்துறாங்க. விஜயும் அவரது மனைவியும் கொல்லப்படுறாங்க. இரண்டு குழந்தை விஜயும் பிரிஞ்சு ஒண்ணு ஐஞ்சு ரூபா டாக்டராகவும், இன்னொன்னு மாஜிக் கலைஞராகவும் மாறிடுறாங்க.

கடைசியில இரண்டு பேரும் சேந்து வில்லன பழிவாங்குறாங்க. அதுல இலவச மருத்துவமனை இல்லாம மக்கள் கஷடப்படுறத, பாரின் டூயட் கால்ஷீட் போக இருக்குற கேப்புல காமிக்கிறாங்க, பேசுறாங்க.

ஒரு ஆட்டோ டிரைவரோட மகளுக்கு விபத்து ஏற்படுறத வாயில இருந்து, மண்டையில இருந்து ரத்தம் பீறிட்டு வர்றதையெல்லாம் கொடூரமாக காட்டுறாங்க! ஏன்னா நாம்ம மருத்துவர்களோட வில்லத்தனத்தை கொடூரமா புரிஞ்சுக்கணும்ல, அதுக்குத்தான்.

அந்த ஆட்டோ டிரைவர் மகளை கொன்ன தனியார் மருத்துவமனை புரோக்கர், ஆம்புலன்ஸ் டிரைவர், பி.ஆர்.ஓ, டாக்டர் அத்தனை பேரையும் மேஜிக் விஜய் பிடிச்சு வித்தியாசமா கொல்றாரு. இப்படி படம் முழுக்க மருத்துவருங்க வில்லனா காட்டப்படுறாங்க.

ஒரு நோயால மரணமோ, பாதிப்போ எது இருந்தாலும் மக்கள் முதல்ல கோபப்படறது மருத்துவருங்க மேலதான். ஆனா மருத்துவருங்க மேல மட்டும் கோபப்பட்டு பிரோயஜனம் இல்லை.

தமிழ்நாட்டிலயோ இல்லை இந்தியாவிலயோ ஏன் உலகத்துலயோ பெரிய பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைங்கள கட்டி வெச்சு கொள்ளையடிக்கிறவங்களெல்லாம் மிகப்பெரும் நிறுவனங்களாகவோ இல்லை முதலாளிகளாகவோதான் இருக்காங்க. அப்பல்லோ பிரதாப் ரெட்டி மாதிரி ஒரு சில டாக்டருங்கதான் முதலாளிகளா இருக்காங்க. இவங்களும் டாக்டர் தொழிலை வெச்சு ஆஸ்பத்திரி கட்டலை. அரசு சலுகை, மானியம், வங்கி கடன் வசதி, பங்கு சந்தை இப்டித்தான் கட்டுனாங்க.

மெர்சல் படத்துல ரெண்டு சீனுக்கு ஒருவாட்டி எம்ஜிஆரைக் காட்டுறாங்க. அவருக்கு அப்புறம் நான்தான்னு காட்ட விஜய் நினைச்சிருக்கலாம். தலைவா படத்துக்கு அவர் கொடநாட்டுக்கு ஓடிப்போய் தவமிருந்தும் “அம்மாவை” பாக்க முடியாம படத்துல இருந்த பஞ்ச் டயலாக்கையெல்லாம் பட்டி டிங்கர் பாத்து தூக்குனது தனிக் கதை!

ஆனா அந்த எம்ஜிஆர்தான் தனது அடியாளுங்க மத்த அபிமானிங்க பலருக்கு சுயநிதிக் கல்லூரி துவங்கவும், மருத்துவமனைகள் கட்டவும் ஏராளமான அரசு நிலத்தை இலவசமாகவோ இல்லை மலிவு விலை குத்தகையாகவோ கொடுத்தாரு.

மியாட் மருத்துவமனை மோகன்தாஸ், ராமச்சந்திரா மருத்துவமனை உடையாரு, ஜெப்பியார் கல்லூரின்னு இதுல ஆதாயம் அடைஞ்சவங்க நிறைய பேரு! இதுல ஜேப்பியாரும், உடையாரும் சாராயம் ஓட்டுனவங்கன்னு உலகத்துக்கே தெரியும்.

இப்படி மியாட்டுல போய் விஜய் இந்த படத்தோட வசனத்த பேசுனாருன்னு வையுங்க, அப்புறம் எம்ஜிஆரே ஆவியா வந்து அடிப்பாரு!

1990-களில் இருந்தே நம்ம நாட்டுல பொது சுகாதாரத்தை அரசு கழுவிட்டு தனியாருக்கு தாரை வாக்கணும்னு முடிவு பண்ணீட்டாங்க. அதுதான் உலகவங்கி, உலக வர்த்தக கழகத்தோட ஆணை.

அதே மாதிரி தனியார் மருந்துக் கம்பெனிகள் அதுல உள்நாடு-வெளிநாடு இரண்டுமே அடிப்படை மருந்துகளுக்கு அதிக விலை வெச்சு கொள்ளையடிக்கிறாங்க. மத்திய அரசோட ஐடிபிஎல்-ங்கிற மருத்து நிறுவனமோ இல்லை கிங் மருந்து ஆராய்ச்சி நிறுவனமோ இப்பவா அப்பவான்னு சாகுற நிலைமையிலதான் இருக்கு.

அரசு மருத்துவமனைகள்ள பல வசதிகளை தனியார் சேவைன்னு மாத்திட்டாங்க. அங்கேயும் போதுமான மருத்தவருங்களோ, நர்சுங்களோ கிடையாது. நீட் வந்ததுக்கு பிறகு அரசு மருத்துவமனைங்கள்ள வேலை பாக்க புது டாக்டரே வரமாட்டாங்க!

நோயளிகளுக்கு தங்களோட மருந்துகளை எழுதணும்னு தனியார் மருந்துக்  கம்பெனிகள் டாக்டருகளுக்கு, பணமாவோ, சொத்தாவோ, இல்லை வெளிநாடு சுற்றுலாவோ பரிசா அளிக்கிறாங்க. அதுமாதிரி எல்லா சோதனைகளுக்கும் மருத்துவர்களுக்கு கமிஷன் உண்டு. அவன் கொடுக்குறாங்கிறதால இவன் எழுதுறான்.

அங்க அடிக்காம இவன திருத்த முடியுமா சொல்லுங்க! கூட்டிக் கழிச்சுப் பாத்தா நம்ம நாட்டுல மருத்துவத்துறையில் இருக்கும் தனியார் மயத்தை ஒழிக்காம, பன்னாட்டு நிறுவனங்களோட மருந்து ஏகபோகத்தை மறுக்காம நம்ம அரசு மருத்துவமனைகளை எப்படி காப்பாத்த முடியும்? சொல்லுங்க!

மியாட்டுல போய் விஜய் இந்த படத்தோட வசனத்த பேசுனாருன்னு வையுங்க, அப்புறம் எம்ஜிஆரே ஆவியா வந்து அடிப்பாரு!

அரசியல்வாதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள் அத்தனை பேரும் அரசு மருத்துவமனையிலதான் சிகிச்சை பெறணும்னு சொல்லுற விஜய் அதையே நடிகர்கள், பத்திரிகை துறையினர், தனியார் முதலாளிகள்னு சொல்ல மாட்டேங்குறாரு!

ரஜினியோ இல்லை விஜயகாந்தோ தும்முனாலும் துவண்டாலும் சிங்கப்பூர் போவாங்கன்னா அதை தளபதி விஜய் கண்டிக்க மாட்டாரா? இல்ல அவருதான் தன்னோட நோய்களுக்கு ஜிஎச்சுக்கு போவாரா?

மாசத்துக்கு 1500 ரூபாய் ஊதியம் வாங்குற ஒரு இந்தியக் குடிமகன், மருத்துவர் கிட்ட ஐஞ்சு ரூபா கொடுக்குறதே அதிகம்ணு சொல்ராறு விஜய். சரிங்க ஆபிசர், அதே மாதிரி உங்க படத்துக்கு முதல் நாளுல ரசிகருங்க ஐநூறு, ஆயிரம்ன்னு கொட்டிக் கொடுக்குறதும், இல்லேன்னா சட்டபூர்வமாகவே மல்டிபிளக்சுல 160 ரூபாயும், மத்ததுல 120-ம் கொடுக்குறத மட்டும் சரியா? இல்லை இந்தியக் குடிமகன் 1500 ரூபாய் வாங்குறதால இனி விஜய், அஜித், ரஜனி, கமல் அத்தனை பேரும் ஒரு  படத்துக்கு ஐயாயிரம் ரூபாய் வேணாம், ஒரு ஐம்பது இலட்சத்தை மட்டும் வாங்கிப்பாங்களா?

இல்லை லாஜிக்க மாத்திப் போட்டா ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறவன் டாக்டருக்கு ஐஞ்சு ரூபா கொடுக்குறது நியாயமனா, கோடிகளில் சம்பளம் வாங்குறவன் இலட்சக் கணக்குல ட்ரீட் மெண்ட் எடுக்குறது நியாயம்ணு வருதா இல்லையா?

ஐயா, அந்த காலத்துல நடிகருங்க தங்களோட மார்க்கெட்டுக்கு ஒரு சென்டிமென்ட் டச்சு கொடுக்குறதுக்குண்ணே, மூணு சக்கர சைக்கிள், இஸ்திரிப் பெட்டி, கல்வி உதவித் தொகை, பிரியாணி சாப்பாடுன்னு கொடுப்பாங்க. இப்ப சமூக வலைத்தளங்களோட காலத்துல இப்பிடி பிசிக்கலா பொருளா கொடுக்கணும்னு அவசியமில்லே.

கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்தால தானம் கொடுக்குற மாதிரி, விஜய் மாதிரி எல்லா நடிகருங்களும் படத்துல மெசேஜ் கொடுக்குறாங்க. இது இஸ்திரிப் பெட்டியை விட   ஒரு போராளி பில்டப்பை கொடுக்குது. அதனால்தானே கபாலியில ரஜினியை கூட ஒரு சமூகப் போராளின்னு தூக்கிச் சுமந்தாங்க சிலபேரு! சைக்கிள் செலவும் மிச்சம், சைக்கிள் கேப்புல நடிகருங்க போராளியாவும் ஆகலாம்.

ஹாலிவுட்டுலேயே இப்பல்லாம் வில்லன்னா கார்ப்பரேட் கம்பெனிங்களையும், முதலாளிகளையும் காட்ட ஆரம்பிச்சாட்டங்க! அப்பதான் மக்களோட சிந்தனையில படத்தை ஓட்ட முடியும். அது இப்ப தமிழ் சினிமாவுக்கும் வந்தாச்சு. மத்தபடி இந்த மசாலாவை மெசேஜ்னு சொல்லி நம்மள நாமே ஏமாத்துனா, இங்க டெங்கு நோய் ஏன் நம்மள கொல்லாது சொல்லுங்க!

_____________

இந்த சினிமா விமர்சனம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. இதைவிட … எப்படி சாென்னாலும் ” கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் ” பண்ற கூட்டத்துக்கு உறைக்காது …. மாயையில்.மாட்டிக் காெண்டு அலையும் பிறவிகளை திருத்தவே முடியாது … ! தமிழிசைக்கு கட்சி … விஜய்க்கு வசூல் … அவ்வளவுதான் …!!

  2. நீங்கள் பார்க்கும் மார்க்சிய கண்ணோட்டத்தில் விஜய்க்கும் அட்லிக்கும் பார்க்க தெரியாமல் இருக்கலாம். அட்லி வாட்சப் மெசேஜை வைத்து இந்த வசனத்தை எழுதினார் என்றே வைத்து கொள்வோம் அதற்கு விஜயை எப்படி சிங்கப்பூரை பெரிதாக பார்த்தார் என எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? ஏதோ ஜிஎஸ்டியால் மக்கள் துன்பப்படுகிறார்கள் , பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் சிக்கல்களை அனுபவித்தார்கள் என்பதால் அதை பயன்படுத்தியிருக்கிறார்கள். இது சாதாரண மனிதனின் கருத்து. இங்களது விமர்சனம் விஜயை அ. மார்க்ஸின் பின்நவினத்துவத்தோடு ஒப்பிட்டு
    நினைத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்.

    நீங்கள் பேசுவது அவரை இடதுசாரி அமைப்பில் இருந்து அவர் தவறாக அந்த சிந்தனையில் பேசவில்லை என விமர்சிப்பதை போல் உள்ளது. அவர்களோ சாதாரண ஒரு நடிகர் , இயக்குநர் இவர்களிடம் அவர்கள் தரத்தில் சமூக அக்கரையை எதிர்பாருங்கள்.

    விஜய் இலவச மருத்துவம் வேண்டும் என கெஞ்சினார்தான் அவருக்கு தெரிந்தது அதுதான் உங்களை போல் அவர் போராளி அல்லவே. பாவம் அவருக்கு தெரியாது ஜனநாயக கட்டமைப்பு நொறுங்கிவிட்டது என்று. அவர் ஜனநாயகம் இருப்பதாக நம்பியதால் கெஞ்சுகிறார். நீங்கள் ஜனநாயகம் இல்லை என்பதால் போராடுகிறீர்கள். ஒரு வேலை அவரும் ஜனநாயகம் இல்லை என்பதை உணர்ந்தால் நக்சல்பாரியாக நடிப்பாரோ என்னவோ அவ்வளவுதான்.

    சமரசம் செய்யமாட்டோம் என்பீர்கள். ஆனால் அதிமுக வின் சாராயத்தை எதிர்க்க முன்னாள் ஓனர் இன்னாள் வியாபாரி (திமுகவை) நண்பனாக்கி கொண்டு எதிர்ப்பிர்கள்.கேட்டால் பொது எதிரியை எதிர்க்க இது போன்ற கூட்டணி அவசியம் என சித்தாந்தம் பேசுவீர்கள். அதே சித்தாந்தம் இங்கே பொருந்தாது கேட்டால் இதற்கு தனி சித்தாந்த விளக்கம் தருவீர்கள். இங்கு ஆகா ஓகோ என்று கமெண்ட் செய்பவர்கள் எல்லாம் உங்க ஆளுங்க. இவ்வளவு நாள் நாம்போராடி கிடைக்காதது ஒரு படத்தில் ஒரு வார்த்தையில் கிடைத்ததை கண்ட மனவருத்தத்தின் வெளிப்பாடுதான் இந்த கமெண்ட் கைதட்டல்கள் எல்லாம். என்பது என் கருத்து.

    • ஐயா, சிங்கப்பூரில் இலவச மருத்துவம் இல்லை என்ற உண்மை நிலைமையை அதாவது சாதாரண விக்கிபீடியா மேட்டரைச் சொல்வதெல்லாம் மார்க்சியக் கண்ணோட்டம் என்றால் உங்களுக்கு மார்க்சியமும் தெரியவில்லை, பொதுவான உண்மைகளும் ( பூமி உருண்டை என்று சொல்வது போன்ற ) தெரியவில்லை. படத்தில் ஜி.எஸ்.டியால் மக்கள் துன்பப்படுவதாக சொல்லவில்லை. அம்புட்டு வரி வாஙகிட்டு இலவச மருத்துவம் கொடுக்கலாம்ல என்றுதான் முன்வைக்கிறார்கள். அதன்படி அதிகமான கொள்ளை வரியை நியாயப்படுத்தும் பாங்கே இதில் வெளிப்படுகிறது.மற்றபடி உங்களது அறியாமை காரணமாக இந்தக் கட்டுரையை மறுப்பதற்கு வழியில்லாத போது திமுக அவதூறு குத்தி சுய இன்பம் பெறுகீறர்கள் என்றால் அது உங்கள் சுதந்திரம், என்சாய்!

  3. சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பதனை இந்தியாவினுடனான ஒப்பீட்டுரீதியில் ஏற்றுக்கொள்ளலாம். இங்கிலாந்தில் மருத்துவம் இலவசம் என்கிறோம், ஆனால் இங்கும் சிறிதளவு பணம் சம்பளத்திலிருந்து விகிதார அடிப்படையில் என சிறிய தொகை கழிக்கப்படும். கடுமையாகப் பொருளியல் நோக்கில் பார்த்தால் கியூபாவிலும் மருத்துவம் இலவசமில்லை, ஏனெனில் மக்களிற்கு இலவசமாக மருத்துவம் கிடைத்தாலும் அதனை வழங்குவதற்கு அரசிற்கு ஒரு செலவு உண்டு அதனால் அதுவும் ஒரு பொருளாதாரப் பண்டமே.
    இது விஜய்க்கான வக்காலத்து அல்ல, மாறாக செய்தி தொலைக்காட்சிகளே உ.பி குழந்தைகள் ஒட்சிசன் பற்றாக்குறையால் இறந்ததனை விவாதிக்கத் தயங்கும்போது ஒரு மசாலாப் படத்தில் அதனையும் பேசியிருப்பதற்கான பாராட்டு.

    • நாம் கிணற்றிலிருந்து குடிக்கும் தண்ணீரும் இலவசம் அல்ல. கிணற்றை வெட்டுவதற்கு பணம் செலவழிக்கிறோம். எனவே அதுவும் பொருளாதார பண்டமே.
      அதனால யாரும் அரசுகிட்ட இலவச குடிநீர் , மருத்துவம் , கல்வி கேட்டுடாதீங்க. ஆமா… மருவாதையா எல்லாத்தையும் பணம் குடுத்து வாங்கிக்குங்க… ஆமா..

    • கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவே தமிழ் சினிமாவின் fashion அல்லது வியாதி என்னன்னா , அப்போ current இல் இருக்கும் விஷயத்தை படத்தில் புகுத்தி publicity தேடுவது.
      தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இது ஒரு பழைய விடயம். என்னமோ இப்பதான் சினிமால இதெல்லாம் காட்டுறாங்ககளா என்ன ?

  4. வினவு, நீங்களும் இந்தியாவை ,சிங்கப்பூருடன் ஒப்பீடு செய்வதால் நானும் சொல்றேன் எங்கணக்கை!…

    இந்தியா HDI- Human Development Index 131ஆவது இடம் உலக அளவில்….

    சிங்கப்பூர் HDI- Human Development Index 5ஆவது இடம் உலக அளவில்…..

    இந்தியா GDP per Capita $1709 USD

    சிங்கப்பூர் GDP per Capita @52,960 USD

    இப்ப சொல்லுங்க மொத்த வருமானத்தை சதவீத கணக்கில் பார்ப்பது சரியா? இல்ல வருமானமாக(பணமாக) பார்ப்பது சரியா? சரி இரண்டு நாடுகளிலும் 2% பொது சுகாதரத்துறைக்கு ஒதுக்குறாங்க என்று வைத்துக்கொள்ளலாம்…! அப்ப இந்தியாவில் தலைக்கு பொது சுகாதரத்துறைக்கு ஒதுக்கப்டும் பணம் வெறும் 1709 *2 /100 = $34.18 USD. அதே நேரத்தில் சிங்கபூரில் தலைக்கு பொது சுகாதரத்துறைக்கு ஒதுக்கப்டும் பணம் 52960 *2 /100 = $1059 USD !

    எந்த நாட்டில் பொது சுகாதரத்துறைக்கு தலைக்கு ஒதுக்கப்டும் பணம் அதிகம் என்று இப்ப தெரிந்து இருக்குமே!

    (இதுக்கு தான் அவசர அவசரமா கட்டுரை எழுத கூடாது என்பது )

    //சிங்கப்பூரோட மொத்த தேசிய வருமானத்துல இருந்து 1.6% -த்தை பொது சுகாதரத்துறைக்கு ஒதுக்குறாங்க. இந்தியாவுல 1.4% ஒதுக்குறாங்க! புள்ளி இரண்டை வெச்சு மட்டும் சிங்கப்பூர் தரமானது இல்லீங்க.//

    • மாற்றம் : (இதுக்கு தான் அவசர அவசரமா கட்டுரை எழுத கூடாது என்பது ) -> (இதுக்கு தான் இயக்குனர் அடிலி வசனம் எழுதியது மாதிரியே நீங்களும் அவசர அவசரமா கட்டுரை எழுத கூடாது என்பது )

    • ஐயா அறிஞரே, கட்டுரையிலேயே // இப்டி காஸ்ட்லியான சிங்கப்பூர் மருத்துவத்தைத்தான், உலக சுகாதார நிறுவனம் 2000-ம் ஆண்டின் கணக்குப்படி ஆறாவது ரேங்கில் வைச்சுருக்கு. // என்றுதான் வருகிறது.இதுவும் நீங்கள் எழுதியிருக்கும் அறிய கண்டுபிடிப்பும் ஒண்ணுதான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்து அப்படி ஒரு பெயர் சிங்கப்பூருக்கு ஏன் வருகிறது? அதையும் கட்டுரை சொல்கிறது // ஏன்னா சிங்கப்பூர்ல மத்த நாட்டுல இருக்குற மாதிரி சட்டப்படியான குறைந்த பட்ச கூலின்னே ஒண்ணு கிடையாது. இந்தியாவுல கூட குறைந்த பட்ச கூலி இவ்வளவு கொடுக்கணும்னு சட்டம் இருக்கு. பீகாருல ரூ 160 -ன்னும், கேரளாவுல ரூ 750 -ன்னும் அந்த தொகை மாறுபடுது. இன்னும் விவசாய தொழிலாளிகளுக்கும் இந்தியா முழுவதும் சட்டப்படி இவ்வளவு கொடுக்கணும்னு இருக்கு.

      உலகத்திலேயே அப்படி ஒரு சட்டம் இல்லாத நாடுன்னு சொன்னா அது சிங்கப்பூர்தான். 2014-வது வருசத்துலதான் துப்புறவுத் தொழிலாளிகளுக்கு 1000 -ம் டாலரும்னு, செக்யூரிட்டி வேலைக்கு மாதம் 1,100 டாலரும்னு சட்டம் கொண்டு வந்திருக்காங்க. இது போக மத்தவங்களுக்கு முதலாளிங்க எவ்வளவு கம்மியா சம்பளம் கொடுத்தாலும் அதை யாரும் தட்டிக் கேக்க முடியாது.//

      // சிங்கப்பூருல தொழிலாளிக்கு சட்டப்படி சம்பளம் இல்லேங்குற மாதிரி அங்க முதலாளிக்கு சட்டப்படியே வரியே கட்டவேண்டாம்கிற அளவுக்கு ஏகப்பட்ட சலுகை கொடுத்திருக்காங்க. அதனாலதான் வெளிநாட்டுல இருக்குற பல பண முதலைங்க சிங்கப்பூருலயும் கொஞ்சம் சொத்துக்களை மாத்தி வெச்சிருக்காங்க. நிறைய பேரு செட்டிலாகியிருக்காங்க. இது தொடர்பா எங்க வினவு தளத்துல நிறைய கட்டுரைங்க இருக்குது, படிச்சுப் பாருங்க!//

      இதுக்காக நீங்கள் கட்டுரையை படிக்காம அவசரப்பட்டு மறுமொழி போட்டதா சொல்லவில்லை. ஏன்னா படிச்சாலும் நீங்க அப்டித்தான் போடுவீங்கங்கிறது தெரியும்.

      • நான் இங்கே சுட்டிக்காட்டிய HDI மனித வள குறியீடு கூட வினவில் இருந்து தான் அறிந்துகொண்ட ஒன்று… பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் குஜராத் மற்றும் தமிழகத்தின் HDI விவரங்களை ஒப்பீடு செய்து தமிழகம் மோடியின் குஜராத்தை விட முன்னேறி தான் இருக்கு என்று நிருபணம் செய்தது வினவும் அதனை சார்ந்த மக்கள் கலை இலக்கிய கழகமும் தானே?அதே குறீயீடுகள் நான் இந்தியாவுக்கும் , சிங்க பூருக்கும் ஒப்பீடு செய்ய நான் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன் அவ்வளவு தான் விசயம்…

        எதுக்காக நீங்க இப்படி எனக்கு எதிராக வில்லங்கமாக ,உள்நோக்கத்துடன் எழுதுறீங்க என்று எனக்கு சிறிதும் தெரியல “”இதுக்காக நீங்கள் கட்டுரையை படிக்காம அவசரப்பட்டு மறுமொழி போட்டதா சொல்லவில்லை. ஏன்னா படிச்சாலும் நீங்க அப்டித்தான் போடுவீங்கங்கிறது தெரியும்.
        “”-வினவு

        நான் சுட்டிக்காட்டும் சதவீத கணக்கு தவற்றை நீங்க ஒத்துகொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்றும் எனக்கு தெரியல… மற்றபடி வினவில் அரிதாக நிகழும் கருத்தியல் தவறுகளை மற்றும் கணகியல் தவறுகளை சுட்டிகாட்டுவது எனது கடமை என்றே நினைகின்றேன்.

        புரிதலுக்கு நன்றி வினவு.

    • நீங்க சொன்னதுலயும் தப்பு இருக்கு சாரே. சிங்கபூர் HDI ல 3வது இல்ல 5வது இடத்துல இருக்கு. GDP per Capita வும் நீங்க சொன்னத விட சற்று அதிகம்.

      • ஐயா நீதிபதி அவர்களே…, தூங்காம வினவ படிங்க…பின்னுட்டம் எழுதுங்க…. நான் எழுதியது என்ன ?சிங்கப்பூர் லேட்டஸ்ட் HDI- Human Development Index 5 ஆவது இடம் உலக அளவில்…..! நீங்களும் எனக்கு அதத்தானே சொல்றீங்க! நல்லது…கேட்டுகிறேன் ஐயா…அடுத்ததா பார்தீர்கள் என்றால் சிங்கப்பூர் GDP per Capita துல்லியமாக 52,960.71 USD ஆண்டு 2016. நான் 0.71 அளவுக்கு துல்லியமா சொல்லததுக்காக என்னை மன்னிச்சிடுங்க நீதிபதி ஐயா….

    • ஆனால் டாலர் கணக்குப்படி தாதியர் , வைத்தியர்கள் சம்பளம்கூட ஆஸ்பத்திரி பராமரிப்பு நிர்வாகச்செலவு என்று பார்த்தால் இந்தியாவை விட சிங்கப்பூர் அரசுக்கு செலவு அதிகம்.
      உதாரணமாக ஒரு இந்திய டாக்டருக்கும் சிங்கப்பூர் டாக்டருக்கும் உள்ள சம்பள வித்தியாசத்தை டாலரில் பார்த்தீர்களானால் அந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ளலாம்.

  5. வினவுக்கு, சீங்கபூரிலாவது குறைந்த பச்ச சம்பளம் என்று துப்புரவு தொழிலாளர்களுக்கும், செக்குரிட்டி வேலைக்கும் இருக்கு…. உங்க கணக்கு படியே பார்த்தால் கூட அவிங்க சம்பளம் Rs 48,000 இருந்து Rs52,800 வரைக்குமாவது வருது…

    இப்ப இந்திய நிலையை குறிப்பாக தமிழக நிலையை பாருங்க வினவு. என் பையன் ஆண்டுக்கு 13,000 பணம் கட்டும் பள்ளியில் LKG படிக்கின்றான். அதில் 9000 பிஸ்… 4000 புத்தகம் மற்றும் சீருடைக்கான செலவு… அங்கே மொத்தம் 500 மாணவர்கள் வரைக்கும் படிக்கிராங்க! பள்ளியின் மொத்த ஆண்டு வருமானம் 500 * 9000 = Rs 45,000,00.

    அங்கே வேலைசெய்யும் ஆசிரியைகளின் அதிகபச்ச மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? வெறும் Rs8000 மட்டும் தான்…! அவிங்க ஆண்டு வருமானம் 96 ஆயிரம் மட்டும் தான். இந்த வருமானத்தில் தான் அவிங்க செல்போனுக்கு ரீசார்சி செய்து (பெற்றோருக்கு தேவையான தருணங்களில் போனில் பேச), உடைகளை வாங்கி , வண்டி இருந்தால் அதுக்கு பெட்ரோல் போட்டுகிட்டு வரனும்….

    மாத சம்பளம் வாங்கும் இந்திய தொழிலாளர்களின் குறைந்த பட்ச சம்பளம் இவ்வளவு என்று என்ன மயிரையோ மோடி சொல்லிக்கிட்டு இருகாரு…! ஆனால் பாருங்க தமிழ அரசு ஆசிரியர்களின் சம்பளத்தின் அடிப்டையில் தான் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்கிறது. அப்படி பார்த்தால் அந்த பள்ளியின் அதிகபட்ச சம்பளமே 8000 சம்பளம் என்பது எந்த சட்டத்தின் கிழ் வரும்? இந்தியாவில் இந்த மாநிலத்தில் குறைந்த பட்ச சட்டபடியான சம்பளம் இந்த சம்பளம் , அந்த மாநிலத்தில் அந்த சம்பளம் என்று சட்டத்தை மட்டும் பார்த்து பேசாதீங்க வினவு…! இந்திய முதலாளித்துவ அரசுக்கு ஒத்து ஊத்தாதீங்க வினவு… எதார்த்தத்தில் என்ன நிலைமை இந்தியாவில் என்று கண்ணை தெறந்து பாருங்க!

    அடுத்து நீங்க கூறும் அந்த குறைந்த பட்ச சம்பளத்தின் அடிப்டையில் தான் பிகாரிலும் , கேராவிலும் அனைவ்ருக்கும் வேலை திட்டத்தில் தினக்கூலியை இந்திய அரசு வழங்குதா?

  6. ஜிஎஸ்டி வரி தாக்கல் தாமதமாக செய்தால் டிசம்பர் மாதம் வரையில் அபராதம் இல்லையென்று அரசு சொல்லியது. ஆனால் தற்போது 1000 முதல் 20000 வரை அபராதம் செய்திருக்கிறது. சிறுவணிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். அரசு என்பது கந்து வட்டிக்காரனைப் போல அபராதம் போடுகிறது. தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும் ரூ 100 வீதம் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டிக்கும் ரூ 200 வசூலிக்கிறது. அதற்கு வட்டியும் போட்டு வசூலிக்கிறது. அரசு என்பது மக்களை உறிஞ்சும் அட்டையாக மாறி நிற்கிறது. இனி இந்த கொல்ளைக்கூட்டத்தை வீழ்த்தாமல் மக்களுக்கு விமோசனமில்லை.

  7. நீங்க சொல்றதப் பார்த்தா அப்பாவைக் கொன்ன நம்பியாரை முப்பது வருஷம் கழிச்சி கண்டு பிடிச்சு “அபூர்வசகோதரர்களான” ரெண்டு பெரிய எம்ஜியாரும் சேர்ந்து ( இவிங்க கையால அடிபடணும்ணு முப்பது வருஷமா தன் உயிரை கையில புடிச்சிக்கிட்டு தமிழ் சினிமா மரபு படி வில்லன்கள் உயிரோடு இருந்தேத் தொலையனும்)டிஜும் டிஜும்னு போட்டிப்போட்டு அடிச்சு பலி வாங்குவாங்களே அந்த குடியிருந்த கோயில்தான் இந்த மெர்சல் மேழாவா?அதுல அங்கங்கே தமிழ் ,ஜிஎஸ்டி, மருத்துவஇலவசம்,மானே தேனேன்னு போட்டுக்கிட்டா போராளிப்படம்.நல்லவேளை காப்பாத்தினிங்க வினவு.மூச்சுத்திணற திணற மூணு மணிநேரம் தியேட்டர்குள்ள உட்கார்ந்துப் பார்த்திருந்தா தெரியும் அது தமிழிசையைக்காட்டிலும் எவ்வளவு கொடுமைன்னு?

  8. ஏன் மருத்துவ துறையில் நடைபெறும் முறைகேடுகள் வினவுக்கு தெரியாதா என்ன?

    இந்த கட்டுரை வினவுக்காரங்க எழுதனமாதிரியே இல்ல… ஏதோ வினவுக்கு தெரிந்த வாசகர் அவசர அவசரமாக எழுதிய கட்டுரை மாதிரி தானே இருக்கு. மருத்துவர்கள் தங்கள் கட்டணத்தை கண்டபடி உயர்த்தி மக்களின் கைப்பணத்தை பிடுங்கும் நிகழ்வு கூட வினவுக்கு தெரியாமல் எல்லாம் இருக்காது. மேலும் மருத்துவர்கள் நோயாளிகளிடம் பணம் பிடுங்கும் விசயத்தில் தோழர் மருதையன் அவர்கள் கூட வினவிலேயே ஒரு விடியோவில் கண்டனம் தெரிவித்து இருகாரு… நம்புங்க உண்மை தான்…. நான் வேண்டுமானால் அந்த விடியோ லிங்க்கை தேடித்தரேன்… கொஞ்சம் பொறுங்க வினவு……..

    டாக்டருங்க….அவிங்க எப்படி வேண்டுமானாலும் ஆஸ்பித்திரி கட்டட்டும்…அதுக்கு மக்களின் பணத்தை பிஸ் மற்றும் மருத்துவம் என்ற பெயரில் பிடுங்க/கொள்ளையடிக்க என்ன அருகதை இருக்கு அவிங்களுக்கு?

    அதே நேரத்தில் மக்களை கருணையுடன் பார்க்கும் டாகடர்கள் இருக்கத்தான் செய்யறாங்க…கள்ளகுறிச்சியில பத்துருபாவுக்கு வைத்தியம் செய்யும் ஒரு வயது முதிர்ந்த டாக்டரையும்…, மறைமலை நகரிலே ஒரு ஆஸ்பித்திரியில் டெங்கு காய்சளுக்கும், சாதா காய்சளுக்கும் பீசே வாங்காமல் வைத்தியம் செய்யும் ஒரு இளம் டாகடரரையும் பார்த்துகிட்டு தான் இருக்கேன். ஆனால் இவர்கள் எல்லாம் விதிகள் கிடையாது…விதிவிலக்குகள் மட்டுமே!

    //ஒரு நோயால மரணமோ, பாதிப்போ எது இருந்தாலும் மக்கள் முதல்ல கோபப்படறது மருத்துவருங்க மேலதான். ஆனா மருத்துவருங்க மேல மட்டும் கோபப்பட்டு பிரோயஜனம் இல்லை.

    தமிழ்நாட்டிலயோ இல்லை இந்தியாவிலயோ ஏன் உலகத்துலயோ பெரிய பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைங்கள கட்டி வெச்சு கொள்ளையடிக்கிறவங்களெல்லாம் மிகப்பெரும் நிறுவனங்களாகவோ இல்லை முதலாளிகளாகவோதான் இருக்காங்க. அப்பல்லோ பிரதாப் ரெட்டி மாதிரி ஒரு சில டாக்டருங்கதான் முதலாளிகளா இருக்காங்க. இவங்களும் டாக்டர் தொழிலை வெச்சு ஆஸ்பத்திரி கட்டலை. அரசு சலுகை, மானியம், வங்கி கடன் வசதி, பங்கு சந்தை இப்டித்தான் கட்டுனாங்க.//

    • தலைவா இங்க மருத்துவர்கள சப்போர்ட் பண்ணி எதுவும் எழுதலையே. மருத்துவர்களை மட்டும் குற்றவாளியாக்குறதால மட்டும் பிரச்சினை தீராதுன்னு தான் சொல்லி இருக்காங்க. கார்ப்பரேட் மருத்துவமனைகள்ல டாக்டர்களும் கூலிதான்.

      எப்படி இந்த ஐ.டி காரன் வந்து வெலவாசியெல்லாம் ஏத்திட்டான்னு பேசறது போல இருக்கு உங்க புரிதல்.இப்ப புரியும்ன்னு நெனைக்கிறேன்…
      இல்ல வீடியோ லிங்கு போட்டே திர்ருவேன்னா அது என்னமாதிரி லேசி பாய்க்கு உதவியா இருக்கும் போடுங்க ப்ரோ…

      • நண்பர் குரு,,, கார்போரெட் மருத்துவமனைகள் மட்டுமா மக்களை கொள்ளையடிகிராங்க? இல்லையே… ஆட்டையாம்பட்டியில் இருந்து மல்லசமுத்திரம் வரைக்கும் இருக்கும் ஊராட்சிகளில் உள்ள டாக்டர்கள் எல்லாம் என்ன உங்களுக்கு அவ்வளவு நல்லவங்களா? குறைந்த பணத்தில் கட்டணத்தில் சேவை செய்யறாங்களா குரு ? பார்ட் டைமா மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனையில் டாக்டரா வேலை செய்யரவரு முழுநேரமா அதே ஊரில் உள்ள சொந்த மருத்துவமனையில் செயல்பட்டுகிட்டு தான் இருகாரு…

        ஒரு தடவ அவரை நான் வேலை செய்த கலை அறிவியல் கல்லுரி மாணவர்கள் NCC கேம்ப்க்கு “அறிவுரை” கூற அழைத்து இருந்தாங்க…. அவர் பேசிட்டு உங்க கேள்விகளை கேட்கலாம் என்றார். நம்ம மாணவன் ஒருத்தர்… சார் நீங்க வெறும் MBBS சா இல்ல வசூல் ராஜா MBBS ஆ என்று கேள்விய கேட்டு அவரை அம்ப்லாப்டுதினார்…(இனிக்கி அந்த மாணவன் B.Sc.M.Sc.M.Phil.P.hd முடித்துட்டு கோவையில் ஒரு சுயநிதி பொறியியல் கல்லுரியில் நல்ல சம்பளத்தில் துனை பேராசிரியராக கணித துறையில் இருக்கான். )

        மத்திய அரசு மருத்துவர்கள் தனியாக பிராக்டிஸ் செய்யகூடாது என்று சட்டம் இருக்கு அல்லவா?(பாண்டி ஜிப்மர் மற்றும் பெங்களுரு நிமான்ஸ்) அது போல தமிழக அரசு மருத்துவர்களும் தனியாக பிராக்டிஸ் செய்யகூடாது என்று சட்டம் போட இந்த அரசுக்கு என்ன கேடு?
        எல்லா டாகரும் கார்பொரேட் மருத்துவ மனைகளில் வேலை செய்யல என்ற நிலையில் இருந்து இந்த விசயத்தை எதிர்கொண்டீகள் என்றால் உங்களுக்கு உண்மை புலப்பட தொடங்கும் குரு !

  9. அரசு மருத்துவமனைகள்ள பல வசதிகளை தனியார் சேவைன்னு மாத்திட்டாங்க…..அது என்னென்ன சேவைகள்னு சொன்னா சரியா? தவறா? என் ஆராய்ந்து பார்க்கலாம்….

    • குறிப்பா சொல்லனும்னா இப்ப காப்பீடு திட்டத்தின் மூலமா தான் அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கனும்னு கட்டாயப்படுத்துறாங்க… இதுவே தனியார்மயப்படுத்தலின் வாசக்காலாக உள்ளது.

      மருத்துவர்கள் இன்சூரன்ஸ் மூலம் தருகிற சிகிச்சைமூலமாததான் மொத்த ரெவின்யூவா சம்பாதிச்சு குடுக்கனும். அதுல அவங்களுக்கு இன்சண்டிவ் உண்டு. மேலும் அந்த மொத்த ரெவின்யூவில் இருந்து தான் நிர்வாக பராமரிப்புகள செய்துக்கனும்.

      ஓமந்தூர் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைக்கு போனா அது துலக்கமா தெரியும்.

  10. // தோராயமாக 55 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரில் உலகிலேயே அதிக விகிதத்தில் கோடீஸ்வரர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொரு ஆறு வீடுகளிலும் ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால் அங்கே அறுபது இலட்சம் ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருக்கும். அவை நிரந்தரச் சொத்து, வணிக முதலீடு, ஆடம்பர பொருட்கள் என்று முதலாளித்துவத்தின் அனைத்தும் தழுவிய சாதனைகளாக இருக்கும்.

    இத்தகைய பட்டியலை பார்க்கும் நம்மூர் கோயிந்துகள், “பார் சிங்கப்பூரை, என்ன ஒரு வளர்ச்சி” என்று கம்மர் கட்டை மொய்த்து விட்டு நுழையும் நூற்றி எட்டு ஈக்களுக்காக வாய்களை பிளக்கிறார்கள். இப்படி ஒரு பணக்கார சாதனை சிங்கப்பூருக்கு இருக்குமென்றால் அதன் மறுபக்கம் ஒன்று இருக்க வேண்டுமென்ற பொது அறிவு கூட இக்கோயிந்துகளுக்கு கிடையாது.//

    https://www.vinavu.com/2015/03/24/singapore-dictator-lee-kuan-yew-passes-away/

  11. //சிங்கப்பூரின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்க கூடிய துறைகளில் ஒன்று சுற்றுலா. சுற்றுலா என்றால் தீனி, விடுதி, கடை போக விபச்சாரமும் உண்டு. இருப்பினும், தற்கால சுற்றுலா மையங்களில் இவை மட்டும் போதாது. முக்கியமாக சூதாட்டம் வேண்டும். அதன்படி உலக மேட்டுக்குடியினரை ஈர்க்க 2005-ம் ஆண்டு சிங்கப்பூரில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கிவிட்டனர். அதன்படி தற்போது இரண்டு சூதாட்ட மையங்கள் சக்கை போடு போடுகின்றன. உலக நாடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சுரண்டல் மற்றும் ஊழல் பணங்களைக் கொண்டு வரும் சுற்றுலா ஆசாமிகள் அதை சிங்கப்பூரின் சூதாட்டத்தில் கடாசி விட்டு திரும்புவார்கள். அதை வைத்து பொருளாதாரத்தை வளர்க்கும் சிங்கப்பூரில் இலஞ்சம் கடுகளவும் இல்லையாம்.//

    https://www.vinavu.com/2015/03/24/singapore-dictator-lee-kuan-yew-passes-away/

  12. //சுற்றுலாவைப் போல சிங்கப்பூர் முதலாளிகளுக்கு வளம் கொடுக்கும் மற்றொரு துறை மருத்துவம். மருத்துவ சுற்றுலாவிற்காக வருடந்தோறும் 2,00,000 பயணிகள் வந்து தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். கிராமங்களில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்வதற்குக் கூட பேருந்து கட்டணம் இல்லாமல் தெருவோர சித்த வைத்தியரிடம் பிணி தீர்க்கும் நம் நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெறும் நபர்கள் யார் என்று தெரியுமா?

    கடைசியாக தமிழ் நாட்டில் இருந்து சென்றவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேப்டன் விஜயகாந்த். இருவருக்கும் பிளாக்கில் விற்ற பணம் இருக்கும் போது சிங்கப்பூரின் வளத்திற்கு உரம் போடும் அந்த ரத்தப் பணம் யாருடையது? வருடத்திற்கு 300 கோடி அமெரிக்க டாலரை இலக்காகக் கொண்டு செயல்படும் சிங்கப்பூர் மருத்துவத்தின் ரத்தம் ஏழைநாடுகளைச் சுரண்டுவதிலிருந்தே போகிறது. அதே போல சிங்கப்பூரில் கல்வி நிலையங்களில் மூன்றாம் உலக ஆசிய நாடுகளின் அதிகார வர்க்க மற்றும் முதலாளிகளின் வாரிசுகள் படிக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களாலும் சிங்கப்பூர் ஆதாயம் அடைகிறது.//

    https://www.vinavu.com/2015/03/24/singapore-dictator-lee-kuan-yew-passes-away/

  13. //சிங்கப்பூரை “உலகில் சுலபமாக தொழில் செய்வதற்கு ஏற்ற இடம்”, “உலகின் தலைசிறந்த லாஜிஸ்டிக்ஸ் மையம்” என்று உலக வங்கியே பாராட்டியிருக்கின்றது. உலக வட்டிக்காரன் ஒரு குட்டி நாட்டை பாராட்டுகிறான் என்றால் அது மக்களைப் பொறுத்தவரை நேரெதிராகத்தானே இருக்கும்? உலகின் முன்னணி நிதித்துறை மையம், உலகின் இரண்டாவது பெரிய சூதாட்ட சந்தை, உலகின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களில் ஒன்று போன்ற சிங்கப்பூரின் சாதனை பத்திரங்களையும் உலக வங்கியின் பாராட்டையும் சேர்த்து பார்த்தால் இது தீவாய் இருக்கும் ஒரு ஏழு நட்சத்திர விடுதி என்று புரியும். கையேந்திபவன்களில் காலம் கழிக்கும் நம்மைப் போன்றோர் இந்த நட்சத்திர ஓட்டல்களை கொண்டாட முடியுமா?//

    https://www.vinavu.com/2015/03/24/singapore-dictator-lee-kuan-yew-passes-away/

  14. //உலகிலேயே வரியில்லா சொர்க்கமென்று அழைக்கப்படும் சில நாடுகளில் சிங்கப்பூரும் வருகிறது. இங்கே தனிநபர் வருமான வரியும் குறைவு, கார்ப்பரேட் வருமான வரியும் குறைவு. இந்த இரண்டு சலுகைகளும் இருக்கும் நாடுகளில்தான் அநேக குபேரர்கள் தமது சொத்துக்களோடு குடியேறுவார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில்லறை வணிக முதலாளி பிரெட் பிளண்டி, மற்றும் ஃபேஸ்புக்கின் நிறுவனர்களில் ஒருவரான எடார்டோ சவரின் ஆகியோர் முறையே 2013 மற்றும் 2012 வருடங்களில் தமது சொந்த சொத்து பத்துக்களுடன் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டனர். மொரிஷியஸ் நாடும் கூட இத்தகைய வரியில்லாத நாடுகளில் ஒன்று என்பதையும் அங்கிருந்துதான் அநேக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்கின்றன என்பதையும் இங்கே இணைத்து பாருங்கள்.

    நிதித்துறை இரகசிய அட்டவணை மற்றும் வரிகளுக்கான நீதி வலைப்பின்னல் போன்ற முதலாளிகளின் தொழில் மதிப்பீட்டு அட்டவணைகளில் சிங்கப்பூர் நல்ல இடத்தை வகிக்கிறது. கேட்பார் கேள்வியின்றி சுரண்டுவதில் தடையில்லாத நாடுகளே இவ்வட்டவணைகளில் இடம்பெற முடியும். இதன் பொருட்டுதான் சிங்கப்பூர் அன்னிய முதலீடு நாடி வரும் காந்தப் புலமாக இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா முதலான இடங்களிலிருந்து இங்கு சுமார் 7,000 பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.//

    https://www.vinavu.com/2015/03/24/singapore-dictator-lee-kuan-yew-passes-away/

  15. //மலேசியா, இந்தோனேஷியா, நாடுகளில் 1950-களில் இருந்த கம்யூனிச எழுச்சியை மேற்குல உதவியோடு அந்நாட்டு ஆளும் வர்க்கங்கள் அடக்கி ஒடுக்கின. மலேசியாவோடு இருந்த சிங்கப்பூரிலும் அத்தகைய ஒடுக்குமுறை இருந்தது. இன்றைக்குக் கொண்டாடப்படும் லீ குவான் யூ மற்றும் அவரது மக்கள் செயல் கட்சியும் கூட அத்தகைய கம்யூனிச எதிர்ப்பிலிருந்தே தமது அரசியல் வாழ்வை துவங்கியவர்கள்.

    சிங்கப்பூரில் எச்சி துப்பக் கூடாது, சிரிக்க வேண்டும், டாய்லட்டில் தண்ணீர் விட வேண்டும் போன்றவற்றையெல்லாம் சட்டங்களாகவும், மீறினால் தண்டனையாகவும் போட்டு ஷங்கரின் அந்நியன் பாணியில் சுத்தத்தை கொண்டு வந்தார் லீ. தண்டனைகளில் மத்தியக் கால கொடுங்கோன்மை பிரம்படி உண்டு. கூடவே போராட்டம், கலவரம், வேலைநிறுத்தம் போன்றவற்றிற்கும் கடும் தண்டனைகள் உண்டு. மரண தண்டனையும் உண்டு. “சிங்கப்பூரின் மக்கள் தொகை விகிதத்தை ஒப்பிடும் போது அங்கே மரண தண்டனை விகிதம் அதிகம்” என்று அம்னெஷ்டி இன்டர் நேஷனல் பல முறை கூறியிருக்கிறது.

    ஒரு கட்சி ஆட்சிமுறை, லீயின் மகனே இன்று பிரதமர் என்று அத்தனையும் இருந்தாலும் மேற்குல ஊடகங்களோ இல்லை ஜனநாயக காதலர்களோ வட கொரியாவை வசைபாடுவது போல சிங்கப்பூரை பாடுவதில்லை என்பதோடு போற்றி புகழ்கிறார்கள். வட கொரியா ஒரு அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடு என்று நாம் மதிப்பிடுகிறோம். எனில் சிங்கப்பூர்? இது ஒரு அக்மார்க் அப்பட்டமான முதலாளித்துவ நாடு.//

    https://www.vinavu.com/2015/03/24/singapore-dictator-lee-kuan-yew-passes-away/

  16. GST விசயத்தில் அட்லி ஒப்புமை செய்ததில் தப்பா எழுதிட்டாலும் மத்த சரியான விசயங்களை வினவு கண்டுகாம போனது ஏன்?

    வினவுக்கு அந்த படத்தில் உள்ள வசனங்களில்

    உத்திரபிரதேச அரசு ஆஸ்பித்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர் விசயம் ,

    பாண்டிசேரி ஆஸ்பிட்டலில் ட்யாளிஸ் செய்தரப்ப கரன்ட் கரண்டு கட்டானதால நாலு பேரு இறந்தாக,

    தமிழகத்தில் அரசு ஆஸ்பித்திரியில் இங்குபேட்டரில் உள்ள குழந்தைய பெருசாளி கட்டிச்சி குழந்த இறந்துடுச்சி,

    ஜனங்க கவர்மென்ட் ஆஸ்பிட்டல பாத்து தான் பயப்டராங்க…..

    அந்த பயம் தான் பிரைவேட் ஆஸ்பிடலலின் இன்வெஸ்ட்மென்ட்….!

    என்ன தான் வேணும் உங்களுக்கு…?

    ஆன் இலவச மருத்துவம்…..

    பெண்ணின் உடலை எடுத்து சொல்ல வாகன வசதி இல்லா வட இந்திய மாநிலங்கள்…பற்றிய காட்சி….

    இந்த துட்ட வைத்துக்கிட்டு என்னதான் செய்யபோராணுங்க இவனுங்க…(ஊழல் வாதிகள்)

  17. அட்லியாவது பொதுவில் இந்திய மருத்துவமனைகளின் அவலத்தை சொல்றப்ப காங்கிரஸ்சின் நாராயணசாமியின் புதுசேரி அரசு( டயாளிஸ் செய்தரப்ப கரன்ட் கரண்டு கட்டானதால நாலு பேரு இறந்த விசயம்) தமிழக அரசு(பெரிசாலி கடித்து குழந்தை இறப்பு) மற்றும் உத்திரபிரதேச அரசு (ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமை )என்று பொதுவாக அனைத்து கட்சி அரசுகளையும் குறிவைத்து தானே பேசுறாரு… ஆனா பாருங்க வினவு என்ன பண்ணுது என்றால் பாண்டிசேரி காங்கிரெஸ் அரசின் மருத்துவ மனை அவலங்களை நான்கு நோயாளிகள் டயாலிசிஸ் செய்யறப்ப உயிர் இழந்த விசயத்தை அப்படியே மறைத்துவிட்டது… ஒரு கண்டனம் கூட கட்டுரையா எழுதல….

    பாண்டி அரசு மருத்துவமனை அவலத்தை எழுத இயலாதமைக்கு வினவுக்கு என்ன நினைவு மறதியா…? இல்லா நினைவில் இருந்தால் கூட எழுதக்கூடாது என்று ஏதாவது சுயகட்டுபாடா?

  18. ஏங்க ச.க.மா.கு, தேர்வுல தெரியாத கேள்விக்கு பசங்க பக்கம் பக்கமா பதில் எழுதிக்குவிக்கிற மாதிரி நீங்களும் எதாவத எழுதித்தள்ளுனா எப்படி?இந்த “கபாலீயமெர்சல்”காவிய மசாலாக்கள் போராளி “வேஷம்” கட்டுறதின் பின்னணீ பற்றியும் அதன் கலைவடிவ மோசடிபற்றியுமே பட விமர்சனம் உள்ளது.அது துடர்பாக எழுதுவது விவாதத்திற்கு நலன் பயக்கும்.அதை விடுத்து பாண்டிச்சேரிக்கு ஏன் பஸ் வரலை விமர்சனத்தீன் இடையில ஏன் மானே தேனேன்னு போடலைன்னு இந்த ரீதியில எழுதிக்குமிச்சி விவாதத்தை வேறு திசை வழி மாற்றினால் எப்படி?ஒன்றூ நாட்டுநலன் சார்ந்து யோசிங்க புள்ளிவெவரமா எழுதுங்க இல்லை அட்லிக்கு பேனரை வக்கிற மாதிரி வரவிருக்கிற காலா” போராளி”களுக்கு பேனர் வைக்கிற பத்து பேர் கொண்ட குழுவுல போய் குறிப்பு எழுதிக் கொடுங்க. மாற்றுக்கருத்து எனும் பேரில் ஒரு மாற்று வடிவம் வேண்டாமே.

    • எதையாவது உளறிகிட்டு இருங்க நிப்போலியன்… ஒரு விவாதம் என்று வந்தால் அத முழுமையா செய்யணும் என்பது தான் மொற… பழைய கட்டுரைகளில் பெண்டிங்க வைத்துட்டு இங்க வந்து புதுசா பிரஷ்சா தொடங்கினா எப்படி நிப்போலியன்? மாமனும் கச்சேரிக்கு போனாரு என்ற மாதிரியில்ல நீங்க அப்ப அப்ப மொகத்த காட்டிட்டு ஓடியில்ல போயிடுறீங்க ! இது சரியா தகுமா? கொஞ்சம் யோசித்து பதில் சொல்லுங்க முந்தைய கட்டுரைகளில் அப்புறமா இங்கே நீங்க பேசற பேச்சுக்கு பதில நான் சொல்றேன்…என்ன சரியா?

    • பாண்டிக்கு ஏன் பஸ் வரல என்று நீங்க வேண்டுமானால் கானா பாட்டு பாடிகிட்டு இருங்க நிப்போலியன்… ஆனா பாருங்க பாண்டி யூனியன் பிரதேசத்தை சார்ந்த ஒரு அரசு மருத்துவமனையில் கரண்டு கட் ஆனதால அங்க டயாலிசிஸ் செய்து கொண்டு இருந்த நான்கு நோயாளிகள் இறந்து இருக்காங்க… அந்த நாளுபேருல ஒருத்தரு உங்க சொந்தமா இருந்தாதான் உங்களுக்கு கோபம் வரும், வர்க்க உணர்வு பீரிட்டு அடிக்கும் என்றால் அதுக்கு பேரு தாங்க சுயநலம்.

      எவன் ஆட்சியில் இருந்தாலும் அது என் சித்தப்பனாக இருந்தாலும் அங்கே ஒரு அவலம் அதுவும் மருத்துவமனையில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளால் அவலம் நடக்குது என்றால் அதனை தட்டிகேட்பவன் தான் மனுசன்… நான் மனுசன் நேர்ல போயி அந்த ஊரு முதலமைச்சர அதாங்க என்னுடைய சித்தப்பன கேள்வி மேல கேள்வி கேட்டேன்…என்னா சமாளிப்பு என்கிண்றீகள்! இப்ப நீங்க சமாளிப்பு செய்யறீங்க இல்ல அது மாதிரியே உங்கள மாதிரியே தான் அவரும் பிரச்சனையை திசை திருப்ப முயன்றார்… நானா விடுவேன்…

      நாலு பேரு பண்டி அரசு மருத்துவ மனை அவலத்தால இறந்தது என்பது உங்களுக்கும் ,வினவுக்கும் வேண்டுமானால் “”பீர் ஏன் கூல இல்ல….பாண்டிச்சேரிக்கு ஏன் பஸ் வரலை”” என்ற கேள்வி மாதிரி சாதரணமாக இருக்கலாம் எனக்கு அப்படி இல்லங்க…

      //பாண்டிச்சேரிக்கு ஏன் பஸ் வரலை விமர்சனத்தீன் இடையில //

  19. முக நூல் பக்கத்தில் அண்ணன் ராஜராஜந்திரன் அவர்களின் கருத்து :

    கோயில் நிலத்தை எவனும் ஆக்கரமித்து விடக்கூடாது என்று அதில் கோயில் கட்ட நாயகன் முனைகிறான். அடிக்கல் நாட்டும் விழாவில் தீ விபத்து ஏற்படுகிறது. 25 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நகர மருத்துவமனைக்கு விபத்தில் சிக்கியவர்களை தூக்கிப் போவதற்குள் சில உயிர்கள் போய்விடுகிறது.

    தூரமும், பயணிக்க ஆன நேரமும்தான் உயிரிழப்புக்கு காரணம் என உணர்ந்த நாயகன், கோயில் அப்புறம். இப்ப தேவை மருத்துவமனை, அதைக் கட்டுவோம் என்கிறான். இந்த இடத்துல எந்தக் கேனையாவது நீ சர்ச்ன்னா இப்படி பேசுவியா ? மசூதின்னா இப்படி சொல்ல முடியுமா ? நீ கிருத்துவன், அதான் இப்படில்லாம் பேசறன்னு சொல்வானா ? அவன் சொல்வான். ஹர ஹர சர்மா ராஜா சொல்வான். புழுத்துச் சித்தன் சொல்வான், ஏன்னா அவன்களுக்கு கோயில்தான பிசினஸ் காம்ப்ளெக்ஸ். ******

    வடிவேலு டிஜிட்டல் இந்தியாவைப் பத்திச் சொல்வதெல்லாம் 100% உண்மை. நவம்பர் 10 2016 முதல் டிசம்பர் 10 வரைக்குமான கோர நிலை அதுதான ? சாமானியர்களில் எவன் அப்ப க்யூவுல நிக்கல ? இந்த உண்மையச் சொன்னா என்ன மயித்துக்கு நீ பதட்டப்படுற ? இன்னும் 1000 + வருட வரலாற்றுல வரப்போற, அத வாசிக்கப் போறவன்ல்லாம் கர்ர்ர்ர்ர் த்தூன்னு துப்பப் போற அசிங்கம்தானடா அது ??

    புலி, சுறாவோடு சேர்ந்திருக்க வேண்டிய படம்ன்னுல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா இன்னொரு பைரவாவா போயிருக்க வேண்டிய படத்த, கில்லி, திருப்பாச்சி, துப்பாக்கி ரேஞ்சுக்கு மாத்தினப் பெருமை நிச்சயம் சங்கி மங்கிகளுடையதுதான். இதுல இந்த டாக்டர் சங்கிகள் வேற ? 100 ல பத்து பேரப் பத்தித்தான் பேசறேன், நீ அந்தப் பத்துல ஒண்ணான்னு டுபாக்கூர் டாக்டர்களக் குறிவச்சு நாயகன் கேக்கறான், படத்தை எதிர்க்கிற இவன்களும் அந்தப் பத்து கேஸ்ங்கதான் போல ? அட உன்னை என்னமோ அஞ்சு ரூபாய்க்கு அவன் ட்ரீட்மெண்ட் பாக்கச்சொன்னாப்பல என்னமா குற்றவுணர்ச்சில துள்றானுவ ? வேணும்ன்னா 1 ரூபாய் வாங்கிட்டு சினிமாவுல ஒரு பிரபல ஹீரோ நடிக்கறாப்பலயும் , அதனால ஏழை பாழைங்க எல்லாம் 5 ரூவாய்க்கு டால்பி ஆட்டம் ஸ்பீக்கர் வசதி கொண்ட சினிமாவுல போய்ப் படம் பாத்து, நெஞ்சுல சந்தனம் பூசி சந்தோஷமா இருக்கறாப்பலயும், நீங்க வேணா சமூக விழிப்புணர்வு நாடகம் ஒண்ணப் போட்டு பழிவாங்கிக்கோங்க.

    ஆக, ஒரு சாதாரண மசாலா படங்களைக் கூட, சமூக நீதிப் படமாக்கப். பாடுபடும் சங்கி மங்கிகளுக்கு என் அனுதாபங்கள்

    https://www.facebook.com/rajarajan1969?hc_ref=ARRn2hhMHoAYG3_eDfZ3ywh0xHFNvsEgxqZ9-YIaYBPoda29x5iNVdIHBKKiqah8yqo&fref=nf

  20. தற்போதைய செய்தி : இந்த 100% மசாலா படத்தின் அகில இந்திய விளம்பரத்துகாகவே சங்கிமங்கி கட்சியின் தமிழக தல மற்றும் அதே கட்சியின் தேசிய தல எச்ச எல்லாம் தலா 30 லச்சம் பணத்தை கையுட்டாக வாங்கியதாக படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை ரெய்டில் கண்டறியபட்டு உள்ளது…!

  21. ராஜராஜேந்திரன் அவர்கள் மெர்சல் படம் பற்றீ ஒரு சரியான பார்வையில் சங்கீகளை அம்பலப்படுத்தி உள்ளார்.அதை இங்கே மீள் பதிவீட்ட ச.மா.குமார் அவர்களுக்கு நன்றீ.

  22. மருத்துவத்துறையில் ஏதோ பிரச்சினை இருக்கு! அது சரி செய்ய வேண்டியது. இத அவன் அவன் அவன் அவனுக்குத் தெரிஞ்ச வழியில சொல்லுறான்.நீதான் பெரிய அறிவாளி நான் தான் பெரிய அறிவாளின்னு கிளம்புறீங்களேம்பா! ஒன்னா நின்னா சாதாரண ஜனங்களுக்கு ஏதாவது நன்மை செய்யலாம். கிளம்பு கிளம்பு!

Leave a Reply to சட்டக்கல்லூரி மாணவன் குமார் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க