privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநோபல் பரிசு அறிஞர் ரிச்சர்ட் தாலெர் பாஜக-வை ஆதரித்தாரா ?

நோபல் பரிசு அறிஞர் ரிச்சர்ட் தாலெர் பாஜக-வை ஆதரித்தாரா ?

-

வசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது பா.ஜ.க கும்பல் விவகாரத்தில் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்றவரான ரிச்சர்ட் தாலெரின் வார்த்தைகளை முன்யோசனையின்றி பயன்படுத்திய பா.ஜ.க கும்பல் பின்னர் பதில் சொல்ல முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது.

ட்விட்டரில் அகமகிழ்ந்தது பா.ஜ.க கும்பல்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது மோடி கும்பல். ஏற்கனவே இணைய பரிவர்த்தனைக்கு ரிச்சர்ட் தாலர் ஆதரவானவர் என்பதால் அதிக செலவாணி நோட்டு அழிப்பை ஊழலை ஒழிக்கும் ஒரு நல்ல நடவடிக்கை என்று பாராட்டியிருந்தார். ஆயினும் 2,000 ரூபாய் நோட்டு அச்சிட்ட செய்தி கிடைத்ததும் அதை “மட்டமானது” என்று விமர்சித்ததாக செய்தி வெளிவந்தது. இவை அவரது டிவிட்டர் கணக்கில் நடந்த விசயங்கள்.

பிற்பாடு இவருக்கு நோபல் பரிசு கிடைத்ததும் கடவுளே பணமதிப்பழிப்பு நடவடிக்கையை பாராட்டியதாக தாலெரின் முதல் கருத்தைப் போட்டு ஆடியது பாஜக கூட்டம். ட்விட்டரில் அகமகிழ்ந்த பா.ஜ.க கும்பலில் மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், கிரிராஜ் சிங், முன்னாள் ஐ.டி. செல் தலைவர் அரவிந்த் குப்தா, பி.ஜே.பி. மும்பை செய்தித் தொடர்பாளர் சுரேஷ் நகுவா மற்றும் பலர் உள்ளனர். அதே போன்று பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எதிர்த்த அறிஞர்களை இவர்கள் வசை பாடினார்கள்.

காங்கிரசிடம் இருந்து சலுகைகளை பெற்றவர் என்று நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென்னை திட்டினார்கள். நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை தவறு என்று விமர்சித்ததால் அவரையும் வறுத்தெடுத்தார்கள்.

தன்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளவிட்டால் சுதேசி பொருளாதார அறிஞர்களை தாழ்த்தியும், ஆதரிக்கும் விதேசி பொருளாதார அறிஞர்களை உயர்த்தியும் பேசும் பணமதிப்பழிப்பு இரசிகர் மன்றத்திற்கு ஒரு விசயம் மட்டும் தெரியவில்லை.

அதாவது இந்திய ரிசர்வ் வங்கியில் பணி முடிந்ததும் சிக்காகோவில் இருக்கும் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனத்தில் இரகுராம் பணிக்கு சேரவிருப்பதாக சென்ற ஆண்டு செய்தி வெளியானது. அதை “இந்தியாவின் தோல்வி நமக்கு வெற்றி. ரகு மீண்டும் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று இதே ரிச்சர்ட் தாலெர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

உண்மையில் சங்கிகளுக்கு மாட்டுமூளை கூட இல்லை என்பதையே இது பறைசாற்றுகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

செய்தி ஆதாரம் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. தன்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளவிட்டால் ‘சுதேசி’ பொருளாதார அறிஞர்களை தாழ்த்தியும், ஆதரிக்கும் ‘விதேசி’ பொருளாதார அறிஞர்களை உயர்த்தியும் பேசும்… இப்படி ஒற்றை மேற்கோள்குறியைப் பயன்படுத்தியிருக்கலாம்.

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்துவரும் புளுகுண்ணி சங்கிகளுக்கு அடிக்கடி “கோமியோ கேர்” வைத்தியம் பார்க்கவும்.

Leave a Reply to kurukku saal பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க