privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதேசிய கீதம் போட்டாச்சு எழுந்து நில்லுடா ! – ம.க.இ.க. புதிய பாடல் !

தேசிய கீதம் போட்டாச்சு எழுந்து நில்லுடா ! – ம.க.இ.க. புதிய பாடல் !

-

ந்தியாவின் ஆபத்பாந்தவனாக கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் முன்நிறுத்தப்பட்ட மோடி ஆட்சிக்கு வந்தவுடன் மேக் இன் இந்தியா, டிஜட்டல் இந்தியா, ஸ்டாண்ட் அப் – இந்தியா, சுவச் பாரத் என பல மந்திரங்களை உச்சாடனம் செய்து மோடி வித்தை காண்பித்தார்.

அதன் பின்னர் எல்லாம் கேட்க நன்றாக தான் இருக்கிறது ஒன்றும் செயல்பாட்டுக்கு வரவில்லையே என முனுமுனுப்பு எழுந்ததும், உடனே பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் என பம்மாத்து காட்டினார்.

அதைத் தொடர்ந்து கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என முழங்கி பணமதிப்பழிப்பை அமல்படுத்தி வங்கி வாசலில் மக்களை சாகடித்தார். என்னடா இது மக்கள் இவ்வளவு பாடுபடுகிறார்களே என யாராவது சொன்னால் உடனே “சியாச்சின் பனிமலை முகடுகளில் நமது வீரர்கள் என தேசபக்த” பாடம் எடுத்து வாயடைத்தனர்.

அல்லது மாட்டின் பேரால் படுகொலைகள் நிகழ்த்தப்படும் போதும் சரி, அதன் பின்னர் சொந்த மாட்டை விற்கமுடியாது என தடை விதித்தபோதும் சரி, எல்லையில் சீனாக்காரனை துரத்திய இந்திய வீரர்கள், பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களின் புகைப்படங்கள் என வட இந்திய செய்தி ஊடகங்கள் பரபரப்பாகும்.

இவ்வாறு எந்த பிரச்சினை வந்தாலும் பிரம்மாஸ்திரமாக தேச பக்தியை முன்நிறுத்தி, மூவர்ண கோவணத்தில் தனது நிர்வாணத்தை மறைக்கப்பார்கிறது மோடி அரசு.

மக்களை எப்போதும் தேசபக்தி என்ற ஒரு வஸ்துவால் கிறங்கத்தில் வைத்திருக்க எல்லா இடங்களிலும் தேசியகீதம் ஒலிக்க வேண்டும் என உத்தரவிடுகிறது நீதிமன்றம்.

மக்களின் அனைத்து உரிமைகளுக்கும் ’ஜன கண மன…’ பாடிவிட்டு, தியேட்டரில் ஜன கண மன… போட்டு என்ன பயன் என்பதை கலைவடிவில் விமர்சிக்கிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இப்பாடல்.

பாடலை பாருங்கள்…. தெரிந்த நண்பர்களுடன் பகிருங்கள்….

பாடல் வரிகள் :

தேசிய கீதம் போட்டாச்சு
எழுந்து நில்லுடா  – மச்சி
தேசிய கீதம் போட்டாச்சு
எழுந்து நில்லுடா

டிக்கெட்டுக்கு  ஒன் ஃபிப்டி
ஃபீலு பண்ணாதே – தம்மாம்
பாப்கார்னுக்கும்  ஜிஎஸ்டி
மெர்சலாகாதே
வாங்கித்துண்ண காசு இல்ல
வயித்துல புண்ணு – லைட்டா
தேசப்பற்றை ஏத்திக்கினு
ஆடாம நில்லு

போடப்போறான்  ஜனகனமன
அடிச்சிட்டான்  பெல்லு – யூரின்
அர்ஜென்ட்டா வந்தாலும்
அடக்கினு நில்லு
பிட்டுப்பட தியேட்டருக்கு இது
தேவையா சொல்லு – இந்த
ஃபீலிங்கை சொல்லுறதுக்கே
வேணுண்டா தில்லு

காவிரிக்கு  பாடிப்புட்டான்
ஜனகணமன
நீட்டு வந்து சீட்டு போச்சு
ஜனகணமன
மாட்டைக்கூட விக்கமுள்ள
ஜனகணமன – மோடி
நாட்டை விக்க கெளம்பிட்டாரு
ஜனகணமன

பாமாயிலு பருப்பு இல்ல
ரேசனில் நில்லு
காலையிலே கக்கூசுல
க்யூவுல நில்லு
நூறு நாளு சம்பளம் வாங்க
பேங்குல நில்லு
நொந்து போயி தியேட்டரு வந்தா
இது  என்னாடா லொள்ளு?