privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புபாபர் மசூதியை ராமர் பிறந்த இடமாக தீர்ப்பளித்த தமிழ் தி இந்து - கருத்துக் கணிப்பு

பாபர் மசூதியை ராமர் பிறந்த இடமாக தீர்ப்பளித்த தமிழ் தி இந்து – கருத்துக் கணிப்பு

-

தமிழ் தி இந்துவின் ஆசிரியர் சு.சாமியா ?

“அயோத்தியில் ராமர் பிறந்த இடம் யாருக்கு சொந்தம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடக்கம்” இது இன்றைய (5.12.2017) தமிழ் தி இந்து நாளேட்டின் 10 -ம் பக்கத்தில் வந்துள்ள செய்தியின் தலைப்பு. விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளைதான் தொடங்கப்போகிறது. ஆனால் “அது ராமர் பிறந்த இடம்தான்” என்று இன்றைக்கே தீர்ப்பளித்து விட்டது தமிழ் இந்து.

“பாபர் மசூதியை சங்க பரிவாரத்திடம் ஒப்படைப்பதுதான் நீதியானது” என்பது தமிழ் தி இந்து நாளேட்டின் கருத்தாக இருந்தால், அதனை தலையங்கத்தில் எழுதுவதுதான் “பத்ரிகா தர்மம்”. NEWS -க்கும் VIEWS -க்கும் இடையிலான வேறுபாடு பற்றி இந்து ஆசிரியர் குழுவுக்கு நாம் வகுப்பெடுக்கத் தேவையில்லை.

இதே செய்திக்கு இன்று தினமணி கொடுத்திருக்கும் தலைப்பு இது – “அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி விசாரணை”

செக்யூலர் “இந்து”வின் தற்போதைய நிலையைப் புரிந்து கொள்ள தினமணி தலைப்பு ஒரு உரைகல்.

நமக்குத் தெரிந்தவரை, பாபர் மசூதி இடிப்பை எதிர்ப்பதுதான் இந்துவின் தலையங்க நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. தற்போது “சங்க பரிவாருக்கு ஜே” என்று “எடிட்டோரியல் பாலிசி” மாற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்துக்காக, சொந்த தன்மானத்தையோ சொந்த சொத்துகளையோ அடுத்தவனுக்கு உரிமையாக்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை இந்து ஆசிரியர் குழுவுக்கும் உண்டு. அடுத்தவன் உடைமையை பிடுங்கிக் கொடுக்கும் தொழிலுக்குப் பெயர் நிச்சயமாக ஊடகவியல் அல்ல.

“டிசம்பர் 5 ஆம் தேதியன்று விசாரணை தொடங்குகிறது” என்ற இதே செய்தி ஆகஸ்டு 12 -ம் தேதியன்றும் தமிழ் இந்துவில் வெளியாகியிருக்கிறது. அப்போது அதன் தலைப்பு கீழ்க்கண்டவாறு இருந்தது.

“ராமஜென்ம பூமி – பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம்? – உச்ச நீதிமன்றம் டிசம்பர் 5 -ம் தேதி விசாரணை” அதிலும் முதலில் ராமஜென்ம பூமி, அப்புறம்தான் பாபர் மசூதி. இன்றைக்கு அதே செய்தியின் தலைப்பு தலைகீழாக மாறி, அந்த இடத்தின் பெயர் ராமர் பிறந்த இடம் என்று ஆகிவிட்டது. நான்கே மாதத்தில் இந்த “முன்னேற்றம்”.

இவையெதுவும் தற்செயல் நிகழ்வாகத் தெரியவில்லை. “அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த ஆண்டு தீபாவளி: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை” என்று தலைப்பிட்டு நேற்று ஒரு செய்தி வெளியானது. ஒரு செய்தி என்ற முறையில் இதற்கு எந்த மதிப்பும் இல்லை. முஸ்லீம் மக்களை அவமானப்படுத்தி ஆத்திரமூட்டுவதுதான் அந்த “செய்தி”யின் நோக்கம்.

ஆங்கில இந்து நாளேட்டின் ஆசிரியராக இருந்தபோது, சு.சாமியின் இத்தகைய அறிக்கைகளை வெளியிட மறுத்த காரணத்தினால் ஏற்பட்ட முறுகல் நிலைகளைப் பற்றி சித்தார்த் வரதராஜன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இன்று சு.சாமி வகையறாக்களே தமிழ் இந்துவின்  DEFACTO ஆசிரியர் குழுவாகி விட்டார்கள் போலும்!

தெற்கில் சூரியன் – வடக்கில் பார்ப்பனியம். சாமர்த்தியம்தான்.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த செய்திக்கு இந்து நாளேடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். இப்படி ஒருசெய்தி வெளியானதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதச்சார்பின்மையிலும் ஜனநாயகத்திலும் ஊடக அறத்திலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் தமிழ் தி இந்துவுக்கு தங்களது கண்டனத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

இது தமிழ் இந்து தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இன்று இதனை கண்டிக்கத் தவறினால் இந்த நோய் பரவும். மற்ற ஊடகங்களும் கூச்சமின்றி மதவெறியப் பரப்பத் தொடங்குவார்கள். பிறகு ஏதாவது சொல்லி அதற்கு சப்பை கட்டுவார்கள்.

காவி இருள் தமிழகத்தின் மீது கவியத் தொடங்கியிருக்கிறது. எச்சரிக்கை! எச்சரிக்கை!

இன்றைய கருத்துக் கணிப்பு:

பாபர் மசூதி இடத்தை ராமர் பிறந்த இடமாக கருதும் தமிழ் தி இந்துவின் கருத்து ….

  • சரியானது
  • கண்டனத்திற்குரியது