privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது !

காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது !

-

“காஷ்மீர் பற்றிய ஆவணப் படத்திற்காக” வந்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கொமிட்டி பால் எட்வர்ட்(Comiti Paul Edward ) டிசம்பர் 9-ம் தேதி காஷ்மீர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடவுச்சீட்டு சட்டம் 14B பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நான்கு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். டிசம்பர் 12 ம் தேதி அவருக்கு பிணை வழங்கப்பட்டது. ஆயினும் கடவுச்சீட்டு திரும்ப கிடைக்காமல் இன்னும் அவர் போராடிக்கொண்டிருக்கிறார்

படம் : நன்றி – காஷ்மீர் அப்சர்வர்

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் எட்வர்ட் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அவரது கடவுச்சீட்டு, புகைப்படக்கருவி மற்றும் இதர பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர். காஷ்மீரின் பிரச்சினைகளை போல உலகெங்கிலும் பல்வேறுப் பிரச்சினைகளை அவர் பதிவு செய்திருந்தாலும் இது போன்றதொரு மோசமான சூழலை இதுவரை எட்வர்ட் சந்தித்திருக்கவில்லை என்று காஷ்மீரைச் சேர்ந்த எட்வர்டின் உதவியாளரான ஒரு பத்திரிக்கையாளர் கூறினார்.

ஆப்கானிஸ்தான், காங்கோ, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதற்காக இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக தன்னுடைய வாழ்க்கையை செலவிட்டுள்ளார் பத்திரிக்கையாளர் எட்வர்ட். “ஆனால் நான் கைது செய்யப்பட்டதும் கொடுமைப்படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறையாகும். காஷ்மீரின் கதையைப் பரந்த சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியை தடுக்கவே அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இங்கிருந்து செய்திகளைச் சேகரிப்பதற்கு சர்வதேச செய்தி ஊடகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் அறியப்படுவதை அவர்கள் விரும்பவில்லை” என்று விருது பெற்ற அந்த பத்திரிகையாளர் கூறியதாக உள்ளூர் செய்தித் தாளான காஷ்மீர் ரீடர் செய்தி வெளியிட்டது.

முன்பு புத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரான ஃபாரூக் அஹ்மத் தார் இராணுவ வண்டியில் கட்டப்பட்டு கொடுமைக்குள்ளான அதே ஸ்ரீநகரின் பிரதாப் பூங்காவில் எட்வர்ட் கைது செய்யப்பட்டிருப்பது தற்செயலானது அல்ல.

தனக்கு அளிக்கப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் அயல்நாட்டு நுழைவுச்சீட்டிற்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதற்காகவே எட்வர்ட் கைது செய்யப்பட்டார் என்று காஷ்மீர் மாநில காவல்துறை கண்காணிப்பாளரான முனீர் கான் கூறியுள்ளார்.

“அவர் வெளிநாட்டுப் பதிவு அலுவலகத்துடன் தன்னை பதிவு செய்யவில்லை. ஆனால் இது கண்டிப்பாக செய்யப்பட வேண்டிய ஒன்று. எனவே அது கடவுச்சீட்டு சட்டப்பிரிவு 14B இன் கீழ் ஒரு குற்றமாக கருதப்படுகிறது. நீங்கள் ஒரு வியாபார கடவுச்சீட்டை கொண்டு பெல்லட் குண்டினால் பாதிக்கப்பட்ட நபர்களைப் பதிவு செய்வதோ, உமர் பாரூக்கை சந்திப்பதோ, பார்ரூக் தாரை நேர்காணல் செய்வதோ அல்லது காணாமல் போனவர்களைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதோ கூடாது” என்று பத்திரிக்கையிடம் கான் தெரிவித்தார்.

எட்வர்டின் கைது நடவடிக்கையை உலகம் முழுதும் பத்திரிக்கையாளர்கள் கண்டித்துள்ளனர். சர்வதேச பத்திரிக்கையாளர் கூட்டமைப்பும் இந்தியப் பத்திரிக்கையாளர் சங்கமும் கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன.

“பத்திரிக்கை சுதந்திரம் என்பது உலகளாவிய உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வியாபார நுழைவுச்சீட்டையோ அல்லது சுற்றுலா நுழைவுச்சீட்டையோ பெற்று செய்திகளை சேகரிப்பது என்பது உலகம் முழுவதும் பத்திரிகையாளர்களிடையே உள்ள பொதுவான நடைமுறைதான்” என்று இந்திய பத்திரிக்கையாளர் சங்கமும் சர்வதேச பத்திரிக்கையாளர் கூட்டமைப்பும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கின்றன.

“இந்த கைதும் கடவுச்சீட்டு பறிமுதலும் தீவிரமான பிரச்சினையாகும். காஷ்மீரின் மனித உரிமைகள் பிரச்சினைக் குறித்து செய்திகள் சேகரிக்க வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு உரிமை இருக்கிறதா என்பது குறித்து தெரிந்து கொள்ள முயன்று கொண்டிருப்பதாக” மனித உரிமைகள் ஆணையத்திடம் வழக்கு தொடுத்த சமூக ஆர்வலரான முஹம்மத் ஆசன் உண்டூ கூறினார்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது 21–ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கேலிக்கூத்து. இந்த கேலிக்கூத்தை பத்திரமாகாப் பாதுகாத்து வருவதால் யாரேனும் அதை படம் பிடித்தால் உடன் கைது செய்கிறார்கள். இந்த அக்கிரமத்தை இன்னும் எத்தனை நாட்கள் இவர்களால் தொடர முடியும்?

மேலும் :