privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசென்னை ஒரகடம் : கழிப்பறைக்கு ஸ்வைப் கார்டு போடும் அமெரிக்க சான்மினா !

சென்னை ஒரகடம் : கழிப்பறைக்கு ஸ்வைப் கார்டு போடும் அமெரிக்க சான்மினா !

-

சான்மினா நிறுவனத்தின் கொடுங்கோன்மைக்கெதிராக தொழிலாளர்கள் போராட்டம் !

சென்னை ஒரகடத்தில் உள்ள அமெரிக்க நிறுவனம் சான்மினா. இது மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா மின்னணு பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் அமெரிக்காவின் “பார்ச்சூன் 500” நிறுவனங்களில் ஒன்றாகும். உலகம் முழுவதும் பத்தொன்பது நாடுகளில் 80 தொழிற்சாலைகள், 50,000 தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. 2006-ம் ஆண்டின் வருமானமாக 11 பில்லியன் டாலர் ஈட்டியுள்ளது இந்நிறுவனம். இந்திய மதிப்பின்படி 44,000 கோடி ரூபாய்.

தமிழகத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் பல்வேறு சலுகைகளுடன் கடந்த 2007ம் ஆண்டு சென்னை ஒரகடத்தில் நிறுவப்பட்டது சான்மினா. இதற்காக நூறு ஏக்கர் நிலம் 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தண்ணீர், மின்சாரம், பத்திரப்பதிவு உள்ளிட்டவை அனைத்தும் இலவசம். முதல் மூன்று ஆண்டிற்கு 225 கோடியிலிருந்து 315 கோடி ரூபாய் வரை முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு இதுவரை ஐநூறு கோடிக்கும் அதிகமான வரிச்சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

முதற்கட்டமாக 1325 பேரையும் பிறகு 4000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறியுள்ளது சான்மினா. ஆனால் இந்த பத்து வருடத்தில் இதுவரை வெறும் 400 பேரை மட்டும் வேலைக்கு அமர்த்தியுள்ளது. இதில் முப்பது பேர் பெண் தொழிலாளர்கள்.

இவர்கள் அனைவரும் பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது, ஐடிஐ, டிப்ளமோ முடித்துவிட்டு முறையான பயிற்சி பெற்ற ஊழியர்களாவார்கள். இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் 15,000 இருந்து 21,000 வரைதான். அதுவும் சொற்ப எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான சலுகைகளையும் இந்நிறுவனம் மறுத்து வருகிறது. இவ்வாறு தொழிலாளர்களை கசக்கி பிழிந்ததன் விளைவாக அதே இடத்தில் இரண்டு லைன்களாக இருந்ததை எட்டு லைன்களாக மாற்றி இரண்டு ஆலைகளை நிறுவியுள்ளது.

தொழிலாளர்களின் மீதான அடக்குமுறை, உழைப்பு சுரண்டலை எதிர்த்து சான்மினா நிறுவனத்தின் ஊழியர்கள் 2017 நவம்பர் மாதம் 21-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி முப்பது நாட்களுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர்.

சான்மினா நிறுவனத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் பேசும்போது,

“நாங்கள் அனைவரும் நிறுவனத்தின் நிரந்தர ஊழியகள் தான். சுமார் பத்து ஆண்டாக இதில் பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளை விட மோசமாக நடத்தப்படுகிறோம்.

இந்நிறுவனம் அரசின் எந்த சட்டதிட்டங்களையும் மதிப்பதே இல்லை. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான ஊதியத்தைக் கூட கொடுப்பது இல்லை. கேண்டீன் உணவு மிகவும் மோசம்.

தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டம்

அதேபோல, போக்குவரத்து வசதி இல்லாததால் வீட்டிற்கு செல்வது மிகவும் சிரமம். பல்வேறு ஊர்களில் இருந்து வரும் தொழிலாளிகள் சொந்த காசில் தான் வருகிறார்கள். கம்பனி பேருந்து பூந்தமல்லி மற்றும் திருவள்ளூர் வரை தான் செல்கிறது. ஆனால் தொழிலாளர்கள் பலர் திருவெற்றியூர், வியாசர்பாடி, காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம், செங்கல்பட்டு, திருத்தணி, அரக்கோணம் என்று தொலைவில் இருந்து வருவோர் தான் அதிகம். இரவு நேர ஷிப்டு முடிந்து வீட்டிற்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் நாங்கள் தினம்தோறும் பேப்பர் ஏற்றும் லாரிகளில் லிப்ட் கேட்டு தான் வீட்டுக்கு செல்கிறோம்”. இவை தொழிலாளர்களின் வாக்குமூலம்.

மேலும், பெண் தொழிலாளிகள் நிலையும் கொடுமையானது. அடிக்கடி கழிவறைக்கு செல்ல அனுமதி இல்லை. சிறிது தாமதமானாலும் தகாத வார்த்தைகளால் மேலாளர்கள் ஏசுகிறார்கள். உள்ளே சென்று வர எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள் என்தற்கு ஒரு கார்டு கொடுக்கிறார்கள். அதனை ஸ்வைப்பிங் செய்தால் தான் கதவு திறக்கும்.

இதன் மூலம் ஒருவர் ஒரு நாளைக்கு கழிவறை செல்ல எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கணக்கிட்டு மிரட்டுகிறார்கள். “ஏன் அடிக்கடி கழிவறைக்கு போற…உள்ளே சென்று என்ன செய்கிறாய்… ஒரு ஆள் போட்டா பார்க்க முடியும்” என்று பெண் தொழிலாளிகளை துன்புறுத்துகிறார்கள். இதற்கு பயந்தே பெண்கள் கழிவறைக்கு செல்ல தயங்குவதாக கூறுகிறார்கள். இவற்றைப் பார்த்தால் இந்நிறுவனம் பதினெட்டாம் நூற்றாண்டு முதலாளித்துவ ஆலைகளை நினைவுபடுத்துகிறது எனலாம்.

மேலும் இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த பொறுப்பும் இல்லை. SMT (Surface-mount technology) மின்னணு பரப்பிணைப்பு தொழில்நுட்ப  பிரிவில் வேலை செய்யும் பெண்களுக்கு கருக்கலைப்பும், ஆண்களுக்கு ஆண்மைக் குறைவும் ஏற்படுவதாக தொழிலாளிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் தீங்கு விளைவிக்க கூடியது என்று தடை செய்யப்பட்ட காரீயத்தைக்  (lead ) கொண்டுவேலை செய்வதால் கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

அதேபோல் பற்றவைக்கும் நிலையத்தில் இருந்து சால்டிரிங் வேலை செய்தால் அதனை குளிர்விக்கப்பட்ட பின்தான் வெளியே எடுக்க வேண்டும். அதற்கென்று தனி செய்முறை உள்ளது. அவ்வாறு செய்தால் தாமதமாகும் என்று அதன் மூடியை திறந்து விடுகிறார்கள். அதிலிருந்து வெளிப்படும் அமிலத்தன்மை கொண்ட நச்சு வாயுக்களை சுவாசிப்பதனால் பல்வேறு பிரச்சனைகள் வருவதாகவும் கூறுகிறார்கள்.

தலைமை செயலகம் முற்றுகை

15,000-லிருந்து 21000-மாக சம்பளம் உயர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கினார்கள். அதனால் பல தொழிலாளர்கள் இன்சூரன்சில் பெற்றுக் கொள்ளலாலம் என்று அதற்குரிய சிகிச்சை பெற்றார்கள். ஆனால் இன்சூரன்சில் நிறுவனம் பணம் போடவில்லை. நிர்வாகத்திடம் கேட்டதற்கு எங்களை கேட்காதீர்கள் என்று கைகழுவினார்கள்.

இவ்வளவு அடக்குமுறைகளை எல்லாம் சகித்துக் கொண்டு எத்தனை நாட்கள் அமைதியாக இருக்க முடியும்? அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஏஐசிசிடியூ AICCTU சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு தொடக்கம் முதலே போராட்டம் நடத்தி வருகிறார்கள். மார்ச் மாதம் தொடங்கிய பிரச்சனையில் தொழிலாளர் உதவி சமரச ஆணையத்திடம் 35 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதன் பிறகு DCL ஆணையரிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தொடர்ச்சி தான் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கும் அடிப்படை.

கடந்த மார்ச் மாதம் தரமான உணவு கேட்டு நடத்திய போராட்டத்தில் எட்டு நாட்கள் சம்பளம் பிடித்தார்கள். அதன் பிறகு சக தொழிலாளி ஒருவரை தரக்குறைவாக பேசியதால் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஐந்து நாட்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்திற்கு எட்டு நாட்கள் சம்பளம் பிடித்தார்கள். அதில் நான்கு பேரை எந்த காரணமுமின்றி பணியிடை நீக்கம் செய்தார்கள். அதனை கண்டித்து நடத்திய போராட்டத்தில் எட்டு நாட்கள் என்று மார்ச் மாதம் மட்டும் 21 நாட்கள் சம்பளத்தை பிடித்தார்கள்.

தற்போது நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எட்டு நாட்கள் என்று மொத்தம் 30 நாட்கள் சம்பளம் பிடித்துள்ளார்கள். இத்தனைக்கும் இது முறையாக நோட்டிஸ் கொடுத்து நடத்த்தப்படும் வேலை நிறுத்தம் தான். மேலும் சங்கத்தின் முன்னணியாளர்கள் பதினைந்து பேரை இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு வெளியில் வைத்து சம்பளம் கொடுக்கிறார்கள். இவை அனைத்தையும் சட்ட விரோதமாக செய்து வருகிறது சான்மினா நிர்வாகம்.

மேலும் தொழிலாளிகள் கூறுவதைக் கேளுங்கள்.

“2007-லிருந்து 2011 வரை எங்கள் யாருக்கும் இன்கிரீமென்ட் இல்லை. அதன் பிறகு 75,150 என்று போட்டார்கள். யூனியன் ஆரம்பித்த பிறகு தான் முதலில் 1250, 2250 உயர்த்தினார்கள். அதுவும் ESI,PF,மாத்தூர் பஞ்சாயத்து பணம் பிடித்துக்கொள்வது என்று கையில் வாங்கும் சம்பளம் 12,500 தான். இந்நிலையில் சம்பளத்தை ஒவ்வொரு முறையும் பிடித்துக் கொண்டால் நாங்கள் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும் சொல்லுங்கள்?

இந்த வேலை நிறுத்தம் காரணமாக உற்பத்தி பாதிக்கப்படக் கூடாதென்று காண்ட்ராக்ட் முறையில் ஊழியர்களை நியமித்து வேலையை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறது நிர்வாகம்.

உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து தீர்ப்பின் படி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் பொழுது புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்க கூடாது என்று உள்ளது. ஆனால் அதனை மீறி தற்போது 600 பேரை ஒப்பந்த பணியாளராக எடுத்திருக்கிறார்கள். இது சட்ட விரோதமானது மட்டுமல்லாமல் மக்கள் விரோதமானதும் கூட.

உள்ளே தயாரிக்கும் பொருட்கள் என்பது மருத்துவ துறைக்கு பயன்படுத்தப்படுபவை. அதாவது, அல்ட்ரா சவுண்டு, ஈ.சி.சி., கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பரிசோதனை செய்யும் கருவி, எம்ஆர்ஐ ,இன்குபேட்டர் ஆகியவை தயாரிக்கின்றோம். இந்த வேலையை செய்ய அனுபவம் இல்லாதவர்களை பணிக்கு அமர்த்தினால் தயாரிப்பில் நிச்சயம் தவறு நடக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. இருந்தும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் உற்பத்தி நின்று விடக்கூடாது என்று அடாவடியாக மிரட்டி வருகிறது நிர்வாகம்.

கிண்டியில் உள்ள தொழிலாளர் துறையில் உள்ள பேக்டரி இன்ஸ்பெக்டரிடம் சான்மினா நிர்வாகம் சட்ட விரோதமாக ஆட்களை எடுத்திருக்கிறார்கள் என்று புகார் மனு அளித்தோம். அதனடிப்படையில் ஆய்வு செய்து விட்டு, “சட்ட விதிகளை மீறித்தான் ஆட்களை எடுத்திருக்கிறார்கள்.ஆனால் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தான் இவர்களை வெளியேற்ற முடியும்” என்று கூறிவிட்டார்.

உண்மையில் இப்பணி என்பது மிகவும் சிரமமானது. எந்த அனுபவுமும் இல்லாத ஒப்பந்த தொழிலாளிகளால் இதனை செய்ய முடியாது. அல்ட்ரா சவுண்டு பொருளை ஒரு ஷிப்டுக்கு 200 முறை அடிக்க வேண்டும். இதனை சீனியர் ஆப்புரேட்டராலேயே அடிக்க முடியாது. அதன் டார்கெட் நாற்பது நம்பர் ஆக உள்ளது. அந்த அளவிற்கு லோடிங் வரும். ஓய்வே இருக்காது. இரண்டாவது அடிப்படை வேலைகள், பல்வேறு தொழில் நுட்ப வேலைகளில் பிழை வரும். அதனை எல்லாம் சரி செய்ய வேண்டும். சோதனை செய்வது முதல் திரும்ப செய்வது வரை வேலை அதிகம். இதனை சீனியர் ஆப்புரேட்டர் செய்ய வேண்டும் என்றாலே கழிவறைக்கு செல்ல முடியாது, சாப்பிட முடியாது என்று வேலை இழுக்கும்.

மூன்று விநாடி தவற விட்டாலே ஒரு போர்டு குறைந்து விடும். அப்படி குறைந்து விட்டால் ஏன் குறைந்தது என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட வேலையை அனுபவம் இல்லாத ஒப்பந்த தொழிலாளிகளை கொண்டு பார்க்கிறார்கள். தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் மனித உயிர் சம்பந்தப்பட்ட வேலையில் விதிகளை மதிக்காமல் உற்பத்தியை மட்டும் குறிக்கோளாக கொண்டு இந்த நிர்வாகம் இயங்குகிறது.

மழையில் தொடர்ந்த போராட்டம்

இந்நிலையில் தான் கடந்த பதினெட்டாம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டோம். அதனையடுத்து அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டத்தை தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கு வந்த தொழிலாளர் சமரச ஆணையத்தின் சார்பில் இந்த பிரச்சனை குறித்து பரிசீலிக்கிறோம் என்று கூறிவிட்டார்கள். ஆனால் எழுத்துப்பூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.

நிர்வாகமும்,போலிசும் இந்த போராட்டத்தை ஒடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. நிர்வாகம் 80 பேருக்கு இடைநீக்க உத்திரவு தயாராகி வருகிறது என்று மிரட்டுகிறது. போலிசோ FIR போட்டுவிடுவோம் என்று மிரட்டுகிறது.

எங்கள் போராட்டம் நியாயமானது. எங்கள் கோரிக்கை சட்ட விரோதமாக செயல்படும் இந்த சான்மினாவை அரசு ஏற்று நடத்த வேண்டும், தொழிலாளர் உரிமை பாதுக்காக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை நிறைவேறும் வரை போராடுவோம்.

எங்கள் போராட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கத்திடமும், அருகில் உள்ள தொழிற்சாலை தொழிலாளர்களிடம் ஆதரவு கேட்டுள்ளோம். எங்கள் போராட்ட செலவினங்களை தொழிலாளர்களாகிய நாங்களே பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்கிறார்கள் சன்மினா தொழிலாளர்கள்.

முதலாளித்துத்தின் லாபவெறிக்கு தொழிலாளர்கள் மீதான உழைப்பு சுரண்டல், இரக்கமற்ற கொத்தடிமை முறை என்பது மட்டுமல்லாமல் மக்களையும் கொல்லும் என்பதற்கு சிறந்த சான்று சான்மினா. ஒரு அமெரிக்க நிறுவனம் கொழிப்பதற்கு தொழிலாளர்களை வதைத்து, செய்யும் மருத்துவ பொருட்களையும் பயிற்சி இல்லாத பகுதி நேர தொழிலாளிகளை வைத்து தயாரிக்கிறார்கள். இது முதலாளித்துவம் மற்றும் அமெரிக்காவின் அநீதி! இதை தகர்ப்பதுதான் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கான நீதி

– வினவு செய்தியாளர்

 

      • சிரிப்பு காட்டாதீர்? நோக்கியாவின் என்ன நடந்தது ? கம்முனிசம் வெற்றிபெற்றதா?

        • நோக்கியா போனை யாரும் வாங்காமல் திவாலாகி விட்டது , அதற்கு நோக்கியா நிறுவனம் ஆரம்பத்திலேயே ஆண்டிராய்டு போனை வெளியிட்டு இருந்தால் லாபத்தில் சென்று இருந்து இருக்கலாம் .

          ஆனால் நட்டமான நிறுவனத்தை மூடாமல் மக்கள் செலவில் நடந்துவதுதான் கம்ம்யூனிசம் .

          ஊட்டி கருப்பு வெள்ளை போட்டோ நெகட்டிவ் தொழிற்சாலையை , கலர் போட்டோ நெகட்டிவ் வந்து பல வருடங்கள் ஆன பின்னரும் மக்கள் செலவில் நடத்தினார்கள் .

          இந்தியன் ஏர்லைன்ஸ் பல ஆயிரம் கோடி நாட்டம் என்றாலும் மக்கள் செலவில் நடத்துவார்கள் .

          ஸ்டேட் பாங்கில் கடனை கொடுத்து விட்டு வராக்கடனை அடைக்க மக்கள் பணத்தை எடுத்து கொண்டு தொழிலை நடத்துவார்கள் .

          சிந்தித்து பாருங்கள் , நஷ்டம் ஆனாலும் – நீங்கள் உற்பத்தி செய்யும் பொருள் யாரும் வாங்கவில்லை என்றாலும் நிறுவனம் மூடப்படாமல் நடக்கும் வித்தை கம்ம்யூனிஸத்தில் உள்ளது .

          • // நஷ்டம் ஆனாலும் – நீங்கள் உற்பத்தி செய்யும் பொருள் யாரும் வாங்கவில்லை என்றாலும் நிறுவனம் மூடப்படாமல் நடக்கும் வித்தை கம்ம்யூனிஸத்தில் உள்ளது //

            அப்படியாங்க ராஜா? அப்படியே கம்யுனிசத்தில அந்த ‘லாப’ ‘நட்டங்கள்’ யாரை போய்சேருகிறது யாரை பாதிக்கிறது என சொன்னால் நல்லாயிருக்கும். கம்யுனிசம் எப்போ பழையதை தொங்கி பிடித்து கொண்டிருக்க சொல்கிறது?

          • இராமன்,

            //ஆனால் நட்டமான நிறுவனத்தை மூடாமல் மக்கள் செலவில் நடந்துவதுதான் கம்ம்யூனிசம் .//
            நோக்கியா வரி ஏய்ப்பு செய்து லாபத்தை எடுத்துக் கொண்டுதான் ஓடியது. ஆனால் தொழிலாளர்கள் தெருவில் நின்றார்கள்.

            //ஊட்டி கருப்பு வெள்ளை போட்டோ நெகட்டிவ் தொழிற்சாலையை , கலர் போட்டோ நெகட்டிவ் வந்து பல வருடங்கள் ஆன பின்னரும் மக்கள் செலவில் நடத்தினார்கள் .//
            தொழிற்சாலையை வளர்த்தெடுக்காததற்கு காரணம் கம்யூனிஸ்ட்களா? அரசாங்கமா?

            //இந்தியன் ஏர்லைன்ஸ் பல ஆயிரம் கோடி நாட்டம் என்றாலும் மக்கள் செலவில் நடத்துவார்கள் .//
            தனியாருக்கு கொடுத்த பின்னும் நட்டமென்றால், மக்களுக்காக நடத்துவார்களா? இல்லை நோக்கியா போல ஓடுவார்களா?

            //ஸ்டேட் பாங்கில் கடனை கொடுத்து விட்டு வராக்கடனை அடைக்க மக்கள் பணத்தை எடுத்து கொண்டு தொழிலை நடத்துவார்கள் .//
            பேங்குகளில் வாராக்கடனுக்குக் காரணம் பெருமுதலாளிகளா? கம்யூனிஸ்ட்களா?

            முதலாளிகளுக்கு லாபம் மட்டும்தான்
            முக்கியம். கம்யூனிஸ்ட்ளுக்கு மக்கள் மட்டுமே முக்கியம். இதில் நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பது உங்களுக்கே தெரியும்.

          • ராமனுக்கு மோடியும், ட்ரம்பும் கூட கம்யூனிஸ்ட் தான் போலிருக்கே..

            //ஸ்டேட் பாங்கில் கடனை கொடுத்து விட்டு வராக்கடனை அடைக்க மக்கள் பணத்தை எடுத்து கொண்டு தொழிலை நடத்துவார்கள் .//

            பெயில்-அவுட், பெயில்-இன் பண்றவங்க எல்லாம் கம்யூனிஸ்டுகளா?

            2008 பொருளாதார வீழ்ச்சியில் யார் யாரை பெயில் அவுட் செய்தார்கள் என்பது உலகறிந்த உண்மை.

            ஆமா அப்படித்தான் பொய் சொல்லுவேன்னு ராமன் வெளிப்படையா இருக்குறதுக்கு சந்தோசப்படலாம்.. ஆனா நம்ம மக்கள் இதை வெளிப்படை தன்மைன்னு சொல்ல மாட்டாங்க..

            https://thewire.in/203091/new-proposed-law-stoking-worst-fears-indias-bank-depositors/

            https://thewire.in/203625/banking-crises-going-beyond-bail-outs-bail-ins/

            • //2008 பொருளாதார வீழ்ச்சியில் யார் யாரை பெயில் அவுட் செய்தார்கள் என்பது உலகறிந்த உண்மை.//

              அமெரிக்க அரசாங்கம் தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்த பணம், வட்டியும் முதலுமாக திரும்ப வாங்கிவிட்டது .

              சோசியலிச குட்டைக்குள் போட்ட பணம் திரும்ப வந்ததாக சரித்திரம் உண்டா ?

          • Long back Indian Airlines got merged with Air India.Major reason for Air India”s loss is the allotment of all revenue earning routes to private airlines just like in bus transport in TN.Or encouraging corporate hospitals flourish by cutting down allotment of funds to Govt hospitals and also including corporate hospitals in govt’s medical insurance plan for common men.
            Who are the major beneficiaries from State Bank of India?Farmers?SME?No.Ambanis,Adanis,Tatas,Essar etc.Who has taken Adani along with SBI Chairman to Australia to get loan of Rs6000 crore to Adani for his controversial coal mining project there?Who are all the 24 major defaulters to PSBs who are going to get 40 to 60 % waiver of their big ticket loans under the “haircut”scheme of Modi govt?At whose cost the “haircut”to banks will happen?Both me and Raman who put deposits with PSBs.
            If 2G spectrum is allotted to Uniteck,it is scam since Uniteck is inexperienced in telecom.But,if manufacturing partnership is taken away from HAL,the much experienced Public Sector undertaking in Rafale deal and given in platter to Anil Ambani (a novice in fighter plane manufacturing)it is called as Make in India project.Actually,under the earlier agreement initiated by UPA regime,108 out of 126 Rafale fighter planes were to be manufactured in HAL with technology transfer from the French supplier.Under the modified agreement 36 Rafale planes are bought on fly away condition throwing the Make in India concept to dust bin.
            As pointed out by Rebecca Mary,Raman should understand whether it is right to call both UPA regime or NDA regime as socialist regimes.Under whatever regime,he dose not want public sector to thrive.

            • //Major reason for Air India”s loss is the allotment of all revenue earning routes to private airlines just like in bus transport in TN//

              Without competition in business any idiot can make profit with the pricing power. How much people had to pay for air travel during socialist agenda and compare now. Ask you son..

              //At whose cost the “haircut”to banks will happen?//

              Why should Govt be running this banking? If it is private banking , investors should be worrying not the tax payers. Socialist left over of state bank,indian banks should be privatized, then the loss of Mallaya loan, would have gone to investors.

              //If 2G spectrum is allotted to Uniteck,it is scam since Uniteck is inexperienced in telecom.But,if manufacturing partnership is taken away from HAL,the much experienced Public Sector undertaking in Rafale deal and given in platter to Anil Ambani (a novice in fighter plane manufacturing)it is called as Make in India project.//

              For market to function properly,monopoly is not the answer. In 2G there were already many players, In case of HAL, it is monopoly. India needs another player , who is ready to put capitol.

              //under the earlier agreement initiated by UPA regime,108 out of 126 Rafale fighter planes were to be manufactured in HAL with technology transfer from the French supplier.Under the modified agreement 36 Rafale planes are bought on fly away condition throwing the Make in India concept to dust bin.//

              https://timesofindia.indiatimes.com/india/the-rafale-deal-10-facts/articleshow/61769792.cms

              China was at Bhutan boarder and when will you transfer the technology and make the first flight? When project was initiated during Vajbayee govt, india had time. After 15 years one looses negotiation power. When seller smells the desperation from buyer, prices will go up. Congress govt should have sealed the contract, when they had upper hand. Make in India will have to take back seat for “Defend India”.It is a bad deal pray tell me what are other options?

              • Raman,Ajai Shukla,defence expert also says that IAF requires 200 to 300 fighter aircrafts.But,what Manohar Parricker,who has not accompanied PM to Paris to enter into new agreement with Dassaults,defended PM
                scrapping the previous agreement thus,”I want to buy BMW or Mercedes.But I cannot afford.Likewise,India cannot afford to buy 126 aircraft”
                But,do you know the reason for restricting Rafel purchase to 36.Modi”s other friends ie Tatas and Adani would be involved in purchase of F16 from Lockheat Martin (USA) and Gripen from Saab (Sweden) respectively.Both the bids of Lockheat Martin and Saab were rejected while approving the tender by Dassaults quoting the reason that these planes were inferior than Rafel.How,both F16 and Gripen are found to be worthy now?

              • //For market to function properly,.monopoly is not the answer.In 2G,there were already many players?//
                Are Rama!To remove monopoly only Raja gave spectrum to new players.After allotting 2G to many players,the cost for consumers came down.The business rivalry led to false case and Raja was made to suffer for 7 years.
                //In case of HAL,it is monopoly.India needs another player,who is ready to put capital//
                Yes,Anil will invest after keeping Rs 45000 crore as NPA to Public Sector Banks.He became most eligible investor after facing insolvency and bankruptcy proceedings initiated by China Development Bank and Erickson.
                Why solo player only?You have other eligible investors in Tatas and Adani.Adani also owe Rs 90000 crore NPA.Tata got Rs 30000 crore worth concessions from then Gujarat CM for investing just Rs3000 crore in his displaced Nano plant at Sanand.Not only that poor Tata was granted Rs 9000 crore loan at just 0.01% interest by the generous CM.But at what was the net result?Tata stopped Nano car production and with the company from other eligible car makers made the Sanand youth jobless.In UPA regime also,Tata armtwisted Coal India to buy coal at higher rate from Tata coalfields at Indonesia and supply the imported coal at less rate to Tata India to produce electricity for Mumbai city.So,you have three most eligible investors to break the monopoly of PSBs in the “national interest”.
                No consultation with FM or Defence Minister.No consultation with Inter ministerial committees.PM went for new RFP with Dassaults by increasing per flight cost from 714 crore to 1611 crore.You should not mind all these cost escalation etc since we are going to fight with China tomorrow morning.

                • //To remove monopoly only Raja gave spectrum to new players.After allotting 2G to many players,the cost for consumers came down.The business rivalry led to false case and Raja was made to suffer for 7 years.//

                  To bring down the cost of cell service, he gave licence to construction company so that they can build new infrastructure and provide cheap service .
                  You sir , a real genius!

                  Next time to build a bridge, give the tender to Airtel, that will bring down the cost of the bridge 🙂

                  //Adani also owe Rs 90000 crore NPA.//

                  Why cry about Socialist bank NPA? that is bound to happen. Solution is to make them privatize.

                  //.But at what was the net result?Tata stopped Nano car production//

                  Before starting a project ,putting a product , how will a politician able to forecast ? You have no idea about entrepreneurship . New products will come and go, Nobody can make 100% prediction . Are you sure you worked in a banking? How would you have approved new loans for entrepreneurs? No wonder licence Raj sucked due to managers like you who cant understand.

                  //No consultation with FM or Defence Minister.No consultation with Inter ministerial committees.PM went for new RFP with Dassaults by increasing per flight cost from 714 crore to 1611 crore/

                  I dint read much about these new deals. If it is the case , I can take it as he is following the 2G Raja, to bring down the cost 🙂

                  • ///I dint read much about these new deals. If it is the case , I can take it as he is following the 2G Raja, to bring down the cost//

                    பொய், பித்தலாட்டம்.

                  • Anil Ambani,a total failure in telecommunication can be a joint producer of fighter planes.But Unitech’s benami telecom firm cannot have 2G licence.Strange logic.One thing is clear.A fraudster,if he is close to the present ruling party can get any project.If he had any truck with previous ruler,it is a crime.Raman does not know that Unitech,the construction company itself is owned by Anil Ambani who accompanied the PM in his Paris trip instead of the defence minister.
                    Whether it is socialist bank or capitalist bank,govt is providing capital at your cost.Read another article in Vinavu itself about the misdeeds of the private bank ie ICICI Bank.Also read the misdeeds of Airtel Payment bank.
                    Banks study the project report carefully before extending finance to manufacture any new product.One of the major investigation usually done is about marketing of the product and potential market for the particular product.When Nano was introduced as a “poor man’s car”the ego of the upcoming middle class got affected.They were never ready to buy this car.Car is a status symbol in Indian society.
                    I had 37 years experience in banking and about 30 years experience as Branch Manager/Chief Manager(credit).Was also SSI (now called as SME sector)Branch Manager and financed several hundred of Tiny,Small and Medium industries.Had exposure in export financing and finance to big industries in my stint at Mumbai main branch of a leading bank.I need not get any certificate from you.
                    My point is that then CM of Gujarat,just for instant publicity,gave lavish facilities to a failure product.The money wasted was Gujarat tax payers’ money.
                    Read about these deals.Cutting monopoly of few in mobile phone service benefited common men.But attempt to cut monopoly of the much experienced public sector HAL resulted in patroniz
                    ing a bankrupt industrialist and increased the cost of the aircraft to three fold.If you are genuinely interested in the nation,you should read all these links.Otherwise,you will be clubbed with the bogus patriots who chant “Bharat Mata Ki Jai”and do exactly the opposite.

                  • Raman,be abreast with the developments in Indian economy.Licence Raj ended in 1991 itself when Dr Manmohan Singh introduced liberalization during the regime of P.V.Narasimha Rao.Much water has flowed under the bridge.We are reaping the ill-effects of neo-liberalization ie private sector flourishing with tax payers’ money and public sector languishing.The govt will,in future,meet the losses to private entreprenuers like haircut on NPAs of banks and compensation in Udhan scheme (regional air connectivity).Wake up from your slumber and see the reality.

              • Raman,the link quoted by you is part of the feeble damage control exercise by Modi govt.If you want to know the true picture,you have to read about half a dozen articles published elsewhere.I will provide the relevant links to you.

                • Raman,read the following links;-
                  https;//thewire.in/197682/rafale-fighter-jet-deal-reliance-bjp-modi/
                  https;//thewire.in/198840/rafale-deal-modi-must-use-opportunity-clear-air-transparent/
                  https;//thewire.in/198041/sitharaman-defends-rafale-deal-congress-asks-bjp-properly-refute-allegations
                  https;//www.savukkuonline.com/12971/

    • மேல நண்பர் மிக சுருக்கமாக சொல்லிவிட்டார், இருந்தாலும் ஆசாகிட்கு பாடமெடுத்து பழகிவிட்டதால் இதோ,

      நண்பர் ஆசக் வெறுமனே தலைப்பை படித்துவிட்டு முன்னைய விவாதத்தின் காண்டை கண்டபடி அங்குமிங்கும் வாந்தி எடுக்ககூடாது, வினவின் கட்டுரைகளை முழுதும் படித்தீர்களானால் இறுதியில் தடித்த எழுத்தில் பதிவின் சாரம் போட்டிருப்பார்கள், அது பதிவை பொறுத்து பிரச்சினைகளுக்கு காரணம் முதலாளித்துவமா, இந்துத்துவமா, சாதியமா காரணம் என தெளிவாக சொல்லி மக்கள் அதிகாரமே தீர்வு என்றும் சொல்லியிருப்பர்கள். மக்கள் அதிகாரம் என்பது பொதுவுடைமை ஆட்சி, மக்கள் ஆட்சி. மக்களை மக்களே ஆளவேண்டும், இயற்கை வளமும் உழைப்பும் மக்களுக்கே திரும்ப செல்லவேண்டும், இதுபோன்ற சுரண்டல் லாபவெறி வெளிநாட்டுபன்றிகள் அடித்து துரத்தபடவேண்டும் இவ்வாறு தெளிவாக சொல்லப்படும்.

      குரான் என்ன சொல்கிறது இதற்கு தீர்வு? குரான் எங்காவது ‘தொழிலாளர் உரிமை’ என்ற வார்த்தையாவது சொல்லி இருக்கிறதா? செல்வந்தர்கள் ஏழைகளுக்கு சக்காத் கொடுக்க வேண்டுமென்றால் ‘செல்வந்தர்கள்’ எப்படி உருவாகிறார்கள்? ஏழைகள் எப்படி உருவாகிறார்கள்? என்றெல்லாம் ‘ஆல் இன் ஒன்’ குரான்ல சொல்லியிருக்கனுமே? இல்ல அதெல்லாம் அல்லாவுக்கே தெரிந்த ரிஷிமூல(தன)மா?

  1. யாரை எதிர்த்து இந்த போராட்டம்! காலனி ஆதிக்க காலத்தை போல முதலாளி இங்கில்லை. யாரென்று யாருக்கும் தெரியாது. பெரும் அபாயம் நண்பர்களே! ஒப்பந்தம் போடுபவனுக்கும் தெரியாது! இவர்களின் கோரிக்கைகள் பற்றி அதிகார பூர்வமாக பேசவும் முடிவெடுக்கவும் எவனுக்கும் இங்கே உரிமை இல்லை. கொள்ளை லாபம் கிடைக்கும் வரை இவர்களின் கான்க்ரீட் கூடாரம் இங்கே இருக்கும்! இல்லை என்றால் அடுத்தநாளே இருக்காது. இங்கிருந்து கொண்டு செல்ல எதுவும் இல்லை. ஒரே பேப்பேரில் ஒரே நாளில் கடையை மூடிவிடுவான். தலைமை செயலகம் இது பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாது. எடுக்க எந்த அதிகாரமும் இல்லை. எதுவும் அங்குள்ளவர்களுக்கு தெரியாது.
    ஒப்பந்தம் போட்ட அரசுகள் ஒரே ஒருமுறையாவது கம்பனிக்குள் நுழைய முடிந்ததா? ஒப்பந்த நடைமுறையை ரெவியூ பண்ண முடிந்ததா? முதலில் ஒப்பந்த சரத்துகள் என்ன என்று எவனுக்காவது தெரியுமா? தகவல் அறியும் சட்டத்தில் அவைகளை பெற முடியுமா? மேலும் எந்த பன்னாட்டு நிறுவனத்தின் மீது இதுவரை எந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.இந்த உண்மைகளை புரிந்து கொள்வது போராட்டத்தின் வடிவங்களை வரையறுக்க உதவும்.

  2. ஆசாக் அவர்களே பொத்தம்பொதுவாக எதையும் கேட்காமல் கம்யூனிசம் என்றால் என்னவென்று முதலில் கொஞ்சமேனும் புரிந்துகொற்ள முயலுங்கள்.கம்யூனிசம் என்பது உலக பாட்டாளிவர்க்கம் மார்க்சியத்தின் அறிவொளியில் அதன் வழி நின்று படைக்கவீருக்கும் ஒரு பொதுஉடைமை சமுதாய அமைப்பு.அச்சமுதாய அமைப்பானது நிறுவப்படுவதற்கு முன் மக்கள் தங்களின் அதீகாரத்தின் மூலமாக அமைத்துக்கொள்ளும் ஒரு இடைக்கால சமுதாய அமைப்பே சோசலிச சமுதாய அமைப்பு.அந்த மக்களுக்கான அமைப்பில் எந்த ஆலைகளும் முதலாளித்துவ பயங்கரவாதிகளின் தனியுடைமையீல் இருக்காது.சமூதாய தேவைக்கான ஆலைகள் உள்ளீட்ட அனைத்து கட்டமைப்புகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்கள் கமிட்டிதான் நிர்வகிக்கும்.தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து சட்டங்களும் இயற்றப்பட்டு அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.அனைத்து உற்பத்திகளும் சமுதாயத்தின் தேவைகளை கணக்கில்கொண்டே உற்பத்தி செய்யப்படும்.முதலாளிகளின் கோரமுகமான “லாபவெறி”முற்றீலும் ஒழிக்கப்படூம்.மனித இனத்தையே சுயநலத்தில் தள்ளி அவர்களை வெறும் நுகர்வின் வெறியர்களாக மாற்றிவைத்திருக்கும் சந்தை பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சக மனிதனை மனிதனாய் நேசிக்கும் பண்பாட்டு கலாச்சாரம் வளர்க்கப்படும்.சிறு குறு தேசியமுதலாளிகளீன் தொழில்கள் பாதுகாக்கப்படும்.மதம் எனும் மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை விடுவிக்க அரசே தன் சொந்தப் பொறுப்பில் எண்ணிலடங்கா அறிவியலாளர்களீன் ச்சிந்தனைகள் யாவும் பிரச்சாரம் செய்யப்படும்.அனைத்து மதநினுறுவனங்களீன் சொத்துக்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டு அவையனைத்தும் கல்வி மருத்துவம் உள்ளிட்ட
    மக்களீன் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பயன் படுத்தப்படும்.
    சக மனிதனைச் சுரண்டூம் நான் என்ற தனியுடமை ஒழிக்கப்பட்டு “நாம்”என்ற பொதுயுடமை அமைக்கப்பட்டு அது காப்பாற்றப்பட மக்களின் துணையோடு சோசலிச அரசு “கம்யூனிசம்” நோக்கி தடைகளைத் தகர்த்து முன்னேறும்.

    • ஆசாக்கிற்கு புரிகிறதோ இல்லையோ…நண்பர்கள் எழுதுவது, ஆர்வத்துடன் திறந்தமனதுடன் படிப்பவர்களுக்கு அருமையான பாலபாடங்கள்.

      வாழ்த்துக்கள் நண்பர்களே!

    • @ashak

      உங்களுக்கு எப்படி அனைவரும் மதத்தை பின்பற்றி நடந்து கொண்டால் உலகில் பிரச்சினை இன்றி வாழலாம் என்று நினைக்கிறீர்களோ , அதே போல் பாட்டாளிகள் பெயரால் ஆட்சி அமைத்து விட்டால் , மக்கள் அனைவரும் சுயநலமின்றி விருப்பு வெறுப்பு இன்றி நாம் என்ற உணர்வோடு வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள் .

      உங்களுக்கு இருக்கும் அதே வியாதிதான் , ஆனால் இவர்கள் உங்களை விட புத்திசாலிகள் என்று நினைத்து கொள்கிறார்கள் .

      • கம்யூனிஸ்டுகளை மதவாதிகளோடு ஒப்பிடுவதில் இருந்தே உங்கள் கம்யூனிச அறிதல் புரிகிறது, வேண்டுமென்றால் வால் வீதி போராட்ட காரர்களிடம் சென்று பாடம் கேளுங்கள். கம்யூனிசம் எப்போதும் புரட்சி அமைந்தால் உடனே தேனாறு பாலாறு ஓடி எல்லாரும் ஹாப்பிலிஎவர்ஆபடர் வாழ போவதாக சொல்லவதில்லை, உண்மையில் புரட்சிக்கு பின்புதாம் நிறைய வேலை உண்டு, கஷ்ட காலங்கள் உண்டு, கம்யூனிசம் பரிணாமம் போல மனித சமூகத்தின் நிரந்தர இருப்புக்கும் உண்மையான வளர்ச்சிக்கும் வழிகோலுவதை நோக்காக கொண்டது, ஆனால் மதத்தின் நோக்கம் என்ன?? மக்களை கட்டுபடுத்தி அதிகாரம் செலுத்துவது, முதலாளித்துவத்தின் ‘நோக்கம்’ என்ன? ஆம் உங்களுக்கே தெரியாது ‘எங்கே செல்லும் இந்த பாதை’ என, மேடகத்தைய மு.துவ ‘அறிஜர் பெருமக்களே விழிபிதுக்குவர் மு.துவத்தின் தொடர்ச்சியான மனித சமூகத்தின் இருப்பை கணக்கில் எடுக்காத ‘வளர்ச்சியை’ பற்றி கேட்டால்.

        நீங்க என்னடா என்னால் ராமன், கம்யூனிஸ்டுகள் ஏதோ குடும்ப படத்தின் முடிவை பார்த்து நெஞ்சு நெறையும் அப்பாவி ஜனங்களை போல சுப முடிவுக்கு ஏங்குபவர்கள் என அதி புத்திசாலியாக முடிவு செய்து விட்டீர், இது வியாதி அல்ல, வேட்கை. பாவம் உமது எண்ணவோட்டத்தை கணிக்கும் அளவு யோசிக்க தொடங்கி விட்டோமே என்ன செய்வது.

      • ராமன்,

        நிகழ்காலத்தில் கண்ணெதிரே நடப்பதையே அப்படியே தலைகீழாக திருப்பிப் போட்டு விளக்கம் சொல்பவர்கள் பேசுவதெல்லாம் உண்மையென்றால் நீங்களும் புத்திசாலிதான்.

        இன்று உலகில் இருக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் முதலாளித்துவம் என்கிறோம்.

        நீங்களோ இல்லை, முதலாளித்துவம் இயல்பாக பரிணமித்தது, இயற்கை தெரிவின் அடிப்படையில் பரிணமித்தது என்ற அதரப்பழசான, கிழித்து தொங்கவிடப்பட்ட கருத்தை முன்வைக்கிறீர்கள். இது பற்றி விவாதித்த போது, மதவாதி என்று முத்திரைகுத்திவிட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தீர்கள்.

        முதலாளித்துவம் இயற்கையாக இயல்பாக பரிணமிக்கவில்லை என்பதை விளக்க பல கட்டுரைகள் நூலகள் உள்ளன. நீங்கள் தான் மாற்றுக் கருத்துக்களை மறந்தும் படிப்பதில்லையே..

        இயற்கை தெரிவு போன்ற அறிவியல் கோட்பாடுகளை கேடாகவும், அறிவியலுக்கு புறம்பாகவும் முதலாளித்துவ கொடுங்கோண்மைக்கு முட்டுக்கொடுக்க பயன்படுத்துகிறீர்கள். கேள்விகேட்டால் கேட்பவரை மதவாதி என்கிறீர்கள்.

        முதலாளித்துவமே மனிதகுலத்தின் ஆகச்சிறந்த அமைப்பு என்று நம்புகிறீர்கள், நம்பவைக்க முயல்கிறீர்கள். சொன்னதையே திரும்பச் சொல்கிறீர்கள்.

        ஏகாதிபத்தியம் உருவாக்கி வளர்த்த அல்லேலூயா பாணி பிரச்சாரம் தான் உங்களுடையதும்.. ஆக மொத்தத்தில் உங்களுக்கும் அல்லேலூயா – பெந்தகோஸ்தே பிரச்சாகர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

  3. Raman,

    கம்யூனிஸ்டுகள் எதிர்காலத்தின் மீதும் மக்களின் மீதும் நம்பிக்கை வைக்கிறார்கள்.

    உங்களைப் போன்ற முதலாளித்துவத்திற்கு முட்டுக்கொடுப்போர் நிகழ்காலத்தைப் பற்றி எந்தக் கூச்சமும் இன்றி பச்சையாகப் பொய்யுரைக்கிறீர்கள். மக்களை ஏமாற்ற முயல்கிறீர்கள்.

    • //உங்களைப் போன்ற முதலாளித்துவத்திற்கு முட்டுக்கொடுப்போர் நிகழ்காலத்தைப் பற்றி எந்தக் கூச்சமும் இன்றி பச்சையாகப் பொய்யுரைக்கிறீர்கள். மக்களை ஏமாற்ற முயல்கிறீர்கள்.

      //

      🙂

      கம்மியணனிஸ்டுகள் எழுதிய கற்பனை கட்டுரைகளை படித்து விட்டு , உங்கள் கற்பனை உலகத்தை படைத்தது வைத்து இருக்கிறீர்கள் .

      கடின உழைப்பாளியின் பலனை எடுத்து, உழைப்பது போல் நடிப்பவனுக்கு கொடுத்துவிட்டு இரண்டு பெரும் சமமான தொழிலாளிகள் என்று கூறுவது தான் கம்மியோனிஸம் .

      அடுத்தவர் உழைப்பின் பலனை அனுபவிக்க நினைப்பவர்களுக்கு அது சொர்க்கலோகம் தான் .

      • //அடுத்தவர் உழைப்பின் பலனை அனுபவிக்க நினைப்பவர்களுக்கு அது சொர்க்கலோகம் தான்//

        நீங்கள் அல்லேலூயா – பெந்தகோஸ்தே பிரச்சாகர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்காதீர்கள்.

        முதலாளிகள் யாரும் அடுத்தவர் உழைப்பை அனுபவிக்கவில்லை என்று அடித்துக் கூறி கடுப்பை கிளப்புகிறார் மை லார்ட்..

        இதைத் தான்,
        நிகழ்காலத்தைப் பற்றி எந்தக் கூச்சமும் இன்றி பச்சையாகப் பொய்யுரைக்கிறீர்கள். மக்களை ஏமாற்ற முயல்கிறீர்கள்
        – என்றும்

        முதலாளித்துவமே மனிதகுலத்தின் ஆகச்சிறந்த அமைப்பு என்று நம்புகிறீர்கள், நம்பவைக்க முயல்கிறீர்கள். சொன்னதையே திரும்பச் சொல்கிறீர்கள். ஏகாதிபத்தியம் உருவாக்கி வளர்த்த அல்லேலூயா பாணி பிரச்சாரம் தான் உங்களுடையதும்.. ஆக மொத்தத்தில் உங்களுக்கும் அல்லேலூயா – பெந்தகோஸ்தே பிரச்சாகர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை
        – என்றும் சொன்னேன்.

        இதுக்கு எதுவும் பதில் உண்டா?
        https://www.vinavu.com/2017/12/22/workers-sanmina-protest-against-anti-labour-policies/#comment-521589

        • //கற்பனை கட்டுரைகளை படித்து விட்டு , உங்கள் கற்பனை உலகத்தை//

          அதனால் தான் சொல்லுகிறேன், கற்பனை உலகத்தை விட்டுத் தொலையுங்கள். நிகழ்கால உலகத்தை பற்றி பேசுவோம் என்கிறேன்.

          ஆனால் நிகழ்கால பிரச்சனைகளை பேசும்போதும் நீங்களே கற்பனை என்று சொல்லி ஒதுக்குவதை தூற்றாமல் உங்களால் பேசமுடிவதில்லை.

          உதாரணமாக, உலகம் முழுவதுமே எந்தப்பிரச்சினையும் இல்லாதது போலவும் வெனிசுலாவில் மட்டுமே பிரச்சினை என்பது போலவும் தான் நிகழ்கால விசயங்களை உங்களால் பேசமுடிகிறது. அல்லது, மற்ற பிரச்சினைகளை அங்கீரித்தாலும் சோசலிஸ்டுகள், சோசலிசம் தான் அதற்கும் காரணம் என்று பிலாக்கணம் பாடி முடிப்பீர்கள்.

          விட்டால், முதலாளித்துவம் தோன்றிய காலத்தில் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கும் கொடிய சுரண்டல், மற்ற கொடுமைகளை, ஒன்று – இல்லவே இல்லை என்று சாதிப்பீர்கள் அல்லது – அதுவும் சோசலிஸ்டுகளின் சதி என்பீர்கள் போலிருக்கிறது.

          அல்லேலூயாவும், ஆமென்னும் மட்டும் தான் இல்லை. மற்றபடி ஏகாதிபத்தியம் உருவாக்கி வளர்த்த அல்லேலூயா பாணி பிரச்சாரத்தின் எல்லா features-ம் இருக்கின்றன. 🙂

          முதலாளித்துவ – ஏகாதிபத்திய மூளைச்சலவை செய்பவராக இருந்து கொண்டு மற்றவரை மதவாதி என்று தூற்றுவது சற்றும் பொருந்தவில்லை.. வேறு ஆயுத்தத்துடன் இன்று போய் நாளை வாருங்கள் 🙂

        • பாட்டாளிகளுக்கு வாக்கு உரிமை இல்லாமல் , அரசின் செயல் திட்டங்களை விமர்சிக்கும் உரிமை இல்லாமல் பாட்டாளிகள் ஆட்சி அமைக்கும் முறையை நம்பும் பக்த கோடிக்கு என்ன பதில் சொல்வது ?

          • Raman,

            பதில் இல்லைன்னா பதில் இல்லைன்னு நேரடியா சொல்லுங்க.. அதை விட்டுட்டு சொன்னாலும் நீங்க கேட்கவா போறீங்கன்னு எதுக்கு பீடிகை ? பொய்யா இருந்தாலும் உண்மையா இருந்தாலும் பட்டுன்னு வெளிப்படையா சொல்றது தானே ராமனுக்கு அழகு! 🙂

            திரும்பவும் பாருங்கள்.. கற்பனை, நடைமுறைக்கு உதவாது என்று நீங்களே நிராகரிப்பதைப் பற்றி தான் பேசுகிறீர்கள். கொஞ்சம் நிகழ்காலத்திற்கு வாங்க பாஸ்..

            நீங்கள் முதலில் பதிலைச் சொல்லுங்கள்.. நிகழ்காலத்தில் பிரச்சனைகள் இருக்கிறாதா, இல்லையா? இருக்கிறதென்றால், அதற்கு காரணம் என்ன? அதற்கு தீர்வு என்ன?
            முதலில் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கிறதா, இல்லையா? முதலாளித்துவம் இயல்பனது என்பதால் அதற்கு தீர்வு இல்லை என்கிறீர்களா? முதலாளித்துவம் இயல்பாக, பரிணமித்தது , இயற்கையானது என்று சொன்னீர்கள்.. அது எப்போது எப்படி எதனால் தோன்றியது?- இவற்றைப்பற்றி பேசுவோம்..

            கற்பனையவே திட்டி தீர்த்துகிட்டு இருக்காம நிகழ்காலத்துல கண்ணுக்கெதுக்க இருக்குற முதலாளித்துவம் எப்படி மேண்மையானது, மிகச் சரியானதுன்னு சொல்லுங்க பாஸ்.

            இந்த கம்யூனிஸ்டுகளே இப்படி தான் பாஸ், நடைமுறைக்கு உதவாத கற்பனையை பேசிப் பேசியே நம்மை சர்வாதிகாரத்துல தள்ளிவிட பார்பாங்க.. நாம தான் உசாரா இருக்கனும்.. நாமளும் அவங்களப் பத்தியே பேசிகிட்டு இருந்தா எப்படி பாஸ்? இந்த நிகழ்கால முதலாளித்துவத்தின் மேன்மையை கொஞ்சம் எடுத்துச் சொன்னீங்கன்னா, மக்கள் கம்யூனிசத்தின் பக்கம் போகாம தடுத்துடலாம்.

          • //அரசின் செயல் திட்டங்களை விமர்சிக்கும் உரிமை //

            இந்தியா ஒரு சோசலிச நாடு. அரசின் திட்டங்களை நர்மதா அணை, கூடங்குளம் முதல் நெடுவாசல் கதிராமங்கலம் வரை அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள்! அதனால் தான் ஓ.என்.ஜி.சி யின் திட்டத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர்கள் நேற்று (28-12-2017) கைது செய்யப்பட்டார்கள் !

            மோடி ஆளுகின்ற இன்றைய இந்தியா ஜனநாயக நாடு. இங்கு மக்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமைகளைப் பாரீர். உலகமே இதைப் பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு என்ன கேடு கம்யூனிஸ்டுகளே.. உங்களால் தான் நாடே குட்டிச்சுவராகிக்கிடக்கிறது.

            கேப்பையில் நெய் வடிகிறது.. எருமை ஏரோப்பிளேன் ஓட்டுகிறது.. அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது..

            • ஐந்து வருடத்தில் ஆட்சி போய்விடும் என்னும் போதே இப்படி என்றால் , சாகும் வரை பதவி , தலைவர் போடும் திட்டத்தை எதிர்க்க முடியாது, கூட்டம் கூட முடியாது என்னும் ஆட்சி அமைப்பு எப்படி இருக்கும் ?

              ஒஎன்ஜீசி எதிர்த்து போராட்டம் செய்யும் போது மரண பயம் இல்லாமல் உரிமையோடு எதிர்க்க முடிகிறது அல்லவா ?

  4. ராமனை போன்று கண்மூடித்த தனமாக ஒரு நல்ல சமூகம்(சோஷலிச) அமைவதை எதிர்பவர்களுக்காகவே இந்த சங்க இலக்கிய பாடல், படித்து திருந்துங்கள்.. பல நாட்களுக்கு பிறகு வினவிற்கு வருவதால் ஒரு நல்ல விவாதத்தோடு தொடங்குவோம்.

    அல்லது செய்தல் ஓம்புமின் 🙁 (புறநானூறு:195)

    நல்ல பல குணங்களை உடையப் பெரியோர்களே.. நல்ல பல குணங்களைக் கொண்ட பெரியோர்களே…

    மீனின் முள் போன்ற நரையும், முதிர்ந்த வரிவரியாய் சுருக்கம் விழுந்த கன்னத்தையும், பயனில்லாத மூப்பையும் கொண்டுள்ள பெரியோர்களே..

    மழு எனும் ஆயுதத்தையும், கடுமையான வலிமையையும் கொண்டவனாகிய கூற்றுவன் (யமன்) உங்களைப் பற்றிப் போகும்போது வருந்துவீர்..

    நீங்கள் நல்ல செயலைச் செய்யமாட்டீர் என்றாலும், கெட்ட செயல்கள் செய்வதையாவது விட்டொழியுங்கள்! இதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.. நல்ல நெறி என்று சொல்லப்படுவதும் இதுதான்…

    ◘◘◘◘○○○◘◘◘◘○○○◘◘◘◘○○○◘◘◘◘○○○◘◘◘◘○○○◘◘◘◘○○○◘◘◘◘

    பல்சான்றீரே பல்சான்றீரே
    கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
    பயனின் மூப்பிற் பல்சான்றீரே
    கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திரல் ஒருவன்
    பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ
    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
    அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
    எல்லாரும் உவப்பது அன்றியும்
    நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே!

    -நரிவெரூஉத் தலையார்.

    இதனை படிப்பவர் வயதில் பெரியோர் இல்லை என்றால், சிறியோர் என்று மனதில் கொள்ளவும்..

    • அம்மணி ,

      உங்கள் விடுமுறை வீட்டுப்பாடம்

      1. வெனிசூலா சோசியலிச சமூகம் பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை வரைக

      2. கேம் தியரி படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் ,

      கடின உழைப்பாளி , உழைப்பது போல நடிப்பவன்

      இந்த இரண்டு பேரில் யாருக்கு பலன் அதிகம் , அந்த சோசியலிச/காபிடலிச சமூகத்தில் சமநிலை விகிதம் எப்படி இருக்கும் என்று கணக்கு போட்டு சோசியலிசம் சிறப்பானதுதானா என்பதை நிறுவவும்

  5. அடே ஆஞ்சநேயா! ஆசாக் போன்றோர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.”ராமனிடம்” இருந்து எங்களைக்காப்பாற்று

  6. @ ராமன் …

    //1. வெனிசூலா சோசியலிச சமூகம் பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை வரைக…………//

    கேள்வியே தவறானது, வெனிசுலா முதலில் சோஷலிச நாடு கிடையாது. சோஷலிசம் என்கிற பதம் குறித்து மார்க்ஸ் லெனின் கூறிய அளவீடுகளில் வெனிசுலா வருகிறதா??

    உங்களின் கேம் தியரிக்கு வருவோம்..

    கடின உழைப்பாளி, ஏய்த்து சுரண்டி பிழைப்பவன்

    இந்த இரண்டு பேரில் யாருக்கு பலன் அதிகம், அதை விட இந்த இருவரில் யாரால் சமூகத்திற்கு தீமை அதிகம்..

    அந்த சோசியலிச/காபிடலிச சமூகத்தில் மக்களின் வாழ்க்கை தரம் எப்படி இருக்கும் என்று கணக்கு போட்டு முதலாளித்துவம் சிறப்பானதுதானா என்பதை நிறுவவும்.

  7. ராமன் ,இந்த கட்டுரையில் தொழிலாளர்கள் முன்வைக்கும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்காமல் கட்டுரைக்கு தொடர்பின்றி பேசிகிட்டு இருக்கீங்க… தொழிலாளர்கள் முன்வைத்து போராடும் பிரச்சனைகளுக்கு தீர்வை பற்றி சிந்திக்க உங்களுக்கு இடையூராக உள்ள மனத்தடைகளை பற்றி சிந்திக்கும் போது உங்களின் சுயநலம் மட்டுமே வெளிப்ட்டுகிறது. ஆமாங்க நீங்க வேலை செய்த தனியார் கல்லூரியில் உங்களை சக்கையாக புழிந்து எடுத்தாங்க அல்லலவா? அதுக்கு உங்க பின்னுட்டம் என்னவாக இருந்தது? பழைய வினவு கட்டுரையில் போய் தேடிப்பார்த்துவிட்டு வந்து இங்கே விவாதிக்க உங்களுக்கு நேரம் இருக்காது அல்லவா? அதனால் நானே சொல்றேன். நீங்க வேலை செய்த கல்லூரி முதலாளி வேற, அமெரிக்க நிறுவன முதலாளி வேற இல்லங்க இருவருமே ஒரே முகம் கொண்டவர்கள் தான். ஆமாங்க பொதுவில் அவர்கள் லாபம் என்ற வெறியேறியவர்கள் தான்.

  8. என்னுடைய பின்னுட்டம் 8க்கான ராமனின் நீண்ட மவுனம் எனக்கு ஒன்றும் ஆச்சிரியம் அளிக்கவில்லை… பதில் சொல்லாமல் அமலப்பட்டு நிற்பது ராமன் தான் என்று தெரிகிறது அல்லவா? இது ஒன்றும் அவர் பதில் சொல்லாமல் ஓடுவது முதல் முறை அல்ல்லவே! பல முறைகள் கட்டுரைகளுக்கு தொடர்பின்றி பேசிவிட்டு அதன் பின்னால் வரும் எதிர்ப்புகளின் காரணமாக பம்பிக்கொண்டு நிற்பது நம்ம ராமன் தானே… தொடருங்கள் உங்க பித்தலாட்டத்தை ராமன்..

  9. அட ஆமாம் , இன்போசிஸ் நாராயண மூர்த்தி , அஜீம் பிரேம்ஜி போன்றவர்கள் பாவம் பல ஆயிரம் இளைஞர்களை சுரண்டி பிழைக்கிறார்கள் . பாவம் அந்த சுரண்டப்படும் இளைஞர்கள் …

  10. ராமனுக்கு எப்பவுமே நேர்மையாக பேசுவது என்றால் கசக்கும் என்று எல்லாருக்குமே தெரியும். அதனை மீண்டும் நிருபிகின்றார். இந்த கட்டுரையில் தங்கள் பிரச்சனையை தீர்க்க பேராடும் தொழிலாளர்கள் யாருமே இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களை சேர்த்தவர்கள் இல்லையே ராமன்.இவர்கள் வேலை செய்யும் சான்மினா நிறுவனத்தின் கொடுமைகளை தானே பட்டியல் இட்டு போராடிகிட்டு இருக்காங்க ராமன்.

    அங்கே வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் டாய்லட் போக கூட உரிமையின்றி தான் வேலை செய்துகிட்டு இருக்காங்க… அதனை பற்றி பேசினால் உங்க நிஜ முகம் வேலையே தெரிந்துவிடும் என்று தானே விவாதத்தில் இருந்து வெளியேறிகிட்டு இருக்கீங்க ராமன்?

    ஏன்யா ராமன், உங்க வீட்டு பெண்களுக்கு , உங்க முதலாளி வீடு பெண்களுக்கு மாத விலக்கு எல்லாம் வராதா? வந்தாலும் தங்களை தூய்மை படுத்திக்கொள்ள நாப்கின்ஸ் எல்லாம் மாத்திக்க மாட்டாங்களா? என்னய்யா மொன்ன நீயாயம் பேசிகிட்டு இங்க வந்து சதிராட்டம் போட்டுக்கிட்டு இருக்கீங்க?

    வெக்கம் மானம் சூடு சொரணை இருக்கறவன் என்ன செய்வான்…? குறைந்த பச்ச மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பான்…. அதுக்கு அவன் கம்ம்யுநிடுகாரனாக கூட இருக்க தேவையில்ல….

    அது சரி உங்களுக்கு மென்சுரல் சைக்கில் இல்ல… ஆனால் நிறுவன மீட்டிங்கில் உச்சா அர்ஜண்டா வருது என்றால் உங்க முதலாளிகிட்ட நடத்தும் டிஸ்சனில் இருந்து வெளியேறி உச்சா போவிங்களா இல்லையா ? அதனையாவது சிந்திங்க?

  11. ராமா, ராமா… இந்த ராமன்கிட்ட பல தடவ சொன்னாலும் புரியாத மாதிரியே நடிக்குறாரே..

    Raman,

    கம்யூனிசம், சோசலிசம் இதெல்லாம் கற்பனை வேலைக்கு ஆகாது.. அது மக்களை ஒடுக்குற சர்வாதிகாரம்னு நீங்க ஆயிரத்து ஓரு தடவையா சொல்லிட்டீங்க..

    பிரச்சனைக்கு தான் நாங்க கம்யூனிசத்தை தீர்வா சொல்றோம்.

    இப்ப இருக்குற சிஸ்டத்துல பிரச்சனை இருக்கா இல்லையா? இருக்குன்னா அந்த பிரச்சனைக்கு காரணம் என்ன? அதை எப்படி தீர்க்குறது? இதைப் பத்தி பேசுவோம்னு பல தடவை சொல்லிடேன்.. இருக்குற பிரச்சனையைப் பத்தி பேசும் போதும் அதுக்கும் சோசலிசம், கம்யூனிஸ்டுகள் தான் காரணம்னு ‘கையைப் பிடிச்சு இழுத்த’ கதையா அதையே சொல்றீங்க..

    ஒன்னு இருக்குற பிரச்சனையே இல்லைன்னு சொல்லனும், இல்லைன்னா பிரச்சனையைப் பத்தி உங்களுக்கு ஒன்னுமே தெரியலைன்னு ஒத்துக்கனும், இல்லைன்னா என்னோட நோக்கம் கம்யூனிசத்தை திட்டனும் அவ்வளவு தான், பிரச்சனைய தீர்க்குறது என்னோட நோக்கம் இல்லைன்னு ஒத்துக்கனும். இதுல எது நீங்க?

    ஐடி துறையில் சுரண்டலே இல்லைன்னு ஆணித்தரமா சொல்றீங்களா? அதை நிறுவுறதுக்கு ஆதாரம்?

    மதவாதி பாணியில் நீங்கள் சுற்றி சுற்றி விவாதிப்பது உங்களுக்கு உறைக்கவில்லையா?
    உறைக்கவில்லை என்பதால் தான் அல்லேலூயா என்று சொன்னேன்..

    • பிரச்சினைகள் இருக்கு , சுதந்திரமும் இருக்கு .

      வேலை இழப்பும் உண்டு . பிடித்த வேலை கிடைக்கும். பிடித்த வேலை கிடைக்க வில்லை என்றால் தேடி மாற்றி கொள்ளலாம் .

      மார்க்ஸ் கூறுவது போல , ஒவ்வொருவருக்கும் அவருக்கு பிடித்த வேலை செய்யலாம் என்பது கமியூனிஸத்தில் நடக்க வில்லை . பிடிக்காத வேலையை அரசாங்கம் கொடுத்துவிட்டால் , மாற்ற முடியாது .

      தமிழகத்தில் எல்லோரும் சினிமா கலைகராக ஆசைப்பட வேண்டும் என்றோ , பாடகராக வேண்டும் என்றோ ஆசைப்பட்டால் , யாருக்கு வாய்ய்ப்பு என்பதை யார் முடிவு செய்வது ? ஒரு பொட்டி கடை வைக்க கூட உரிமை தராத சமுதாயம் , எப்படி அனைவரின் தேவையை பூர்த்தி செய்யும் ?

      அனைவருக்கும் வீடு வேலை என்பது கியூபாவில் எப்படி வேலை செய்கிறது என்று தேடி பாருங்களேன் . மக்கள் தொகை பெருகும் பொது அரசாங்கம் எப்படி அதிக வீடுகளை கட்டி தருகிறது , இருக்கும் வீடுகளுக்கு எப்படி பழுது பார்க்கிறது என்று ஒரு கட்டுரை வரையுங்களேன் ?

      எல்லோருக்கும் எல்லாம் இருப்பது போன்ற நடிக்கும் நிலைதான் அந்த சமுதாயத்தில் உள்ளது . காப்பிடலாசியத்தில் ஆயிரம் பேருக்கு வேலை போகிறது ஆனால் அதே நிறுவனத்தில் முப்பதாயிரம் பேருக்கு வேலை இருந்து கொண்டு இருக்கிறது.

      காரல் மார்ஸ் , பகிர்ந்துண்ணும் சமுயாதம் பற்றி கனவு கண்டார் . அதை பங்கி கொடுப்பவர்கள் நல்லவர்களாக இருந்து செயல்பட்டால் மட்டுமே அது சாத்தியம் .

      விரும்பியதை வெளிப்படுத்தும் சுதந்திர சமுதாயத்தை தான் கனவு கண்டார் , பேசுரிமை இல்லாத அடிமை சமுதாயத்தை அவர் கனவு காணாவில்ல்லை .

      • Raman,

        ஆயிரத்து இரண்டாவது தடவையா நோகாம கம்யூனிசத்தை திட்டுறீங்க…. ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே ராமன்..

        இப்ப இருக்குற பிரச்சனையைப் பத்தி பேசச் சொன்னா, அத தீர்க்குற வழியக் கேட்டா மறுபடியும் நீங்க முருங்க மரத்துல ஏறுறீங்களே.. ஒரு வரி பிரச்சனையைப் பத்தி பேசிட்டு அப்புறம் கியூபா கம்யூனிசத்துக்கு ஆயிரத்து இரண்டாவது தடவையா ஜம்ப் அடிச்சிட்டீங்களே..

        உங்களோட இந்த கமெண்டுல மார்க்ஸ் நல்லவர் ஆயிட்டாரா.. சரி, மார்க்ஸ் முதலாளித்துவத்தின் தோற்றம் பற்றி என்ன சொன்னார்? அது இயல்பானது, இயற்கையானது, இயற்கை தெரிவின் படி வந்ததுன்னா சொன்னார் ?

        முதலாளித்துவம் சரியானது என்றால் பிரச்சனை ஏன் இருக்குது? காரணம் என்ன? அந்த பிரச்சனையை தீர்க்குறது எப்படி? முதலாளித்துவம் இயல்பானது, இயற்கையானது, இயற்கை தெரிவின் படி வந்ததுன்னு சொன்னீங்க.. அது எப்படின்னு விளக்குங்க.. அது இயற்கையானது இயல்பானதுன்னா பிரச்சனை இருக்ககூடாது அல்லது பிரச்சனையை தீர்க்க முடியாதே? இதப்பத்தி பேசுங்க..

        இல்லைன்னா என்னோட நோக்கம் கம்யூனிசத்தை திட்டுறது தான், பிரச்சனைய தீர்க்குறது என்னோட நோக்கம் இல்லைன்னு ஒத்துகிட்டு போயிடலாமே ?

        ஒன்னும் சொல்றதுக்கு இல்லை 😛

Leave a Reply to ashak பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க