privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்சென்னையில் அரங்கக் கூட்டம் : ஜனநாயகத்துக்கு பேராபத்து - எச்சரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் !

சென்னையில் அரங்கக் கூட்டம் : ஜனநாயகத்துக்கு பேராபத்து – எச்சரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் !

-

“ஜனநாயகத்துக்கு பேராபத்து” நாட்டு மக்களை எச்சரிக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் !

யாரால் ஆபத்து ? என்ன ஆபத்து ? வாங்க… பேசலாம்…

அரங்கக்கூட்டம்

நாள் : 21.01.2018, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : மாலை 5:00 மணி.
இடம் : மெட்ராஸ் கேரள சமாஜம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை
(நேருபூங்கா சிக்னல் அருகில்) சென்னை.

அரங்கக்கூட்ட நிகழ்வு வினவு இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும்…

தலைமை :

வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கருத்துரை :

  • திரு.து.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
  • திரு என்.ஜி.ஆர்.பிரசாத், மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
  • திரு. எஸ்.பாலன், வழக்கறிஞர், பெங்களூரு,
  • பேராசிரியர் அ.கருணானந்தம், வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு), விவேகானந்தா கல்லூரி, சென்னை.

நன்றியுரை :

திரு. சி. வெற்றிவேல் செழியன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

*****

அன்புடையீர், வணக்கம்.

ந்திய வரலாற்றிலும், நீதித்துறை வரலாற்றிலும், ஜனவரி 12 அன்று தலைமை நீதிபதிக்கு எதிராக, பணியிலிருக்கும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் பிலோகுர் ஆகியோர் டெல்லியில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு ஓர் அசாதாரண நிகழ்வு நீதித்துறையில் ஏற்பட்ட நிலநடுக்கம் என ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

பத்தரிக்கையாளர் சந்திப்பில், “உச்சநீதிமன்ற மரபுகள் மீறப்படுகின்றன, நிர்வாகம் சரிவர நடப்பதில்லை. முக்கிய வழக்குள் ஒதுக்கப்படுவதில் மூத்த நீதிபதிகள் புறக் கணிக்கப்படுகிறார்கள். விரும்பத்தகாத பல நிகழ்வுகள் சமீப காலங்களில் நடந்து விட்டன. சமரச முயற்சியில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்யவில்லை. நீதிபதிகள் தங்கள் ஆன்மாவை விலை பேசிவிட்டார்கள், நீதித்துறையையும் இந்த நாட்டையும் பாதுகாக்கத் தவறிவிட்டார் கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாங்கள் ஆளாகக் கூடாது என்று கருதுகின்றோம். நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம், இனி நாடு முடிவு செய்யட்டும். இந்த நாட்டுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை இது. அதனை செய்து விட்டோம்” என்கிறார்கள்.

நீதித்துறையின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாட்டு மக்களை கோருகிறார்கள்.

  • இதன் மூலம் நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?
  • நீதித்துறை சுதந்திரம் நெருக்கடியான நிலையில் வழக்கறிஞர்கள் சமூகம் அமைதி காக்கலாமா?
  • ஜனநாயகத்திற்கு பேராபத்து என்றால் மீண்டும் நெருக்கடிநிலை திரும்புகிறதா? அல்லது அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை அமுலில் இருக்கிறதா?
  • மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும், கடைசி நம்பிக்கை,
    நீதித்துறை என கருதப்படுகிறது. மத்திய அரசின் கைப்பாவையாக நீதிபதிகள் மாறும் சூழலில் வழங்கப்படும் தீர்ப்புகளின் விளைவுகள் என்ன?
  • கொலை குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் அமித்ஷா வழக்கை விசாரித்த சி.பி.ஐ நீதிபதி லோயா மரணம் மட்டும்தான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு உடனடி காரணமா?
  • உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அவர்கள் கடமையை செய்து விட்டார்கள், மக்கள் செய்ய வேண்டியது என்ன?

தெரிந்து கொள்ள, விவாதிக்க, அனைவரும் வாரீர் !

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளைத் தெரியப்படுத்துங்கள் !
கைபேசி : 91768 01656,
E-mail: ppchennaimu@gmail.com

 

  1. இத்தருணத்தில் செய்ய வேண்டி தை உடனே செய்வது மிகவும் நல்லது ஞாயமானது என கருதுகிறேன்…

  2. M.R.ராதா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. ஒரு தாய் தன் பிள்ளைக்கு பால் கொடுப்பதை கூட மத்திய பட்டியலில் சேர்க்க சொல்லும் நீதிபதி, வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு எதிராக அரசின் முகவர்களாக மாறும் நீதிபதிகள்,, தனியார் மயமாக்கு சொல்லும் கார்பரேட் நீதிபதிகள் குறித்தும் பேசுவீர்களா, நீதிபதி கர்ணன் குற்றம்சாட்டிய 7 ஊழல் நீதிபதிகளின் பட்டியலில் இந்த 4 யோக்கிய நீதிபதிகளும் இருக்கிறார்களே அதையும் பேசுவீர்களா இல்லை நீதிபதி கர்ணன் விவகாரம் வேறு, இது வேறு னெ்று ஜென்ட்லாக பேசுவீர்களா, சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை சாதிய நோக்கில் இடமாற்ற சொன்ன நீதிபதிகளை அம்பலபடுத்துவீர்களா, ஹோண்டா சிட்டி கார் கொடுத்தால்தான் வேலை செய்வோம் என்று சொன்ன நீதிபதிகள் குறித்தும் பேசுவீர்களா, சினிமாகாரர்கள் வழக்குகளை மட்டும் விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்கும் நீதிபதிகளின் வேகம் குறித்து பேசுவீர்களா, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் சமாதி கட்டக் கூடாது என்ற வழக்கை கட்டும் வரை கண்டுக் கொள்ளாமல் இருக்கும் நீதிபதிகளின் அன்பு குறித்து பேசுவீர்களா? ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் தமிழுக்கும், தமிழருக்கும் இடமில்லை என்று தொடரப்பட்ட வழக்குகளை அப்படியே நிலுவையில் வைத்திருக்கம் நீதிபதிகளின் நல்ல குணம் குறித்து பேசுவீர்களா? எம்ஜிஆர் சமாதியில் உள்ள இரட்டைஇலை அல்ல குதிரையின் இறக்கை என்று நீதிபதிகள் ஏற்றுக் கொண்டதையும் எடுத்து சொல்வீர்களா? தொழிலாளர்களின் எண்ணிகையை பொறுத்து தொழிற்சாலை லாக்அவுட் முடிவுகளை நிர்வாகங்களே எடுக்கலாம் என்று புதிய சட்டம் கண்டுபிடித்தது குறித்தும் சொல்வீர்களா? கார்பரேட் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அனுமதி மறுப்பு விவகாரத்தில் நீதிமன்றத்தின் விவேகங்களையும் சொல்வீர்களா? நீட் தேர்வு,சிவாஜி சிலை விவகாரங்களில், ஜெயலலிதாவுக்கு ஒரு நியாயம், திடீர் தினகரனுக்கு ஒரு நியாயம் என நடந்துக் கொள்ளும் நீதிபதிகள் குறித்தும் சொல்வீர்களா? கிரிக்கெட் வாரியம் முதல் தமிழக அறக்கட்டளைகள் வரை பல வற்றிலும் ஆப்பம் பங்கிட்ட குரங்காக தங்கள் நீதிபதிகளை வைத்து ஆளும் நீதிமன்றங்கள் குறித்தும் பேசுவீர்களோ? ஆவலாக காத்திருக்கிறேன். உங்கள் சீரிய முயற்சி நல்ல முன் உதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க