privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகவுரி லங்கேஷ் கொலை வழக்கு : இந்துமதவெறியன் நவீன் குமார் கைது !

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு : இந்துமதவெறியன் நவீன் குமார் கைது !

-

ர்நாடகா கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றவாளியை நெருங்குகிறது போலீசு. செப்டம்பர் 5, 2017-ல் தனது வீட்டிற்கு அருகே வைத்து பத்திரிகையாளரும் செயற்பாட்டளருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார். இதை கர்நாடக மாநில காவற்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் ஒரு முன்னேற்றம் தெரிய வந்துள்ளது.

பெங்களூரு போலீசால் பிப்ரவரி 18 அன்று 37 வயது கே.டி. நவீன் குமார் எனும் இளைஞன் துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். குற்றப்பிரிவு போலீசால் புகார் அளிக்கப்பட்ட பிறகு இவர் பெங்களூரு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவரை மேலும் விசாரித்த போது மட்டூரில் இருக்கும் இவரது நண்பர்கள் சிலர் மற்றும் துப்பாக்கிகள், வெடிமருந்து பயன்பாடுகள் ஆகியவை தெரியவந்துள்ளன. இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு இந்த இளைஞரை சில முறை விசாரணை செய்துள்ளது. தற்போது இவரை காவலில் எடுத்து மேலும் விசாரிக்கவும் கோரியுள்ளது.

அந்த விசாரணை மூலம் நவீன் குமாருக்கும், ஹிந்து யுவ சேனா, சனாதன் சன்சத்தா எனும் ஹிந்து ஜனஜாகுருதி சமிதியின் பிரிவு அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய இடத்தில் இருந்து 15 சுற்றுக்கள் சுடக்கூடிய ரவைகள் அடங்கிய தோட்டா டப்பாக்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இவை 0.32 காலிபர் துப்பாக்கிக்குரியவை. 7.65 மில்லி மீட்டர் அளவுடைய இந்த தோட்டா டப்பாக்கள்தான் குமாரின் இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது.

கவுரி லங்கேஷை அடையாளம் தெரியாத மனிதர் சுட்டுக் கொன்ற நாட்டுத் துப்பாக்கியின் தோட்டா டப்பாவும் இதே 7.65 மிமீ அளவுடையவைதான். அந்த மனிதர் ஹெல்மெட் அணிந்திருந்ததும், பைக்கில் லங்கேஷின் வீடு முன் சுற்றி வந்ததும், சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருக்கிறது. அந்த கேமராப் பதிவில் உள்ள மனிதனின் உடற்கட்டும், குமாரின் உடற்கட்டும் நெருக்கமாயிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

கவுரி லங்கேஷை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்ட அதே வகை தோட்டா டப்பாக்களும், தோட்டாக்களும்தான், மற்றொரு அறிஞரான எம்.எம்.கல்பர்கியை சுட்டுக் கொல்லவும் பயன்படுத்தப்பட்டன. கல்பர்கி வயது 77,  வடக்கு கர்நாடகாவின் தர்வாத் நகரில் வைத்து ஆகஸ்டு 30, 2015-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே போன்றோதொரு துப்பாக்கிதான் கோவிந்த் பன்சாரே மற்றும் அவரது மனைவியான உமா பன்சாரேவையும் சுட்டக் கொல்ல பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பிப்ரவரி 16, 2015ல் கோலாப்பூரில் நடைபெற்றது. அதே போன்று புனாவில் ஆகஸ்டு 20, 2013-ல் சுட்டுக் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கருக்கும் இதே துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டிருப்பதாக போலீசின் விசாரணை அறிக்கைகள் கூறுகின்றன.

இவ்வளவு இருந்தும் இந்த கொலை வழக்குகளில் இந்துமதவெறியர்களை சட்டப்படி தண்டிப்பதற்கு நெடுந்தூரம் போக வேண்டும். ஒருவேளை வர இருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வென்றால் என்ன நடக்கும்? குற்றவாளி நவீன் குமார் நிரபராதியாக வெளியே வருவார். விசாரித்த நீதிபதிகள் பின் வாங்குவார்கள்!

மேலும் படிக்க: