ம் மீது போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு எதிராக போலீசு காவலில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் ! வேறு வழியின்றி நீதிமன்றக் காவலுக்கு திருப்பி அனுப்பியது போலீசு !

கடந்த 29.06.2018 அன்று, தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3-ல், வழக்கறிஞர் வாஞ்சிநாதனை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தூத்துக்குடி போலீசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற எண் 317/ 2018 – ஸ்டெர்லைட் குடியிருப்பில் ஹோண்டா சிட்டி கார் எரிப்பு வழக்கில், வழக்கறிஞர் வாஞ்சிநாதனை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க, அன்றைய தினம் (29.06.2018) மாலை 4 மணி முதல் திங்கள்கிழமை (02.07.2018) காலை 11 மணி வரையில் அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து, போலீசு காவல் விசாரணையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை, டி.எஸ்.பி. முத்தமிழ், ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர், வேறு சில வழக்கறிஞர்களோடு அவர் பேசியதாக ஒத்துக் கொள்ளக் கூறி வற்புறுத்தியிருக்கின்றனர். மேலும் இந்த வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத வகையில், அவரை மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கின்றனர்.

இந்த வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஒத்துழைக்க மறுத்திருக்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். தனி நபராக தமது ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கியுள்ளார். மேலும் கடந்த சனிக்கிழமை (30.06.2018) அன்று காலை 7 மணி முதல் சிப்பி போலீசு நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக வழக்கறிஞர் வாஞ்சிநாதனை (30.06.2018) அன்று தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2-ல் நேர்நிலைப்படுத்தி, அவரை மீண்டும் நீதிமன்றக் காவலுக்கே இரவு 8 மணிக்கு திருப்பி அனுப்பி வைத்தது.

தகவல்:
ஜிம்ராஜ் மில்டன்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்