privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புகருத்துக் கணிப்பு : தமிழ் ஊடக முதலாளிகள் மோடியை சந்தித்தது ஏன் ?

கருத்துக் கணிப்பு : தமிழ் ஊடக முதலாளிகள் மோடியை சந்தித்தது ஏன் ?

ஆனானப்பட்ட ரஜினி போன்ற கட்டவுட் பாசிஸ்டுகளுக்கே பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் எரிச்சல் வரும் போது, மோடி போன்ற கலவரங்களினால் கட்சி நடத்தி ஆட்சி பிடிக்கும் பாசிஸ்டுகளுக்கு அந்த எரிச்சல் டன் கணக்கில் வரும். எனில் இந்த சந்திப்பு எதற்கு?

-

சென்ற ஏப்ரல் மாதம் (2018) பிரதமர் மோடி சென்னை வந்து போனதை மறக்கவே முடியாது. #GoBackModi என்ற ஹேஷ் டேக் உலகளவில் முன்னணி வந்து மோடியும் வேறு வழியின்றி இரகசியமாக வந்து போனார். அப்போது கவர்னர் மாளிகையில் தமிழ் ஊடக முதலாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மோடியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது கருப்பு பலூனால் மோடி மூடு அவுட்டாகியதால் என்னமோ சந்திப்பு ரத்தானது. மாளிகையில் இரு மணிநேரம் காத்திருந்த மீடியா புள்ளிகள் பிறகு வீடு திரும்பினார்கள்.

இதன் பிறகு தற்போது டெல்லியில் மோடி அதே ஊடக புள்ளிகளை சந்தித்திருக்கிறார். கடந்த 30.7.2018 திங்கள் மாலை 7 மணியளவில் பிரதமர் மோடியினை தமிழக ஊடக முதலாளிகள், முதன்மை ஆசிரியர்கள், நிர்வாக ஆசிரியர்கள் என 22 பேர் சந்தித்துள்ளனர். அவர்களுக்கு மோடி ‘விருந்தளித்துள்ளார்’.

இவர்களில் தினமலர் முதலாளிகள் ஆதிமூலம், ரமேஷ், கோபால்ஜி, விகடன் முதலாளி சீனிவாசன், இந்து முதலாளி ராம், குமுதம் முதலாளி வரதாஜன் , தினமணி வைத்தியநாதன், புதிய தலைமுறை கார்த்திகை செல்வன், நியூஸ் 18 குணசேகரன், தந்தி டிவி பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மகன் ஆதித்யன், பாலிமர் டிவி கல்யாண சுந்தரம், நியூஸ் 7 தில்லை, வின் டிவி தேவநாதன் வரை சுமார் 22 பேர் மோடியினை சந்தித்திருக்கின்றனர்.

இந்த சந்திப்பில் சன் டிவி குழுமம் மற்றும் நக்கீரன், ஜெயா டிவி, சத்யம் டி.வி உள்ளிட்ட ஊடகங்கள் கலந்து கொள்ளவில்லை. இதில் ஜெயா டி.வி தாமரையின் கொ.ப.செ என்பதால் அவர்கள் போகவில்லை என்பது பிரச்சினையல்ல. மற்ற ஊடகங்கள் பா.ஜ.க-வின் எதிர் முகாம் என்பதால் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

சரி, இந்தச் சந்திப்பு எதற்கு?

மோடி பிரதமர் ஆன பிறகு இதுவரை ஊடக சந்திப்பு எதையும் நடத்தவில்லை. ஆனானப்பட்ட ரஜினி போன்ற கட்டவுட் பாசிஸ்டுகளுக்கே பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் எரிச்சல் வரும் போது, மோடி போன்ற கலவரங்களினால் கட்சி நடத்தி ஆட்சி பிடிக்கும் பாசிஸ்டுகளுக்கு அந்த எரிச்சல் டன் கணக்கில் வரும்.

அப்படி இருக்கும் போது இப்படி திருட்டுத்தனமாக ஏன் சந்திக்க வேண்டும்? ஏனெனில் இந்த சந்திப்பு அதிகாரப் பூர்வ செய்தியாக வெளியிடப்படவில்லை. அங்கே என்ன பேசினார்கள் என்பதும் தெரிவிக்கப்படவில்லை. அந்தத் திருட்டுத்தனம் எதற்கு?

மோடி + தமிழ் மீடியா சந்திப்பு ஈவண்ட் மேனேஜர் கேடி ராகவன் மோடியுடன்!

வர இருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்களிடையே பெரும் வெறுப்பைச் சம்பாதித்திருக்கும் பா.ஜ.க அரசு தமிழ் ஊடக முதலாளிகளை வைத்து அந்த வெறுப்பை சரி செய்ய நினைக்கிறது. தில்லி போன ஊடக முதலாளிகளில் தினமலர், குமுதம், தினமணி போன்றோர் நேரடி காவி ஜால்ராக்கள். இதற்காகவே கோப்ரா போஸ்ட் வீடியோவில் சந்தி சிரிக்கப்பட்டவர்கள். விகடன், தி இந்து, புதிய தலைமுறை, நியூஸ் 7, நியூஸ் 18 போன் ஊடகங்கள் நேரடியாக மோடியை விமரிசிக்க மாட்டார்கள், மறைமுக ஜால்ராக்கள். தந்தி, பாலிமர் போன்றவர்கள் யார் ஆளும் கட்சியோ அவர்கள் காலால் சொன்னதை நாவால் செய்பவர்கள். ஆகவே இவர்கள் ஆல்டைம் ஜால்ராக்கள்.

ஆகவே மோடி சந்திப்பை வைத்து இந்த ஊடகங்களுக்கு கட்சி, அரசு ரீதியான விளம்பரங்கள், சலுகைகள் என்னென்ன கிடைக்கும் என்பது ஒன்று. அடுத்து மோடியே கைப்பிடித்து பேசியிருக்கிறார் என்பதால் இவர்கள் மறந்தும் கூட மோடி எதிர்ப்பு – பா.ஜ.க எதிர்ப்பு என்பது இவர்களது இதயங்களின் ஓரத்தில் கூட தோன்றாது. பொன்னார் போன்றவர்கள் தமிழகத்தில் தடை செய்யப்படவேண்டிய இயக்கங்கள் என்று போராடும் சக்திகளை குறிவைக்கும் போது இந்த ஊடகங்கள் அந்தக் குறிக்கு ஒளிவட்டம் போடவும் வாய்ப்பிருக்கிறது.

ஆகவே இன்றைய கேள்வி:
தமிழ் ஊடக முதலாளிகள் மோடியை சந்தித்தது ஏன்?

  • பா.ஜ.க பிடியை உறுதி செய்ய
  • மரியாதை நிமித்தமான சந்திப்பு
  • தெரியவில்லை

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க: