புயல் எவ்வாறு தோன்றுகிறது ? காணொளி

புயல் எவ்வாறு உருவாகிறது? புயலின் வகைகள் அதன் தன்மைகள் என்ன? அறிவியல் உண்மைகளுடன் பொருத்தமான காட்சிப்படங்களுடன் விளக்குகிறது, இக்காணொளி.

ரு வெப்ப மண்டல புயலின் தோற்றம், வலுவடைதல், வலுவிழத்தல் என்ற மூன்று கட்டங்களை கடந்து வருகிறது. கடற்பரப்பில் 26.5 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் தொடர்ந்து நீடிக்கும் போது காற்று சூடாகிறது. சூடாகும்போது காற்று விரிவடைகிறது. இலகுவாக மாறிய காற்று மேலே எழும்புகிறது. காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்படுகிறது.

இங்கு காற்றின் அழுத்தம் குறைவதால், அருகாமைப் பகுதியிலிருந்து காற்று உள்நுழைந்து, அந்தக் காற்றும் சூடாகி கடற்பரப்பில் மேலே எழும்புகிறது…

படிக்க:
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?
நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

இந்த நிகழ்வு ஏற்படும் புவியின் துருவப்பகுதியின் அடிப்படையில் கடிகார வட்டச் சுழலாகவோ, எதிர் கடிகார வட்டச் சுழலாகவோ சுழன்று சூறாவளியாகிறது.

இந்த வெப்ப மண்டலச் சூறாவளிகளால் மிகப் பலத்த காற்றுடன் மிக பலத்த மழையையும் உருவாக்க முடியும். இவற்றுடன் இந்தச் சூறாவளிகள் உயரமான அலைகளையும் அழிவு உண்டாக்கக்கூடிய புயல் அலை எழுச்சிகளையும் உருவாக்க முடிகிறது.

கடற்பரப்பில் தோன்றி நிலத்தை நோக்கி நகரும்போது இந்தப் புயல்கள் வலுவிழக்கின்றன.

படிக்க:
கஜா புயல் : கலங்கி நிற்கும் மக்களுக்கு கை கொடுப்போம்
♦ எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !

வேகத்தை வைத்து புயல்களை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். தென்னிந்தியா இத்தகைய வெப்பமண்டலப் பகுதியில் வருவதால் ஆண்டுதோறும்  அதிகப் புயல்களை நாம் சந்திக்கிறோம். உலகம் முழுவதும் புயல் குறித்த விழிப்புணர்வும் நவீன அறிவியலும் வளர்ந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால் இந்தியா மட்டும் இதில் விதிவிலக்கு.

இதற்கு முன்னர் வந்த ஒக்கிப் புயலின் தாக்கம் மற்றும் அதன் பேரழிவை வெளிக் கொணரும் ஆவணப்படம் – கண்ணீர்க் கடல் !