நண்பர்களே !

செய்திப்பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை துவங்கியுள்ளோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

1. கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! !

புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டத்திற்கு கேட்கப்பட்டிருந்த அனுமதியை திடீரென ரத்து செய்தது அரசு. எனினும் திட்டமிட்டபடி திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியது மக்கள் அதிகாரம்.

 

கேட்பொலி நேரம் : 02:23      டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

2. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் !

பாரதிய ஜனதாவின் தோல்வி குறித்து ரஜினிகாந்த், அதிமுக அடிமைகள், பாஜக வின் பங்காளிகள் சிவசேனா ஆகியோர் உதிர்த்த முத்துக்களுள் சில…

 

கேட்பொலி நேரம் : 07:45      டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

3. ராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் !

மாட்டை முன்னிறுத்தி வெறுப்பு அரசியல் செய்த, காவி கும்பலின் ‘இந்துத்துவா’ முழக்கத்தை புறந்தள்ளிவிட்டனர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மக்கள்.

 

கேட்பொலி நேரம் : 02:12      டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

4. சட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு !

முசுலீம் மக்களை தூண்டிவிடும் விதமாக தீவிரமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார், ஆதித்யநாத். ஆனாலும், தெலுங்கானாவில் ராஜா சிங் லோத் என்பவர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.

 

கேட்பொலி நேரம் : 02:15      டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

5. பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர் !

அஸ்ஸாம் மாநில பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிருபரால் கடத்தப்பட்டு பாலியல்ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார் ‘அல்ட்ரா சவுண்டு’ அர்னாப்.

 

கேட்பொலி நேரம் : 05:47      டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

இந்த கேட்பொலிகளின் பதிவை கட்டுரைகளாக படிக்க:

கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
ராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் !
சட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு !
பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர்
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் !

11 மறுமொழிகள்

  1. கேட்பொலிகளை பகிரும்போது பகிரப்பட்டவர்களுக்கு வெறும் ‘சுட்டி’ மாத்திரம் சென்றடைகிறது. சுட்டியுடன் தலைப்பும் காணக்கிடைத்தால் கேட்பதற்கு தூண்டும்.

    • கார்த்திகேயன் நீங்கள் எதில் பகிரும் போது தலைப்பு வரவில்லை என்கிறீர்கள்?

        • வாட்சப்பில் பகிரும் இணைப்பின் தலைப்பு மட்டும்தான் வரும். ஆடியோ செய்தி தொகுப்பில் இருக்கும் நான்கைந்து செய்தி உரைகளும் தனித்தனியாக தற்போது பகிர இயலாது. அப்படி பகிர்வதற்கு கூடியவிரைவில் ஆவண செய்கிறோம்.

  2. மிகச்சிறப்பான முயற்சி…
    “படித்தலின், கேட்டலே நன்று”. செய்திகள் சுருக்கமாகவும் சிறப்பாகவும் கேட்க தூண்டும் வகையிலும் உள்ளது. தொடருங்கள்..

    • செல்போனில் டவுண்லோடு பட்டனை தொடர்ந்து அழுத்தினால் டவுண்லோடு லிங்க் ஆப்சன் வரும். ஒரு முறை மட்டும் அழுத்தான்ல அது ஃப்ளே ஆப்சன் மட்டும் கேட்கும். நன்றி

  3. செய்திகளின் உள்ளடக்கம் எவ்வளவு முக்கியமோ அதைப் போலவே, செய்தி வாசிப்பும் முக்கியமானதாக இருக்க வேண்டும். ஒலி வடிவில் செய்தி வாசிக்கும் தோழரின் குரல் மிகவும் கம்பீரமாகவும்(Bold ) , தெளிவாகவும் இருக்கிறது, ஆனால் கொஞ்சம் எந்திர தனமாக இருப்பது போல் தெரிகிறது. மாறாக கொஞ்சம் சுவராஸ்யம் மிகுந்ததாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். உதாரணமாக, கிண்டல் வடிவிலான வினவின் விமர்சன கட்டுரை பற்றி வாசிக்கம்படும்போது, வாசிப்பும் கொஞ்சம் கிண்டல் கலந்ததாக இருந்தால் நன்றாக இருக்குமே. மேலும், வட்டார மொழிகளில் உரையாட வடிவில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மதுரை, நெல்லை, கோவை, சென்னை, மற்றும் இன்னும் பல பகுதிகளின் வட்டார வழக்கில் இருந்தால், வாசகர்களை கவருவதற்கு எளிமையாக இருக்கும்.
    இது என்னுடைய கருத்து, வாய்ப்பிருந்தால் முயற்சி செய்து பார்க்கவும்.
    நன்றி.
    நந்தன்.

    • உங்கள் ஆலோசனைகளை கணக்கில் கொள்கிறோம். வட்டார வழக்கோடு பேசும் நண்பர்கள் இது விடயத்தில் உதவ முன்வந்தால் முயற்சிக்கலாம். நன்றி

  4. கேட்பொலி கேட்டு முடித்த பின்னர் நாம் விரும்பிய இடத்திலிருந்து மீண்டும் கேட்க வாய்ப்பு உருவாக்கினால் நன்று.
    மீண்டும் கேட்க வேண்டுமானால் முதலிலிருந்து கேட்க வேண்டியதாயிருக்கிறது.

    • ஆடியோ பாட்காஸ்ட்டுக்கு என்று தனிச்சேவைகளை பயன்படுத்தும் போது நீங்கள் கூறியதை செய்ய முடியும். இது குறித்து ஆலோசித்து வருகிறோம். நன்றி

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க