புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? | CCCE கருத்தரங்கம் | Vinavu Live

இன்று (25.01.2019) மாலை 5.30 மணிக்கு, சென்னை பெரியார் திடல் - அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கின் நேரலை!

புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?

கருத்தரங்கம்,
அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை.
25.01.2019, மாலை 5.30

நிகழ்ச்சி நிரல்:

தலைமை:
பேராசிரியர் வீ. அரசு,
மேனாள் தமிழ்த்துறை தலைவர்,
சென்னைப் பல்கலைக் கழகம்,
ஒருங்கிணைப்பாளர், CCCE – சென்னை.

சமூகநீதியை ஒழிக்கும் உயர்சாதி இடஒதுக்கீடு
பேராசிரியர் கதிரவன்,
உயிரி தொழிநுட்பத்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்.

மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள்
மருத்துவர் எழிலன்,
இளைஞர் இயக்கம்.

இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல்
பேராசிரியர் முருகன்,
மேனாள் இயற்பியல்துறை தலைவர்,
விவேகானந்தா கல்லூரி, சென்னை,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

அறிவியக்கத்தின் அவசியம்
முனைவர் ரமேஷ்,
CCCE-சென்னை.

நன்றியுரை:
முனைவர் சாமிநாதன்

♦ ♦ 

மீபத்தில் நடைபெற்ற இந்திய அறிவியல் பேராயத்தின் (Indian science congress) 106-வது மாநாட்டில் பேசிய ஆந்திரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. நாகேஸ்வரராவ் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கௌரவர்கள் சோதனைக் குழாய் தொழில்நுட்பம் மூலம் பிறந்தவர்கள்; டார்வினது பரிணாம கோட்பாட்டிற்கு முன்னரே விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தவர்; ஏவுகணைகளை ராமர் அந்த காலத்திலேயே பயன்படுத்தியவர்: ராவணன் 24 வகையான விமானங்களைப் பயன்படுத்தினார் என்றெல்லாம் அவர் பேசினார். கண்ணன் ஜகதள கிருஷ்ணன் என்பவர் ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டினுடைய இயற்பியல் கோட்பாடு தவறு என்றும் பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் புவியீர்ப்பு அலைகளுக்கு (Gravitational wave) நரேந்திர மோடி அலைகள் என்று பெயரிடப்படும் என அறிவித்துள்ளார். அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லாதவற்றை வேதம்/புராணங்களில் உள்ள குருட்டுத் தனமான செய்திகளை அறிவியல்-தொழில்நுட்பம் என்று இவ்விருவரும் பேசியுள்ளனர்.

பகுத்தறிவு மற்றும் அறிவியல் முறையிலான கண்ணோட்டத்தை கல்வி புலத்திலிருந்து துடைத்தெறிவதற்கும் இது வழிவகுக்கும், சாதி, வர்ணாசிரம முறை ஆகியவற்றை மனரீதியாக ஏற்றுக்கொள்ளும் அபாயம் இதன் மூலம் நிகழும், சுரண்டல், அடிமைத்தனம் ஆகியவற்றை மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரிடத்தில் நியாயப்படுத்தும் தன்மையும் உருவாக்கப்படும். இத்தகைய பிற்போக்குத் தனங்களுக்கும் அதற்கு காரணமான இந்துத்துவ திணிப்புக்கும் எதிராக பேராசிரியர்களும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் மாணவரமைப்புகளும் இணைந்து குரல்கொடுப்பதும் அதைப்பற்றி விவாதிப்பதற்காக நடத்தப்படும் இந்த கருத்தரங்கம் வினவு இணையதளத்தில் நேரலை செய்யப்படுகிறது !

பாருங்கள் ! பகிருங்கள் !