த்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முசுலீம் பல்கலைக் கழகத்திற்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்ததோடு, அந்தப் பல்கலைக்கழக மாணவர்களை தீவிரவாதிகள் என விளித்திருக்கிறார் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிருபர். இதைத் தட்டிக்கேட்ட மாணவர்கள் 14 பேர் மீது தேச விரோத வழக்கு பதிந்துள்ளது, ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு! உ.பி-யை ஆளும் பாஜக-வின் அமைப்பான யுவ மோர்ச்சாவின் தலைவர் முகேஷ் லோதி கொடுத்த புகாரின் பெயரிலேயே இம்மாணவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமைக் மாலை, ரிபப்ளிக் டிவியின் நிருபரும் ஒளிப்பதிவாளரும் கல்லூரியின் அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்து, ‘தீவிரவாதிகளின் பல்கலைக்கழகம்’ என அழைத்து அதை ஒளிபரப்பிக் கொண்டிருந்திருக்கின்றனர். இதுகுறித்து மாணவர்கள் சிலர் தங்களது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்தனர்.

படிக்க:
♦ பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர் !
♦ ஜிக்னேஷ் மேவானியை ஆதரிப்போம் – அர்னாப்பின் ரிபப்ளிக் டிவியை விரட்டுவோம் !

இந்த நிலையில், மாணவர் சங்க துணை தலைவர் ஹம்ஸா சூபியான், ‘சமூகத்தின் அழுத்ததுக்குள்ளான பிரிவினர்’ குறித்த நிகழ்ச்சி ஒன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடந்ததாகவும் அதில் அழையா விருந்தாளிகளாக ரிபப்ளிக் டிவியினர் வந்ததாகவும் தெரிவிக்கிறார்.  “ரிபப்ளிக் டிவி நிருபர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பும் அனுப்பவில்லை. பல்கலைக்கழகத்தில் நுழையவும் அவர்கள் அனுமதி பெறவில்லை. பல்கலைக்கழக நிர்வாகிகளால் தடுத்து நிறுத்தப்பட்டபோது, அவர்களிடம் ரிபப்ளிக் டிவியினர் தவறாக நடந்து கொண்டதோடு, ‘தீவிரவாதிகளின் பல்கலைக்கழகம்’ எனவும் முழக்கமிட ஆரம்பித்துள்ளனர்” என நடந்ததை தெரிவிக்கிறார்.

அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்ததற்காக ரிபப்ளிக் டிவி செய்தியாளர்கள் மீது, பிரச்சினையை உண்டாக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட சில அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் பல்கலைக்கழக நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளது.

ரிபப்ளிக் டிவி, பிரச்சினையை உண்டாக்கும் வகையில் குண்டர்களையும் உடன் அழைத்து வந்திருப்பதும், ‘தீவிரவாதிகளின் பல்கலைக்கழகம்’ என கடுமையான வார்த்தைகளை வேண்டுமென்றே முழங்கி வன்முறையை தூண்டப் பார்த்ததும் அப்பட்டமாகத் தெரிகிறது. உடன் வந்த குண்டர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் எம்.ஏ. அரசியல் அறிவியல் மாணவர் முகமது அரீப் கான் என்பவர் தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்த நிலையில் இருக்கிறார்.

கல்லூரி நிர்வாகத்தின் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆதித்யநாத் அரசின் காவல்துறை, தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளின் கீழ் 14 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க’என முழுக்கமிட்டதாகக் கூறி ஜீ நியூஸ் என்னும் காவி ஆதரவு ஊடகம் பொய்யான செய்தியை பரப்பியது. அதன் அடிப்படையில் ஜேஎன்யூ மாணவர் சங்க பிரதிநிதிகள் மீது தேச துரோக வழக்கு பதிந்து, சமீபத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் ஆனது.  தேர்தல் நெருங்குகிற நிலையில், அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் வேண்டுமென்றே நுழைந்து, அம்மாணவர்கள் மீது தேச விரோத வழக்கை பதிய வைத்துள்ளது ரிபப்ளிக் டீவி.  சமூக ஊடகங்களில்  பலர் இதை சுட்டிக்காட்டி, அர்னாப் கும்பலின் இழி வேலையை கடுமையாக சாடியுள்ளனர்.

இதுவரை வார்த்தைகளில் குண்டாயிசத்தை காட்டிக்கொண்டிருந்த அர்னாபின் சங்கி டிவி கோஷ்டி, மோடி கும்பலை மீண்டும் அரியணையில் ஏற்ற களத்தில் இறங்கி வேலைசெய்யத் தொடங்கியுள்ளது இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது.

கலைமதி
செய்தி ஆதாரம் : ஸ்க்ரால்

2 மறுமொழிகள்

  1. உங்களின் இந்த செய்தி உண்மை என்றே வைத்துக்கொள்வோம், ரிபப்ளிக் டிவி அனுமதி இல்லாமல் கல்லூரிக்குள் நடந்த நிகழ்ச்சியை படம் எடுக்க வந்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம்… அதற்கும் பாகிஸ்தான் வாழ்க என்று சொல்வதற்கும் என்ன சம்பந்தம் ?

    சரி எல்லாவற்றுக்கும் மேலாக அனைவருக்கும் தெரிந்த பாகிஸ்தான் பக்தர் Asaduddin Owaisi வைத்து அப்படி என்ன நிகழ்ச்சி நடத்த பார்க்கிறார்கள் அதை ஏன் டிவியில் காண்பிக்க கூடாது என்று நினைக்கிறார்கள் ?

  2. RSS ஷாகா நடக்குற கல்லூரிகளிலே வினவையோ, பெரியார் டிவியையோ அனுமதிப்பீங்களா மாட்டுமூளை மணிகண்டா? அப்படி அனுமதிக்கலைனாலும் உங்களை மாதிரி மண்டையையெல்லாம் அவங்க உடைக்க மாட்டாங்களே !
    சிறுமி ஆசிபாவை கோயில் கருவறையில் வைத்து குதறி எடுத்த சங்கி கயவர்களை விடுவிக்க தேசிய கொடியை எடுத்து ஊர்வலம் போன தேச பக்தர்கள்தானே நீங்கள் . . !
    பிரிட்டிஷ்காரனின் ஷூக்களை நக்கிப் பிழைத்த சங்கிகளான நீங்கள், நம் நாட்டின் விடுதலைக்காக தங்களின் இன்னுயிரை ஈந்த எண்ணற்ற இஸ்லாமியர்களை தேச விரோதிகள் என்கிறீர்கள்!
    மனிதகுல விரோதியான பார்ப்பனியத்தை இம்மண்ணில் இருந்து துடைத்தெறிய எங்களின் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்போம் !

Leave a Reply to S.S.கார்த்திகேயன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க