எச்.ராஜாவை எனக்கு ஏன் பிடித்திருக்கிறது?

மிழிசை, பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றவர்கள் போல எச்.ராஜாவுக்கு நடிக்கத் தெரியாது. மிகவும் இயல்பானவர். பாசிச பா.ஜ.க-வின் உண்மையான கோரமுகத்தை கொஞ்சமும் குன்றாமல் காட்டக்கூடிய வல்லமை படைத்தவர்.

பா.ஜ.வின் கொள்கை என்ன? கோட்பாடு என்ன? என்பதெல்லாம் எச்.ராஜா மூலம், அப்படியே வெளிப்படுவதால்தான் பா.ஜ.கவைக் குறித்த உண்மைகளை இன்றைய இளைய சமுதாயம் அறிந்து கொள்ளமுடிகிறது. மக்கள் வெறுக்கவும் செய்கிறார்கள். இப்படி, எச்.ராஜா பாஜக-வின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாலேயே மாநிலத்தலைவர் பதவியில் அமரவைக்கப்படவில்லை.

எச். ராஜா போன்றவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவை. இப்படிப்பட்டவர்கள், பா.ஜ.கவில் இருப்பதாலேயே பா.ஜ.க. என்ன மாதிரியான கட்சி என்பது நமக்கு நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர், அவராகவே இருப்பதால்தான் எனக்கு அவரை பிடித்திருக்கிறது.

எச்.ராஜாவைவிட ஆபத்தானர்கள் யாரென்றால், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள்தான். காரணம், தாமரையானது இரட்டை இலை, மாம்பழம், முரசு வடிவத்தில் வந்து வாக்கு சேகரிக்கின்றது. “தாமரை மலரவே மலராது” என்று சொல்லிக்கொண்டு, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஓட்டுபோட்டால் நீங்கள் தமிழகத்தில் தாமரையை மலர வைக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

படிக்க:
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

பா.ஜ.கவுடன் கூட்டணிவைத்து தாமரையை மலர வைத்துக்கொண்டிருக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களைவிட பா.ஜவுக்குள் இருந்துகொண்டு தாமரையை ஆசிட் ஊற்றி அழுக வைத்துக்கொண்டிருக்கும் எச்.ராஜாவை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

மறுபடியும் சொல்றேன். பட்… உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா!!! 🙂 🙂

முகநூலில் : Vini Sharpana


இதையும் பாருங்க …
ஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால ! கோவன் அதிரடி பாடல் !