மக்கள் அதிகாரம் அமைப்பின் ”கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் !” திருச்சி மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் பாடிய “காவி பாசிசம் – எதிர்த்து நில் !” பாடல் ரீ-ரிக்கார்டிங் செய்யப்பட்டு காணொளி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பாருங்கள்… பகிருங்கள் …
#Resist #KovanSong #MakkalAthikaram
பாருங்கள் ! பகிருங்கள் !
பாடல், இசை : ம.க.இ.க கலைக்குழு
ஆக்கம் : வினவு
பாடல் வரிகள் :
அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிப்போனால் மாறிடுமா? (அடக்குமுறைதான்…)
எதிர்த்து நில்… எதிர்த்து நில் !
காவி பாசிசம்… எதிர்த்து நில் !
நீ விரும்பவில்லை
நான் பேசக்கூடாது…
நீ ரசிக்கவில்லை
நான் பாடக்கூடாது …
நான் உண்ணுவதை
நீ தடுக்குற?
நான் எண்ணுவதை
நீ மறுக்குற?
அதிகாரம் இருக்கலாம்
ஆடாதே!
மக்கள் அலையாய் எழுந்தால்
காணாமல் போவாய்!
காற்றாக தேய்வாய்!
காவியே நீ ஒழிவாய்!
அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிப்போனால் மாறிடுமா? (அடக்குமுறைதான்…)
எதிர்த்து நில் எதிர்த்து நில்
காவி பாசிசம் … எதிர்த்து நில் …
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
♦ நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
ஸ்டெர்லைட்டு எங்களுக்கு வேணாமின்னு போராடினா
சுட்டுக் கொல்லுற …
சிறையில் தள்ளுற …
பொய் கேசு போடுற …
NSA செடிசன் குண்டாஸு …
என்ன எங்க மேல அபன்ஸு ?
எங்க மண்ணை விட்டுடுனு
கேட்பது குற்றமா …
நச்சு ஆலை வேணாமுன்னு
கெஞ்சினாலும் குற்றமா?
கார்ப்பரேட்ட வாழ வைப்பதுதான்
உங்க சட்டமா?
எதிர்த்து நில் எதிர்த்து நில்
காவிபாசிசம் எதிர்த்து நில்
அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிபோனால் மாறிடுமா?
பதிமூனு பேரு செத்தாங்களே
செய்த பாவம் என்ன?
பாதுகாக்க நினைச்சாங்க
வாழவச்ச மண்ண
எங்க ஸ்னோலின்
உனக்கு மகளில்லையா?
அங்கே செத்தவரெல்லாம்
தீவிரவாதியா ?
டெல்டாவிலே ஹைட்ரோகார்பன்
பொட்டிபுரத்தில் நியூட்ரினோ
கடற்கரை எல்லாம் சாகர்மாலா
மண்ணை ஆக்குற சுடுகாடா
தமிழகம் என்ன பகை நாடா ?
நடக்காது … நடக்காது …
கார்ப்பரேட்டின் கனவு பலிக்காது …
எதிர்த்து நில் எதிர்த்து நில் !
காவிபாசிசம் எதிர்த்து நில் !!
அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிபோனால் மாறிடுமா?
நிலத்த பறிக்குது எட்டு வழிச் சாலை …
எதிர்த்து பேசினாலே கைது சிறைச் சாலை …
வளர்ந்த மண்ணுல விவசாயி வாழமுடியல …
இழந்த உரிமைய தொழிலாளி பேசமுடியல …
மோடிய எதிர்த்தால்…
காவிய எதிர்த்தால்…
தேசவிரோதி … தீவிரவாதி … பயங்கரவாதி…
இது என்ன நீதி ?
இது நீதி இல்லை… நீதி இல்லை… இது மனுநீதி …
இதுதான் காவி
பாசிசம், காவி பாசிசம்.
இது கார்ப்பரேட்டின் பாசிசம்
எதிர்த்து நில் ! எதிர்த்து நில் ! காவி பாசிசம் – எதிர்த்து நில் !
காவி பாசிசம் – எதிர்த்து நில்!
கம்யூனிச பாசிசம் எதிர்த்து நில்
பாசிசம் என்றால் என்ன?
குறைகள் :
மாநாட்டில் பாடிய உணர்ச்சி இதில் இல்லை.
இன்னும் வேகமாக பாடல் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.
தமிழ்நாடு என்ன வெளிநாடா என்பது மாறி,தமிழகம் என்ன பகைநாடா என பாடியுள்ளீர்கள்
வெளிநாடா ஓகேதான் தமிழ்நாடு என்றே பாடியுள்ளீர்கள்.
நிறைகள் :
கோவனின் தெளிவான உச்சரிப்பு,பின்னணி இசை அருமை.
வீடியோ எடிட்டிங் கிரியேட்டிவிட்டியோடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்கள்.
இப்படியொரு முயற்சிக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்….
குறைகள் :
மாநாட்டில் பாடிய உணர்ச்சி இதில் இல்லை.
இன்னும் வேகமாக பாடல் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.
தமிழ்நாடு என்ன வெளிநாடா என்பது மாறி,தமிழகம் என்ன பகைநாடா என பாடியுள்ளீர்கள்
பகைநாடா ஓகேதான் தமிழகம் என்று பாடியுள்ளீர்கள் அதை தமிழ்நாடு என்றே பாடியிருக்கலாம்.
நிறைகள் :
கோவனின் தெளிவான உச்சரிப்பு,பின்னணி இசை அருமை.
வீடியோ எடிட்டிங் கிரியேட்டிவிட்டியோடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்கள்.
இப்படியொரு முயற்சிக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்…
தமிழகத்தில் நடக்கும் பிரிவினை பிரச்சாரம் மற்றும் வன்முறைகளுக்கு வினவு கூட்டங்கள் தான் காரணமா ? கம்யூனிஸ்ட்கள் என்றுமே இந்த நாட்டு மக்களின் எதிரிகள் என்பதை மேலும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்கள். விடுதலை புலிகள் போன்ற தீவிரவாத இயக்கங்களிடம் எப்படி மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமோ அதேபோல் கம்யூனிஸ்ட்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவர்களோடு பழக்கம் வைத்துக்கொள்ள கூடாது.