காவி பாசிசம் – எதிர்த்து நில் | Kovan | Vinavu Official Song

நீ விரும்பவில்லை நான் பேசக்கூடாது ... நீ ரசிக்கவில்லை நான் பாடக்கூடாது ... நான் உண்ணுவதை நீ தடுக்குற? ... நான் எண்ணுவதை நீ மறுக்குற?

க்கள் அதிகாரம் அமைப்பின் ”கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் !” திருச்சி மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் பாடிய “காவி பாசிசம் – எதிர்த்து நில் !” பாடல் ரீ-ரிக்கார்டிங் செய்யப்பட்டு காணொளி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பாருங்கள்… பகிருங்கள் …

#Resist #KovanSong #MakkalAthikaram

பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல், இசை : ம.க.இ.க கலைக்குழு
ஆக்கம் : வினவு

பாடல் வரிகள் :

அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிப்போனால் மாறிடுமா? (அடக்குமுறைதான்…)

எதிர்த்து நில்… எதிர்த்து நில் !
காவி பாசிசம்… எதிர்த்து நில் !

நீ விரும்பவில்லை
நான் பேசக்கூடாது…

நீ ரசிக்கவில்லை
நான் பாடக்கூடாது …

நான் உண்ணுவதை
நீ தடுக்குற?

நான் எண்ணுவதை
நீ மறுக்குற?

அதிகாரம் இருக்கலாம்
ஆடாதே!

மக்கள் அலையாய் எழுந்தால்
காணாமல் போவாய்!
காற்றாக தேய்வாய்!
காவியே நீ ஒழிவாய்!

அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிப்போனால் மாறிடுமா? (அடக்குமுறைதான்…)

எதிர்த்து நில் எதிர்த்து நில்
காவி பாசிசம் … எதிர்த்து நில் …

♦  கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

ஸ்டெர்லைட்டு எங்களுக்கு வேணாமின்னு போராடினா
சுட்டுக் கொல்லுற …
சிறையில் தள்ளுற …
பொய் கேசு போடுற …
NSA செடிசன் குண்டாஸு …
என்ன எங்க மேல அபன்ஸு ?
எங்க மண்ணை விட்டுடுனு
கேட்பது குற்றமா …
நச்சு ஆலை வேணாமுன்னு
கெஞ்சினாலும் குற்றமா?
கார்ப்பரேட்ட வாழ வைப்பதுதான்
உங்க சட்டமா?

எதிர்த்து நில் எதிர்த்து நில்
காவிபாசிசம் எதிர்த்து நில்

அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிபோனால் மாறிடுமா?

பதிமூனு பேரு செத்தாங்களே
செய்த பாவம் என்ன?

பாதுகாக்க  நினைச்சாங்க
வாழவச்ச மண்ண
எங்க ஸ்னோலின்
உனக்கு மகளில்லையா?

அங்கே செத்தவரெல்லாம்
தீவிரவாதியா ?

டெல்டாவிலே ஹைட்ரோகார்பன்
பொட்டிபுரத்தில் நியூட்ரினோ
கடற்கரை எல்லாம் சாகர்மாலா
மண்ணை ஆக்குற சுடுகாடா
தமிழகம் என்ன பகை நாடா ?

நடக்காது … நடக்காது …
கார்ப்பரேட்டின் கனவு பலிக்காது …

எதிர்த்து நில் எதிர்த்து நில் !
காவிபாசிசம் எதிர்த்து நில் !!

அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிபோனால் மாறிடுமா?

நிலத்த பறிக்குது எட்டு வழிச் சாலை …
எதிர்த்து பேசினாலே கைது சிறைச் சாலை …
வளர்ந்த மண்ணுல விவசாயி வாழமுடியல …
இழந்த உரிமைய தொழிலாளி பேசமுடியல …

மோடிய எதிர்த்தால்…
காவிய எதிர்த்தால்…
தேசவிரோதி … தீவிரவாதி … பயங்கரவாதி…
இது என்ன நீதி ?

இது நீதி இல்லை… நீதி இல்லை… இது மனுநீதி …
இதுதான் காவி

பாசிசம், காவி பாசிசம்.
இது கார்ப்பரேட்டின் பாசிசம்

எதிர்த்து நில் ! எதிர்த்து நில் ! காவி பாசிசம் – எதிர்த்து நில் !
காவி பாசிசம் – எதிர்த்து நில்!