மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ

பட்டூரில் "ஏ 1 ஃபீப் ஸ்டால்" என்ற பெயரில் மாட்டுக்கறி கடை வைத்து நடத்தும் நண்பர் ஜாகீர் உசேனை சந்தித்தோம். வீடியோ நேர்காணல்!

சென்னை குன்றத்தூர் அருகே இருக்கும் பட்டூர் கிராமம் மாட்டுக்கறி கடைகளுக்கு பெயர் பெற்றது. அன்றாடம் நூற்றுக்கணக்கான மக்களும், பிரியாணி கடை வைத்து நடத்தும் வியாபாரிகளும் இங்கே வந்து கறி வாங்கிச் செல்கின்றனர். சுற்று வட்டார மக்களிடையே பட்டூர் மாட்டுக்கறி மிகவும் புகழ் வாய்ந்தது. எலும்பு இல்லாமல் ஒரு கிலோ ரூ. 250-க்கும், எலும்போடு ரூ. 240-க்கும் விற்கப்படுகிறது. சென்னை நகரில் மாட்டுக்கறி ஒரு கிலோ ரூ. 300-க்கு விற்கப்படுகிறது.

பட்டூரில் “ஏ 1 ஃபீப் ஸ்டால்” என்ற பெயரில் மாட்டுக்கறி கடை வைத்து நடத்தும் நண்பர் ஜாகீர் உசேனை சந்தித்தோம். மோடி அரசு ஏற்கெனவே மாட்டுக்கறிக்கு தடை கொண்டு வந்தது போல மீண்டும் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்?, சைவ உணவு சாப்பிடும் மோடி வாட்டசாட்டமாய் இருக்கும் போது கறி சாப்பிடும் நீங்கள் ஏன் ஒரு சொங்கி போல இருக்கிறீர்கள்?,  மாட்டுக்கறியை ஏன் விற்கிறீர்கள்?, ப்ளூகிராஸ் பிரச்சினைகள்.. என பல கேள்விகளுக்கு ஒரு தொழிலாளிக்கே உரிய நிதானத்தோடும் உறுதியோடும் பதிலளிக்கிறார் உசேன். பாருங்கள்! பகிருங்கள்!