தௌஹீத் அமைப்பு வளர்வதற்கு இலங்கை முஸ்லீம்கள் இடம்கொடுத்தார்கள் என்பது உண்மையா ?

 

தௌஹீத் (வஹாபிய) சாயல்கொண்ட அமைப்புகள் இலங்கைக்குள் வருவதற்கு முன்பு கூட, ஒற்றைக் கருத்தியலைப் பின்பற்றும் சமூகமாக முஸ்லிம்கள் இலங்கையில் இருக்கவில்லை. மரபான இஸ்லாமியப் பாரம்பரியம் என்று ஒன்று தனியாக இல்லை.

சூபி முகாம்கள் (பல) இருந்தன. தப்லீக் ஜமாத் இருந்தது. ஜமாதே இஸ்லாமி இருந்தது. மிகப் பழமையான ஷியாப் பிரிவினரும் இருந்தனர்.

இத்தனை அமைப்புகளினுள்ளும் சமயச் சடங்கு, நடைமுறை மற்றும் அறிதல் முறைகளில் வேறுபாடுகளும் போட்டிகளும், முரண்பாடுகளும் இருக்கத்தான் செய்தன.

ஷியா அமைப்புக்களை மற்றைய அமைப்புக்கள் மறுப்பதலில் ஒரு பொது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. எனினும், பிற அமைப்புகளுக்கிடையில் மூர்க்கமான சண்டைகளும் சச்சரவுகளும் வெளிப்பட்டதில்லை. அதிகமான விஷயங்களில் இயைந்து போகும் மனநிலையே இருந்தது. பங்காளிகளுக்கு இடையிலான போட்டி என்ற வகையில்தான் வேறுபாடுகள் இருந்தன.

ஆனால், தௌஹீத் அமைப்புக்கள் இலங்கையில் நுழைந்தபோது, அதுவரை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும் அதை எதிர்த்தன.

அந்த அமைப்பு குறித்து பொதுமக்கள் வெளியில் கடுமையான அதிருப்திகளையும், எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தின. ஏற்கனவே இருந்த எந்தப் பள்ளிகளினுள்ளும் தௌஹீத் (வஹாபிய) அமைப்புக்களைச் செயல்பட அனுமதிக்கவில்லை. தௌஹீத் கருத்துக்களைப் பிரசாரம் செய்யவோ, அவர்களின் முறையில் மதச் சடங்குகளை தலைமையேற்று நடத்தவோ அனுமதிக்கவே இல்லை. இன்றுவரை அதுதான் நிலவரம். தௌஹீத்வாதிகளுக்கு என்று தனியான பள்ளிகள் இருக்கின்றன. அவை அவர்களே உருவாக்கியவை.

முஸ்லிம்களின் முக்கிய மதச் சடங்கான நோன்புகால தராவீஹ் தொழுகையில் – தௌஹீத் அமைப்பு பின்பற்றிய முறையை பிற அமைப்புக்கள் எவையும் பின்பற்றவில்லை. அதே நேரம் முஸ்லிம்களின் விசேட தினங்களான ”பெருநாள்” தினங்களைக் கூட தௌஹீத் அமைப்புக்கள் பின்பற்றும் நடைமுறையினுாடாக ஒருபோதும் பின்பற்றியதே இல்லை. இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இரண்டு பெருநாட்கள் கொண்டாடப்பட்டு வருவதும், பிறை பார்ப்பதில் ஏற்படும் சிக்கல்களும் சச்சரவுகளும் அனைத்து சமூகங்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்த சம்பவங்கள்.

ஏன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையில் கூட தௌஹீத் அமைப்பைத் தன்னுடன் இணைக்கவில்லை என்றே கருதுகிறேன். இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையிலிருந்த இஸ்லாமிய அமைப்புகள் தௌஹீத் ஜமாதை எப்படிப் புறமொதுக்கிக் கையாண்டார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? அல்லது வேறு எப்படி அவர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும்?

படிக்க :
♦ நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !
♦ இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !

இங்கு இன்னுமொரு விசயம் சுட்டிக் காட்டப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் பெரும் பகுதியினரை தம்வசம் வைத்திருக்கும் தப்லீக் ஜமாத், ஜமாதே இஸ்லாமி போன்ற அமைப்புக்கள் தொடர்ச்சியாகத் தௌஹீத் அமைப்புக்களை மக்களுக்குள் நுழைய விடாமலே பார்த்துக் கொண்டன.

தௌஹீத் அமைப்புக்களைப் பின்பற்றுபவர்கள் மொத்த முஸ்லிம்களில் மிகச் சொற்பமானவர்களே. தௌஹீத் (வஹாபிய) சாயல் கொண்ட இந்த அமைப்புக்களில் இருந்து மிகையான கடும்போக்கை கடைப்பிடிக்கும் அறிகுறிகள் வெளித் தெரிந்த போது, தௌஹீத் அமைப்பினர் ஸஹ்ரான் ஹாசிமை அதிலிருந்து விலக்கியும் விட்டனர்.

அதே நேரம் காத்தான் குடி மக்கள் அவரைக் கைது செய்யுமாறு பெரிய ஆர்ப்பாட்டங்களைக் கூட செய்தனர். பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகக் தகவல் உண்டு. அது போல முஸ்லிம் கவுன்சில் கூட ஸஹ்ரான் ஹாசிமுக்கு எதிராக முறைப்பாடுகளை வெளிப்படையாக செய்திருப்பதாக முஸ்லிம் கவுன்சிலின் பிரதித் தலைவரின் அறிக்கையின் மூலம் அறிகிறேன்.

இத்தனையும் நடந்திருக்கிறது. ஒரு சமூகம் தனக்குள் இயங்க வந்த ஓர் அமைப்பை இதைவிட வேறு எப்படி புறக்கணிக்க முடியும்? அவர்களை தடை செய்வதற்கும், சிறை பிடிப்பதற்கும் என்ன அதிகாரங்கள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்தது, இருக்கிறது?

இத்தனை வழிமுறைகளிலும் தௌஹீத்வாதிகளை இலங்கை முஸ்லிம்கள் எதிர்த்திருக்கிறார்கள். புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை எப்படி மறுதலித்துக் கடந்து போக முடியும்?

மேலும், வரலாறு நெடுக இலங்கையில் நடந்த தனித்த அல்லது கூட்டுப் படுகொலைகளின் போது அவற்றை நிகழ்த்திய சமூகத்தில் உள்ளோர், அச்செயல்களை எதிர்த்து வாய் திறக்காமல் மௌனம் சாதித்த வரலாறுகள் உண்டு. ஆனால், ஈஸ்டர் படுகொலை நிகழ்ந்த போது இலங்கை முஸ்லிம் சமூகம் அப்படி மௌனம் சாதிக்கவில்லை. உடனடியாகப் பல தளங்களிலும் தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தது. அப்படுகொலைகளின் சூத்திரதாரியான ஸஹ்ரானின் சொந்தச் சகோதரியே தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்து, தன்னால் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பேட்டி அளித்துள்ளார்.

இதன் பிறகும் இலங்கை முஸ்லிம் சமூகம் தௌஹீத் அமைப்பு வளர இடம்கொடுத்தது; தீவிரவாதத்தை/ பயங்கரவாதத்தை மௌனமாக ஆதரித்தது என எப்படி உங்களால் குற்றஞ்சாட்ட முடியும்?

இவைகள் கேள்விகளாக மட்டுமே முன்வைக்கப்படவில்லை. இது ஒருவகைப் பார்வைக் கோணம். எந்த விசயத்தையும் புரிந்து கொள்ளப் பன்மையான வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கவனப்படுத்தவே இந்தப் பதிவு.

இதைப் படித்துவிட்டு தௌஹீத் அமைப்பு அடிப்படைவாதிகள் இல்லையா? பெண்களை மோசமான வகையில் நடத்தவில்லையா என கிளம்பிக்கொண்டு யாரும் வரத் தேவையில்லை. அடிப்படைவாத அமைப்பு என நான் சொல்வதாக இருந்தால் இலங்கையின் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களின் மீதும்தான் அதைப் பிரயோகிப்பேன்.

பெண்கள் விஷயத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் பிற்போக்குத் தனமானவைதான் என்பேன். அவற்றை விவாதிப்பதற்கல்ல இந்தப் பதிவு என்பதை இதை எழுதத் தொடங்கும் போதே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ஆனால், பயங்கரவாதச் செயற்பாடுகளை என்னைப் போல, உங்களைப்போல மிகப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வன்மையாக எதிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நன்றி : முகநூலில் – Abdul Sukkur

22 மறுமொழிகள்

  1. ” பயங்கரவாதச் செயற்பாடுகளை என்னைப் போல, உங்களைப்போல மிகப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வன்மையாக எதிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.”

    When ??????

    Until it’s hurts back, like a boomerang, isn’t it ?

    I personally experienced that this Sri Lankan Muslims really enjoyed the attack and felt they have found the saviors but eventually they have realized that this is going to marginalize the whole Sri Lankan Muslims. Now they are crying, crying and crying. You can still see the Sri Lankan Muslim government ministers and other prominent Muslim leader’s speeches in youtube(Before the attack and after the attack) Pathetic.

  2. உண்மை என்ன என்பது இலங்கையில் முஸ்லீம்களுக்கு இடையேயும் அருகிலும் வாழும் தமிழர்கள் மற்றும் சிங்களர் ஆகியோருக்கு தெரியும். ஒவ்வொரு குண்டு வெடிப்பு அல்லது வன்முறைக்கு பின்னர் இம்மாதிரியான சப்பைக்கட்டு வந்த வண்ணம் தான் உள்ளது.

  3. மேலுள்ளவர்கள் கட்டுரையை படிக்காமலேயே பின்னூட்ட வாந்தி எடுப்பவர்கள் போலிருக்கிறது…!

    • உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இலங்கையில் வந்து பாருங்கள். அப்புறம் கிழக்கிலங்கையில், தென்கிழக்கு ஆசியாவுக்கே ஷரியா சட்டம் படிப்பிக்க ஒரு பல்கலைக்கழகம் பல பில்லியன் டாலர்களில் கட்டி முடித்திருக்கிறார்கள், வந்தால் பார்க்கலாம்.

      பல பள்ளிவாசல்களிலிருந்து பயங்கர ஆயுதங்கள் இன்னும் மீட்டு கொண்டிருக்கிறார்கள். எதுக்கு இவ்வளவு ஆயுதங்கள் பள்ளிவாசலுக்குள் என்று கேட்டால், புல் வெட்ட கொண்டுவந்தோம் என்று சிரிப்பு மூட்டுகிறார்கள்.

    • ” வாந்தி எடுப்பவர்கள் போலிருக்கிறது…!”

      Do you have any problem writing your opinion in a well-mannered way ?

  4. // வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் ? //
    உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இலங்கையில் வந்து பாருங்கள். அப்புறம் கிழக்கிலங்கையில், தென்கிழக்கு ஆசியாவுக்கே ஷரியா சட்டம் படிப்பிக்க ஒரு பல்கலைக்கழகம் பல பில்லியன் டாலர்களில் கட்டி முடித்திருக்கிறார்கள், வந்தால் பார்க்கலாம்.

  5. பல பள்ளிவாசல்களிலிருந்து பயங்கர ஆயுதங்கள் இன்னும் மீட்டு கொண்டிருக்கிறார்கள். எதுக்கு இவ்வளவு ஆயுதங்கள் பள்ளிவாசலுக்குள் என்று கேட்டால், புல் வெட்ட கொண்டுவந்தோம் என்று சிரிப்பு மூட்டுகிறார்கள்.

  6. தமிழர்கள் கண்டிக்கவில்லை முஸ்லிம்கள் கண்டித்தார்கள் என்று எதை எதோடு முடிச்சி போடுகிறார்? தமிழர்களுக்கு வேறாக கண்டிக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. யார் நடத்தியது, ஏன் எதற்காக தாக்குதல் நடந்தது என்று எல்லோருக்கும் புரிதல் இருந்தது.

    ஆனால் இவர்கள் நிலை அது போன்றதல்ல, 99% முஸ்லிம்கள் அரபிமயத்தையும் ஷரியா சட்டத்தையும் ஊக்குவித்ததை ஆண்டுக்கணக்கில் கவனித்து வந்த ஏனைய சமூக மக்கள் கொதிநிலையில் இருந்தார்கள். இனிமேல் தப்ப முடியாது என்ற நிலையில் தங்களை தனித்தனியே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இந்த சமூக மக்களுக்கு இருந்தது. இந்த நடிப்புகள் எல்லாம் அதற்காகத்தான்.

  7. முஸ்லிம்கள் திட்டமிட்டு தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பி அனுதாபம் தேடுகிறார்கள். நீங்கள் எதிர்பார்க்கும் முஸ்லிம்கள் இலங்கையில் 5% கூட கிடையாது. தமிழ்நாட்டு தமிழர்கள் குற்றவாளிகளுக்கு சப்போர்ட் பண்ணி இங்கு ஏற்கனவே நொந்து போயிருக்கும் தமிழர்களை பெரும்பான்மையினர் மத்தியில் மேலும் சங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டாம். உங்களின் ஒவ்வொரு அசைவும் எங்கள் மேல் மோசமாக எதிரொலிக்கும். இங்குள்ள தமிழர்களிடம் அல்லது உங்கள் நாட்டிலுள்ள இலங்கையுடன் நெருங்கிய தொடர்புடைய தமிழர்களை (முஸ்லிம்கள் வேண்டாம்) தொடர்பு கொண்டு சரியான செய்திகளை தெரிந்துகொள்ளுங்கள்.

    • //99% முஸ்லிம்கள் அரபிமயத்தையும் ஷரியா சட்டத்தையும் ஊக்குவித்ததை ஆண்டுக்கணக்கில் கவனித்து வந்த ஏனைய சமூக மக்கள் கொதிநிலையில் இருந்தார்கள்.//
      வாரே… வாஹ்…!
      “கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை கூட ஏரோப்பிளான் ஓட்டுமாம்”
      நாங்க இங்க ஏற்கனவே குஜராத்துல 3000 முஸ்லிம்களை கொன்னது மோடி இல்லை, அவர்களாவே சூலத்தை எடுத்து குத்திக்கிட்டு செத்துப் போயிட்டாங்கன்னு ஏரோப்பிளான் ஓட்டிக்கிட்டு இருக்கோம். இன்னும் நீதிமன்ற தீர்ப்பு வராததுதான் பாக்கி…!
      இதுல நீங்க வேற…
      காலாகாலத்துல இலங்கையில RSS ஆரம்பிக்கிற வழியைப் பாருங்கம்மா.. ஏதாவது யோசனை வேணும்ணா நம்ம ‘பெரியஸ்வாமி’ கிட்ட கேட்டுக்கோங்க… சந்துல நல்லா சிந்து பாடுவாரு..

      • இலங்கையில் ஏற்கனவே சிவசேனை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு விட்டது கார்த்திகேயன். நான் ஆலோசனை சொல்லி ஆர்எஸ்எஸ் கிளையை இலங்கையில் ஆரம்பிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. ராஜஸ்ரீ இலங்கையை சேர்ந்தவர். கிழக்கு இலங்கையில் இஸ்லாமிய பள்ளியில் பல ஆண்டுகாலம் பயின்றவர். அவருக்கு நிலவரம் தெரியும். எல்லாவற்றையும் பல ஆண்டுகளாக நேரடியாக கண்டவர். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. உங்களுக்கு தமிழகத்திலும் இம்மாதிரி தொடர் குண்டுவெடிப்புகள் நடக்க வேண்டும் போல. நல்ல ஆசை.

        • கார்த்திகேயன், உண்மையிலேயே நீங்கள் ஒரு முசுலிம் இல்லையென்றால், நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால், உண்மையை உள்ளபடி தெரிந்துகொள்ள விரும்பினால் ஒரு முறை இலங்கைக்கு வந்து நேரிலேயே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

      • நீங்கள் இந்த பெயரில் ஒளிந்திருக்கும் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் அல்லது பெருந்தன்மைக்கும் இளிச்சவாய் தனத்திற்கும் வித்தியாசம் தெரியாத மடயனாக இருக்க வேண்டும்.
        முகமூடி போட்டிருக்கும் முஸ்லிம்கள் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நாங்கள் இடமளிக்க மாட்டோம். எங்களுக்கு தெரிந்த உண்மைகளை எல்லா இடத்திலும் சொல்லுவோம்.

        • நீங்கள் இந்த பெயரில் ஒளிந்திருக்கும் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் அல்லது பெருந்தன்மைக்கும் இளிச்சவாய் தனத்திற்கும் வித்தியாசம் தெரியாத மடயனாக இருக்க வேண்டும்.

          May be………. you are correct.

      • பல பள்ளிவாசல்களுக்குள் இருந்து பயங்கர ஆயுதங்கள் மீட்கப்பட்டதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? இப்போ பாருங்க, உங்களுக்கு இதையெல்லாம் பவுத்த பேரினவாதியும் RSSஸும் சேர்த்து பள்ளிவாசலுக்குள் வைத்தான் என்று உங்களால் சொல்ல முடியாது. இலங்கையில் எந்த பள்ளிவாசலுக்குள்ளும் முஸ்லிமல்லாதோருக்கு அனுமதியில்லை.
        இந்த மதம் சகோதத்துவத்தை போதிக்கிறது என்று நீங்களெல்லாம் எங்களுக்கு காது குத்துகிறீர்கள்!!!!

      • கார்த்திகேயன், உண்மையிலேயே நீங்கள் ஒரு முசுலிம் இல்லையென்றால், நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால், உண்மையை உள்ளபடி தெரிந்து கொள்ள விரும்பினால் ஒரு முறை இலங்கைக்கு வந்து நேரிலேயே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

  8. கார்த்திகேயன் அவர்கள் பேசாமல் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து விடுவது நல்லது.

Leave a Reply to S.Periyasamy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க