100 வருசமானாலும் இங்க பிஜேபி வர முடியாது – மக்கள் கருத்து | காணொளி

மோடி இந்தியாவில் வென்றதற்கும், தமிழகத்தில் பாஜக தோல்வியுற்றதற்கும் காரணம் என்னவென்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் ? சென்னை கோயம்பேடு பகுதி சிறு வியாபாரிகள் மற்றும் பயணிகளுடன் வினவு செய்தியாளர்கள் நேர்காணல்..

நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவின் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த தமிழக மக்களுக்குத் தேர்தல் முடிவுகள் மிகப்பெருமளவில் அதிர்ச்சியளிப்பதாகவே இருந்தன.

மோடி இந்தியாவில் வென்றதற்கும், தமிழகத்தில் பாஜக தோல்வியுற்றதற்கும் காரணம் என்னவென்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் ?

சென்னை கோயம்பேடு பகுதி சிறு வியாபாரிகள் மற்றும் பயணிகளுடன் வினவு செய்தியாளர்கள் நேர்காணல்..

பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்கள்

6 மறுமொழிகள்

  1. கருத்து மற்றும் வீடியோ என்னும் பெயரில் சும்மா முட்டாள்தனமாக எதையாவது பதிக்க வேண்டாம். அதற்கு பேசாமல் வினவு தளத்தை மூடி விட்டு போய்விடலாம். பாஜக இந்தியாவில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இடங்களில் எல்லாம் நுழைந்து விட்டது. தமிழ்நாடு கடைக்கோடியில் இருப்பதால் மெதுவாக பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும். அப்படியே தமிழ்நாட்டில் வர முடியவில்லை என்றாலும் அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இப்போதே மத்திய அரசில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கிறார்கள். விரும்பியதை செய்ய அந்த அதிகாரம் போதும். தமிழ்நாட்டில் வரவேண்டிய தேவையே அவர்களுக்கு இப்போதே இல்லை.

  2. இது ஒண்ணே போதும் நீங்க எவ்வளவு பிராடு என்பதுக்கு ….எதோ சில நல்லது சொல்லுறீர் ஆனா முஸ்லீம் ஆதரிக்க இவ்வளவு கீழே இருங்கணுமா

    “மக்கள் அதிகாரம் ” ஒண்ணு வருவதற்கு முன்னால்லாலேயே பிஜேபி தமிழ்நாட்டுலே ஜெயித்த கதை தெரியுமா !!!

    “மக்கள் அதிகாரம் ” எங்காவது ஒரு வார்டு ஜெயித்து இருக்கா !!!

    முட்டா பசங்களா !!!!

  3. ஹிந்து விரோத, தேசவிரோத, மக்கள் விரோத கம்யூனிஸ்ட்களை மேற்கு வங்கம், கேரளா போன்ற இடங்களில் எல்லாம் மக்கள் விரட்டி அடித்து இருக்கிறார்கள், கம்யூனிஸ்ட்கள் கோட்டையான மேற்கு வங்கத்தில் பிஜேபி வலுவாக கால் ஊன்றி இருக்கிறது, கேரளாவில் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது பிஜேபி அதிக வாக்குகளை வாங்கி இருக்கிறது. தமிழகத்திலும் பிஜேபி வரும், அது காலத்தின் கட்டாயம், நிச்சயம் வினவு போன்றவர்கள், கிறிஸ்துவ மதமாற்றிகள், மற்றும் இஸ்லாமியர்களின் வன்முறைகளால் நிச்சயம் மக்கள் பிஜேபி பக்கம் வருவார்கள்.

    வினவு போன்றவர்களின் ஹிந்து விரோதம் மக்களை பிஜேபி பக்கம் திருப்பி விடும்

    • //வினவு போன்றவர்களின் ஹிந்து விரோதம் மக்களை பிஜேபி பக்கம் திருப்பி விடும்//

      தற்போதைய சூழ்நிலையில் இது 100% சரியான கருத்து. இது ஹிந்து விரோதம் பேசும் நேரமல்ல! தற்போது ஹிந்து விரோதம் பேசுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

  4. நெருப்பு கோழி போல இப்படி மண்ணுக்குள் தலையை விட்டுக்கொண்டிருந்தால் 100 வருஷமென்ன அடுத்த 100 நாட்களிலேயே கூட வந்துவிட வாய்ப்பிருக்கிறது. இப்படி நாலு பேர் சொல்லும் கருத்து பொது கருத்து ஆகி விடாது. தமிழகத்தில் BJP காலூன்றுமா இல்லையா என்பது தமிழக அரசாங்கமும், தமிழக முன்னணி அரசியல் கட்சிகளும் தற்போதுள்ள சாதகமான நிலைமையை பயன்படுத்தி, பெரும்பான்மை இந்துக்களையும், இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் என்ற சிறுபான்மை மக்களையும் ஒரே நேர்கோட்டில் சமமாக கட்டுப்படுத்துவதிலேயே தங்கியிருக்கிறது. அதை விட்டு விட்டு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காகவும் தேர்தல் நிதிக்காகவும் ஒரு சாராரை மட்டும் ஓவராக செல்லம் கொஞ்சி கொண்டிருந்தால் BJP வருவது இருக்கட்டும், பெரும்பான்மை மக்களே BJPஐ கையால் பிடித்து கூட்டிக்கொண்டு வந்து உக்கார வைத்துவிடுவார்கள்.

    ஏனென்றால் மதவெறி என்பது ஒரு போதை, அது வேறெதையும் சிந்திக்க விடாது. தமிழர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

    • சரியான கருத்து.தமிழ்நாட்டு மக்களும் மனிதர்கள் தான். அவர்களும் மற்ற மாநில மக்கள் மாதிரி சாதி மத உணர்வுகளுக்கு ஆட்பட கூடியவர்கள் தான். இது பெரியார் மண் என பெருமை பேசுபவர்கள் நிலைமையின் தீவிரத்தை உணராத முட்டாள்கள். ஆர்எஸ்எஸ் அறிவுஜீவிகளையும் அந்த அமைப்பின் வெளிப்படை தன்மை இல்லாத அன்டர்கிரவுண்டு நெட்வர்க்கையும் அதன் ரகசிய பரவலையும் குறைத்து மதிப்பிடுகிறார்கள் இவர்கள்.

Leave a Reply to S.Periyasamy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க