கேள்வி : //இயக்குநர் பா. ரஞ்சித் பொதுவெளியில் எப்போது பேசினாலும் சீற்றம் கொள்கிறாரே…. அது சரியா?//

– சி. நெப்போலியன்

ன்புள்ள நெப்போலியன்,

இயக்குநர் ரஞ்சித் எப்போதும் சீற்றம் கொள்வதில்லை, தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும் சீற்றம் கொள்கிறார். அது சரியா என பார்ப்பதும் அவர் ஏன் அப்படி சீற்றம் கொள்கிறார் என்று பார்ப்பதும் வேறு வேறு இல்லை. சரி, ஏன் சீற்றம் கொள்கிறார்?

PA-RANJITHசில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் இரண்டு ரஜினி படங்கள். அவர் பிரபலமாவதற்கு இது போதும். கூடவே ரஜினி பட இயக்குநர் என்ற அளவில் ஊதியமும் பெறுகிறார். இப்போது அவரிடம் கொஞ்சம் நிதியாதாரம் சேர்கிறது. இரண்டும் சேர்ந்து அவருக்கென ஒரு தனிநபர்வாதப் பார்வையை உருவாக்குகிறது. பிறகு மேடைகளில் பேசுகிறார். வாய்ப்பு வரும்போது தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை எனத் துவங்கி தலித் அடையாள அரசியலை முன்வைக்கிறார். சில சமயம் அவருக்கு வரும் எதிர்வினைகள் கடுமையாக இருக்கிறது. அதனால் அடுத்தமுறை பேசும்போது இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக பேசுகிறார்.

தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது. இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம். ரஞ்சித் அப்படிப் பேசுவதற்கு காரணம் பிரச்சினையை அவர் தனிநபர் கண்ணோட்டத்தோடு பார்ப்பதுதான். அதுதான் உடனடியான கோபங்களையும், உடனடியான தீர்வுகளையும், மற்றவர்கள் அதாவது இயக்கங்கள் அனைத்தும் சரியில்லை என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. அவரது பிரபலம், இந்தத் தன்மைக்கு இன்னும் வலு சேர்க்கிறது.

சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வென காஸ்ட்லெஸ் கலெக்டிவ் கலை விழாக்கள், கூகை முயற்சிகள் என்று தனது வருமானத்தை போட்டு செய்கிறார். பயிற்சி பட்டறைகள் நடத்துகிறார். இதன் மூலம் ஒரு மாற்றை உருவாக்க முடியும் என்று கூட அவர் யோசிக்கலாம். அவரது முயற்சிகளில் பங்கேற்கும் பொதுவானவர்களில் பெரும்பாலானோர் அவரது திரைப்பட பிம்பத்தை மையமாக வைத்து திரையுலகில் தனக்கொரு இடம் கிடைக்காதா என்று வருகின்றனர். இது ரஞ்சித்துக்கும் தெரியாமல் இருக்காது.

இருப்பினும் யாராக இருப்பினும் தனிநபராக சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும்போது முதல் சுற்றில் பெரும் நம்பிக்கையும், உத்வேகமும் இருக்கும். அடுத்த சுற்றுகளில் அந்த நம்பிக்கை சமூக யதார்த்தத்தால் கொஞ்சமோ நிறையவோ விரக்தியடையும். பிறகு ஊரோடு ஒத்து வாழ் என்று ‘முதிர்ச்சி’ அடையும். இந்த சரணடைவு ஏதோ திரைப்பட பிரபலம் மற்றும் தலித் அரசியல் பேசுவோருக்கு மட்டும் நடப்பதல்ல. மார்க்சியத்தை தனிநபராக ‘தூக்கிச் சுமக்கும்’ தனிநபர்களும் கூட இப்படித்தான் வீழ்கிறார்கள். மற்றவர்களை விட மார்க்சிய தனிநபர்வாதிகளிடம் பேச்சும் எழுத்தும் கொஞ்சம் அதிகமிருக்கலாம். என்ன இருந்தாலும் ஏதோ கொஞ்சம் ‘தத்துவம்’ படித்தவர்கள் அல்லவா?

நன்றி

♦ ♦ ♦

கேள்வி : //நான் குவைத்தில் ஒரு தமிழ் அமைப்பில் இருக்கிறேன். அமைப்பாய் செயல்படும்போது அமைப்பின் ஒற்றுமை முக்கியமா…. ஒற்றுமையை ஒதுக்கிவிட்டு எடுத்துக் கொண்ட செயலின் வெற்றி முக்கியமா….?//

– எம். சிவசங்கரன்.

ன்புள்ள சிவசங்கரன்,

எடுத்துக் கொண்ட செயலும் அமைப்பின் ஒற்றுமையும் ஏன் முரண்படுகிறது? நீங்கள் இருக்கும் தமிழ் அமைப்பு போன்ற மனமகிழ் மன்றங்களில் திட்டவட்டமான விதிகள், ஜனநாயகம், நிதி விசயங்களில் வெளிப்படைத் தன்மை, மன்றங்களின் செயல்பாடு குறித்த தெளிவான பார்வை, இலக்கு ஆகியவை இருக்கும் வரை பெரிய பிரச்சினை இல்லை.

Tamil Mandramமாறாக இவையன்றி சில நண்பர்களது குழாம் அத்தகைய மன்றங்களை நடத்தும் பட்சத்தில் சிறிது காலத்திற்கு பிறகு நண்பர்களது கருத்து வேறுபாட்டாலோ புதியவர்கள் சேராமல் விரிவடையாமலோ மன்றம் நின்று போகும். மேலும் இம்மன்றங்களில் முடிவுகளை அல்லது செயல்பாட்டை மன்றங்களின் புரவலர்களாக இருக்கும் வசதிவாய்ந்த தனிநபர்களை மையமாக வைத்து எடுக்கும் போது சிக்கல் வரலாம். அப்படி  எடுக்காமல் மன்றத்தின் உறுப்பினர்களே கூடிப் பேசி எடுக்கும்போது கருத்து வேறுபாடுகள் வருவது குறையும். அத்தகைய கூட்டுத்துவ முறை ஏற்படும்போது பல்வேறு வழிகளில் சிக்கல்கள் நீங்கும். நீங்கள் குறிப்பிடும் குறிப்பான பிரச்சினை எதுவென்று தெரியவில்லை.

எடுத்துக்கொண்ட செயலும் மன்றமும் ஒத்திசைவாக இருப்பதற்கு மேற்கண்ட வழிமுறைகள் போதுமானது என்று தோன்றுகிறது.

நன்றி.

♦ ♦ ♦

கேள்வி : //வலது, இடது கம்யூனிசம் வேறுபாடு என்ன?//

– சாம்

ன்புள்ள சாம்,

இந்தியப் பொதுவுடமைக் கட்சி 1925-ல் துவங்கப்பட்டது. அதிலிருந்து 1964-ல் பிரிந்தது இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்). முன்னது வலது கம்யூனிஸ்ட் என்றும் பின்னது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் பொதுவில் அழைக்கப்படுகிறது. ஏனிந்த பிளவு?

இந்தியாவிற்கு போலி சுதந்திரம் கிடைத்த 47-க்குப் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 50-களின் துவக்கத்தில் ரசியாவில் திரிபுவாதத்தை அரங்கேற்றிய குருசேவின் பாதையை ஏற்றுக் கொண்டது. நேருவின் ரசிய ஆதரவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டு காங்கிரசை ஆதரிக்க ஆரம்பித்தது. குருசேவின் திருத்தல்வாதத்தின் படி இனி, “புரட்சியின் மூலம் சோசலிசம் வரத் தேவையில்லை, அமைதி வழியில் பாராளுமன்றத்தின் மூலம் கூட சோசலிசம் வரலாம், வல்லரசு நாடுகளுக்கிடையே சமாதான சகவாழ்வு, சோவியத் நாட்டில் உள்ள அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான அரசாங்கம்” போன்றவை மார்க்சியத்தை காவு கொடுத்தது. இதை மாவோவின் தலைமையிலான சீனக் கம்யூனிசக் கட்சி 1960-ம் ஆண்டுகளில் விமரிசிக்க ஆரம்பித்தது.

இந்த வரலாற்றுச் சூழலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருத்தல்வாதத்தை பின்பற்றுகிறது என்று சொல்லி மார்க்சிஸ்ட் கட்சி பிளவு பட்டது.

CPM-CPIவலது கம்யூனிசக் கட்சி நேருவை மட்டுமல்ல இந்திராவையும் அவசரநிலை நெருக்கடியையும் ஆதரிக்கும் அளவு சீரழிந்து போனது. வலதுகளிடம் இருந்து சித்தாந்த ரீதியாக பிளவுற்றதாக கூறினாலும் நெருக்கடி நிலைக்கு பிறகு இடது கம்யூனிசக் கட்சியும் சிலமுறை காங்கிரசை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. கூடவே குருசேவின் திருத்தல் வாதத்தையும், சீனாவில் மாவோவின் தலைமைக்கு பின்னர் தலைமை ஏற்ற டெங்சியோபிங்கின் நவீன திருத்தல்வாதத்தையும் ஏற்றுக் கொண்டது. இவர்களும் பாராளுமன்ற பாதையிலேயே சோசலிசம் கொண்டு வரலாம் என்று ஆரம்பித்து இன்று கேரளாவைத் தவிர எங்கும் ஆட்சியில் இல்லை என்ற நிலையை அடைந்து விட்டார்கள்.

ஆரம்பத்தில் இந்தியக் கம்யூனிசக் கட்சியின் பிற்போக்கான பிரிவினர் வலது கம்யூனிஸ்ட்டுகளாகவும், முற்போக்கு பிரிவினர் பிரிந்து இடது கம்யூனிஸ்ட்டுகளாகவும் வந்தனர் என்ற வழக்கின்படி இந்த இடது, வலது கம்யூனிஸ்ட்டுகள் என்ற பேச்சு வழக்கு அமலில் இருந்தது.

1967-ல் துவங்கிய நக்சல்பாரி விவசாயிகளின் பேரெழுச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவீன திரிபுவாதத்தை வேரறுத்து மார்க்சிய லெனினியக் கட்சியை 69-ம் ஆண்டில் தோற்றுவித்தது. அது குறித்த வரலாற்றை கீழ்கண்ட இணைப்பில் படிக்கலாம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

41 மறுமொழிகள்

  1. இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அவற்றை 4 பகுதிகளாக பார்க்கலாம்.

    1. வினவின் சாதி ஆணவம்

    //இயக்குநர் ரஞ்சித் எப்போதும் சீற்றம் கொள்வதில்லை, தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும் சீற்றம் கொள்கிறார். அது சரியா என பார்ப்பதும் அவர் ஏன் அப்படி சீற்றம் கொள்கிறார் என்று பார்ப்பதும் வேறு வேறு இல்லை. சரி, ஏன் சீற்றம் கொள்கிறார்?//

    சாதி தலித் மக்கள் தொடர்பான பிரச்சனை அல்ல. அது இந்திய சமுகத்தின் மொத்தத்தையும் காவு வாங்கி வரும் பிரச்சனை. மொத்த சமுகத்தையும் பின் தங்க வைத்திருக்கும் பிரச்சனை.

    சாதியப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வக்கற்று இருப்பவர்களுக்கிடையில் அதற்கு முகம் கொடுத்து எதிர்வினையாற்றும் ரஞ்சித்தை தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில், அதுவும் பிரபலமாகும் பிரச்சினைகளில் மட்டும் தலையிடுகிறார் என்று கூறுகிறது, வினவு. அதாவது ‘ரஞ்சித்துக்கு சாதியை தவிர வேறு எதுவும் தெரியாதுங்க, எப்ப பார்த்தாலும் அதையே தான் பேசிட்ருப்பாரு’ என்கிற சாதி வெறியர்களின் கருத்தைதான் இவர்களும் வேறு வடிவத்தில் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.

    இது தொடர்பாக சமீபத்தில் கருப்பின மக்களின் வாழ்க்கை பற்றிய இலக்கியங்களை படைத்த அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசனின் பேட்டி ஒன்றை பாருங்கள்.

    “எப்போது வெள்ளையின மக்களைப் பற்றிய இலக்கியத்தை எழுதப் போகிறீர்கள்” என்று டோனி மாரிசனிடம் கேட்கிறார், பத்திரிகையாளர். அதற்கு டோனி மாரிசனின் பதில்? “இது எவ்வளவு மோசமான இனவாதம் நிரம்பிய கேள்வி என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?”

    “ரஞ்சித் தலித் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் பற்றி மட்டும் சீற்றம் கொள்கிறார்” என்பது “எவ்வளவு மோசமான சாதிஆணவம் நிரம்பிய கருத்து என்பதை” வினவு உணர முடியாததற்குக் காரணம் உள்ளது.

    “நான் ஏற்கனவே மையமான சமூகப் பிரச்சனைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன” என்கிறார், டோனி மாரிசன். அது போல சாதி பிரச்சனைகளுக்கு ஜனநாயக ரீதியான எதிர்வினை ஆற்றுவதன் மூலம் ரஞ்சித் ஏற்கனவே சமூகத்தின் மையமான பிரச்சனைகளுக்காகத்தான் சீற்றம் கொள்கிறார். அதைப் புரிந்து கொள்ள முடியாத வினவுக்கு அது “தலித் மக்கள் தொடர்பான பிரச்சனைகள்” மட்டும் என்று தெரிகிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது சாதிப் பிரச்சனைக்கு “அரை நிலப்பிரபுத்துவம்” என்று வினவு பூசிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய புனுகு.

  2. ரஞ்சித் சினிமா இயக்குநர்தான், சமூக செயல்படுவர் இல்லை! இன்னும் சொல்லப் போனால் அவர் உச்சபட்ச நடிகர் ரஜினி சினிமாவை இயக்கி பிரபலமானவர். ஸ்டெர்லைட் உட்பட பல பிரச்சினைகளுக்கு ரஜினி தேஷபக்தாள் போல பேசும் போது அமைதி காத்தவர்.

    //சாதி தலித் மக்கள் தொடர்பான பிரச்சனை அல்ல. அது இந்திய சமுகத்தின் மொத்தத்தையும் காவு வாங்கி வரும் பிரச்சனை. மொத்த சமுகத்தையும் பின் தங்க வைத்திருக்கும் பிரச்சனை.//
    என்று நீங்கள் சொல்லிருப்பதில் மாற்றுக்கருத்தில்லை. தலித் பிரச்சினையை மொத்த சமூகப் பிரச்சினையா வினவு பார்க்கிறது. ரஞ்சித்தோ அதை தலித் பிரச்சினையா மட்டும் தனிச்சு பார்க்குறார். அதைத்தான் இந்த விமர்சனத்தில் வினவு சொல்றதா நான் புரிஞ்சுக்கிறேன்.

    • ///இயக்குநர் ரஞ்சித் எப்போதும் சீற்றம் கொள்வதில்லை, “தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள்” என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும் சீற்றம் கொள்கிறார்.///

      சாதியை தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை என்று வினவு தனது பதிலில் தெளிவாக கூறிய பிறகும் உங்களால் மட்டும் எப்படி வினவு அதை ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினையாக பார்ப்பதாக கூற முடிகிறது ?

  3. 2. சாதிய பிரச்சனையில் வினவின் அரசியல் ஓட்டாண்டித்தனம்

    //சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் இரண்டு ரஜினி படங்கள். அவர் பிரபலமாவதற்கு இது போதும். கூடவே ரஜினி பட இயக்குநர் என்ற அளவில் ஊதியமும் பெறுகிறார். இப்போது அவரிடம் கொஞ்சம் நிதியாதாரம் சேர்கிறது.//

    ரஜினி படத்தை இயக்குவதற்கு முன்பே ரஞ்சித் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர் (மெட்ராஸ்). அதனால், ரஞ்சித்துக்குக் கிடைத்த பிரபலம் அவருடைய சமூகப் பார்வைக்கும், திறமைக்கும், செயல் திறனுக்கும் கிடைத்த பரிசுதானே தவிர, ரஜினியின் பிரபலத்திலிருந்து ஒட்டிக் கொண்ட ஜிகினா இல்லை.

    //இரண்டும் சேர்ந்து அவருக்கென ஒரு தனிநபர்வாதப் பார்வையை உருவாக்குகிறது. பிறகு மேடைகளில் பேசுகிறார்.//

    ரஞ்சித், தனது படங்களிலும், பேச்சுக்களிலும் ஒவ்வொரு இடத்திலும் மிகத் தெளிவாக தன்னுடைய அரசியல் அம்பேத்கர் முன் வைத்த சாதி ஒழிப்பு அரசியல் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார், அதில் என்ன தனிநபர்வாதப் பார்வையைக் கண்டது, வினவு?

    //வாய்ப்பு வரும்போது தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை எனத் துவங்கி தலித் அடையாள அரசியலை முன்வைக்கிறார். சில சமயம் அவருக்கு வரும் எதிர்வினைகள் கடுமையாக இருக்கிறது. அதனால் அடுத்தமுறை பேசும்போது இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக பேசுகிறார்.//

    “தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை” என்பதை மறுக்கும் வகையில் வினவு சார்ந்திருக்கும் அரசியல் கட்சி செய்தவற்றை பட்டியலிட்டால், ரஞ்சித்தின் செயல்பாடுகளோடு அவற்றை ஒப்பிட்டு பரிசீலித்திருந்தால் நேர்மையானதாக இருந்திருக்கும்.

    //தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது.//

    அதாவது அரசியல், சமூக, பொருளாதார விஷயங்கள் எல்லோருக்கும் புரியாதாம். வினவு அரசியல், சமூக, பொருளாதார விஷயங்களை புரிந்து கொண்டு நடைமுறையோடு தொடர்புடைய பார்வை வைத்திருக்கிறார்களாம். அது என்ன புண்ணாக்கு பார்வை என்று சொல்வதற்குக் கூட தெம்பு இல்லை.

    //இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்.//

    இந்தியாவில் சாதி பற்றி பல்வேறு கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து கும்மி அடித்ததை விட அண்ணல் அம்பேத்கர் தனிநபராக பல மடங்கு அதிகமாகவும், சிறப்பாகவும் கற்று ஆய்வு செய்திருக்கிறார். அம்பேத்கரின் “இந்தியாவில் சாதிகள்”, “சாதி ஒழிப்பு” இவற்றின் மீதான ஆய்வு முறையிலான விமர்சனக் கட்டுரை ஒன்றையாவது வினவு காட்ட முடியுமா? அல்லது இந்த அறிவு சாதனைகளுக்கு இணையாக சாதி பற்றி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று எழுதிய ஆய்வுக் கட்டுரையை (குறிப்பாக அம்பேத்கரின் சமகாலத்தில்) சொல்ல முடியுமா? [இதைப் பற்றி தனியாக விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது]

  4. ”யாராக இருப்பினும் தனிநபராக சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும்போது முதல் சுற்றில் பெரும் நம்பிக்கையும், உத்வேகமும் இருக்கும். அடுத்த சுற்றுகளில் அந்த நம்பிக்கை சமூக யதார்த்தத்தால் கொஞ்சமோ நிறையவோ விரக்தியடையும். பிறகு ஊரோடு ஒத்து வாழ் என்று ‘முதிர்ச்சி’ அடையும். இந்த சரணடைவு ஏதோ திரைப்பட பிரபலம் மற்றும் தலித் அரசியல் பேசுவோருக்கு மட்டும் நடப்பதல்ல. மார்க்சியத்தை தனிநபராக ‘தூக்கிச் சுமக்கும்’ தனிநபர்களும் கூட இப்படித்தான் வீழ்கிறார்கள்.”என்று வினவு தனது பதிலில் முடித்திருந்த்தது.

    அதற்கு,நண்பர்,சிவக்குமார், ”சாதியப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வக்கற்று இருப்பவர்களுக்கிடையில் அதற்கு முகம் கொடுத்து எதிர்வினையாற்றும் ரஞ்சித்தை தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் மட்டும் தலையிடுகிறார் என்று கூறுகிறது, வினவு. அதாவது ‘ரஞ்சித்துக்கு சாதியை தவிர வேறு எதுவும் தெரியாதுங்க, எப்ப பார்த்தாலும் அதையே தான் பேசிட்ருப்பாரு’ என்கிற சாதி வெறியர்களின் கருத்தைதான் இவர்களும் வேறு வடிவத்தில் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.” என்கிறார் சிவக்குமார். இதன்மூலம், காலா,பேட்ட, ரஜினியாக ரஞ்சித்தை சூப்பர் ஸ்டார் ஆக்குகிறார்.

    சூப்பர் ஸ்டார் இருந்தால்,எதிரில் ஒரு சூப்பர் வில்லன் இருந்தே தீர வேண்டும் அல்லவா?அதுதான் வினவு என்று கைக்காட்டுகிறார்.

    “நான் ஏற்கனவே மையமான சமூகப் பிரச்சனைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன” என்கிறார், டோனி மாரிசன். அது போல சாதி பிரச்சனைகளுக்கு ஜனநாயக ரீதியான எதிர்வினை ஆற்றுவதன் மூலம் ரஞ்சித் ஏற்கனவே சமூகத்தின் மையமான பிரச்சனைகளுக்காகத்தான் சீற்றம் கொள்கிறார். அதைப் புரிந்து கொள்ள முடியாத வினவுக்கு அது “தலித் மக்கள் தொடர்பான பிரச்சனைகள்” மட்டும் என்று தெரிகிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது சாதிப் பிரச்சனைக்கு “அரை நிலப்பிரபுத்துவம்” என்று வினவு பூசிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய புனுகு.என்கிறார்.

    நாம் பார்த்த வரையில் இதுவரை ரஞ்சித் சீற்றம் கொண்ட”சமூகத்தின் மையமான பிரச்சனைகள்” நீட் தேர்வு தோல்வியில் மாணவர்கள்,குறிப்பாக தலித் குழந்தைகள் தற்கொலை மற்றும் தலித் என்பதாலயே காதல் மறுக்கப்பட்டு,ஆணவபடுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள். நீட் தேர்வுக்கும் புதிய கல்விக்கொள்கையும், ஆதிக்க சாதிவெறியின் ஆதிக்கத்துக்கும் ஊற்றுமூலம், அரசு அதிகாரமும் எந்திரமும் அல்லவா.

    இது யாரால் எதற்காக இப்படி இயங்குகிறது என்று நதி மூலம் ரிஷி மூலம் தேட வேண்டாமா ? அதற்கு எதிராக சீற்றத்தை திருப்ப வேண்டாமா ? திருப்ப வேண்டாம் என்கிறார்கள் எதிரிகள்-பார்ப்பன பாசிஸ்டுகள். ‘முறையிடுங்கள் முறையாகத் தீர்த்து வைக்கிறோம்.கால ஓட்டத்தில் அதற்கு எல்லாம் தீர்வுகிடைக்கும் என்கிறார்கள். கால ஓட்டம் எப்படி எதிர்திசையில் பயணிக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா..

    அண்ணல் அம்பேத்கர் அவரது காலத்திலேயே இந்தக் கால ஓட்டத்தை நன்கு உணர்ந்தார். அவர் “கற்பி, ஒன்று சேர், புரட்சிசெய் என்று வழிகாட்டியதற்கு மாறாக அரசு இயந்திரத்தின் அரவணைப்பில் தஞ்சமடைந்த புதிய தலித் அறிவுத்துறையினரை, பல கட்டுரைகளில் அவர் எழுதி மனம் நொந்தார். எனவே நாம் இப்போதாவது, போராட்ட பயணத்தின் இலக்கு எது என உணரவேண்டாமா ? மேற்கு நோக்கி நகர்ந்தால், விடியலைக் காணலாம் என்று நம்புவதா ?

    இதைப்பற்றி விவாதிப்பதும் தவறா?.. ரஞ்சித்தினுடைய அறைகூவலே உரையாடலை நோக்கித்தானே இருக்கிறது . சிவக்குமார் அதையும் மறுக்கிறாரா ? இதற்குத் தீர்வாக ஐரோப்பிய புனுகு வேண்டாம் என்றால் மேக் இன் இந்தியா புணுகு எங்கு கிடைக்கிறது என்று முகவரி தரவும் ?

  5. 3. சாதிய பிரச்சனையில் வினவின் அமைப்புரீதியான கையாலாகத்தனமும் ரஞ்சித்தின் ‘தனிநபர்’வாத செயல்பாடுகளும்

    //ரஞ்சித் அப்படிப் பேசுவதற்கு காரணம் பிரச்சினையை அவர் தனிநபர் கண்ணோட்டத்தோடு பார்ப்பதுதான். அதுதான் உடனடியான கோபங்களையும், உடனடியான தீர்வுகளையும், மற்றவர்கள் அதாவது இயக்கங்கள் அனைத்தும் சரியில்லை என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. அவரது பிரபலம், இந்தத் தன்மைக்கு இன்னும் வலு சேர்க்கிறது.//

    சாதியப் பிரச்சனையைப் பொறுத்தவரையில், எனவே இந்திய சமூக மாற்றத்துக்கான போராட்டத்தைப் பொறுத்தவரையில் கம்யூனிச “இயக்கங்கள் அனைத்தும் சரியில்லை” என்பது உண்மை. அந்த உண்மை அப்படிப்பட்ட எண்ணத்தைத் தோற்றுவிக்கிறதே தவிர, இந்த எண்ணம் ஒரு தனிநபரின் கற்பனையில் தோன்றிய ஒன்று இல்லை.

    //சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வென காஸ்ட்லெஸ் கலெக்டிவ் கலை விழாக்கள், கூகை முயற்சிகள் என்று தனது வருமானத்தை போட்டு செய்கிறார். பயிற்சி பட்டறைகள் நடத்துகிறார். இதன் மூலம் ஒரு மாற்றை உருவாக்க முடியும் என்று கூட அவர் யோசிக்கலாம்.//

    ரஞ்சித்தின் கூகை உருவாக்கியிருப்பது ஒரு ஜனநாயக வெளி. நீலம் பண்பாட்டு மையத்தின் செயல்பாடுகளும், ரஞ்சித்துடன் நேரடி தலையீடுகளும் இன்றைய நமது சமூகத்தில் ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான முக்கியமான போராட்டமாக உள்ளன.

    கச்சநத்தத்திற்கு ரஞ்சித் போனதன் பின்னர்தான் மீடியா வெளிச்சம் வந்தது. சமீபத்தில் கூட ஒரு தலித் சிறுவன் தூக்கிலிடப்பட்ட போது மீடியா வெளிச்சம் கூட கிடைக்கவில்லை. அந்தக் குடும்பத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இழப்பீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் SC குடியிருப்பு தீக்கிரையாக்கப்பட்ட போதும், நீலம் பண்பாட்டு மையம் இழப்பீடு வாங்கி கொடுத்திருக்கிறது.

    35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற கலாச்சார அமைப்புகள் கூகை போன்ற ஒரு ஜனநாயக வெளியையோ, நீலம் பண்பாட்டு மையம் போன்ற சாதிக் கொடுமைகளுக்கு எதிரான செயல்பாட்டு அமைப்பையே உருவாக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை. அதைப் பற்றிய சுயவிமர்சனத்துக்குப் பதிலாக வினவு ரஞ்சித் மீது தனது பொச்சரிப்பை வாரிக் கொட்டுகிறது.

    இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து பிரிவினரையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய கம்யூனிஸ்டு கட்சி, வரலாறு முழுவதும் இப்படித்தான் வறட்டுவாதம் பேசிக் கொண்டிருந்தது. ரஞ்சித் அம்பேத்கர், பெரியார் அளவிலான செயல்பாட்டாளரா சிந்தனையாளரா என்பதைப் பற்றி கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் சமூக அக்கறை கொண்ட யாருக்கும் உரிமை உள்ளது. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் அவரை அணுகும் வினவு பின்பற்றும் முறை சுத்தமான அக்மார்க் இந்திய ‘கம்யூனிஸ்டு’ முறை. இத்தகைய கண்ணோட்டம் சிபிஐ/எம்களில் நிலவுவது பற்றி வினவு முன்பு பேசியது இப்போது அவர்களுக்கே பொருந்துவது வேறொரு உண்மையைச் சொல்கிறது.

    • ரஞ்சித் குறித்து வினவு எழுதிய பதிவுக்குக் கொதித்தெழுந்து சிவக்குமார் வினவின் மீது வசவு மொழி பொழிகிறார். வினவு சாதி ஆணவத்தோடு, வன்மத்தோடும், திமிரோடும், குள்ள நரித்தனத்தோடும் நயவஞ்சகத்தோடும் எழுதியிருப்பதாகக் கூறுகிறார்.
      உண்மையில் ஒரு பதிவை அது பேச வரும் மையமான விசயத்தை விவாதிக்காமல், அந்தப் பதிவு சொல்லாதவற்றையெல்லாம் ”அர்த்தம் தொணிப்பதாகக் கூறி” நயவஞ்சகமாக விவாதத்தையே திசை திருப்பும் குள்ளநரித்தனமான வேலையை செய்திருக்கிறார் சிவக்குமார். (குள்ளநரித்தனம், நயவஞ்சகம் – வார்த்தை உபயம் : ஸ்ரீஸ்ரீ மகரிஷி யோக்கியர் சிவக்குமார்)

      வினவின் பதிவில், ரஞ்சித் பிரபலமான தலித் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மட்டுமே சீற்றம் கொள்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி, எட்டு வழிச்சாலை, கதிராமங்கலம் என வேறு ஏதாவது பிரச்சினைகளில் அவர் சீற்றம் கொண்டிருந்து, அதை வினவு குறிப்பிடாமல் விட்டிருந்தால், அதனை சிவக்குமார் சுட்டிக்காட்டி குறிப்பிடலாம். அவ்வாறு செய்கையில் அது ஒரு ஆரோக்கியமான விவாதமாகப் போகும்.

      பிரபலமற்ற விசயங்களில் கூட ரஞ்சித் தலையிட்டிருக்கிறார் என்பதை வினவுக்குப் பட்டியலிட்ட சிவக்குமார், அதையும் பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல், திடீரென ரஞ்சித் குறித்த ஆதிக்க சாதி வெறியர்களின் டயலாக்கைப் போட்டு, அதைப் போலவே வேறு வார்த்தைகளில் வினவு பேசுவதாகக் குறிப்பிடுகிறார்.

      பிறகு வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவரைக் குறிப்பிட்டு, அந்த எழுத்தாளரிடம் இனவெறியோடு கேள்விகேட்டவரின் மனநிலையில் வினவு இருப்பதாகக் கூறுகிறார்.
      கறுப்பினப் பிரச்சினைகளை எழுதுபவரிடம், எப்போது (பாதிப்புக்குள்ளாகாத) வெள்ளையினத்தவர்களைப் பற்றி எழுதுவாய் என்று கேட்பது வன்மத்திற்குரியதாக இருக்கிறது. அந்த எழுத்தாளர், கேள்வி கேட்டவனின் வார்த்தைகளில் இருந்துதான் தனது விமர்சனங்களை வைத்துக் கண்டிக்கிறார்.

      ஆனால் தனது மூளைக்குள்ளேயே புரட்சியை நடத்தி முடித்து விட்டு வெளியில் “எந்தக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் சரியில்லாததால்” புற உலகில் புரட்சியை நடத்தமுடியாமல் தவிக்கும் சிவக்குமாரின் ‘புரட்சிகர’ மூளை மட்டும், வினவு சொல்லாத விசயங்களை எல்லாம் கற்பிதம் செய்து கொண்டு சொன்னாதாகக் கூறி விமர்சனம் என்ற பெயரில் வசவுகளை களமிறக்கிவிட்டு தனது ‘பொச்சரிப்பை’ தீர்த்துக் கொள்கிறது. (’பொச்சரிப்பு’ – வார்த்தை உபயம் : ஸ்ரீஸ்ரீ மகரிஷி ’யோக்கியர்’ சிவக்குமார்)

      பாவம் அந்த ’அகப் புரட்சி’ முடிக்கப்பட்ட மூளைக்கு வினவின் மீது அப்படி என்ன ‘வன்மமோ’ தெரியவில்லை. வினவின் பதிவுகளால் ஏதேனும் பலமாக அடிபட்ட மூளையாக இருக்கலாம். ரிவெஞ்சிங்கிற்கு கிடைத்த கேப்பில் எப்படியெல்லாம் ஆட்டோ ஓட்டுவது என்று கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது போலும்.
      ஆகவே இந்த நயவஞ்சகம், வன்மம், திமிர், குள்ளநரித்தனம், ஆகிய பண்புகள் யாவும் சிவக்குமாரின் திசைதிருப்பும் நடைமுறையில்தான் தெரிகிறதே தவிர வினவின் வாதத்தில் அல்ல.

      அடுத்ததாக, ”தனிநபர்வாதம் உனக்கு என்ன பிரச்சினை? அம்பேத்கர் தனிநபராக ஆய்வு செய்தார், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன கிழித்தார்கள் ? ரஞ்சித்தின் கூகை, நீலம், கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் முயற்சிகளை வினவு இழிவுபடுத்துகிறது” என வரிசையாக அடுக்கி, தனிநபர்வாதம் பற்றி அடுத்ததாக வகுப்பெடுத்திருக்கிறார் சிவக்குமார்.

      இங்கும் ரஞ்சித்தின் இந்த முயற்சிகளையெல்லாம் வினவு மட்டம்தட்டுவது போலவும் அல்லது அங்கீகரிக்க மறுப்பது போலவும் நயவஞ்சகமாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அதன் மீது விமர்சனம் வைத்து மண்குதிரையேறி ஆற்றைக் கடக்கப்பார்க்கிறார்.
      வினவின் பதிவில், ரஞ்சித் தனது வருமானத்திலிருந்து செலவு செய்து கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், கூகை போன்ற முயற்சிகளைச் செய்து வருகிறார் என்றுதானே கூறப்பட்டிருக்கிறது. இங்கு ரஞ்சித்தையோ, அவரது முயற்சிகளையோ யாரும் மட்டம்தட்டவில்லையே.

      அவரது தனிநபர்வாதப் பார்வை தவறுஎன்று விமர்சனம் வைப்பது தவறா ? ரஞ்சித் இந்தியாவின் முக்கியப் பிரச்சினையான சாதியப் பிரச்சினையைக் கையிலெடுத்திருக்கிறார் என்பதால் அவர் மீது விமர்சனம் வைக்கக் கூடாதா ? என்று கேட்டால், வைக்கலாம் அதை நான் குறை சொல்லவில்லை என்பார் சிவக்குமார். ஆனால்,
      விமர்சனத்தை வைக்கும்போது, அது ஆதிக்க சாதிவெறியர்களிடம் வெளிப்படும் வன்மத்திலிருந்துதான் வினவிடமும் வெளிவருகிறது என்று மொட்டையடியாக அடித்துவிட்டு ஓடப் பார்க்கிறார் சிவக்குமார்.

      விமர்சனம் பண்ணலாமுன்னும் சொல்வாராம் சிவக்குமார், பண்ற விமர்சனம் அவரோட “அகப் புரட்சி முடிக்கப்பட்ட” மூளையை சுரண்டிவிடுற மாதிரி ஏதாச்சும் இருந்துச்சுனா, அவதூறும் பேசி புழுதி வாரித் தூத்துவாராம்.. என்ன நியாயம் சார் இது?
      ரஞ்சித்திடம் தனிநபர் பார்வை இருக்கத்தான் செய்கிறது. முற்போக்கு அமைப்புகள் தலித் மக்களுக்கு என்ன செய்து கிழித்தன என்று கேட்கிறார் ரஞ்சித். இதுதான் அதற்கான சான்று. ஒரு அமைப்போ அல்லது பிற அமைப்புகளோ செய்த வேலைகளை விமர்சிப்பதற்கு ரஞ்சித்துக்கு உரிமை இருக்கிறது. ஆனால் என்ன செய்தது என்று மொட்டையாகப் பேசுவது, தனிநபர்வாதத்திலிருந்து மட்டும்தான் வரமுடியும். அதுதான் சிவக்குமாரிடமும் வெளிவருகிறது. தனிநபர்வாதம் – இதற்கு அம்பேத்கரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளும் வெக்கமில்லாதத் தடித்தனத்தை எங்கே போய் முட்டுவது.

      அம்பேத்கரை சிவக்குமார் புரிந்து வைத்திருக்கும் வகையில் தனிநபர்வாதி என்றால், மார்க்ஸைக்கூட நாளை தனிநபர்வாதி என்றுதான் அழைப்பார் சிவக்குமார். வாழ்க மார்க்சிய மாணவர் சிவக்குமார். வளர்க அவரது ”மார்க்சிய தனிநபர்வாதம்.”
      சிவக்குமாரின் தனிநபர்வாத சிந்தனைதான் இறுமாப்போடு கேட்கிறது, “கம்யூனிஸ்டுகள் சாதியை ஒழிக்க என்ன செய்தார்கள்? ம.க.இ.க-விடம் சாதியை ஒழிக்க எந்த வழிமுறையும் இல்லை” என்றெல்லாம் பேசி முடித்திருக்கிறார் சிவக்குமார்.
      சாதி ஒழிப்பைப் பற்றிய மார்க்சியப் பார்வையை முன் வைத்து, அதற்கான நடைமுறை வேலைகளையும் ஒருங்கிணைத்துச் செய்திருக்கிறது ம.க.இ.க.-வும் அதன் தோழமை அமைப்புகளும். இந்தியாவில் சாதியையும் அதன் ஊற்றுமூலத்தையும் பற்றி ஆய்வு செய்வதில் அம்பேத்கரின் பங்கைக் கொண்டாடும் அதே சமயத்தில், சாதி ஒழிப்பு பற்றிய அம்பேத்கரின் பார்வை மீதான விமரிசனத்தையும் வெளிப்படையாகவே வைத்துள்ளது ம.க.இ.க. இதுதான் என்னைப்போன்றவர்களையும் இந்த அமைப்பின், இந்த இணையதளத்தின் ஆதரவாளர்களாக ஈர்த்தது.

      ஒரு இடத்தில் சிவக்குமார் சொல்கிறார், “ வினவு அரசியல், சமூக, பொருளாதார விஷயங்களை புரிந்து கொண்டு நடைமுறையோடு தொடர்புடைய பார்வை வைத்திருக்கிறார்களாம். அது என்ன புண்ணாக்கு பார்வை”
      – நீங்கள் என்ன புண்ணாக்கிற்கு வக்காலத்துவாங்கிக் கொண்டிருக்கிறீர்களோ அந்த தனிநபர்வாதம் என்ற புண்ணாக்கிற்கு எதிரான “மார்க்சியம்” எனும் ஒடுக்குமுறைகளை ”புண்ணாக்கும்” உலகளாவிய பார்வை.
      இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். சேற்றைவாரியிறைக்கும் அவசரம்தான் உங்கள் பதிவில் தெரிகிறதே ஒழிய பிரச்சினையை சொன்னவிசயத்திலிருந்து விவாதிக்கும் போக்கு இல்லை. எங்கேயோ அடிபட்டதற்குப் பழிவாங்கும் போக்கு தொணிக்கிறதே தவிர, விசயத்தை உண்மையாக பரிசீலுக்கும் போக்கு இல்லை.
      இதன் அடிப்படையாக உங்களுக்குள்ளும் இருப்பது, தனிநபர்வாதம் எனும், வலது சந்தர்ப்பவாதப் போக்குதான். குறுங்குழுவாதமும், அதன் முற்றிய வடிவமான டிராட்ஸ்கியவாதமும் அதன் இறுதி வடிவங்கள்தான். அந்தப் புதைகுழியிலிருந்து மீள்வீர்கள் என்று நம்புகிறேன். பார்க்கலாம்.

      • அனானியன்,

        1. எனது அகப்புரட்சி, கண்ணோட்டம், கட்சிகள் மீதான விமர்சனம் இவற்றைப் பற்றி நீங்கள் சொல்வது 100% உண்மை. மார்க்ஸ், மார்க்சியம் பற்றி நீங்கள் சொன்னதை ஒட்டி, லெனினின் ஒரு மேற்கோளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

        “சோசலிசம் பற்றிய கோட்பாடு சொத்துடைமை வர்க்கங்களின் படித்த பிரதிநிதிகளான அறிவுத்துறையினரின் தத்துவார்த்த, வரலாற்று, பொருளாதார கோட்பாடுகளில் இருந்து வளர்ந்தது. நவீன விஞ்ஞான சோசலிசத்தை [மார்க்சியத்தை] உருவாக்கியவர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் அவர்களது சமூக நிலையைப் பொறுத்தவரையில் முதலாளித்துவ அறிவுத்துறையைச் சேர்ந்தவர்கள்.” – என்ன செய்ய வேண்டும், லெனின் (பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் ஆங்கிலப் பதிப்பில் 30-ம் பக்கத்தில் இருந்து மொழிபெயர்த்தது)

        அதே போல ரசியப் புரட்சிக்கான அரசியல் கோட்பாடு, கட்சி நடைமுறை பற்றிய கோட்பாடு, தத்துவார்த்த போராட்டங்கள் போன்றவற்றை பங்களிப்பு செய்தவர் முதலாளித்துவ அறிவுத்துறை சமூக அந்தஸ்தில் இருந்த லெனின்தான். ஏன் ம.க.இ.க, வினவு தோழர்களில் பலரும் முதலாளித்துவ அறிவுத்துறை சமூக நிலையைச் சேர்ந்தவர்களாத்தான் இருப்பார்கள்.

        எனது அகப்புரட்சி, புறப்புரட்சி பற்றிய விவாதங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் தொடரலாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

        2. //சாதி ஒழிப்பைப் பற்றிய மார்க்சியப் பார்வையை முன் வைத்து, அதற்கான நடைமுறை வேலைகளையும் ஒருங்கிணைத்துச் செய்திருக்கிறது ம.க.இ.க.-வும் அதன் தோழமை அமைப்புகளும். இந்தியாவில் சாதியையும் அதன் ஊற்றுமூலத்தையும் பற்றி ஆய்வு செய்வதில் அம்பேத்கரின் பங்கைக் கொண்டாடும் அதே சமயத்தில், சாதி ஒழிப்பு பற்றிய அம்பேத்கரின் பார்வை மீதான விமரிசனத்தையும் வெளிப்படையாகவே வைத்துள்ளது//

        சாதி ஒழிப்பைப் பற்றிய மார்க்சியப் பார்வையை வினவு முன் வைக்கவில்லை. சாதியையும் அதன் ஊற்றுமூலத்தையும் ஆய்வு செய்வதில் அம்பேத்கரின் பங்கைக் கொண்டாடுவதும் இல்லை. எனவே, சாதியை பற்றிய புரட்சிகரமான கோட்பாடு வினவிடம் இல்லை.

        நேரமும் பொறுமையும் இருந்தால் இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம் நூலின் 2,3,4 அத்தியாயங்களை படித்து விட்டு, அதனை மார்க்சின் “Pre-Capitalist Economic Formations” (pp. 471 – 514 of the Grundrisse) https://www.marxists.org/archive/marx/works/1857/precapitalist/index.htm பற்றிய குறிப்புகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த நூல் மார்க்சின் குறிப்புகளை தவறாக பயன்படுத்தியிருப்பதையும், அதில் இந்திய சமூகத்தின் சிறப்புத் தன்மைகள் பற்றி மார்க்ஸ் தரும் விபரங்களை வளர்த்துச் சென்று இந்தியாவின் சாதிய கட்டமைப்பு பற்றி பருண்மையான ஆய்வு செய்யத் தவறியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். மேலும், இந்திய சமூகம் பற்றிய ஆய்வாக சொல்லப்படும் அந்த நூலில் அம்பேத்கரின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

        3. ரஞ்சித் பற்றி வினவு எழுதியதற்கு நீங்கள் கொடுக்கும் வியாக்கியானங்களுக்கு பதிலாக, முதல் 4 பதிவுகளில் நான் சொன்னதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை.

        4. அனானிகள் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு கொடி கட்டிப் பறந்த பிளாக்கர் உலகில் பிரசித்தமானவர்கள். நீங்களும் அந்தக் காலத்து அனானி ராஜாக்களில் ஒருவராகவோ அல்லது அப்படிப்பட்ட ராஜா ஒருவரிடம் பயிற்சி பெற்றவராகவோ இருப்பதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.
        (தனிநபரா இருந்தாலும் நாங்களும் எதிராளியின் அகநிலை பற்றி எல்லாம் ஆய்வு செய்வோம்ல!)

        • சிவக்குமார்,

          நினைத்ததைப் போலவே சொல்லிவிட்டீர்கள்… அம்பேத்கரையும், மார்க்சையும் எங்கே தனிநபர்வாதி என்று சொல்லிவிடுவீர்களோ என்று நினைத்தேன்…
          சொல்லிவிட்டீர்கள்.. அதற்கு லெனினையும் துணைக்கழைத்திருக்கிறீர்கள். நல்லது..

          தனிநபர்வாதத்தை – அகப் புரட்சியாளர்களையும் மார்க்ஸ் முதல் மாவோ வரை விமர்சித்திருக்கிறார்கள். ஆனால், இந்த இருவிசயங்களுக்காக அவர்களையே துணைக்கு இழுக்க தனி சிந்தனை முறை இருந்தால்தான் சாத்தியம். உங்களுக்கு அது வாய்க்கப்பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள்..

          சாதியத்துக்கு எதிரான போராட்டத்தில் உரைகல் என்பது நடைமுறையே.. ரஞ்சித் மற்றும் உங்களது தனிநபர்வாதம், கட்சிகளின் களப் பணிகளையும், அவர்கள் முன்வைக்கும் தீர்வுகளையும் பரிசீலிக்க மறுக்கிறது. ரஞ்சித்தின் தனிநபர்வாதத்துக்கும் உங்களது தனிநபர்வாதத்துக்குமான ஊற்றுக்கண் வெவ்வேறாக இருப்பதால், வெளிப்படும்விதம் வேறுபடுகிறது.

          ரஞ்சித்துக்கு அவரது பிரபலம் தனிநபர்வாத சிந்தனைப் போக்கை தோற்றுவித்திருக்கிறது. அதுவே அவரை பிற கட்சிகளை நோக்கி மேடைகளில், “தலித் பிரச்சினைகளுக்கு இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள்” என்ற கோபக் குரலாக வெளிப்படுகிறது. அவரது அரசியல் புரிதல் “அனைத்து தலித் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்ற இறுகிப் போன அடையாள அரசியலாய் வெளிப்படுகிறது.

          மார்க்சின் கிரண்ட்ரைஸ் போன்ற தத்துவ நூல்களையெல்லாம் வார்த்தையாகப் படித்து உள்ளே தள்ளப்பட்ட பின்னர், அது நடைமுறை என்னும் வீரியமான அமிலத்தோடு வினையாற்றப்படாததால் உடலால் கிரகிக்கப்படாமல், கட்டிதட்டிப் போய் மூளையில் கொழுப்பாய் ஏறி நிற்பதன் காரணமாகவே சிவக்குமாரிடமிருந்து தனிநபர்வாத சிந்தனைப் போக்கு வெளிப்படுகிறது. இதுதான் சிவக்குமாரிடமும் “கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்து கிழித்தனர் ?” என்ற கேள்வியாக வெளிப்படுகிறது. சிவக்குமாரின் அரசியல் புரிதல், மார்க்ஸ்-ஐயும் அம்பேத்கரையும் தனிநபர்வாதிகளாக தன்னோடும் ரஞ்சித்தோடும் இணைத்துப் பார்ப்பதில் கொண்டு போய் முடிகிறது.

          மார்க்ஸ் போல நாம் ஆகவேண்டும் என்று நினைப்பது தவறல்ல.. ஆனால் மார்க்ஸும் நம்மைப் போன்றவர்தான் என சிவக்குமார் நினைப்பதை ஆணவத்தின் உச்சம் என்று வெஞ்சினப்படுவதா, இல்லை மண்டையில் அடைக்கப்பட்ட “நடைமுறையால் செரிக்கப்படாத தரவுக்குப்பைகள்” மூளையின் சிந்தனையையும் மழுங்கடிக்கச் செய்யும் என்ற சமூக அறிவியல் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு பரிதாபப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

          மற்றபடி, உங்களது நோக்கம் வினவின் மீது சேற்றை வாரித்தூற்றுவதுதான் என்பதை உங்களது எழுத்துக்களில் இருந்து அம்பலப்படுத்திய பின்னரும், “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் வேண்டுமென்றால் குழம்பில் இருக்கும் முயலின் கால்களை எண்ணிப்பார்” என்று சொல்லியிருக்கிறீர்கள்.

          நல்லது … முயலுக்கு எத்தனை கால்கள் என்பது வீதியில், களத்தில் ம.க.இ.க- மற்றும் அதன தோழமை அமைப்புகளின் போராட்டங்களைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் விவாதிக்க இனி எதுவும் இல்லை.

          வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் ஆசான்களும் உங்களைப் போன்ற தனிநபர்வாதிகள் – குறிப்பாக மூளைக் கொழுப்பால் அவதிப்பட்ட தனிநபர்வாதிகளை எதிர்கொண்டு பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
          பெட்டி போன்ற பொருளாதார வல்லுனர்கள், ராபர்ட் ஓவன் போன்ற கற்பனாவாத சோசலிஸ்டுகள் தொடங்கி சமூக விஞ்ஞானியான மார்க்ஸ் வரை அனைவரின் எழுத்துக்களையும் “கற்றுணர்ந்த” ஞானி ஒருவர் தற்போதைய சிவக்குமாரைப் போல மார்க்ஸ் ஏங்கெல்ஸ் காலத்திலும் இருந்தார்.

          அவர் பெயர் டூரிங் … (தங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றுமில்லை.. யுவர் ஆனர்.. இவரை எல்லாம் தாங்கள் படித்து முடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்) தனது காலகட்டத்திற்கு முன்பும், தனது காலகட்டத்திலும் வாழ்ந்த தத்துவவாதிகள் முதல் அறிவியலாளர்கள் வரை அனைவரையும் ”எவனும் சரியில்லை.. எவனுக்கும் அறிவில்லை” என்று சாடிக் கொண்டு மறுபுறத்தில் அவர்களது பங்களிப்புகளையே வேறு வார்த்தைகளில் தனது அறிவாகப் பறைசாற்றிக் கொண்ட தனிநபர்வாதிதான் டூரிங்…
          அவரும் தமது மூளைக்குள் உதித்த கற்பனைக் கோட்டையில் கட்டப்பட்ட ”சோசலிசத்தை” இந்த மார்க்ஸ் ஏங்கெல்ஸ் போன்ற “முட்டாள்களுக்கு” புரிந்து கொள்ளும் அறிவு இல்லை என்றே பறைசாற்றினார். தாங்களும் மூளைக்குள் அகப்புரட்சி செய்துகொண்டு அதைப்போலவே பறைசாற்றுகிறீர்கள்.
          டூரிங்கின் தத்துவப் பிளிறல்களை – அந்த ”பெரிய புளித்த ஆப்பிளை” – கஸ்டப்பட்டு தின்று தனது சில ஆண்டுகளைச் செலவழித்து ஏங்கெல்ஸ் “டூரிங்கிற்கு மறுப்பு” எனும் நூலை எழுதினார்.

          தாங்கள் டூரிங்கின் மடியில் அமரும் அளவிற்கு நெருங்கிவிட்டீர்கள்.. நானோ ஏங்கெல்ஸை தூரத்திலிருந்து பார்க்கும் அளவிற்கே அறிவு பாக்கியம் பெற்றவனாகவே இருக்கிறேன். இன்னும் கற்றுக் கொள்ள, நடைமுறையோடு இணைத்துப் பரிசீலிக்க வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன என்று நம்புகிறேன். கற்றுக் கொண்டிருக்கிறேன்.
          மார்க்ஸின் க்ரண்ட்ரைஸ் படித்த தாங்கள், ஏங்கெல்ஸின் டூரிங்குக்கு மறுப்பு நூலையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்து, டூரிங்கிற்கு எவ்வளவு அருகாமையில் தாங்கள் நெருங்கியிருக்கிறீர்கள் என பரிசீலித்துப் பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
          இரண்டு கடிக்கு மேல் இனியும் இந்த புளித்த ஆப்பிளை உண்ண முடியுமா என்றும் எனக்குத் தெரியவில்லை.
          நன்றி !

          (பி.கு : உங்களது “சித்தாந்த” மூளை அனுமானிப்பதில் கூட உங்களைப் போன்ற ஒருவர்தான் (முன்னாள் பிளாக்கர்) இப்படி பதில் கொடுப்பார் என்று நினைத்திருக்கலாம். பின்னூட்டம் இடும் அனானியன் தான் நானே ஒழிய, பிளாக் நடத்துமளவிற்கோ, அப்படி நடத்தியவர்களிடம் பாடம் கற்பதற்கோ பாக்கியதை இல்லாதவன் தான். கொஞ்சம் வெளியிலயும் வந்து சிந்திப்போம் சிவக்குமார். )

  6. மணிவேலன்,

    சூப்பர் ஸ்டார், சூப்பர் வில்லன் பற்றி எல்லாம் எனக்குக் கருத்து இல்லை.

    //ரஞ்சித்தினுடைய அறைகூவலே உரையாடலை நோக்கித்தானே இருக்கிறது . சிவக்குமார் அதையும் மறுக்கிறாரா ?//

    நிச்சயமாக உரையாட வேண்டும், ஆனால், வினவின் பதில் உரையாடலாக இல்லை, சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுவதாக இருக்கிறது என்று நான் சொல்கிறேன்.

    //இதற்குத் தீர்வாக ஐரோப்பிய புனுகு வேண்டாம் என்றால் மேக் இன் இந்தியா புணுகு எங்கு கிடைக்கிறது என்று முகவரி தரவும் ?//

    புண்ணுக்கு புனுகு மருந்து இல்லை. புண்ணுக்கு மருந்து தேடி ஆய்வு செய்தவர், நடைமுறையில் பணியாற்றியவர் அம்பேத்கர். அவரது பணியை விமர்சன ரீதியாகக் கூட தனது கோட்பாட்டில் உள்வாங்காமல் புறக்கணித்து விட்டு ‘அரை நிலப்பிரபுத்துவம்’ என்று மட்டையடித்துக் கொண்டிருப்பதைத்தான் ஐரோப்பிய புனுகு என்கிறேன்.

    சாதி பற்றிய அம்பேத்கரின் ஆய்வுகள் 1980-க்கு வெகு காலத்துக்கு முன்னதாகவே வெளியாகி பரவலாக கிடைத்தவை, அதற்குப் பிறகு ஆய்வு செய்த வினவு குழுவினர் அதை ஏன் கணக்கில் கூட எடுத்துக் கொள்ளவில்லை? இந்திய சமூகம் பற்றிய ஆய்வில் அம்பேத்கரின் ஆய்விலிருந்து எடுத்துப் பயன்படுத்திய பகுதி எது என்று வினவு சொல்லட்டும். அது அம்பேத்கரை விமர்சித்து வந்தடைந்ததாகக் கூட இருக்கலாம்.

    மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி எழுதிய குறிப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு இந்திய சமூகத்தில் சாதி பற்றிய ஆய்வை முடித்துக் கொண்ட ‘சாதனையாளர்களான’ வினவு குழுவுக்கு சாதிய பிரச்சனை பற்றி பேசுவதற்கு யோக்கியதை இல்லை என்கிறேன். ‘அரை நிலப்பிரபுத்துவம்’ என்பது சாதியக் கட்டமைப்பின் யதார்த்தத்துக்கு திரை போட்டு மூடும் மோசடி என்கிறேன்.

  7. 4. வினவின் குறுங்குழுவாத சிந்தனைகள்

    //அவரது முயற்சிகளில் பங்கேற்கும் பொதுவானவர்களில் பெரும்பாலானோர் அவரது திரைப்பட பிம்பத்தை மையமாக வைத்து திரையுலகில் தனக்கொரு இடம் கிடைக்காதா என்று வருகின்றனர். இது ரஞ்சித்துக்கும் தெரியாமல் இருக்காது.//

    ரஞ்சித்துடன் இருப்பவர்கள் மீது முத்திரை குத்தும் குள்ளநரித்தனம், இது.

    //இருப்பினும் யாராக இருப்பினும் தனிநபராக சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும்போது முதல் சுற்றில் பெரும் நம்பிக்கையும், உத்வேகமும் இருக்கும். அடுத்த சுற்றுகளில் அந்த நம்பிக்கை சமூக யதார்த்தத்தால் கொஞ்சமோ நிறையவோ விரக்தியடையும். பிறகு ஊரோடு ஒத்து வாழ் என்று ‘முதிர்ச்சி’ அடையும்.//

    கூட்டாக சேர்ந்து தீர்வு காண முயற்சித்த வினவு “ஊரோடு ஒத்து வாழ் என்று ‘முதிர்ச்சி’” அடைந்திருக்கிறது; பொதுவானவர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டுதான் இயங்குகிறது. மேலும், புரட்சிகர உள்ளடக்கத்தை மட்டுமின்றி வடிவத்தையும் அத்தகைய பாசாங்கையும் கூட கைவிட்டு ஒரு செய்திப் பெட்டகமாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது.

    //இந்தச் சரணடைவு ஏதோ திரைப்பட பிரபலம் மற்றும் தலித் அரசியல் பேசுவோருக்கு மட்டும் நடப்பதல்ல. மார்க்சியத்தை தனிநபராக ‘தூக்கிச் சுமக்கும்’ தனிநபர்களும் கூட இப்படித்தான் வீழ்கிறார்கள். மற்றவர்களை விட மார்க்சிய தனிநபர்வாதிகளிடம் பேச்சும் எழுத்தும் கொஞ்சம் அதிகமிருக்கலாம். என்ன இருந்தாலும் ஏதோ கொஞ்சம் ‘தத்துவம்’ படித்தவர்கள் அல்லவா?//

    கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டத்தில் கோவிந்தா போடும் கோஷ்டிகளாக மாறி விடுவது இது போன்ற அபத்தக் களஞ்சியங்களால்தான்.

    முதன்மையான கேள்வி தனிநபரா, அமைப்பா என்பது இல்லை. சரியானதா, தவறானதா, புரட்சிகரமானதா, தேங்க வைப்பதா என்பதுதான் முதன்மையானது. அந்தக் கேள்விக்கு சரியான பதிலை வகுத்துக் கொண்டு நடைமுறையில் செயல்படும் அமைப்புதான் புரட்சிகர அமைப்பாக இருக்க முடியும். அந்த வகையில் தனிநபராக இருந்தாலும் ரஞ்சித் சரியான பிரச்சனையைப் பற்றி பேசுகிறார், சமூகத்தில் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு போராடுகிறார். வினவு அமைப்பாக இருந்தாலும் தவறாக பேசுகிறது, தேக்கத்தை நோக்கிச் செலுத்துகிறது.

    “உன் கண்ணுல ஒரு பதட்டம் இருக்கு. காலு தரையில நிக்கல. மொத்தத்துல நீ நீயா இல்ல. முதல்ல நில்லு.அப்புறமா வந்து நீ சொல்ல வேண்டியத சொல்லு” என்று ஒரு படத்தில் சூர்யாவிடம் அவரது காதலி சொல்வது போல வினவு நிதானத்தில் இல்லை என்று மட்டும் நன்றாகத் தெரிகிறது.

    .

      • ஓஹோ.. அப்படியானால் நீங்கள் தான் அந்த பெட்டி தூக்கிகளின் குண்டுச்சட்டி சங்க தலைவரோ ??

    • ஓ……நீங்கள்தான் ரஜினி புகழ் ரஞ்சித் ரசிகர் மன்றத் தலைவரா?

      • ஓஹோ.. நீங்கள் அந்த பெட்டிதூக்கி புகழ் சொம்படிச்சான் குஞ்சுகள் ரசிக மன்றத்தலைவரோ ??

    • தக்காளி …. ஜெயமோகன் மாறு வேசத்துல வந்து கழுவி விட்ட மாதிரியே இருக்கு…

      நல்ல வேளை வினவு அச்சுப் பதிப்புல வரல.. வந்திருந்தா… ரெண்டு மரம் அநியாயமா வீணாயிருக்கும்…

  8. சினிமா சூட்டிங் பார்த்தவர்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட சினிமா தொழிலாளர்கள், மொட்டைவெயிலில் வேர்க்க விறுவிறுக்க, சூட்டிங் வேலை செய்வார்கள். ஆனால் சூட்டிங்கில் குடை பிடிப்பவர், ஹீரோ மட்டுமே வெயிலில் வதங்குவதாக அவர் பின்னால் ஓடி ஓடி குடையுடன் நிற்பார்.சரி.ஆனால், அதற்கும் ஒரு கோட்பாட்டு விளக்கம் உண்டு என்று சொன்னால் என்ன செய்வது ?
    நண்பர் சிவகுமார் நிறைய படித்தவர் என்று தெரிகிறது. அவருடைய மறுமொழியில் வினவை”புண்ணாக்கு”, “கூட்டாக சேர்ந்து கும்மி”, “மோசடி”, ”காதலி சொல்வது” “வினவு தேக்கத்தை நோக்கி”, “கூட்டத்தில் கோவிந்தா போடும் கோஷ்டிகள்”, “குள்ளநரித்தனம்”, ”யோக்கியதை இல்லை”, “சாதி ஆணவம், வன்மம், திமிரு, நயவஞ்சகம்”, “கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு முழுவதும் இப்படித்தான் வறட்டுவாதம் பேசிக்கொண்டிருக்கிறது”, “35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற கலாச்சார அமைப்புகள், கூகை போன்ற ஒரு ஜனநாயக வெளியையோ, நீலம் பண்பாட்டு மையம் போன்ற சாதி கொடுமைகளுக்கு எதிரான செயல்பாட்டு அமைப்பையோ உருவாக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை, அதைப் பற்றிய சுய விமர்சனத்துக்கு பதிலாக, வினவு ரஞ்சித் மீது தனது பொச்சரிப்பை வாரிக் கொட்டுகிறது” என்று நேர்மறை விமர்சனங்களின் தரத்துடன் பாடம் எடுத்து வினவு விமர்சனத்தை தோலுறிக்கிறாராம்.
    ம.க.இ.க-வின் கடந்த கால சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போரட்டங்களான, கருவறை நுழைவுப் போராட்டம், தமிழ் மக்கள் இசை விழா, பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற இயக்கங்களும், இளவரசன் படுகொலை போன்ற சாதிய பயங்கரவாத சம்பவங்களில் இறுதிவரை களத்தில் நின்று நடத்திய போராட்டங்களும் – என பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளும், மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகிய தளங்களில் பார்ப்பனிய – சமஸ்கிருத ஆதிக்கத்தும் நடவடிக்கைகளும் சிவகுமாருக்கு தெரிந்திருக்குமா அல்லது அவையெல்லாம் ஜனநாயக வெளிக்கான போராட்டம் இல்லை போலும்.
    தமிழகத்தில் பார்ப்பனிய –சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் களத்தில் போலீசு, ஆதிக்க சாதி குண்டர்களை எதிர்கொண்டு உயிர்தியாகங்களுக்கு அஞ்சாமல் நின்று போராடிய ஒரு அமைப்பை ஹெச்.ராஜா தரத்துக்கு தூற்றுகிறார்.
    ரஞ்சித் தனது சொந்த வருமானத்தைப் போட்டு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் என்பதை வினவு சுட்டிக்காட்டி இருக்கிறது. அவரது முயற்சிகளை இருட்டடிப்பு செய்யவில்லை. அவரது போக்கில் இருக்கும் தனிநபர்வாதத்தை சுட்டிக்காட்டியிருக்கிறது. ரஞ்சித் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?வழிபாடுதான் உங்கள் வாதமா ?

    • இளையராஜாவின் பண்ணைபுரத்தில் இரட்டை குவளை முறை ஒழிப்பு போராட்டத்தில் மகஇகவின் தோழமை அமைப்பான விவசாய விடுதலை முன்னணி தோழர்கள் போலீசிடம் அடிபட்டு சித்திரவதை அனுபவித்தார்கள். இதில் பெரும்பான்மை தோழர்கள் முக்குலத்தோர் சாதியை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

      • கார்த்திக் சார்,

        இவனுங்களுக்கு வேலையே காலையில எந்திரிச்சா தன்னோட ’இண்டெலெக்சுவல்’ பு*த்திய எங்க கொண்டுபோய் காட்டலாம்னுதான் தோண்டித் துருவிப் பேசுவானுங்க …

        ஒரு கதவைப் பாத்து அது கதவுன்னு நீங்க சொல்லீட்டிங்கன்னா உடனே ஒருத்தன் வந்து அது மரக் கதவு .. அதை திட்டமிட்டு வெறும் கதவுன்னு சொல்றீங்க.. நீங்க மர விரோதின்னு புதுசா ஒருத்தன் சொல்லுவான்.

        இன்னொருத்தன் வந்து இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் வறட்டுவாதிகளா இருக்கானுங்க … அந்த கதவின் கலைநயத்தைப் பார்க்கத் தெரியாத குருட்டுக் கம்யூனிஸ்ட்டுகள்னு சொல்லுவான்…

        இவனுங்களுக்கு பதில் சொன்னா பயித்தியம் தான் பிடிக்கும்…

    • காசு பணத்தை பத்தி நீங்க பேசாதிங்கப்பு அப்புறம் நல்லா கேட்ருவேன் ஆமா.

  9. வணக்கம் மணிவேலன்,

    1. கடந்த காலத்தில் ம.க.இ.க, வி.வி.மு தோழர்கள் களத்தில் நடத்திய வீரியமான போராட்டங்களை யாரும் மறக்க முடியாது, மறுக்கவும் முடியாது. நீங்களும் கார்த்திகேயனும் கொடுத்த பட்டியலுடன் ம.க.இ.க மையக் கலைக்குழுவின் பாடல்களை, குறிப்பாக 11 இசைப் பேழைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், பின்னர் வினவு மூலம் தி.மு.க/தி.க நீர்த்துப் போக வைத்து விட்ட பெரியாரின் பார்ப்பனீய எதிர்ப்பு அரசியலை தமிழகத்தில் தொடர்ந்து உயிர்த்திருக்கச் செய்த பணியை, குறிப்பாக 2014 தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு அரசியலை செயலூக்கத்துடன் எடுத்துச் சென்றதை சேர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

    2. இங்கு அது இல்லை விவாதம். வினவு ரஞ்சித் பற்றிய தனது பதிலில் சொல்லியிருப்பது, “தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது. இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்.”

    அதாவது ‘இந்தியாவின் சாதிய பிரச்சனை பற்றி கற்பது, கற்று ஆய்வு என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்’ என்கிறது வினவு. ஆனால், வினவின் அமைப்பு ரீதியான சாதி பற்றிய ஆய்வும் கோட்பாடும் மிகவும் மேலோட்டமானது; மூலதனம் நூலை எழுதுவதற்காக மார்க்ஸ் எழுதிய Grundrisse என்ற முதல் பிரதியின் (first draft) குறிப்புகளை பிரதானமாக பயன்படுத்தி செய்யப்பட்டது. (பார்க்கவும் – இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம்).

    அந்த நூலில் மார்க்ஸ் எழுதிய குறிப்புகள் முதலாளித்துவ கூலி உழைப்பாளிக்கும் அதற்கு முந்தைய சமூகங்களில் உழைப்பாளர்களுக்கும் இடையேயான வேறுபாட்டை காட்டுவதற்கானவை. ஆனால், அதன் ஊடாக மார்க்ஸ் முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமையில் ரோமானிய, ஜெர்மானிய, இந்திய வடிவங்களுக்கு இடையேயான வேறுபாட்டை பல இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதில் இந்திய வடிவத்தின் தனிச்சிறப்புகளைச் சொல்லியிருக்கிறார். அதிலிருந்து ஆரம்பித்து இந்தியாவில் சாதி பற்றிய பருண்மையான ஆய்வை செய்திருக்க முடியும்.

    ஆனால், 1980-களில் எழுதப்பட்ட அந்த ஆவணம் அத்தகைய ஆய்வு எதையும் செய்யவில்லை. 1940-களுக்கு முன்பே அம்பேத்கர் செய்து முடித்து விட்ட சாதி பற்றிய ஆய்வுகளை பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, இந்தியாவின் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகம் சாராம்சத்தில் ரோமானிய, ஜெர்மானிய சமூகங்களில் இருந்து வேறுபட்டது இல்லை (இயற்கை சார் உற்பத்தி, எளிய மறுஉற்பத்தி, உழைப்பாளி நிலத்தோடு பிணைக்கப்பட்டிருப்பது போன்றவை), இந்திய சமூகம் காலனிய ஆட்சிக்குப் பிறகு அரை நிலப்பிரபுத்துவமாக மாறி விட்டது என்று முடித்துக் கொண்டது. சாதியக் கட்டமைப்பு பற்றிய பருண்மையான வரலாற்று அடிப்படையிலான ஆய்வைச் செய்யவில்லை.

    அதற்குப் பிந்தைய 30 ஆண்டுகளில் வெளியான சாதி பற்றிய பல ஆய்வுகளை “பின்நவீனத்துவம்” “அடையாள அரசியல்” என்று முத்திரை குத்தி புறக்கணித்து தான் எடுத்த “அரை நிலப்பிரபுத்துவம்” என்ற கோட்பாட்டிலேயே இன்று வரை நிற்கிறது வினவு/புதிய ஜனநாயகம்/புதிய கலாச்சாரம். இவ்வாறாக 35 ஆண்டுகளாக அமைப்பாகச் செயல்பட்ட வினவு சாதி பற்றிய ஒரு புரட்சிகர கோட்பாட்டை உருவாக்கத் தவறியிருக்கிறது. [இதைப் பற்றி இன்னும் விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்]

    3. எனவே, 1-ல் சொன்ன ம.க.இ.க-வின் பார்ப்பனீய எதிர்ப்பு என்பது திராவிட அரசியல் எல்லையைத் தாண்டி புரட்சிகர பரிமாணத்தை பெற முடியவில்லை. எனவே, சாதி ஒழிப்புக்கான பாதையை உருவாக்கவோ, சாதியப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்கான சக்தியாக உருவெடுக்கவோ முடியவில்லை.

    இன்றைய (2019) நிலையில் கூகை, casteless collective போல ஒரு ஜனநாயக வெளியை ஏற்படுத்தும் போராட்டத்திலோ, நீலம் பண்பாட்டு மையம் போல சாதி எதிர்ப்புப் போராட்டத்திலோ வினவோ, ம.க.இ.கவோ இல்லை என்பது யதார்த்தம். அதற்குக் காரணம் மேலே சொன்ன கோட்பாட்டு ஓட்டாண்டித்தனம்.

    4. சாதி ஆணவம் என்பது தன்னை அறியாமல் கூட ஒருவருக்கு வரலாம். அதுவும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சாதி என்ற மலம் உள்ளே ஒட்டிக் கொண்டே இருக்கிறது. சாதியை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொண்டு (அம்பேத்கரை படித்து, பரியேறும் பெருமாள் போன்ற படைப்புகளை பார்த்து) தொடர்ந்து சுயவிமர்சனம் செய்து கொள்வதன் மூலம்தான் அதன் துர்நாற்றத்தை துரத்த முடியும். வினவு அதில் தவறியிருக்கிறது என்று சொல்கிறேன்.

    5. மற்றபடி, என்னுடைய பின்னூட்டத்திலிருந்து தனியாகப் பிரித்து நீங்கள் பட்டியல் இட்டிருக்கும் சொற்களை வாக்கியங்களோடு சேர்த்தே படித்துப் புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    • அவ்வளவு தான் இவங்க. இது தான் சரியான பதிலுரை வாழ்த்துக்கள் சிவக்குமார்.

      • வைக்கிறதுதான் வச்சிருக்கீங்க …. நல்லா சொம்புன்னு பேரு வச்சிக்க வேண்டியது தானே ! பொருத்தமா இருக்கும்…

  10. சிவக்குமார் அவர்கள் எழுதிய நான்கு பதிவுகளுக்கும் கடைசியாக பதிவிட்டுள்ள விசயத்திற்கும் இடையில் *U* அடித்துள்ளார்.
    அதற்கு ஊசியும் சொம்படித்துள்ளார்.
    ரஞ்சித் பேசும் அரசியல் தலித் அரசியல் மட்டும் தான், “ஜெய் பீம்” முழக்கம் எந்த வர்க்க கண்ணோட்டத்தில் ரஞ்சித் முழங்குகிறார்.

    கூகை, நிலம் பண்பாடு…என்று கூடி சாதியை ஒழிக்க கடவுளை ஒழி, அதற்கு மதத்தை ஒழி என்றா பேசுகிறார்கள்..?

    ரஞ்சித்தும் நாளை இதே போலி ஜனநாயகத்தேர்தலில் கால் ஊன்ற தூபம் போட்டுக்கொண்டுள்ளார் என்பதே யதார்த்தம்.

    மேலும் இந்த ரஞ்சித்தின் கூகை செயல்பாட்டுடன் மகஇக மற்றும் சார்பு அமைப்பு தோழர்களின் போராட்டத்தை ஒப்பிட்டதே அவர் களபோராட்டத்தில் ஈடுபடவில்லை என்பதுடன் கடந்த கால போராட்டத்தை மறைக்கவே முற்படுகிறார் என்பதைத் தான் காட்டுகிறது.

    விவிமு, பெவிமு, மகஇக வின் ஆதரவாளர்களின் அல்லது கடைக்கோடி தோழரின் தலித் மக்களுக்கான களப்போராட்டத்தின் கால் தூசிக்குக்கூட ஒப்பானவர் அல்ல ரஞ்சித்.

    மாஅக, மகஇக வின் அரசியலை விமர்சிக்க சிவக்குமாருக்கு ரஞ்சித் தான் கதைக்களம் போல…

    • //// மாஅக, மகஇக வின் அரசியலை விமர்சிக்க சிவக்குமாருக்கு ரஞ்சித் தான் கதைக்களம் போல ////

      என்ன மாமா ? மாமா வேலையை ஆரம்பிச்சிட்டீங்க போல தெரியுதே…

      நடத்துங்க .. நடத்துங்க … அண்ணே சிவக்குமாருக்கு கொஞ்சம் பாத்து பவிசா எடுத்துக் கொடுங்க…

      • மாப்பிள்ளைக்கு கொஞ்சம் லேட் பிக்கப் போல..அவசரப்படாம யோசித்து எழுதுங்க..

      • அனானியன்
        அவசரப்படாதீங்க..! ஆரோக்கியமான விளக்கங்களையும் பதிலடிகளையும் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்..!

        • அனானி ரொம்ப உணர்ச்சிவசப்படுறாரோ ?
          பார்த்து நல்லா ட்ரெய்னிங் கொடுத்து அப்புறமா இறக்கிவிடுங்க.

          அனானி அண்ணே.. உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்களாம் உங்களிடம் ஆரோக்கியமான பதிலடிகளை எதிர்பார்க்கிறார்களாம். வாங்க வாங்க

    • சூப்பரப்பு சூப்பர்.. இன்னும் இன்னும் நிறைய இது போல நிறைய எதிர்பார்க்கிறோம்.

  11. வணக்கம் சூரியா,

    1. நான் எழுதிய நான்கு பதிவுகளும் வினவின் ரஞ்சித் பற்றிய கேள்வி பதிலுக்கு எதிர்வினையாக எழுதப்பட்டவை. மணிவேலன் சொன்ன கருத்துக்களைத் தொடர்ந்து அவற்றை விளக்கும் வகையில் சில விபரங்களை எழுதினேன். என்னைப் பொறுத்தவரை முதல் நான்கு பதிவுகளும், கடைசியாக பதிவிட்டுள்ள விஷயமும் சாராம்சத்தில் ஒன்றைத்தான் பேசுகின்றன. இந்திய சமூகம் பற்றிய ஆய்வில், எனவே சாதி பற்றிய ஆய்வில் வினவின் கோட்பாட்டு ஓட்டாண்டித்தனம் பற்றியும், அதனால் சாதிப் பிரச்சனைகள் பற்றி பேசும் போது தவிர்க்க இயலாமல் வெளிப்படும் ஆணவம், வன்மம், திமிர், நயவஞ்சகம் பற்றியும்தான் நான் பேசுகிறேன்.

    2. “ரஞ்சித் பேசும் அரசியல் தலித் அரசியல்” “எந்த வர்க்க கண்ணோட்டத்தில்” “சாதியை ஒழிக்க கடவுளை ஒழி, அதற்கு மதத்தை ஒழி”, “போலி ஜனநாயகத்தேர்தலில் கால் ஊன்ற” என்று பேசும் போது நீங்கள் கோட்பாட்டு ரீதியான சில முடிவுகளுடன் பேசுகிறீர்கள். அவை அனைத்தும் உலகமே ஏற்றுக் கொண்ட உண்மைகள் என்ற கண்ணோட்டத்தில் பேசுகிறீர்கள். “தலித்” அரசியல், வர்க்கக் கண்ணோட்டம், சாதியை ஒழிக்க வழி, போலி ஜனநாயகம் இவை தொடர்பான வினவின் முடிவுகளும், அதே அடிப்படையில் பேசும் உங்கள் முடிவுகளும் தவறானவை என்று நான் கருதுகிறேன். தலித் அரசியல் என்று சொல்வதில் அடங்கியிருக்கும் சாதிய உணர்வையும், வர்க்கக் கண்ணோட்டம் என்பதில் இருக்கும் சுருக்கல் வாதத்தையும், சாதியை ஒழிக்க வழி என்பதின் வெற்றுத் தன்மையையும், போலி ஜனநாயகம் என்பதன் சடங்குத்தனத்தையும் கைவிட வேண்டியிருக்கிறது என்று கருதுகிறேன்.

    3. ஆர்ப்பாட்டம், கைது, மேடைப் பேச்சு என்ற வடிவத்தில் நான் களப்போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது உண்மைதான். ஆனால், களப் போராட்டத்தையும் அதனோடு பிரிக்க முடியாது இணைந்திருக்கும் பிற வேலைகளையும் எதிரெதிராக நிறுத்துவது மிக மோசமான தவறு. அதே போல ரஞ்சித்தின் செயல்பாடுகளையும், வி.வி.மு, பெ.வி.மு, ம.க.இ.க தோழர்களின் களப் போராட்டத்தையும் எதிரெதிராக நிறுத்துவது நேர்மையற்ற விவாதமுறை. அது “தலித் அரசியல்” என்ற உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து வருகிறது என்று நினைக்கிறேன்.

    4. //மாஅக, மகஇக வின் அரசியலை விமர்சிக்க சிவக்குமாருக்கு ரஞ்சித் தான் கதைக்களம் போல…//

    உண்மைதான். இப்போது (2019 ஆகஸ்ட் மாத இறுதியில்) அந்தக் கதைக்களத்தை ஏற்படுத்தியது ரஞ்சித் பற்றிய வினவின் கேள்வி பதில். இல்லை என்றால் ஒரு சில மாதங்கள் கழித்து இன்னும் விரிவாக, இன்னும் முறையான வடிவில் வினவின் அரசியல் மீதான என்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருப்பேன்.

    • ஆமாமா … நீங்க யோக்கியவான் தான் மகரிஷி ….

      உங்கள் எழுத்திலேயே உங்கள் ”நேர்மை” தெரியுது …

      ஆப்பீஸ் வேலையில இருக்கதால் விரிவா பதில் சொல்ல முடில.. சாயந்திரம் உங்கள் கோமணம் நீலக் கோமணம் இல்ல அது சிவப்பை சேரடிக்க வந்த காவிக் கோமணம்னு அவுத்துக் காட்டுறேன்…

      கொஞ்சம் பொறுத்து அருளுங்கள் சாமி மகரிஷி …

    • சிவக்குமார் அவர்களே..
      தலித் அரசியல் என்று குறிப்பிடுவதே சாதிவெறி என்ற சொல்வது சரியா?

      தலித் பிரச்சனையை ஒரு தலித்தால்தான் புரிந்து கொள்ளமுடியும். ஒரு தலித் தலைமையில்தான் பூரண தலித் விடுதலை சாத்தியம். பிற சாதி தலைமையிலான தலித் விடுதலை சாத்தியமில்லை. ”
      என்ற வாதங்களோடு 2000களில் உருவானதுதான் தலித் இயக்கங்கள்.
      திருமாவளவன், கிருஷ்ணசாமி இன்னபிற தலித் தலைவர்கள் அரங்குக்கு வந்தது இதன் பின்னணியில்தான்
      இதில் என்ஜிஓக்களின் பங்களிப்பும் உண்டு.
      இத்தலைவர்கள் எல்லாம் வளர்ச்சிப் போக்கில் ஓட்டரசியலில் இறங்கி பல்வேறு சமரசங்களை செய்துகொண்டது தனிக்கதை.

      சாதிப்பெருமைகள முன்னிறுத்தி மாநாடு போராட்டங்கள் நடத்தி அரசியல் கட்சிகளுடன் மாறிமாறி கூட்டணி சேர்ந்து வெறும் அரசியல் ஆதாயம் பெறுவதாக தலித் விடுதலையை இவர்கள் சுருக்கி விட்டார்கள்.
      இத்தகைய தலித் அரசியலை விமர்சனம் செய்வதையும், அந்த சொல்லை பயன்படுத்துவதையும் சாதி வெறி, வன்மம் என்றால், வேறு எப்படி சொல்ல வேண்டும் என்பதையும் நீங்களே சொல்லிவிடுங்கள்.

      • //தலித் அரசியல் என்று குறிப்பிடுவதே சாதிவெறி என்ற சொல்வது சரியா?//

        திருமாவளவன் தலைமை தாங்கும் கட்சியின் பெயர் விடுதலைச் சிறுத்தைகள், அவர் சாதி அரசியலை பேசுவதில்லை. ரஞ்சித்தின் அமைப்பின் பெயர்கள் கூகை, நீலம் பண்பாட்டு மையம், casteless collective. எதுவும் எந்த சாதியின் பெயரிலும் இல்லை. மாறாக, casteless collective பற்றி பேசுகிறது. திருமாவளவன் ஒட்டு மொத்த தமிழ்சமூகத்துக்கும் தனது கட்சி வேலை செய்வதாகத்தான் சொல்கிறார், செயல்படுகிறார்.

        ரஞ்சித் பா.ஜ.க-வின் கல்விக் கொள்கையை எதிர்த்து பேசுகிறார். அவரது திரைப்படங்களும் ஏதோ ஒரு சாதியின் சார்பாக இல்லாமல், ஒடுக்கப்படுபவர்களின் குரலாக ஒலிக்கின்றன. இவர்களது அரசியல் மீது சாதிய முத்திரை குத்துவதை வேறு எப்படிச் சொல்வது?

        //இத்தலைவர்கள் எல்லாம் வளர்ச்சிப் போக்கில் ஓட்டரசியலில் இறங்கி பல்வேறு சமரசங்களை செய்துகொண்டது தனிக்கதை.//

        சமரசங்களில் பல வகை. ஓட்டரசியலில் இறங்குவது மட்டும்தான் சமரசமா? அன்றாட வேலைகளில் மூழ்கிப் போய் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கான தலைமை ஆற்ற வேண்டிய பணியை செய்யாமல் கைவிடுவதை எப்படி அழைப்பீர்கள்? அது பற்றி மேலும் விபரம் வேண்டுமானால் வினவிடம் விபரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

        //சாதிப்பெருமைகளை முன்னிறுத்தி மாநாடு போராட்டங்கள் நடத்தி அரசியல் கட்சிகளுடன் மாறிமாறி கூட்டணி சேர்ந்து வெறும் அரசியல் ஆதாயம் பெறுவதாக தலித் விடுதலையை இவர்கள் சுருக்கி விட்டார்கள்.//

        யார் சாதிப் பெருமைகளை முன்நிறுத்தி மாநாடு நடத்தினார்களோ அவர்களைப் பற்றி பேசுங்கள். ஏன் எல்லோர் மீதும் ஒரே வண்ணம் பூசுகிறீர்கள்?

        //இத்தகைய தலித் அரசியலை விமர்சனம் செய்வதையும், அந்த சொல்லை பயன்படுத்துவதையும் சாதி வெறி, வன்மம் என்றால், வேறு எப்படி சொல்ல வேண்டும் என்பதையும் நீங்களே சொல்லிவிடுங்கள்.//

        நீங்கள் சொல்லும் 2000-ன் தொடக்கங்களையே எடுத்துக் கொள்வோம். அதுவரை கம்யூனிச இயக்கங்களின் சாதி ஒழிப்புக் கண்ணோட்டம் என்ன? அம்பேத்கரை வர்க்க அரசியலுக்கு எதிரானவர் என்று ஒதுக்கி வைத்தது. சாதி பற்றிய பருண்மையான ஆய்வுகள் செய்ய மறுத்தது, கட்சித் திட்டத்தில் சாதி ஒழிப்பு பற்றிய கோட்பாடு எதுவும் இன்றி, ‘புரட்சிக்குப் பிறகு நிலத்தைப் பங்கிட்டுக் கொடுத்தால் சாதி ஒழிந்து விடும்’ என்று பேசுவது, இன்ன பிற.

        இந்நிலையி்ல் தினம் தினம் உயிர்த்துடிப்புடன் வதைத்துக் கொண்டிருக்கும் சாதிய பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு பல்வேறு சீர்திருத்த முயற்சிகள் தோன்றத்தான் செய்யும். அவற்றை எதிர்கொண்டு முறையாக சுயபரிசீலனை செய்யாமல், அவற்றை புதிய ஜனநாயகத்துக்கான நேச சக்திகளாக பார்க்காமல், அவற்றின் மீது சேற்றை வாரி அடிப்பதை மட்டுமே செயல் தந்திரமாக வைத்திருந்தது யாருடைய தவறு? கட்சி செல்வாக்கை உயர்த்தி மேலும் மேலும் ஆள் சேர்ப்பது மட்டும்தான் முதன்மையான செயல்பாடு, அதற்காகவே போராட்டங்கள், அதற்காகவே மற்ற அமைப்புகள் மீது விமர்சனம் என்று செயல்படுவது யாருடைய தவறு?

        விடுதலைச் சிறுத்தைகள் அல்லது நீலம் பண்பாட்டு மையத்தின் அரசியலை விமர்சியுங்கள். அதற்கு அடையாள அரசியல், அல்லது ‘தலித்’ அரசியல் என்று முத்திரை குத்தி ஒதுக்காதீர்கள். தி.மு.க அல்லது ம.தி.மு.க-வின் அரசியலுக்கு சாதிய முத்திரை கொடுக்கப்படுகிறதா? (பா.ம.க, அ.தி.மு.க, பா.ஜ.க வுக்கு நியாயமாக சாதி முத்திரை கொடுக்கப்படுகிறது). ஏன் ரஞ்சித் அல்லது திருமாவளவன் சாதிய முத்திரையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கொஞ்சம் யோசியுங்கள்.

  12. //விவிமு, பெவிமு, மகஇக வின் ஆதரவாளர்களின் அல்லது கடைக்கோடி தோழரின் தலித் மக்களுக்கான களப்போராட்டத்தின் கால் தூசிக்குக்கூட ஒப்பானவர் அல்ல ரஞ்சித்.//
    உண்மை..!
    பிற சாதியினரின், இயக்கங்களின் சாதி ஒழிப்பு முயற்சிகளை இவர்கள் புறந்தள்ளுகிறார்கள். தந்தை பெரியாரையும் பிற்படுத்தப்பட்டவர் நலனுக்காக பாடுபட்டவர் என்று சாயம் பூசுகிறார்கள். முக்குலத்தோர் சாதியில் இருந்து வென்றெடுக்கப்பட்ட தோழர்கள் பெரும்பான்மையினருடன் நடத்தப்பட்ட பண்ணைபுரம் போராட்டம் என்பது ஒரு சிறிய அளவிலான புரட்சி மற்றும் மைல்கல். மகஇகவின் போர் மற்றும் செயல் தந்திரங்கள் துல்லியமானவையே என கருதுகிறேன். இன்று தமிழ்நாட்டில் பிஜேபிக்கு எதிராக திராவிட மற்றும் தமிழ் தேசிய இயக்கங்கள், விசிக, திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியாய் திரளுவதற்கு மகஇகவினரின் களப்பணியும் விமர்சனங்களும் அடிநாதமாக இருப்பதாக எண்ணுகிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திமுகவை மக்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது திமுக அனைத்து போராட்டங்களையும் ஆதரிக்கிறது. பொறம்போக்கு சீமான் கூட எதிர்கருத்துக்களை வைக்க அஞ்சும் நிலைதான் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்தமிழக அரசியலை குறிப்பிட்ட திசைவழியில் செலுத்துவது மகஇக மற்றும் தோழமை அமைப்புகள் என்ற கருத்துதான் என் மனதில் படுகிறது. தோழர்கள் என் கருத்தை விவாதிக்கலாம்.

    • வணக்கம் நெப்போலியன்,

      கீழே அனானியனுக்கு போட்டிருக்கும் பதிலை படியுங்கள். “சாதிய ஒழிப்பை சாத்தியப்படுத்துவதற்கான பார்வையை” எப்படி வந்தடையலாம் என்று எனது கருத்தை சொல்லியிருக்கிறேன். அதில் ஏதாவது மாற்றுக் கருத்து, கேள்விகள், கூடுதல் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள்.

      “சாதிய ஒழிப்பை சாத்தியப்படுத்துவதற்கான பார்வையை” பெறுவதற்கு நிறைய உழைப்பும், விவாதமும், ஆய்வும் அதன் அடிப்படையிலான நடைமுறையும் தேவைப்படுகின்றன.

      நன்றி

  13. வணக்கம் அனானியன்,

    A. நடைமுறை

    “புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இல்லை” – என்ன செய்ய வேண்டும், லெனின் (பக்கம் 25, பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் ஆங்கிலப் பதிப்பிலிருந்து மொழிபெயர்த்தது)

    வினவு, ம.க.இ.க-வின் நடைமுறை என்பது புரட்சிகரமான நடைமுறையாக இல்லாததற்குக் காரணம் அவர்களது சாதி பற்றிய கோட்பாடு (மட்டுமின்றி இன்னும் அடிப்படையான கோட்பாடுகளும்) மேம்போக்கானது, தவறானது. எனவே, வினவு, ம.க.இ.வின் நடைமுறை (களத்தில் தோழர்களின் தீரமான போராட்டங்கள்) புரட்சிகரமான இயக்கமாக மாறாமல் தேங்கிப் போயிருக்கின்றது. இதற்கு முழுப்பொறுப்பும் தவறான கோட்பாடும், 40 ஆண்டுகளாக அதை பரிசீலித்து சரி செய்யத் தவறிய கோட்பாட்டு தலைமையும்தான்.

    இல்லை என்றால் ம.க.இ.க-வின் கடந்த கால நடைமுறை போராட்டங்கள், சாதி ஒழிப்புப் பற்றிய அதன் கோட்பாட்டோடு எப்படி தொடர்புடையனவாக இருந்தன என்று சொல்லுங்கள்? அவை அந்தக் கோட்பாட்டுக்கு எப்படி வலு சேர்த்தன அல்லது அதை மேம்படுத்த உதவின என்று விளக்குங்கள். அப்படி எதுவும் இல்லை என்பது நிதர்சனம்.

    அதனால்தான், வினவு, ம.க.இ.க சாதி எதிர்ப்பு அரசியலை பேசுகின்ற, நடைமுறையில் ஈடுபடுகின்ற எல்லோரையும் முத்திரை குத்தி அவமதிப்பதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    B. ரஞ்சித் பற்றி வினவு இங்கு துலக்கமாக ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர் “தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும்” செலக்டிவாக பேசுகிறார் என்று.

    இந்த அலட்சியப்பார்வையின் அடிப்படை எது? சாதி குறித்த சித்தாந்த ஓட்டாண்டித்தனமா? இல்லை சாதி ஆதிக்க பார்வை மேலெழுந்ததா? இரண்டுமேதான். முன்னது பின்னதை மேலெழுவதற்கான காரணமாக இருக்கிறது.

    சாதி பற்றிய வினவின் கோட்பாடு எவ்வளவு அபத்தமானது? அரை நிலப்பிரபுத்துவம் என்ற அதன் கோட்பாட்டு முடிவு எவ்வளவு அபத்தமானதோ அவ்வளவு அபத்தமானது.

    முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமை முறைகளைப் பற்றி ஆய்வு செய்ய “இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம்” என்ற நூல் மார்க்சின் குறிப்புகளை எடுத்துக் கொள்கிறது. மார்க்சின் அந்தக் குறிப்புகளில் இந்திய சமூகத்தின் தனிச்சிறப்பு அழுத்தம் திருத்தமாக சொல்லப்படுகிறது.*

    a. முதலில் மூன்று வகை சொத்துடைமைகளுக்கு இடையேயான வேறுபாடு

    “1. நிலத்தில் தனிநபர் சொத்துடைமை இல்லை. வெறும் அனுபோகம் மட்டுமே உண்டு என்கிற முறையில் சொத்துடைமை தனிநபரது சமூக வாழ்வால் பெறப்படும் சமூகச் சொத்துடைமையாக இருப்பது. [இந்தியா மற்றும் பிற ஆசியபாணி சமூகங்களின் சொத்துடைமை முறை]

    2. அரசு மற்றும் தனியார் சொத்துடைமை என்று அக்கம்பக்கமாக இரட்டைச் சொத்துடைமை வடிவம் இருப்பினும் தனியார் சொத்துடைமைக்கு முன்நிபந்தனையாக அரசு சொத்துடைமை இருப்பது. எனவே குடிமகன் மட்டுமே ஒரு தனி உடைமையாளர், ஆனால் அவரது சொத்துடைமை தனியாகவும் இருப்பது. [ரோமானிய பழங்குடி சமூகங்களின் சொத்துடைமை முறை]

    3. இறுதியாகத் தனிச்சொத்துடைமைக்கு துணையாக மட்டுமே சமூகச் சொத்துடைமை இருப்பது. தனிச்சொத்துடைமையே சமூகத்துக்கு அடிப்படையாகவும், உறுப்பினர்கள் கூடும் பொழுதும் பொதுத்தேவைகளின் போதும் மட்டுமே சமூகம் உண்மையில் நிலவுவது. [ஜெர்மானிய பழங்குடிகளின் சொத்துடைமை முறை]

    – ஆகிய இந்த வெவ்வேறு வடிவங்களிலான சமூக அல்லது பழங்குடி உறுப்பினர்களின் ஓரிடத்தில் குடியேறிய பழங்குடி நிலத்துடனான உறவு பழங்குடியின் இயற்கையான குணாம்சங்கள் மீது ஒரு பகுதியாகவும், உண்மையில் பழங்குடி நிலத்தின் உடைமை செலுத்துவதில், பலனை அனுபவிப்பதில், பொருளாதார நிலைமைகளின் மீது ஒரு பகுதியாகவும் சார்ந்து நிற்கிறது.

    உடைமை செலுத்துவதை, பலனை அனுபவிப்பதை தட்பவெப்பநிலை, நிலத்தின் தன்மைகள், அதைப் பயன்படுத்தும் முறை, பகைமையான அல்லது அண்டைப் பழங்குடியுடனான உறவுக் குடியேற்றங்களினால் ஏற்படும் திருத்தங்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் போன்றவைகளால் தீர்மானிக்கப்படுகின்றன.”

    (இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம், பக்கம் 58 – படிப்பதற்கு வசதியாக வாக்கியங்களை பிரித்து, வரிசை எண் தரப்பட்டுள்ளது, சதுர அடைப்புக் குறிக்குள் எனது குறிப்புகள்)

    இதில் 1-ல் சொல்லப்படுவது இந்தியாவில் நிலவிய பழங்குடி சமூக சொத்துடைமை முறை, 2-ல் ரோமானிய பழங்குடி சொத்துடைமை முறை, 3-ல் ஜெர்மானிய பழங்குடி சொத்துடைமை முறை. இந்த மூன்றிற்கும் இடையேயான வேறுபாடுகள் மார்க்சால் தெளிவாக சுட்டிக் காட்டப்படுகின்றன.

    b. குருண்ட்ரிச நூலில் இந்தப் பகுதியின் தலைப்பு “முதலாளித்துவ உற்பத்திக்கு முந்தைய வடிவங்கள் (மூலதன உறவுகள் உருவாவதற்கு முன்பிருந்த நிகழ்முறை பற்றி அல்லது ஆதித் திரட்சி பற்றி) உழைப்புக்குப் பதிலாக உழைப்பை பரிவர்த்தனை செய்து கொள்வது தொழிலாளரின் சொத்தின்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது”.

    இதற்கு முந்தைய பகுதியின் உள்தலைப்பு (சொத்துடைமை பற்றிய விதி எதிர்மறையாவது, தொழிலாளருக்கும் அவரது உற்பத்திப் பொருளுக்கும் இடையேயான உண்மையான அன்னியமான உறவு, உழைப்புப் பிரிவினை, எந்திரங்கள் பற்றி இடைக்குறிப்பு).

    இதற்கு அடுத்த பகுதியின் தலைப்பு “மூலதனத்தின் சுற்றோட்டமும், பணத்தின் சுற்றோட்டமும்”

    எனவே, இந்தப் பகுதியில் மார்க்ஸ் எழுதியுள்ள குறிப்புகளின் முக்கியமான நோக்கம், முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமை உறவுகள் அனைத்தையும் ஒரு புறமும் முதலாளித்துவ சொத்துடைமை உறவை மறுபுறமும் வைத்து இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை பரிசீலிப்பது. அந்த வகையில் முந்தைய சொத்துடைமை வடிவங்களின் பொதுத்தன்மைகளை வந்தடையும் அதே நேரத்தில் அவற்றுக்கு இடையேயான வேறுபாட்டையும் அழுத்தமாக சொல்லிச் செல்கிறார். இந்திய சமூகம் பற்றி ஆய்வு செய்யும் போது இந்த்க் குறிப்புகள் முன் வைக்கும் பிற சொத்துடைமை வடிங்களுடனான ஒற்றுமையின் அடிப்படையில் இந்திய சமூகத்தை வரையறுக்க முடியாது. மாறாக, மார்க்ஸ் சுட்டிக்காட்டும் வேறுபாடுகளை ஆய்வின் தொடக்கப்புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இந்தக் குறிப்புகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

    c. இந்திய சாதி முறை பற்றி

    1. “அனேகமாக எல்லா இடங்களிலும் வம்சாவழி கணங்கள், பகுதிவாரி கணங்களை விட காலத்தால் முந்தியவையாக இருந்தன. பகுதிவாரி கணங்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டன. அவற்றின் [வம்சாவழி கணங்கள்] மிக தீவிரமான, மிகக் கறாரான வடிவம் சாதிய [படிநிலை] வரிசை ஆகும், அதில் [கணங்கள்] ஒன்று மற்றொன்றிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. கணங்களுக்கிடையே திருமண உறவு உரிமை இல்லை, கணங்கள் மிகவும் ஏற்றத்தாழ்வான சலுகைகளைப் பெற்றவை. [கணங்கள்] ஒவ்வொன்றும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட, மாற்றிக் கொள்ள முடியாத ஒரு தொழிலைக் கொண்டிருந்தன.” (குருண்ட்ரிச – 409)

    (சாதியக் கட்டமைப்பு பற்றிய மிகச் சிறப்பான வரையறை. இந்த வாக்கியம் இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற நூலில் இடம் பெறவே இல்லை!)

    2. “[அடிமை முறை, பண்ணையடிமை முறை ஆகியவற்றுக்கு உரிய] அடிமைமுறையின் இந்தத் தன்மை கிழக்கத்திய பொது அடிமைமுறைக்குப் பொருந்தாது. இது ஐரோப்பிய கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது” (குருண்ட்ரிச 433) [கிழக்கத்திய பொது அடிமை முறையிலிருந்து ரோமானிய அடிமை முறை வேறுபட்ட தன்மையிலானது. ஆனால், இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற நூல் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்கிறது.]

    3. “பெரும்பாலான ஆசியபாணி நில வடிவங்களில் இந்த சிறு சமுதாயங்களின் மேல் நிற்கும் உச்சபட்ச அதிகாரம் [அரசன்] உச்சகட்ட உடைமையாளராகவும், ஒரே உடைமையாளராகவும் தோற்றமளிக்கிறது. உண்மையான சமுதாயங்கள் வெறும் பரம்பரை வழி பாத்தியதை உடையவர்களாகவே உள்ளனர்” (குருண்ட்ரிச 404)[இதில் இந்திய சமுதாயப் பொருளாதரப் படிவம் அரசனுக்கு நிலவுடைமை சொந்தமாக இருப்பதை மட்டும் வலியுறுத்துகிறது. பரம்பரை வழி பாத்தியதை பெறும் “சமுதாயங்களைப்” பற்றிய பரிசீலனைக்கு உள்ளே போகவில்லை.]

    d. இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற ஆவணம் இது போன்ற குறிப்புகளை சொல்லி விட்டு

    “ஆசியச் சொத்துடைமை வடிவம், மறுஉற்பத்தி முறை பற்றி மார்க்ஸ் மட்டுமல்ல, எங்கெல்ஸ், லெனின் ஆகியோரும் தெளிவாகவே விளக்கியுள்ளனர். பழம்பண்டு ஜெர்மானிய, ஸ்லாவினிய சொத்துடைமை வடிவங்கள் மற்றும் உற்பத்தி முறைகளைப் போன்ற முதலாளித்துவத்திற்கு முந்தைய சொத்துடைமை வடிவங்கள் மற்றும் உற்பத்தி முறைகளில் ஒன்றுதான் ஆசியச் சொத்துடைமை வடிவம் மற்றும் உற்பத்தி முறையாகும். சில பிரத்தியோகமான காரணங்களினால் இந்த வடிவமும் முறையும் எடுத்திருப்பினும், உலகெங்கும் நிலவிய முதலாளித்துவத்திற்கு முந்தைய வடிவங்கள், முறைகளின் சாராம்சத்தில் இருந்து வேறுபாடானதோ, விதிவிலக்கானதோ அல்ல” (பக்கம் 105)

    “சத்திரியர், பிராமணர், வைசியர், சூத்திரர், சண்டாளர் ஆகிய வர்ணங்கள் ஐரோப்பாவில் நிலவிய அரசு உயர்குடி, பிரபுத்துவ உயர்குடி, நிதி ஆதிக்க உயர்குடியான பாட்ரீஷியன்கள், உழைக்கும் நகர்ப்புற பிளெபியன்கள் மற்றும் விவசாயிகள் போன்ற சில பிரிவு வர்க்கங்கள் அடங்கிய ஒரே வகையினரான சமூக எஸ்டேட்டுகளையே குறிக்கும். சாதி அடிப்படையிலான குலத்தொழில்கள், குடிசைத் தொழில் மற்றும் விவசாயத்தின் ஐக்கியத்தைப் பராமரித்த வேளையில், வர்ண அடிப்படையிலான வைசிய சமூகப் பிரிவு, பண்ட உற்பத்தி மற்றும் வணிக வளர்ச்சிக்கான கூறுகளைப் பெற்றிருந்ததையே காட்டுகிறது” (பக்கம் 110)

    “இந்தியச் சமுதாயப் பொருளாதாரப் படிவத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பே கிடையாது என்பதில்லை. அதேபோல் பொதுச்சொத்துடைமை அடிமைமுறையையும் மறுப்பதற்கில்லை” (பக்கம் 109)

    “நிலப்பிரபுத்துவத்தின் சாராம்சம் தனிச்சொத்துடைமையோ, கைத்தொழிலும் விவசாயமும் வேறு வேறாக வளர்வதோ மட்டுமல்ல; அதன் பிரதானமான அம்சம் உழைப்பாளர் நிலத்தோடும் பிற உற்பத்திச் சாதனங்களோடு பிணைக்கப்பட்டிருப்பதுதான்; சாதிய அமைப்பு முறை, பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினை மூலம் சமூகத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதோடு, அதன் மூலம் நிலத்தோடும் உழைப்பாளனை பிணைத்திருக்கிறது” (பக்கம் 110)

    என்று முடிவு செய்கிறது.

    இவ்வாறு, ‘இந்தியாவின் சாதி முறை என்பது ஐரோப்பாவின் சமூக எஸ்டேட்டுகளில் இருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதில்லை’, ‘இந்தியாவிலும் நிலப்பிரபுத்துவ அமைப்பு இருந்தது, பொதுச்சொத்துடைமை அடிமை முறை இருந்தது’, எனவே ‘இந்தியாவுக்கும் ஐரோப்பிய சமூகங்களுக்கும் வேறுபாடு இல்லை’ என்று முடிவு செய்கிறது அந்த ஆவணம். அதன் அடிப்படையி்ல இந்திய சமூகத்தை அரை நிலப்பிரபுத்துவ சமூகம் என்று வரையறுக்கிறது. சாதி பற்றிய யதார்த்தத்தை திரை போட்டு மூடுகிறது.

    சாதி பற்றி மார்க்ஸ் கொடுத்திருக்கும் குறிப்புகளை பின்பற்றி அம்பேத்கரின் எழுத்துக்களையோ, அதற்குப் பிந்தைய வரலாற்று அறிஞர்களின் படைப்புகளையோ கருத்தில் கூட எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது. அதன் பிறகு 1990-களில் பெரும் அளவில் வெளியிடப்பட்ட ஆய்வுகளை “பின் நவீனத்துவம்”, “மார்க்சிய விரோதம்” என்று தாக்கிக் கொச்சைப்படுத்தி ஒதுக்கித் தள்ளியிருக்கிறது.

    இவ்வாறாக, வினவு குழுவினர் சாதி (இந்திய சமூகம்) பற்றிய கோட்பாட்டில் 1980-ல் செய்த தவறை திருத்திக் கொள்ளாமல், இன்று வரை வறட்டுவாதிகளாகவே தொடர்கின்றனர்.

    இது வினவு பரிதவிப்புடன் பரிசீலிக்க வேண்டிய‌ விஷயம். குறைந்தபட்சம் தன்னை இன்னமும் நம்பி வந்தடையும் வாசகர்களுக்கு நேர்மையாக இதைப் பற்றி வினவு பேசியிருந்திருக்க வேண்டும். மாறாக, “நீ‌ பெரிதா நான்‌ பெரிதா”, “யார் சுத்தமான‌‌ கம்யூனிஸ்டு” என ரத்த பரிசோதனை செய்யும் வகையில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

    பின்குறிப்பு : என்னைப் பற்றிய உங்கள் மதிப்பீடுகள் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

    குருண்ட்ரிச மேற்கோள்கள் நூலின் ஆங்கிலப் பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. (பக்க எண்கள் மார்க்சிஸ்ட் இன்டெர்நெட் ஆர்கைவ்-ன் பி.டி.எப் கோப்புடையவை)

  14. வணக்கம் சிவக்குமார் நண்பா உங்களின் நீண்ட பதிலுக்கு நன்றி..ஆனால் கம்யூனிச ஆசான்களும் கம்யூனிச நூல்களும் குறிப்பிடும் கருத்துக்களையும் அதன் காரணிகளையும் அனுதினமும் இங்கே மாறிவரும் தள அரசியல் நிகழ்வுகளுக்கேற்ப அதை பிரயோகம் படுத்த வேண்டாவா?அப்படி ஒரு சரியான திசைவழியில் வினவு நிச்சயமாக பயணித்துக்கொண்டிருப்பது உண்மையே…உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் நடந்தேறயுள்ள மற்றும் புரட்சியின் வழியாக மட்டுமே அது சாத்தியம்…தலித் உழைக்கும் மக்களின் விடுதலையானது பிறசாதிகளைச்சேர்ந்த உழைக்கும் மக்களின் ஐக்கியப் படுத்துதல் எனும் புரட்சிகர அரசியல் நடவடிக்கையின் மூலமாகவே சாத்தியப்படும்..அதை விடுத்து ஆர்.எஸ்.எஸ் ரசினி வழியே வேறு எந்த “ரஞ்சித்”பாதையும் கிடையாது.இதை மட்டுமேதான் பாட்டாளி வர்க்கத்திற்கே உரிய வார்த்தை அலங்காரமில்லாத மொழிநடையில் வினவு பதில் கண்டுள்ளது..இதை பரிசீலிப்பீர்கள் என்றேநம்புகிறோம்..விடுத்து இரண்டு தேநீர் குவளைகளுக்கிடையில் மல்லிப்பூ விழும் என பரியன் போல நீங்கள் காத்துக்கிடப்பீர்கள் என்றால் அது உங்களின் ரஞ்சித விருப்பம்..நாங்களோ உழைக்கும் மக்களின் சாதி உள்ளிட்ட விடுதலைக்காக முன்னேறிக்கொண்டேயிருப்போம்..நீங்களும் கரம் கோர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு..

Leave a Reply to ஊசி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க