காவியக் கம்பனின் இராமாயணம் முழுமையும் உரைகளுடன் 16,008 பக்கங்கள் PDF வடிவில் உங்கள் கைகளில்…

நண்பர்களே…

பொ. வேல்சாமி
பொ.வேல்சாமி

ம்ப இராமாயணத்தின் சிறப்பைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை. அதே நேரத்தில் மிகச் சிலருடைய கையில்தான் கம்ப இராமாயணம் நூல் முழுமையும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழின் மிகச் சிறந்த நூல்கள் எல்லாம் என்னிடம் இருப்பது போன்று தமிழ் காதலர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும் என்ற ஆவலில் பல நூல்களை உங்களிடம் PDF வடிவில் கொடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

அந்த வகையில் தமிழ்க் கவிதை அழகின் சிறப்புகளையெல்லாம் தன்னுள் கொண்டுள்ள கம்ப இராமாயணத்தை நீங்கள் அனைவரும் எளிமையாகப் படிக்க வேண்டும் என்ற ஆவலில் இந்தப் பதிவை தருகின்றேன். இதனுள் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழ்மொழியில் சிறந்த புலமைபெற்ற பல்வேறு அறிஞர்களைக் கொண்டு, கம்ப இராமாயணத்தின் பிழைகள் நீக்கப்பட்ட சிறந்த பதிப்பை ஆறு காண்டங்களுக்கான உரைகளுடன் 16 நூல்களாக பல்லாயிரம் பக்கங்களில் சிறப்பாக வெளியிட்டார்கள்.

அவற்றுள் அயோத்திய காண்டம் இரண்டு பாகங்களும் ஆரண்ய காண்டத்தின் ஒரு பகுதியும் PDF வடிவில் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக கம்ப இராமாயணத்திற்கு உரை எழுதி புகழ்பெற்ற வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரையுடன் பதிப்பித்த அயோத்திய காண்டத்தின் PDF-யும் ஆரண்ய காண்டத்தின் PDF-யும் இத்துடன் இணைத்துள்ளேன். இதனால் முழு நூலும் சிறந்த உரைகளுடன் உங்கள் கைகளில் தவழுகின்றது.

உரையின்றி கம்ப இராமாயணத்தைப் படிப்பதற்கு வசதியாக “கம்பன் கழகம்” மிகவும் சிறப்புடனும் அழகுடனும் ஒரு மூலப் பதிப்பை வெளியிட்டள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த நூலைப் படிக்க விரும்புபவர்கள் தமிழில் புலமைப் பெற்றவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஓரளவு தமிழ்ப் பயிற்சி உள்ளவர்களும் இந்த நூலைப் படித்துச் சுவைப்பதற்கு தகுந்த முறையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறி்ப்பிடத்தக்கது. அத்துடன் பேராசிரியர் சிவகாமி அவர்களால் கம்ப இராமாயணம் தொடர்பான செய்திகளையெல்லாம் தொகுத்து அமைக்கப்பட்ட நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நூலின் PDF வடிவமும் இத்துடன் இணைக்கபட்டுள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குறிப்பு : தமிழ்நாட்டில் கம்ப இராமாயணத்தை அச்சில் கொண்டு வந்தவர்கள் முதல்முதலாக “சுந்தரகாண்டத்தை” மட்டும் வெளியிடும் ஒரு மரபு இருந்திருக்கின்றது. இந்த மரபைப் பின்பற்றி அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் இந்நூலை வெளியிட்டுள்ளது. ஆகவே அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியிட்டிற்கான செய்திகளை “சுந்தர காண்டத்தில்” தான் பதிவு செய்துள்ளார்கள். எனவே நண்பர்கள் அந்த முன்னுரையைப் படித்துவிட்டு மற்றவற்றை பார்ப்பது நல்லது. கம்பன் கழக வெளியீட்டிலும் எழுதப்பட்டுள்ள முன்னுரையை வாசிப்பது கம்ப இராமாயணம் பற்றிய புரிதலை வளப்படுத்தும்.

கம்பராமாயணம் : இராமாவதாரம்

இராமாயணம் பாலகாண்டம் : முதற்பகுதி

இராமாயணம் : பாலகாண்டம்

கம்ப ராமாயணம் : இரண்டாவது அயோத்தியா காண்டம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம் : ஆரணிய காண்டம் இரண்டாம் பகுதி

ஸ்ரீ கம்பராமாயணம் மூன்றாவது ஆரணிய காண்டம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம் : கிட்கிந்தா காண்டம் முதற் பகுதி

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம் : கிட்கிந்தா காண்டம் இரண்டாம் பகுதி

இராமாயணம் சுந்தரகாண்டம் : முதற் பகுதி

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம் : சுந்தர காண்டம் இரண்டாம் பகுதி

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம் : யுத்த காண்டம் முதற் பாகம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம் : யுத்த காண்டம் இரண்டாம் பாகம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம் : யுத்த காண்டம் மூன்றாம் பாகம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம் : யுத்த காண்டம் நான்காம் பாகம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம் யுத்த காண்டம் : ஐந்தாம் பாகம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம் : யுத்த காண்டம் ஆறாம்பாகம்

கம்பன் களஞ்சியம்

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க