வியாசர் எழுதிய மகாபாரதம் – 18 தொகுதிகள் PDF வடிவில்…

நண்பர்களே…

பொ. வேல்சாமி
பொ.வேல்சாமி

டன்பாடாகவோ எதிர்மறையாகவோ இந்திய சிந்தனையாளர்கள், கவிஞர்கள், மதவாதிகள் காலங்காலமாக நாட்டுப்புறக் கலைகளை நிகழ்த்தி வந்த கலைஞர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்களின் மனங்களை பல்வேறு காலகட்டங்களில் தன் வசப்படுத்திய வியத்தக்க இதிகாசம் வியாசர் இயற்றிய மகாபாரதம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்த நூலின் மூல வடிவம் வடமொழியில் உள்ளதாகப் பொதுவாகக் கூறுவார்கள். ஆனால் அது முற்றிலும் சரியான தகவல் அல்ல. ஏனென்றால் ஜைன, பௌத்த மரபுகளிலும் இந்தக் கதைகள் பேசப்பட்டதாகத் தகவல்கள் உண்டு. எனவே பாலி பிராகிருத மொழிகளிலும் இந்தக் கதைகள் உலாவி வந்துள்ளது. உதாரணமாக “பஞ்சதந்திரக் கதை”கள் வடமொழியில் இருந்து வந்ததாகக் கூறுவார்கள். வேறுசில அறிஞர்கள் பஞ்சதந்திரக் கதைகளும் பாலி, பிராகிருத மொழிகளில் இருந்து வந்ததாகக் கூறியிருக்கின்றனர்.

சுமார் 10,000 பக்கங்களில் வடமொழியில் இருந்த இந்த நூலை ம.வீ.இராமானுஜாசாரியார் பல வடமொழி அறிஞர்களின் துணையுடன் 30 வருடங்களாக பெரு முயற்சி எடுத்து தமிழ்மொழியில் முழுமையாக வெளியிட்டு சாதனைப் படைத்தார். இந்தியாவில் வழங்கி வருகின்ற ஓரிரு மொழிகளில் மட்டுமே இத்தகைய மொழிபெயர்ப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறுகின்றனர். அதே நேரத்தில் வடமொழியில் உள்ள வாசகங்களை ஒன்றுவிடாமல் மொழிபெயர்த்தது தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டும்தான் என்று கூறுவார்கள்.

படிக்க:
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !

மனிதனின் பல்வேறு அனுபவங்களையும், மனப் பிரச்சினைகளையும் மிக நுட்பமாகப் பேசும் இந்நூல் ஒரே வகையான கருத்துகளை மட்டும் கூறவில்லை. அடிப்படையில் பல்வகையில் தன்னுள்முரண்பட்ட பலகருத்துகளையும் நூலின் பல பகுதிகள் பேசுவதை நாம் பார்க்க முடியும். சுருக்கமாகக் கூறினால் மனித குல வரலாற்றில் விளைந்த சிந்தனைகளின் பன்முகத் தன்மையைக் கொண்டுள்ள இந்தநூலை ஒரே கருத்தையே பேசுகின்ற நூலாக பலரும் தத்தம் மனநிலைக்கு ஏற்ப பிரச்சாரம் செய்து வருவது இன்றுவரை நடக்கின்றது.

இது ஒரு பொதுக் கருத்து போன்ற தோற்றத்தை அளிக்கின்றது. இத்தகைய முரண்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் கொள்கின்ற நண்பர்கள் எளிமையாகப் படிப்பதற்காக இந்த நூலின் எல்லா பாகங்களையும் ( 18 பாகங்கள் ) PDF வடிவில் உங்களுக்குக் கிடைப்பதற்கு வசதியாக இணையதள இணைப்பை இணைத்துள்ளேன்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

குறிப்பு : மகாபாரதத்தை முதன்முதலில் எழுதுபவர்கள் அல்லது அச்சிடுபவர்கள் பனிரெண்டாவது தொகுதியான “சாந்தி பருவ”த்தில் இருந்து தொடங்குவார்கள் என்று பாரம்பரியமாகக் கூறுகிறார்கள். (இராமாயணத்திற்கும் இதேபோன்ற கருத்து உண்டு. இராமாயணத்தை வெளியிடுபவர்கள் முதலாவதாக 5-வது காண்டமாகிய “சுந்தரகாண்டத்தை“ வெளியிடும் மரபு உண்டு. இந்த மரபின்படிதான் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கம்பராமாயணத்தை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. )

முதலாவதாக ஆதிபருவம் தொடங்கி ஏழாவதான துரோண பருவம் வரையான இணைப்புகளையும் அடுத்து பனிரெண்டாவதான சாந்தி பருவம் இரண்டு பாகங்களின் இணைப்பும் இந்தப் பதிவில் உள்ளது. மற்ற தொகுதிகளை அடுத்து வரும் பதிவுகளில் தருகின்றேன்.

“பகவத்கீதை” முழுமையும் “பீஷ்மபருவ”த்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“சாந்தி பருவம்” இந்திய நாட்டின் பாரம்பரியமான அரசியல் சிந்தனைகளை அர்த்த சாஸ்திரம் பேசுவது போல பேசும் ஒரு முக்கியமான பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

மகாபாரதம் பற்றிய மிகச் சிறப்பான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை டாக்டர் அம்பேத்கார் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையை வாய்ப்புள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

வியாசர் எழுதிய மஹாபாரதம் 1. ஆதிபர்வம்

வியாசர் எழுதிய மஹாபாரதம் 2. ஸபாபர்வம்

வியாசர் எழுதிய மஹாபாரதம் 3 : வன பர்வம் (முதற்பாகம்)

வியாசர் எழுதிய மஹாபாரதம் 3: வனபர்வம் (இரண்டாம் பாகம்)

வியாசர் எழுதிய மஹாபாரதம் 4 : விராடபர்வம்

வியாசர் எழுதிய மஹாபாரதம் 5 : உத்யோகபர்வம்

வியாசர் எழுதிய மஹாபாரதம் 6 : பீஷ்மபர்வம்

வியாசர் எழுதிய மஹாபாரதம் 7 : துரோணபர்வம்

வியாசர் எழுதிய மஹாபாரதம் 12 : சாந்திபர்வம் (மோக்ஷிதர்மம்)

வியாசர் எழுதிய மஹாபாரதம் 12 – சாந்திபர்வம் 2

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க