கேள்வி : சீமான் பேச்சு பொய்யானதாய் இருக்கு, ஆனால் அவர் தொண்டர்கள் அப்படியே நம்புகின்றனர் என்ன காரணம்?

பால்ராஜ்

ன்புள்ள பால்ராஜ்,

ரஜினிக்கு தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன, என்னென்ன நதிகள் ஓடுகின்றன, எந்தெந்த தொழில்கள் தமிழகத்தில் இருக்கின்றன, தமிழக மக்களின் வேலை வாய்ப்பு என்ன, விவசாயிகளின் பிரச்சினை என்ன, என்ன.. என்ன… என்பது கடுகளவு கூடத் தெரியாது. ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக ஆவேன், அதிசயம் அற்புதம் நடக்கும் என்கிறார்.

அவரது வீட்டுக்கு வெளியே 24 மணிநேரமும் தொலைக்காட்சிகள் காத்திருக்கின்றன. அவர் வெளியே வரும் போதெல்லாம் உளறும் ‘அரிய’ கருத்துக்கள், செய்தி தொலைக்காட்சிகளில் ஒரு வார மாலை நேர விவாதத்தை எடுத்துக் கொள்கின்றன. இதற்கு மேல் குறிப்பிடத்தகுந்த அளவில் மக்கள் ரஜினியை, “ஏதாச்சும் செய்வார், ஊழல் செய்யாத நல்ல மனுஷன்” என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை திராவிட இயக்கத்தின் தோல்வி, இரண்டு கட்சிகளுக்கு புதிய மாற்று, ஆன்மீக அரசியல் அது இது என பார்ப்பனிய ஊடகங்களும் – ‘அறிவாளிகளும்’ ரஜினியை பிராண்டிங் செய்கின்றனர்.

அதே போன்று கமல். நான் இடதும் இல்லை, வலதும் இல்லை நடு சென்டர் என்று… எல்லாவற்றிலும் உளறுவதே இவரது வாடிக்கை. இவருக்கும் நகர்ப்புறங்களில் மூன்று சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றன. தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டோம், இத்தேர்தல் இரண்டு பெரிய கட்சிகள் நடத்தும் நாடகம் என்று ஏதோ தியாகம் செய்வது போல பிதற்றுகிறார் கமல்.

பாராளுமன்றத் தேர்தலில் ஊர் ஊராய் சுற்றி வந்து பேசியதில் ஒன்றையும் பிடுங்க முடியவில்லை எனும் போது உள்ளாட்சி தேர்தலுக்காக கிராமம் கிராமமாக சுற்ற ஒரு ‘கேரவன் சொகுசு’ நடிகர் தயாராக இருப்பாரா? அவரைப் பொறுத்தவரை ஜெயா போல நோகாமல் நொங்கெடுப்பதற்கு மட்டுமே தயார்.

விட்டால் ஐ.நா. சபை செயலராக அவரைத் தெரிவு செய்தால், அதற்கு தான் மட்டுமே தகுதியானவன் என்று அற்பத்தனமாக நம்புகிறவர் இந்த ‘நம்மவர்’. கமலையும் கூட “ஏதாச்சும் நல்லது செய்வார், ஊழல் செய்யாத உத்தமர்” என்று சிலர் நம்புகின்றனர். அதையும் பார்ப்பன ஊடகங்கள் – அறிஞர்கள் அடங்கிய வலைப்பின்னல் பாஜக-வின் நலன் கருதி பிரமோஷன் கொடுக்கின்றனர்.

படிக்க:
சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
♦ உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் !

இப்படி இருக்கும் போது சீமானை அவரது தொண்டர்கள் நம்புவதில் ஆச்சரியமில்லை. கமல், ரஜினி போல இல்லாமல் சீமான் எல்லாத் தேர்தல்களிலும் நிற்கிறார். ஊர் ஊராக சுற்றுகிறார். வந்தேறிகளை விரட்டி தமிழகத்தை காக்க நான் முதலமைச்சராக மாறவேண்டும் என்று முழங்குகிறார். கூடவே சப்பாத்தி முதல் வெள்ளைச் சீனி வரை எப்படி இந்திக்காரன் நம்மை கெடுத்து விட்டான் என்று உடல் நலம், மண் வளம், காட்டு வளம், மலை வளம், சூழல் வளம், பண்பாட்டு வளம் என்று ஒவ்வொரு வளத்திற்கும் பெரிய கதை, வரலாறு, புராணத்தை வைத்து அடித்து விடுகிறார். பேசும் போது கையை தூக்கியும், புஜங்களை உயர்த்தியும், கண்களை உருட்டியும், குரலை தெறிக்கச் செய்தும் பேசுகிறார். இவ்வளவு உழைப்பு போடுபவரை சாமானியர்கள் அந்த உழைப்பைப் பார்த்தாவது நம்பாமல் இருப்பார்களா என்ன?

என்ன, ரஜினி, கமல் போன்று ஊடக ஆதரவோ, பார்ப்பனிய அறிஞர்களின் ஆசியோ சீமானுக்கு இல்லை. அதே நேரம் முற்றிலும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்த குறிப்பாக தி.மு.க.விற்கு எதிராக சீமானை கொம்பு சீவி விட இவர்கள் ஆதரிக்கின்றனர். நாம் தமிழர் தம்பிகளோ தமிழனம் ஆண்ட இனமாக ஆட்சியில் இல்லை என்பதே அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம் என்று நம்புகின்றனர். அவர்களில் பலர் சீமானைப் போலவே பேசுகின்றனர். உடல் மொழியிலும் காட்டுகின்றனர்.

மக்களில் அரசியலற்றவர்கள், அவ்வப்போது வரும் பிரச்சினைகளுக்கேற்ப அரசியல் பேசுபவர்கள், முன்னணியாக அடிப்படை அரசியலை புரிந்து கொள்பவர்கள் என்று மூன்று வகையினர் இருக்கின்றனர். தோராயமாக இதில் முதல் வகையினர் 70%, இரண்டாவது வகையினர் 20%, மூன்றாவது வகையினர் 10% இருக்கக் கூடும். முதல் வகையினர்தான் சினிமாவில் ஏழைகளின் தோழனாக மேக்கப் போட்ட ராமாவரம் தோட்டத்து எம்ஜிஆரை சாகும் வரை முதலமைச்சராக அழகு பார்த்தார்கள். அதே போன்று ஜெயாவையும் மதித்தார்கள். தனது காலத்தில் அனைத்து தொழிலாளர் போராட்டத்தையும் ஒடுக்கி, அமைச்சர்கள் ஆதரவாளர்கள் பலரை இன்றைய சுயநிதிக் கல்லூரி நடத்துமளவு புறம்போக்கு நிலங்களை அள்ளிக் கொடுத்து ஒரு கோமாளி பாசிஸ்டைப் போன்று நடந்து கொண்ட எம்ஜிஆரை இந்த ஊர் நம்பும் போது ரஜினியை ஏன் நம்பாது?

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போதும் முன்னர் கண்ட பத்துசதவீத மக்களின் அரசியல் வெகுமக்களின் பேசுபொருளாக இருந்தது. ஆனால் அதன் ஆயுள் குறைவு. அதனால்தான் அத்திவரதர் எனும் ஒரு புரட்டு, புராண லீலையிலும் இலட்சக்கணக்கான தமிழக மக்கள் கலந்து கொண்டனர். தமிழக மக்களை அரசியலற்ற வகையினராக இருக்கச் செய்வதில் இங்கிருக்கும் ஊடகங்கள், சினிமா, சீரியல்கள், இவைகளுக்கான நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள், தன்னார்வக் குழுக்கள், நடுத்தர வர்க்க அறிஞர்கள் போன்று பல காரணங்கள் இருக்கின்றன.

இவையே அதிமுக, பாஜக, ரஜினி, கமல் போன்ற கட்சிகளுக்கு பலம். அரசியலற்ற முறையில் அரசியல் பேசுவது, பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, பாபர் மசூதி தீர்ப்பு போன்றவற்றை ஆதரித்துக் கொண்டே தம்மை தேசபக்தர்கள் என்று நம்பச் சொல்வது போன்றவற்றை செய்கிறார்கள். திமுக, சிபிஎம் போன்ற கட்சிகள் ஓரளவு அரசியல் பேசினாலும் அரசியலற்ற மக்களை பிரச்சாரம் செய்து மாற்றுவதற்கு பதில் சில நேரங்களில் அவர்களும் அதிமுக-பாஜகவோடு போட்டி போடுகிறார்கள். (அயோத்தி தீர்ப்பை வரவேற்றது ஒரு சான்று.)

படிக்க:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
♦ விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

இந்தச் சூழ்நிலையில் இந்திய அளவிலான பொருளாதார நெருக்கடி தமிழகத்தையும் பாதித்திருக்கிறது. எட்டுமணிநேரம் ஆட்டோ ஒட்டிய ஓட்டுநர் தற்போது பதினைந்து மணி நேரம் ஓட்டினால்தான் வீட்டிற்கு படியளக்க முடிகிறது. ஐ.டி துறையிலோ வேலை நீக்கம் என்பது கணினி திரைக்கு வெளியே எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு தொழிலாளியோ, ஒரு ஐ.டி ஊழியரோ தெலுங்கர்கள்தான் தமிழக வேலை வாய்ப்பை பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சீமான் பேசினால் அதை நம்புவதற்கான முகாந்திரம் இருக்கிறது. இத்தகைய இனவாதம் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்றாலும் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தொட்டத்தறியத்தக்க எதிரிகளை காட்டினால் நம்புகின்றனர். எனவே சீமான் தனது இனவாத அரசியலை மேலும் மேலும் உணர்ச்சிகரமாக முன்வைக்க முன்வைக்க அது சிறிதளவான மக்களை பற்றுவதும், தொண்டர்கள் அதை தீவிரமான இலட்சியவாதமாக ஏற்பதும் நடக்கிறது.

விஜயகாந்த அரசியலுக்கு வந்த போது அவரும் இரண்டு திராவிட கட்சிகளை திட்டி ஊர் ஊராக சுற்றி வந்தார். தனித்து போட்டியிட்டார். எட்டு அல்லது பத்து சதவீத வாக்குகளைக் கைப்பற்றினார். அப்போது அரசியல் அரங்கில் அவருக்கான செல்வாக்கு அதிகரித்து பின்னர் கூட்டணியில் சேர்ந்தார். எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்தார். பின்னர் தனது தனித்துவத்தை இழந்து சென்ற தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை அனைத்து கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அம்பலப்பட்டு போனார்.

அவரது ஆரம்பகால அரசியலில் அப்போது வந்து சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்துடன் சுற்றுப்பயணம் சென்ற போது, ஆங்காங்கே திரண்டு நிற்கும் மக்களைப் பார்த்து எம்ஜஆருக்கு பிறகு இப்படி எல்லா இடங்களிலும் பெருங்கூட்டம் கூடி நிற்பது உங்களுக்குத்தான் என்று விஜயகாந்திடமே சொன்னாராம். (ஆனந்த விகடனில் வந்த செய்தி) அப்போது விஜயகாந்த் என்ன ஒரு மிதப்பில் இருந்திருப்பார்? இப்போது அவர் அனாதை  போல அரசியலில் ஓரங்கட்டுப்பட்டு விட்டதையும் அதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இன்றைக்கு ரஜினிக்கு என்ன தெரியும் – தெரியாதோ, அதேதான் விஜயகாந்திற்கு அன்று தெரியும் – தெரியாது. திரைப்படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடி, நேர்மையான போலீஸ்காரனாக போராடி, நேர்மையான அதிகாரியாக பணியாற்றி, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் மக்கள் போராளியாக… இப்படியாக நடித்து உருவான விஜயகாந்தின் இமேஜை மக்கள் அப்போது நம்பினார்கள். அதாவது அரசியலற்ற பிரிவினரான அந்த 70% மக்களில் சிலர் இவர் நல்லவர், வல்லவர், நாட்டிற்கு ஏதாச்சும் செய்வார், ஊழல் செய்யாதவர் என்று வாக்களித்தார்கள்.

வாக்கு வங்கி அரசியல் முற்றிலும் அம்பலப்பட்டுப் போன நிலையில் இருக்கும்  பழைய பெருச்சாளிகளை மக்கள் முற்றிலும் நம்ப முடியாமல் வேறு வழியின்றி அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். இதில் புதிய முதலைகள் வரும் போது அவர்களுக்கும் கொஞ்சம் வாக்களிப்போம் என்று யோசிக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் சீமானின் அரசியல் வாழ்க்கை துவங்குகிறது. அதே நேரம் அவர் முன்வைக்கும் மாற்று அரசியலின் அடிப்படை இனவாதத்தில் இருந்தாலும் அந்த மாற்று திட்டங்களை இன்றைய அரசியல் அமைப்பின் தோல்வியைக் கண்டு நொந்து போன சிலர் ஏற்கவும் செய்கின்றனர். ஏனெனில் இன்றைய அரசியல் கட்டமைப்பையும் அதன் தோல்வியையும் ஒரு சமூக அமைப்பு என்றில்லாமல் சில தனிநபர்கள் – கட்சிகளின் தோல்வி என அவர்கள் அரசியலற்ற முறையில் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !
♦ வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் !

ஜெயா, கருணாநிதி மறைவிற்கு பிறகு தான் ஒரு ரவுண்டு வரலாம் என்று மனப்பால் குடித்த சீமானுக்கு இன்று கமல், ரஜினி என்று இரண்டு பால்பவுடர் பால்கள் வெறுப்பேற்றுகின்றன. எனவே சீமானை இன்னும் எத்தனை நாளைக்கு அவரது தொண்டர்கள் நம்புவார்கள் என்பதும் கூட மனப்பால்தான்.

அரசியலற்ற மக்களின் பெரும்பான்மையை வைத்து நாம் சோர்ந்து போகலாமா? தேவையில்லை. இன்றைக்கு இணையத்தில் அரசியலற்ற பிரிவினரை விட அரசியலை குறிப்பாக பேசும் முற்போக்கு பிரிவினர் அதிகரித்து வருகின்றனர். அதனால்தான் கோபேக் மோடி என்ற முழக்கம் இங்கே இணையத்தில் தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இணையத்தில் இருக்கும் இந்த முற்போக்கு விழிப்புணர்வு மெய்யுலகிலும் பரவவேண்டும். பரவும். அப்போது ரஜினி, கமல், விஜயகாந்துகளுக்கு இடமில்லை என்பதோடு உணர்ச்சிகரமாக இனவாத அரசியலை முன்வைக்கும் சீமானும் திண்டாட வேண்டியிருக்கும்.

அதாவது அரசியல்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து பிற்போக்காய் அனைத்தையும் நம்பும் தொண்டர் கூட்டம் கிடைப்பது கடினம். ஆனால் வரும் தேர்தலில் இத்தகைய சிரமங்கள் ஏதுமின்றி அவர் ஒரு ஓரமாய் பேசும் நிலைமையே இப்போதைய அரசியல் சூழலின் யதார்த்தம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

24 மறுமொழிகள்

  1. கேட்ட கேள்விக்கும் உங்களின் பதிலுக்கும் எதாவுது சம்பந்தம் இருக்கிறதா ? சீமானை பற்றி கேள்வி கேட்டால் ரஜினியை திட்டி கொண்டு இருக்கிறீர்…

    • மக்களுக்காக போராடுவது போல் காட்டி கொண்டு கருணாநிதி குடும்பத்தை காப்பது தான் இவர்களின் முழு நேர தொழில்… இன்னுமா உங்களுக்கு புரிய வில்லை நண்பரே…?

      • மணி ஐயர்வாளும் நோக்கு நண்பர்தானா ..

        நல்லா இனமும் இனமும் சேந்திருச்சு போலியே… மத வெறி பாசிஸ்டுகளும் இன வெறி பாசிஸ்டுகளும் கைகோர்த்து கதறுரேளே…

        கதறுங்கோ… கதறுங்கோ….

  2. வினவுவின் பார்வையில் கருணாநிதியின் ஆட்சி காலம் தான் பொற்காலம்…. “பாலும் தேனும் தமிழகத்தில் ஓடிய காலம்”…. வேண்டின காசுக்கு மேலால கூவுகிறிங்களே… பாவம்…! மக்களுக்கு எல்லாம் தெரியும். ஒவ்வொருத்தன் கையிலும் google இருக்கு…. இனி மக்களை ஏமாற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை ஆசிரியரே…!

    • சயண்டன் – கூகுள்ல தேடுறது இருக்கட்டும்… வினவுல தேடிப் பாரும் ஓய்… கருணாநிதின்னு…

      உங்க நொண்ணன் பிரபாகரன் தலையக் கேட்டவளை எல்லாம் ஈழத் தாய்னு சொன்ன மாதிரி எல்லாரும் இருப்பாங்கோன்னு நெனச்சேளா !

  3. நம் ஊரில் ஒரு சொலவடை உண்டு.குட்டை மீது கோபம்கொண்டு கால் கழுவுமால் போனராம் ஊர் நாட்டாமை.இப்படித்தான் இருக்கிறது மணிகண்டன்,சேந்தன் கோபம்.ஜெயா ஆட்சி காலம் தான் பொற்காலம்…. “பாலும் தேனும் தமிழகத்தில் ஓடிய காலம்”…என்பதில் இவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனவேதான் அதற்கு எதிரான கருத்துக்கொண்ட வினவு தளத்தை பார்ப்பதே தீட்டு! என்ற தனது அடிமனது அரிப்பை கருணாநிதி தட்டி வைத்து மறைக்கிறார்கள்.
    “வேண்டின காசுக்கு மேலால கூவுகிறிங்களே… பாவம்…! மக்களுக்கு எல்லாம் தெரியும். ஒவ்வொருத்தன் கையிலும் google இருக்கு…. இனி மக்களை ஏமாற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை ஆசிரியரே…!”என்கிறார்கள்,உண்மைதான் அதனால்தான் go back modi யும் சீமானின் ஆமைக்கறியும் தமிழகத்தில் டிரண்டாகிறது.

  4. தாங்கள் அளித்துள்ள பதில், கேள்விக்குப் பொருத்தமாக இல்லாமல், எங்கெங்கோ தொட்டு செல்கிறது. கேள்வி கேட்டவருக்கும், அல்லது அதை படிப்பவர்களுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக இல்லாமல் எங்கோ ஆரம்பித்து எங்கோ கொண்டு செல்கிறீர்கள். பதில் இதுதான் என தெளிவாக சொல்லாமல், தங்களது கருத்துக்களை எல்லாம் கொட்டிவிட்டு, அதில் உனக்கான பதிலை தேடிக்கொள் என்பதுபோல் உள்ளது. சீமானின் தொண்டர்கள் பற்றிய கேள்விக்கு பொதுவான மக்களைப் பற்றிக் கூறியிருப்பதுபோல் உள்ளது. ஆரம்பமே சரியில்லை தோழர்களே,
    கேள்வியை ஒட்டி பதில் சொல்ல ஆரம்பிக்கும்போதுதான் அதில் முழுமையாக ஒன்ற முடியும். அப்படியில்லாமல், வேறு ஏதோ ஒன்றிலிருந்து ஆரம்பிக்கும்போது எரிச்சலடைய வைக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டு, இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வண்ணம் பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

  5. இந்த பதிலை அண்ணன் சீமான் படித்தால் அவரே தன் அரசியல் பார்வையை சுயபரிசீலனை செய்து கொள்ள நேரிட்டு விடும் என்றே கருதுகிறேன்…நிலா நண்பா மீண்டும் ஓரிருமுறை பதிலை படிக்குமாறு பணிவுடன் கோருகின்றேன்..ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்தை புரிந்து கொள்ள புரிதலில் வேறுபாடு இருக்கலாம் தவறில்லை..ரசினி கமல் போல குப்பைகளாக அன்றி சீமான் வேறு தளத்தில் தான் பயணிப்பதாக நினைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்…அதன் வழி விமர்சித்தே இந்த பதில் இருக்கிறது.. ரெண்டு வரியில் சம்பிரதாயமாக பதில் சொல்லி விட்டுப் போக வினவை நாம் விட்டு விடுவோமா என்ன…

    • ///சீமான் வேறு தளத்தில் தான் பயணிப்பதாக நினைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்/// அது என்ன தளம் என்று கண்டுபிடித்து சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

      ஒருவேளை ஊரில் உள்ள முதியவர்களின் வீடுகளில் வாடகை கொடுக்காமல் இருந்து கொண்டு அந்த வீடுகளை ஆட்டையை போடுவது தான் அவரின் அரசியல் தளமாக இருக்குமோ ?

    • ஆமாடா தற்குறி, உங்களை ஒரு ஆள் மதிச்சு பேசுனா நாங்க பைத்தியக்காரன் தான்டா.

  6. என்ன வினவு, உன்ன என்னென்னமோ நினைத்தோம்.. நீயுமா?

    நீங்க அறிவுத்தலதில் செயல்பட்டு வருகின்றீர்கள் என்று நினைத்தோம்..

    சீமானை விடுங்க, ஐயா.மணியரசன் க்கு பதில்??
    வருமா??
    துணிவு இருக்கா உண்மை பேச?
    உன்னை வினவுகிறேன்

    • சரவண செல்வன்,

      மணியரசன் எல்லாம் ஏற்கெனவே டவுசர் கழட்டப்பட்ட கேசு ஐயா…

      தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி

      மேலே போட்டிருக்க வரியை வினவு இணையதளத்துல தேடிப் பாருங்க …

      மணியரசன் தொடங்கி சீமாண்டி வரைக்கும் இனவெறி பாசிஸ்ட்டு பயலுவலா தான் இருக்கானுக ஓய் …

        • ஆனால் எல்லோரும் ஒரு hidden agenda வைத்திருக்கிறீர்கள்.
          கருணாநிதிக்கு soft குத்து குடுக்கும் உங்களை இப்போது முதல் சந்தேக பார்வையில் வைக்கிறேன்.

          பிரபாகரன் பற்றி வினவின் நிலை சொன்னால் உங்களை எடைபோட வசதியாய் இருக்கும். சே, சுபாஸ், பகத், வரிசையில் பிரபாகரன் என்கிறேன் நான். உமது வாதம்?

          துரோகத்தால் வீழ்ந்த இனம், இனி ஒருவனையும் சீர் அறியாமல் விடப்போவது இல்லை

  7. //அது என்ன தளம் என்று கண்டுபிடித்து சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.//
    இவன் வேற…
    குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு…!

  8. கட்டுரையை பற்றி..

    “சீமான் பின்னாடி yean இளைஞர்கள்? Yean நம்புகிறார்கள் அவரின் பேச்சுக்களை? ”

    அவர் பேச்சு பொய்யா உண்மையா? என்று ஆராய்ந்து பார்த்தீர்களா? நான் பார்த்தேன்..

    நம்ம ஊர்ல கொக்கு கறி போல, அது ஒரு exotic dish in Ceylon but it is banned.
    74ak புலிகள் வைத்திருப்பது உண்மை என்று பல sources இருக்கு.. உங்கள் கண்களில் பட வில்லயா.. இல்ல மூடிகிட்டிங்களா? மூடுனது திருட்டு திரவிடபாசமா?

    இட்லி matter, பாலியல் பலகாரம் முன்னாடி adhu Oru matter eh illa

    வேறென்ன?

    எனக்கு வயசு 32, நாடார் வீட்ல பொறந்த டா..(சீமானை ஆதரிக்க இது ஒரு காரணம்னு நீங்க சொல்லிவிட கூடாது) நான் பள்ளி காலத்துல கம்யூனிஸ்ட் யா.. மதுரை ஓட்ல என் ப்பங்கு இருக்கு.

    Iyya நல்லக்கண்ணு தவிர்த்து, TN la Oru செயல் பாடாளர் கண்ணுல தெரியல.. கம்யூனிஸம் படிச்சு இரத்தம் சூடேறி கிடந்த நேரத்துல ஒரு unique கம்யூனிச தலைவரும் இல்ல செயல்பட.. அப்போ தெரிஞ்சது இவனுங்க பகோடா கோஸ்டி… நான் TN communist தலைவர்களை சொல்கிறேன் , களத்தில் லத்தி அடி வாங்கும் போராட்ட communist களை சொல்லல. அப்படி போரடுற கம்யூனிஸ்ட் ல மேல வரல… நாயுடு naicker occupation in all political lobby.

    போராட்டம் போணமா, தெருவ சுத்தம் பண்ணாம, கம்யூனிஸம் பற்றி நண்பர்களுக்கு உணர்தினோமண்ணு என் காளை பருவம் ஓய்ந்தது..

    2009 என் இன துரோகிகளை கண்ணுல காமிசது..

    கயறு இழுக்கும் போட்டியில்.. ஒரு பக்கம் பார்ப்பனியம், அரசு ஆதிக்கம், corporate சதிகள், மறு பக்கம், தற்ச்சார் பொருளாதாரம், பெரியார், அம்பேத்கார், அண்ணா, திராவிடம், கம்யூனிஸம் னு நெனச்சேன்…
    இப்போ தான் புரியுது, திராவிடம் இழுக்கிற மாதிரி இழுத்து விட்ரும்னு, கம்யூனிஸம் leaders dead weight nu..

    இவனுங்க எல்லோரையும் இழுக்க தமிழ் இனம் மானம் மட்டும் தான் இருக்கு.. அது வெறினு தெரிஞ்சா.. எங்க தப்பு இல்ல.. மழுங்கிய மானம் துளிர் விட கொஞ்சம் வெறி வேண்டும்..

    Periyarism கும் சுய மரியாதைக்கும் இடைவேளை வந்து பல வருடங்கள் ஆகி விட்டது

    பழனி பாபா சொல்ற மாதிரி “எதிரிகளை கூட விட்டுடலம் டா, நம்ம colour la இருந்துகிட்டு, நம்ம மொழி பேசிட்டு, நம்ம இரத்தம் குடிக்கும் இன துரோகிகளை.. ..
    **** செய்யாம விட மாட்டோம்.. ”

    பாசிச வெறி பிடிச்ச நாய்ங்களையும், கூடவே இருந்து காட்டி குடுக்கும், பேடிகளையும் அவர்களின் சதியை கருவருப்போம்

    • ஐயோ பாவம் யாரு பெத்த புள்ளையோ தெரியல இப்படி சீமான் பேச்சை கேட்டு கேட்டு பைத்தியம் பிடிச்சு தெரியுது

  9. HOW MUCH DMK PAYING TO VINAVU MONTHLY?

    NO CARE ABOUT NATURE NALLA KOLAYATCHU VARISU ARASYAL PANUNGA!!!
    ANTHA PAPOON KOOTAMUM SENTHU SRAYAM VITHU UNGA FAMILY ELLAM NALLA IRUKATTUM!!!

    VINAVU FAMILYUM SETHU THAN!!!

    Yappa Mani unaku enna payment tharanga?

    INTHA ECONOMICLA ROMBA KASTAMA IRUKU ATHUNALA NANUM UNKAKOODA SENTHU
    KOOVALAMNU IRUKEAN KONJAM PATHU SEINGA!!!

    VAZHKA THRAVITA DMK, ADMK etc… etc…

    EPO COMMUNIST KATCHIKAL 40 Cr VANGINENU Mr. ARUNAN ORU UNARCHIYE ILAMA SMILIMG FACE SONARAYO…

    THOOOO NEENGALUM UNGA COMMUSNISM EERA VENGAYAMAMUM…

    ARASIYAL ARIVU UNGALUKU MATUM THAN IRUKUNU NEIKIRA METHA THANEME ASIGAMA IRUKU!!!

    • CPM வாங்கி தின்னது அருணன் மூலமாக தெரிஞ்சது,, CPM in உச்சி குடுமி ரெங்கராஜன், OC reservation bill ஐ ராஜ்யசபாவில் ஆதரிக்கும் போது தெரிந்தது…

      வினவு, கொஞ்சம் விளக்கம் கொடு

  10. திமுக, சிபிஎம் போன்ற கட்சிகள் ஓரளவு அரசியல் பேசினாலும் அரசியலற்ற மக்களை பிரச்சாரம் செய்து மாற்றுவதற்கு பதில் சில நேரங்களில் அவர்களும் அதிமுக-பாஜகவோடு போட்டி போடுகிறார்கள். (அயோத்தி தீர்ப்பை வரவேற்றது ஒரு சான்று.)

    ITHU ENAPA MAMIYAR ODACHA MAN SATTI MARI IRUKUTHU!!!

    (அயோத்தி தீர்ப்பை வரவேற்றது ஒரு சான்று.) – NALLA CHANTRU ELATHUKUM ARIKAI VITRAUTHU

    Ayo inga iruka ella politiciankum(SEEMANUKUM sethu than) konjam arivaikudu samy!!!
    aduthu generation achum konjam Sciencelaum technologiyalum valaratum

    Antha manusan(PERIYAR) ila ungala Urikiraththuku – To explain to grow on Science/including political science!!!

    Aparom avarukitayum(PERIYAR) oru iina pasam irukuthu nalla theriyuthu historyla
    Mozhi vari manilam pirikumpothu – konjam velila vanthutaru PERIYAR in this basis!!!

  11. கோபம் கொள்ளாதீர்கள் சரவணசெல்வன் நண்பா..இந்த 32 வயதிற்குள்ளாகவும் தொடர்ந்து அரசியல் களத்தில் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.யாருக்காக மக்களுக்காகத்தானே?அப்படியெனில் ஐயா நல்லகண்ணு அவர்களுக்காக நீங்கள் அந்தக்கட்சியிலேயே இருந்திருக்கலாமே ஏன் வெளிவந்தீர்கள்..அக் கட்சியின் கொள்கை முரண்பாடால்தானே?அதைப்போலவே சீமான் அவர்கள் உணர்ச்சிமிகுதியில் அனைத்தையும் பேசுகிறார் சரி..ஆனால் அவற்றை அடையும் வழி என்ன என்றால் ஓட்டு போடுங்கள் என்கிறார்..தமிழர் ஆளவேண்டும் என்கிறார்..ரசினியை எதிர்க்கிறார்..விச(ஜ)யை வரவேற்கிறார்..ரசினி அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார் விசய் வரலாம் என்கிறார் ரசினிக்கும் விசய்க்கும் அப்படி என்ன வேறுபாட்டைக் கண்டார்? அன்றைய காலச்சூழலில் தமிழினத்தின் நலன் சார்ந்தே பெரியார் பார்ப்பனர்களும் தமிழர் என்ற அடையாளத்தோடு தமிழினத்தை கபளிகரம் செய்து விடக்கூடாது என்றெண்ணியே திராவிடம் எனும் அரசியலை முன் வைத்தார்..பெரியாரையும் புறந்தள்ளுகிறார் சீமான்.. அந்தக் கிழவன் தான் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினார்..தமிழா இன உணர்வு கொள் என்றார்..சாணாபயலெல்லாம் ஆளவந்துட்டான் என்று சாதி வெறி பேசிய மு.ரா வைப்போற்றுகிறார்..இப்படி சீமான் அவர்களின் முரண்களை சொல்லிக்கொண்டே போகலாம்..போகட்டும் மக்களுக்காக களத்தில் நிற்கும் சரவணசெல்வன் அவர்கள் இன்னும் சில ஆண்டுகள் கழித்து வருந்துவதை விட இன்றே சரியான அரசியல் இயக்கம் கண்டு மக்களுக்காக போராட மீண்டும் வாழ்த்துக்கள்..ஏனெனில் சீமான் பாரதியையும் பாட்டன் என்கிறார் பகத்சிங்கையும் பாட்டன் என்கிறார்..

  12. நன்றி சரவணசெல்வன் நண்பா..சிபிஎம் சிபிஐ கட்சிகளின் அரசியல் தலைமை தவறிழைத்தாலும் உங்களைப் போன்ற தோழர்களாலேயே இன்று வரை அக்கட்சிகள் மக்கள் மத்தியில் இருக்கின்றன..கம்யூனிசப்புரட்சியின்றி வேறு தீர்வில்லை என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்றே கருதுகிறேன்.. அது குறித்த உங்களின் அரசியல் சந்தேகங்களை வினவின் கேள்வி பதில் பகுதியில் நீங்கள் கேட்கலாமே..

Leave a Reply to c.nepolian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க