• NRC – CAA – NRP-க்கு எதிரான நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல் ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் கைது !
  • கைது செய்யப்பட்ட தோழர் செழியன் அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் !

ன்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்.-க்கு எதிராக வீடுகளில் கோலமிடவேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிராக புத்தாண்டு தினத்தில் இந்தியா முழுவதும் மக்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

போலிசால் கைது செய்யப்பட்ட தோழர் செழியன்.

இந்நிலையில் திருச்சியில் மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில்; என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்-க்கு எதிரான நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல் ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் இன்று காலை 10 மணிக்கு அவரது வீட்டில் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த புத்தாண்டு கொண்டாட்டம் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிரான எரிமலையாகவே இருக்கும். அடக்குமுறைகளால் போராட்டங்களை தடுக்க முடியாது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

பின்குறிப்பு: புதுப்பிக்கப்பட்ட நேரம் காலை 6 மணி, 1.1.20

பொது அமைதியை கெடுத்தது CAA – NRC – NPR போன்றவையா?
மக்கள் அதிகாரம் அமைப்பா?

CAA – NRC – NPR க்கு எதிராக புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததற்காக கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் விடுவிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தோழர் செழியனை பல இடங்களில் அலைக்கழித்து கண்டோன்மெண்ட் போலீசு நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவரிடம் சொந்த ஊர், மனைவி பேர், மாமனார் பெயர் என்றெல்லாம் விசாரித்து விட்டு கிரிமினல் போல விசாரிக்க வேண்டிய நிலைவரும் என்று கண்டோன்மெண்ட் ஏ.சி மிரட்டியுள்ளார்.

டாஸ்மாக் சரக்கை சைடில் விற்பவர்களுக்கும் மணற்கொள்ளையர்களுக்கும் ஆதரவாக இருக்கும் போலீசு, மக்களை பிளக்காதே என்பவர்களை கிரிமினல் போல டீல் செய்யுமாம்.

போலீசின் அச்சுறுதல்களுக்கு உறுதியாக எதிர்வினையாற்றிய செழியன் இன்று மாலை 4.30 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடன் வேண்டுமென்றே நிந்தித்தல், பொது அழிம்புக்கு ஏதுவாகிற உரைகள் ஆகிய குற்றங்கள் செய்ததாக கூறி 504, 505(i)(ii)(iii) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 மறுமொழிகள்

  1. ஆளும் வர்க்கத்திற்கு அடியாள் வேலை செய்யும் திருச்சி போலீசின் கைதை கண்டிப்போம்.

  2. கா(வி)வல் துறையே தோழர் செழியன் அவர்களை உடனே விடுதலை செய்…இன்று கோலம் போடுவதற்கே உங்கள் குலை நடுங்குமானால் நாளை மக்கள் விடுதலை எங்களுக்கு வெகு சுலபமே…காவியின் பின் செல்லாதீர்…..அந்த பாசிசம் உங்கள் தலைமுறையையும் சிதைத்துப் போடும் மறவாதீர்….

Leave a Reply to c.nepolian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க