சென்னையில் 43-வது புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று | அனைவரும் வருக

கீழைக்காற்று வெளியீட்டகம் – முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி …

நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35

கடை எண் : 182, 183

அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கிறது …

புதிய முகவரி :

கீழைக்காற்று பதிப்பகம்
அலைபேசி : 94448 81066
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

***

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் வெளியாகும் நூல்கள்

பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : முடிவல்ல, தொடக்கம் !

நூலிலிருந்து…

“இந்து பாசிஸ்டுகள் கடப்பாரை ஏந்தும் உரிமையை வழிபாட்டுரிமை என்ற பெயரில் உத்திரவாதப்படுத்தியது சட்டப்பிரிவு 25. தற்போது மசூதி இடிப்பை நியாயப்படுத்தியிருப்பதும் சட்டப்பிரிவு 25 தான். இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளியில் நிகழ்ந்த சம்பவம்தான் மசூதி இடிப்பு.

இனி ஒரு மசூதி இடிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், மசூதி இடிப்பின் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமானால், அலகாபாத் தீர்ப்பை முறியடிக்க வேண்டுமானால், பார்ப்பனியத்தையும், பார்ப்பன பாசிசத்தையும், எல்லா வகையான மதப் பிற்போக்குகளையும் பாதுகாத்து நிற்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26-ஐ நாம் இடித்துத் தள்ள வேண்டும்.”

***

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

காற்று மாசுபாட்டால் டெல்லி மூச்சடைத்து நிற்கிறது. டெல்லியின் ‘காவி மாசுபாட்டால்’ மொத்த நாடே மூச்சுத் திணறி நிற்கிறது. ஆர்.எஸ்.எஸ். – சங்க பரிவார கும்பலின் காவி வைரஸ்-க்கு தடுப்பு மருந்தாக இந்நூல் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது புதிய வடிவில் மறுபதிப்பாக புத்தகக் கண்காட்சியில் களமிறங்குகிறது இந்நூல். அனைவரும் வாங்கிப் படியுங்கள்…

***

பன்றித் தீனி : தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு !

குப்பை உணவுகள் உலக மக்களின் ஆரோக்கியத்தை அழித்துவரும் அணுகுண்டுகள். ஐந்து ரூபாய் விலையுள்ள லேஸ் சிப்சையும், பத்துரூபாய் கோக்கையும் வாங்கி உங்கள் குழந்தைக்கு தருகிறீர்கள் என்றால் அது அவர்களது வயிற்றையும், ஆளுமை வளர்ச்சியையும் அரித்துக் கரைத்து வெறும் தக்கைகளாகத் துப்பிவிடும்.

துரித உணவு வகைகளின் இருண்ட பக்கத்தையும், அவற்றின் பின் உள்ள அரசியலையும் சித்தரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.

***

சாதி : ஆதிக்க அரசியலும், அடையாள அரசியலும் !

1989-ல் தோன்றிய நாள் முதலே, பா.ம.க ஒரு சாதிய பிழைப்புவாதக் கட்சிதான். இதனை அம்பலப்படுத்தி “புதிய ஜனநாயகம்” இதழில் வெளிவந்த கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. “புதிய ஜனநாயக”த்திற்கு எதிராக பா.ம.க-வின் “தினப்புரட்சி” நாளேடு வெளியிட்ட பதிலும், ராமதாசை புரட்சியாளராகக் காட்டும் நோக்கத்தில் “நிறப்பிரிகை” பத்திரிகை வெளியிட்ட, ராமதாசின் பேட்டியும் இடம்பெற்றுள்ளன.

இவற்றைப் படிக்கின்ற வாசகர்கள், அரசியல் பச்சோந்தி ராமதாசை மட்டுமன்றி, அவரை ஆளாக்கிய அறிவுத்துறை பச்சோந்திகளையும் அடையாளம் காண முடியும்.

***

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் – தோழர் லெனின்

பொதுவுடமை இயக்கங்களுக்கு வழி காட்டும் முக்கிய ஆவணங்களில் ஒன்று தோழர் லெனின் எழுதிய இந்நூல். இந்த புத்தக கண்காட்சியில் மறுபதிப்பாக வெளிவருகிறது. வாங்கிப் படியுங்கள்…

வினவு செய்திப் பிரிவு