privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ?

பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ?

தமிழகத்தில் பாஜக என்றதும் நினைவுக்கு வருவது, ‘பிரியாணி அண்டா திருடர்கள்’ என்பது தான். இருந்தும் ஏன் பா.ஜ.க.விற்கு பிரியாணியின் மீது வெறுப்பு.

-

பிரியாணியின் செய்முறையில் இறுதிக்கட்டம் தம் போடுவதாகும். அரிசி, இறைச்சி, மசாலா மற்றும் நறுமணப் பொருட்கள் கலந்த கலவையாக பிரியாணி அற்புத சுவையுடன் இருக்கும். உண்மையில் பிரியாணி சமைப்பது ஒரு மந்திர செயல்முறை என்று கூட சொல்லலாம். இத்தகைய சமையல் கலைத்திறனை பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இத்தகைய பிரியாணியை எதிர்ப்பவர்களும் இருக்க முடியுமா?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைத் தாக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, “டெல்லி தேர்தல் ஆதாயத்திற்காக ஆம் ஆத்மி கட்சி ஷாஹீன் பாகில் போராடுபவர்களுக்கு பிரியாணி வழங்குவதாக” கூறி போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முனைந்துள்ளது பா.ஜ.க.

பா.ஜ.க -வின் ஐ.டி பிரிவின் தலைவரான அமித் மால்வியா, “ஷாகீன் பாகில் பிரியாணி விநியோகிக்கப்படுவதற்கான ஆதாரம்” எனக் கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளான். (ஏதோ மிக ரகசியமாக பிரியாணி உண்டதை இவர்கள் கண்டுபிடித்து வெட்டவெளிச்சமாக்கியதைப் போல)

இவ்வாறு பா.ஜ.க.வினர் பேசுவது முதல்முறையல்ல. 2015-ல் மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப்பிற்கு சிறை நிர்வாகம் பிரியாணி வழங்கியது என அரசு வக்கீல் உஜ்வல் நிகம் ஒரு பொய்யைக் கூறினார். விசாரணையின் போது கசாபிற்கு ஆதரவாக உருவான ஒரு உணர்ச்சிகரமான சூழலை உடைப்பதற்காக தான் அவ்வாறு பொய் கூறியதாக பின்னர் கூறினார்.

படிக்க:
விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை
♦ 10 வயதுக் குழந்தைகளை தொடர்ந்து மிரட்டும் கர்நாடக காவிப் போலீசு !

முசுலீம் மற்றும் இந்தியத்தன்மை :

பிரியாணி என்பது தெற்காசியாவில் உள்ள முசுலீம்களின் உணவாக கருதப்படுகிறது. உண்மையில், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு முசுலீம் சமூகத்திற்கும் அதன் சொந்த பிரியாணி உள்ளது.

மலபாரில் மாப்ளாக்களின் தலசேரியாக,  டக்னிஸின் (தக்கானம்) ஹைதராபாதி பிரியாணி, குஜராத்தின் மெமன்களின் மெமோனி பிரியாணி, லக்னோவின் அவதி அல்லது உருது மொழி பேசுபவர்களின் கொல்கத்தா பிரியாணி – என பலவகை உண்டு.

இருப்பினும் இதில் சுவாரசியமான விசயம் என்னவெனில், பிரியாணி என்பது முசுலீம்களின் உணவு என்பதைத் தாண்டி ஒரு தேசிய உணவாக மாறியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கியில் கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி தான். ஸ்விக்கி நிறுவனத்தில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் 95  பிரியாணிகள்  ஆர்டர் செய்யப்படுகின்றன.

இந்திய உணவு பற்றி எண்ணும் போது வெளிநாட்டினர்க்கு முதலில் நினைவுக்கு வரும் உணவு பிரியாணி. ஒரு ஆய்வில், இணையத்தில் “உலகளவில் அதிகம் தேடப்பட்ட இந்திய  உணவு” பிரியாணி என்று கண்டறியப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக பிரியாணி என்றாலே இறைச்சியைக் கொண்டுதான் தயாரிக்கப்படும். ஆனால் இப்போது பல சைவ உணவுகள் பிரியாணி என்ற அடைமொழியுடன் பெயரிடப்படுகின்றன.

2014-ம் ஆண்டில், வெளியில் இருந்து ஒரு பிரியாணி கொண்டு வர அனுமதிக்கவில்லை என்பதற்காக ஹைதராபாத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலையே மாற்றினாராம் எம்.எஸ்.தோனி.

இவ்வாறு எல்லோராலும் மிகவும் விரும்பப்படும் உணவை யாரையும் இழிவுபடுத்துவதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம்?

பிரியாணியின் மீது பா.ஜ.க-விற்கு இத்தகைய வெறுப்பு ஏற்பட காரணம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள அக்கட்சியை ஆளும் சித்தாந்தத்தை ஒருவர் கவனிக்க வேண்டும்: இந்து தேசியவாதம் அல்லது இந்துத்துவா தான் அது..

படிக்க:
கொல்கத்தா : ஒரு மாதமாக பெண்கள் தலைமையில் தொடரும் போராட்டம் !
♦ கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் ?

அரசியல் அறிவியலாளர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் வாதிட்டபடி, “இந்து தேசியவாதத்தை அதன் உளவியல் சூழலோடு பொருத்திப் பார்க்காமல் புரிந்து கொள்ள முடியாது. அது பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. இந்த சித்தாந்தம் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு பலவீன உணர்வின் எதிர்வினையாக வடிவமைக்கப்பட்டது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் இந்துமத சாதி படிநிலை மற்றும் பிளவுகளின் காரணமாக இந்துமதம் பலவீனமாக காணப்பட்டது” என்று அவர் வாதிடுகிறார்.

இந்த அடிப்படையில் தான் பெரும்பான்மையாக இருந்தாலும், இந்நாட்டில் 7 பேரில் ஒருவர் மட்டுமே முசுலீமாக இருந்த போதிலும், இந்து தேசியவாதிகள் முசுலீம்களைக் கண்டு அஞ்சுகின்றனர், வெறுக்கின்றனர். முசுலீம்களின் உணவான பிரியாணியும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.


செய்தி கட்டுரையாளர் : ஷோயப் தனியால்
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : நறுமுகை
நன்றி :ஸ்க்ரால்.

பின்குறிப்பு :
இந்துத்துவ சித்தாந்தவாதிகளுக்கு வேண்டுமானால் பிரியாணி வெறுப்பு இருக்கலாம். ஆனால் அதன் அடிபொடிகளுக்கு நிச்சயம் பிரியாணி வெறுப்பு கிடையாது என அடித்துச் சொல்லலாம். ஆதாரம் கேட்போர், கோவையில் இந்து முன்னணி பொறுக்கி செத்த போது கலவரம் செய்ய வந்த சங்கிகள் பிரியாணி அண்டாவைத் தான் திருடினார்களே அன்றி தயிர்சாத குண்டாக்களை அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.