இணையவழித் தேர்வு, NEP – 2020, நீட் – பறிக்கப்படும் மாநில உரிமைகள் ! இணையவழிக் கூட்டம் !

கொரோனா சமூக வாழ்வின் அனைத்து அவலங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் வேலையிழப்பு தொடங்கி விவசாயிகள் பிரச்சனைகள் வரை தொழில்துறை தொடங்கி பொதுசுகாதாரம் வரை அனைத்துமே கடும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதற்கு கல்வித் துறையும் விதிவிலக்கல்ல.

படிக்க :
♦ பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !
♦ NEP 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | சசிகாந்த் செந்தில் உரை | CCCE

கடந்த ஏழு மாதங்களாக பள்ளி / உயர்கல்வி சார்ந்த அறிவிப்புகள், மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதாகவும் தனியார் நிறுவனங்களின் நலன்களை முன்னிலைப்படுத்தியும் வந்துள்ளன. கொரானா பரவலினால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் தேர்வுகளை மாநில அரசுகள் ரத்துசெய்த போதும் ‘உயர்கல்வி சார்ந்த முடிவுகள் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை’ எனக்கூறி தேர்வை இணையவழியில் நடத்தியதோடு மட்டுமில்லாமல் இணையவழிக் கல்வியை கட்டாயமாக்கியது மோடி அரசு.

தேசியக் கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து  புதிய அமைப்புகளும் (Regulating body) கல்வியில் மாநில உரிமைகளை பறிப்பவையாகவும் மத்தியில் அதிகாரத்தை குவிப்பவையாகவும் தனியார் கல்வி நிறுவனங்கள் / கொடைவள்ளல்கள் / தன்னார்வு அமைப்புகளை கல்வியில் அனுமதிப்பதாகவுமே உள்ளது. தேசிய மருத்துவ ஆணையமானது (National Medical Commission) நீட் தேர்வை கட்டாயமாக்கியதோடு கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட மருத்துவ கல்வி சார்ந்த அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் சென்றுள்ளது.

கூடவே கார்பரேட் மருத்துவமனைகளுக்கு கல்லூரி நடத்துவதற்கான அனுமதியையும் மோடி அரசு வழங்கியுள்ளது. இந்த மூன்று உதாரணங்களில் மாநில உரிமைகளை பறிப்பதோடு மட்டுமில்லாமல் உயர் கல்வியில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் அனுமதித்துள்ளது மிகமுக்கியமானதாகும்.

மாணவர்களிடமிருந்து பறிக்கப்படும் கல்வி குறித்தும், கல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் குறித்தும் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு இணையவழிக் கூட்டத்தை நடத்துகிறது. இதில் பேராசிரியர் கருணானந்தன் உரையாற்றுகிறார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : 02-10-2020
நேரம் : மாலை 05-45
Zoom ID : 816 0289 5154
Facebook : CCCE-TN
தொடர்புக்கு : 94443 80211, 94431 59058

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு.