09-01-2021

பத்திரிகை செய்தி:

வலது திசை விலகலில் இருந்து
கட்சியை மீட்டெடுப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே !

தமிழகத்தின் முன்னணி அரசியல் சக்திகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும், புரட்சிகர மார்க்சிய லெனினிய குழுவாகிய, மாநில அமைப்புக் கமிட்டி, .பொ..(மாலெ), தமிழ்நாடு – (SOC – CPI (M-L), Tamilnadu) – ஆகிய எங்களது அமைப்பின் தலைமைக் குழுவில் இருந்த இரண்டு உறுப்பினர்கள் கடந்த அக்டோபர்-2019-ல் சில அமைப்புப் பிரச்சினைகளை எழுப்பினர். இது தொடர்பாக, அமைப்புக்குள் உட்கட்சி விவாதம் நடத்தி தீர்ப்பதற்குத் தலைமைக் குழு தயாராக இருந்தது.

அந்தச் சூழலில், எமது மக்கள் திரள் அமைப்புகளின் தலைமையில் கார்ப்பரேட்காவி பாசிசத்திற்கு எதிராக ஓர் எழுச்சிகரமான மாநாடு நடந்தேறிய மறுநாளே, அவ்விருவரும் மா...வின் மீது அவதூறுகளையும், இழிவான தாக்குதல்களையும், பல வடிகட்டிய பொய்களையும் வாரியிறைத்து, கட்சியில் இருந்து வெளியேறுவதாக எமது இணைய தளத்திலேயே விலகல் அறிக்கை (24.02.2020) வெளியிட்டு, அமைப்பின் மீது ஓர் அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்தனர்.

இந்தத் தாக்குதல் எமக்கும் எமது தோழர்கள் மற்றும் அமைப்பின் ஆதரவாளர்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவித்தது. மாநாட்டின் வெற்றியைச் சீர்குலைத்தது.

இவ்விருவர் தொடுத்த திடீர்த் தாக்குதலைத் தொடர்ந்து, அமைப்புக்குள் இருந்த அக்கும்பலுக்கு ஆதரவான சிலரின் நெருக்கடி காரணமாகவும், மா...வில் மறைந்திருந்த ஒரு மா... உறுப்பினர் மற்றும் ஒரு மாற்று உறுப்பினரின் நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாகவும், அமைப்பில் இருந்து வெளியேறுவதாக பொதுவெளியில் அறிவித்த அவ்விருவர் மா... மீது வைத்திருந்த விமர்சனத்தை நாங்கள் ஏற்கவில்லை எனினும், அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தார்மீகப் பொறுப்பெடுத்து, மா... தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

மா...வில் இருந்து வெளியேறிய அவ்விருவரும் எழுப்பிய பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டும், உட்கட்சி விவாதத்தை நடத்தி, புதிய மா...வைத் தேர்வு செய்வதற்கான பிளீனத்தை நடத்த ஓர் இடைக்காலக் கமிட்டி (.கா..) தேர்வு செய்யப்பட்டது. இதன் பின்னர், மா...-வில் மறைந்திருந்த ஓர் உறுப்பினர் மற்றும் ஒரு மாற்று உறுப்பினர் ஆகியோர் இணைந்து மா...வில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்து மேலும் நெருக்கடி கொடுத்தனர். மா...விற்கு எதிராக, பல்வேறு சதி நடவடிக்கைகள் மூலமாக அணிகளின் மத்தியில் அவதூறு பிரச்சாரங்களை செய்ததன் மூலமும், அமைப்பு முறைகளை மீறி பலவாறாக கோஷ்டிகளைக் கட்டியும், தலைமையைக் கைப்பற்ற இவர்கள் முயற்சித்தனர். இப்பிரச்சினையில் தொடக்கத்தில் இருந்து, அமைப்பு பிளவுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில், சந்தர்ப்பவாதமாக அணுகி வந்த மா.., பின்னர் இ.கா.. மற்றும் மா...வில் மறைந்திருந்த துரோகக் கும்பலைக் கட்சியை விட்டு வெளியேற்றியது.

இதனைத் தொடர்ந்து, இந்த பிளவுவாதகலைப்புவாதசதிகார எதிர்ப்புரட்சி கும்பல், தங்களுக்கு விசுவாசமாக வளர்த்து வைத்திருந்த சிலரையும் இணைத்துக் கொண்டு, மா...வுடனும் மாவட்ட பொறுப்பாளர்களுடனும் முரண்பட்டிருந்த தோழர்களிடம் அவதூறு பிரச்சாரங்களை செய்து தங்களுடன் இணைத்துக் கொண்டு தாங்கள்தான் மா... என்று தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டனர். இதன் மூலம் மா...வைப் பிளவுபடுத்தியுள்ளனர். இதன் காரணமாக, இந்த பிளவுவாதகலைப்புவாதசதிகார எதிர்ப்புரட்சி கும்பலைக் கட்சியை விட்டு வெளியேற்றிய போது, அணிகளில் கணிசமானோர் அவர்களின் பின்னால் சென்றுள்ளனர்.

அமைப்பில் இருந்து வெளியேறியதாக பொதுவெளியில் அறிவித்திருந்த இருவரும், இந்தப் பிளவுவாத கும்பல்களின் சூத்திரதாரிகளாக பின்னணியில் இருந்து இயக்கி வந்துள்ளனர். மொத்தத்தில், இந்தக் கும்பல், தாராளவாத சந்தர்ப்பவாதத்தின் கடைக்கோடி நிலைக்குச் சென்று, கேடுகெட்டு, சீரழிந்து போய், அமைப்பை பிளவுபடுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது; பாட்டாளி வர்க்கக் கட்சியை ஒரு தாராளவாத பிரச்சார அரங்கமாக மாற்ற முயற்சித்துள்ளது.

இந்நிலையில், கட்சி பிளவுபட்டதற்கான காரணங்களான அமைப்பின் அகநிலையில் இருந்த தவறுகளைப் பரிசீலித்து புதிய தலைமையைத் தேர்வு செய்யும் பொருட்டு எமது அமைப்பின் 10-வது பிளீனம் ஜனவரி 01 முதல் 03-ம் தேதி வரை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த பிளீனம் மனந்திறந்த வகையில் பிரச்சினைகளை விரிவாகவும் ஆழமாகவும் பரிசீலித்தது.

கட்சியில் நிலவும் அகநிலைத் தவறுகளின் பொதுத்தன்மையைத் தொகுத்துப் பார்த்து, அமைப்பு வலது திசைவிலகல் அடைந்திருப்பதுதான் பிளவிற்குக் காரணம் என்பதைப் இப்பிளீனம் உணர்ந்தது. அந்த வகையில் வலது திசை விலகலை கீழ்க்கண்ட வகையில் வரையறுத்துள்ளது.

1992-க்குப் பின்னர், எமது அமைப்பினுடைய பொதுத்திசை வழியின் முக்கிய அம்சமான போர்க்குணம் வர்க்க அடித்தளம் என்ற மூல முழக்கங்களைக் கைவிட்டு, செயல்தந்திர அரசியலை மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரமாக எடுத்துச் செல்லும் ஒரு தன்னெழுச்சி அரசியல் வழியை மா... நடைமுறைப்படுத்தியது. தொடக்கத்தில் சில கிளர்ச்சி நடவடிக்கைகளுடன் தொடங்கிய இந்தப் பாதை, 1997-இல் மேலும் திசை திரும்பி, வெறும் பிரச்சாரங்களை மையப்படுத்தியதாக மாறியது.

2015-இல் முன்வைக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்பட்ட கட்டமைப்பு நெருக்கடி என்ற புதிய செயல்தந்திரம், அதன் இயல்பிலேயே ஆளும் வர்க்க அரசியலின் ஒருசில கூறுகளை உள்ளடக்கியதாகவும், சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயகப் புரட்சியை மாற்றாக முன்வைக்காமலும் அமைந்திருந்தது. இது கட்சியில் இருந்த தோழர்களின் சோசலிச உணர்வு குன்றுவதற்குக் காரணமாக அமைந்திருந்தது.

மேலும், அடிப்படை உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் முக்கியமானவை அல்ல, அரசியலைப் பிரச்சாரமாக எடுத்துச் செல்வதுதான் முக்கியமானவை என்று முன்னெடுத்துச் செல்லப்பட்ட செயல்தந்திர அரங்கின் செயல்பாடுகள் காரணமாக, அடித்தள உழைக்கும் வர்க்கத்துடன் ஐக்கியமும் நெருக்கமும் குறைந்து வரத்தொடங்கியது.

கடந்த 25 ஆண்டு காலமாகப் பின்பற்றப்பட்ட இந்தத் தன்னெழுச்சி வகைப்பட்ட பிரச்சார வேலைப்பாணியாலும், செயல்தந்திரத்தை முன்னெடுத்துச் சென்றதில் நடந்த மேற்கண்ட தவறுகள் காரணமாகவும், எமது மக்கள்திரள் அரங்கின் பிரபலத் தலைவர்களும், குட்டி முதலாளித்துவப் படிப்பாளிப் பிரிவினரும் கட்சி அமைப்பு முறைகளை மீறிய, கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட தனிச்சிறப்பான சலுகைகள் பெறும் நிலை உருவானது.

இவர்களைக் கையாளும் சந்தர்ப்பவாத அணுகுமுறைகள் வளர்ந்து மாநில அமைப்புக் கமிட்டியை விசாரிக்கும் விசாரணைக்குழு அமைத்தல், மாநில அமைப்புக் கமிட்டியைக் கண்காணிக்கும் கமிட்டி என்று பொருள்படும்படியான ‘ஆலோசனைக்குழு’ அமைத்தல் போன்ற கலைப்புவாத அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்டுவரும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் விளைவாக இந்தியாவின் அரசியல் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்வதாக ஏற்றுக் கொண்டிருந்த மா..., கடந்த 8 ஆண்டுகளாக, மூன்றுமுறை அவகாசம் கேட்டும் ஆய்வை முடிக்காததாலும், புதிய நிலைமைகளுக்கு ஏற்ப புதிய செயல்தந்திர அரசியலை வகுத்து முன்வைப்பதாகச் சொல்லி, அதுவும் நிறைவேறாமல் இருந்ததாலும், முன்னணியாளர்கள் மத்தியில் அதிருப்தியும் சோர்வும் நிலவியது.

இதேவேளையில், 1993-க்குப் பிறகான மாநில அமைப்புக் கமிட்டிகள், உரிய காலத்தில் பிளீனத்தை நடத்தாமல் அதிகமான கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது, ஆண்டறிக்கைகளை முன்வைத்து, தன்னைப் பரிசீலனைக்கு உட்படுத்தாமல் இருந்தது, பிளீனங்களில் நடைமுறைக்கு சாத்தியமற்ற சில முக்கியமான தீர்வுகளை முன்வைத்ததால், அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனது போன்ற காரணங்களால் அணிகளின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன.

அதேவேளையில், அமைப்பை வழிநடத்திச் செல்வதில் அதிகாரத்துவ, அனுபவவாத, குறுங்குழுவாதத் தவறுகள் மற்றும் இவற்றின் காரணமாக, அணிகளுக்கும் தலைமைக்குமான இடைவெளி மிக அதிகமாக வளர்ந்திருந்தது என்பதை இந்தப் பிளீனம் அடையாளம் கண்டுள்ளது.

மேலும், அமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாளுவதில் மா..க இழைத்துள்ள பல தவறுகள் பக்குவமின்மை என்ற வகையைச் சேர்ந்தவை என்பதையும், அமைப்பின் பல்வேறு மட்டங்களில் பக்குவமின்மை வளர்ந்துள்ளதையும் இந்தப் பிளீனம் அடையாளம் கண்டுள்ளது. இவையும் மா... மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.

அமைப்பு விரிவடைந்த அளவுக்குப் போதுமான, தகுதியான இரண்டாம் தலைவர்கள் அனைத்து அரங்குகளிலும் இல்லாததாலும், குறிப்பாக, கீழ்மட்ட அணிகளைச் சோதித்து வழிகாட்டி இயக்கும் வேலையறிக்கை பரிசீலனை முறையை மா... படிப்படியாகக் கைவிட்டிருந்ததாலும், அமைப்பின் கீழ்மட்டங்களில் பல்வேறு தாராளவாத, சந்தர்ப்பவாத, குட்டி முதலாளித்துவக் கலாச்சாரம் பரவியிருந்தது.

மேற்கண்ட இந்தச் சூழலைத்தான் வலது திசைவிலகல் என்று பிளீனம் அடையாளம் கண்டுள்ளது. இந்த வலது திசைவிலகலைக் கேடாகப் பயன்படுத்திக் கொண்டுதான், ஒரு தாராளவாதக் கட்சியாக அமைப்பை மாற்றுவதற்கு இந்தச் சதிகார கும்பல் முயற்சித்து, கட்சியைப் பிளவுப்படுத்தியுள்ளது என்பதை பிளீனம் உணர்ந்துள்ளது.

இதே வேளையில், மா... .பொ.. (மாலெ), தமிழ்நாடு ஆகிய எங்களது அமைப்பு, இந்த வலது சந்தர்ப்பவாத தாராளவாத சீர்குலைவுவாத கலைப்புவாத சக்திகளுக்கு கடுகளவும் அடிபணிந்து செல்லாத, புரட்சிகர அடிப்படைக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருந்ததால்தான் கலைப்புவாதத்திற்குப் பலியாகாமல் கட்சி ஐக்கியத்தைக் கட்டிக்காத்து பிளீனத்தை நடத்தியுள்ளது.

குறிப்பாக, மாநில அமைப்புக் கமிட்டியாகிய எங்களது அமைப்பு, நக்சல்பாரி பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கிறது; மார்க்சியலெனினியமாசேதுங் சிந்தனை என்னும் சித்தாந்த அடிப்படையை உயர்த்திப் பிடிக்கிறது; எஃகுறுதிமிக்க போல்ஷ்விக் பாணியிலான லெனினியக் கட்சி அமைப்பு முறையை உயர்த்திப் பிடிக்கிறது; இந்தியாவில் சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்கான திட்டத்தை உயர்த்திப் பிடிக்கிறது; நாடாளுமன்ற சமரசப் பாதையை நிராகரித்து புரட்சியை நடத்துவதற்கான மக்கள்திரள் வழியை உயர்த்திப் பிடிக்கிறது ஆகிய அடிப்படை அம்சங்களில் ஊன்றி நின்றதால்தான், இந்தச் சதிகார கும்பலால் கட்சியின் தலைமையை முழுமையாகக் கைப்பற்ற இயலவில்லை என்றும், அதனால்தான் இச்சீர்குலைவு கும்பல் கட்சியைப் பிளவுபடுத்தும் சீர்குலைவு நடவடிக்கைகளில் இறங்கியது என்றும் உணர்கிறோம்.

இந்தச் சூழலில், 25 ஆண்டுகளாக நிகழ்ந்த வலது திசை விலகலுக்குப் பொறுப்பேற்று அணிகளிடம் மா... சுயவிமர்சனமாக முன்வந்துள்ளது. குறிப்பாக, மா... செயலரின் தவறுகள் இந்த திசைவிலகலில் முக்கியப் பங்காற்றியதையும் இந்தப் பிளீனம் விமர்சனமாக முன்வைத்தது. வலது திசைவிலகலின் பல்வேறு கூறுகளைக் கூர்மையாக, விரிவாக, ஆழமாகப் பரீசிலித்து அணிகள் மத்தியில் தன்னையும் மொத்த அமைப்பையும் விரிவான சுயபரிசீலனைக்கு மா... உட்படுத்தியது.

பிளீனத்தின் கூட்டத்தில் பல சுற்றுக்கள் நடந்த வாதப்பிரதிவாதங்களில், கட்சியின் அணிகள் ஜனநாயக பூர்வமாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர், தலைமையில் தவறுகளைக் கூர்மையாக விமர்சித்தனர். கலைப்புவாதத்திற்கு பலியாகி, அது தவறு என்று உணர்ந்து பின்னர் மா...வின் தலைமையை ஏற்றுக்கொண்ட அணிகளில் சிலர் தங்களது சுயவிமர்சனம் ஏற்றனர்.

தங்களது பகுதிகளில் இக்கலைப்புவாதிகளை அண்டாமல் சில மாவட்டப் பகுதி தோழர்கள் அமைப்பைக் கட்டிக்காத்துள்ளனர். சில மாவட்டப் பகுதிகளில் வழிகாட்டி இயக்குவதற்கான பொறுப்பாளர்கள் இல்லாத நிலையிலும், சில அணிகள் தமது சொந்த அனுபவத்தின் ஊடாகப் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, சீர்குலைவுவாதிகளை முறியடித்து, மா...வின் தலைமையை உறுதிப்படுத்தியுள்ளதை இந்தப் பிளீனம் அங்கீகரித்து அத்தோழர்களுக்குப் புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மொத்தத்தில், கட்சியில் பிளவு ஏற்பட்டிருந்தாலும், சதிகாரக் கும்பல் வெளியேற்றப்பட்டது ஒரு நல்நிகழ்வே என்றும், இதன் மூலம் வேண்டாத கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு கட்சியானது தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இப்பிளீனம் உறுதிபடத் தீர்மானித்துள்ளது. கட்சியின் பிளவுக்கான காரணம் வலது திசைவிலகல் என்று அடையாளம் கண்டிருப்பதும், அதனைத் தீர்ப்பதற்கு சரியான வழிமுறைகளை இந்தப் பிளீனம் முன்வைத்திருப்பதும், மொத்த அமைப்பிற்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

கட்சியில் ஏற்பட்டுள்ள வலது திசைவிலகலை முறியடித்து எஃகுறுதிமிக்க கட்சியைக் கட்டியமைப்பது, போர்க்குணம் வர்க்க அடித்தளம் என்ற பொதுத் திசைவழியின் மூல முழக்கத்தை உறுதியாக அமல்படுத்துவது; கோட்பாட்டை நடைமுறையுடன் இணைப்பது, கட்சியை மக்களுடன் இணைப்பது; கட்சியின் அனைத்து மட்டங்களிலும் மார்க்சிய லெனினிய சித்தாந்த மட்டத்தை உயர்த்துவது; இந்திய அரசியல் பொருளாதார சமூக நிலைமைகள் குறித்த ஆய்வினை முடிப்பது ஆகிய கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியும் அக்கறையும் கொண்ட ஒரு புதிய மாநில அமைப்புக் கமிட்டியை இந்தப் பிளீனம் தேர்வு செய்தது.

மா.., .பொ..(மாலெ), தமிழ்நாடு ஆகிய எமது அமைப்பில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவை முறியடித்து, கட்சி ஐக்கியத்தைப் பாதுகாத்து, வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்டெடுக்கும் வகையில் நடந்து முடிந்துள்ள இந்தப் பிளீனம், எமது அமைப்புக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள புரட்சிகர மாலெ இயக்க வரலாற்றிலும் முக்கியமான திருப்பு முனையாகும். திரிபுவாத, சந்தர்ப்பவாத, கலைப்புவாத, பிளவுவாத, சதிகார, எதிர்ப்புரட்சி கும்பல்களை புதைகுழிக்குத் தள்ளும் மரண அடியாகும்!

♠ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்டெடுப்போம் !
♠ கலைப்புவாதம் – பிளவுவாதம் – சீர்குலைவுவாதம் தாராளவாதம் சந்தர்ப்பவாதம் அதிகாரத்துவம் சமரசவாதம் அனுபவவாதம் குறுங்குழுவாதத்தை முறியடிப்போம் !
புரட்சிகர மக்கள்திரள் வழியில் கட்சியின் திசைவழியை உறுதி செய்வோம்
!
எஃகுறுதிமிக்க போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்போம்
!
மார்க்சிய
லெனினியமாசேதுங் சிந்தனையையும், நக்சல்பாரி பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிடிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம் !

*****

எமது தொழிற்சங்க அரங்கின் பொதுச்செயலாளராக இருந்தவரின் ஊழல் நடவடிக்கைகள் குறித்த எமது விளக்கம் மற்றும் சுயவிமர்சனம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே!

எமது தொழிற்சங்க அரங்கின் செயலாளராக இருந்த சுப.தங்கராசு என்பவர், பெல் நிறுவனத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித் தரும் சொசைட்டியின் செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த வீட்டுமனை வாங்கும் விசயத்தில் அவர் ஊழல் செய்வதாக கடந்த அக்டோபர்-2019-ல் கட்சித் தலைமைக்கு புகார் வந்தது. புகார் கிடைக்கப்பெற்ற உடனே, தொழிற்சங்க தலைமைக்குழு மூலமாக இது குறித்து விசாரிக்க ஏற்பாடு செய்தோம். அவர்களும் விசாரணைக்குழு அமைத்து விசாரித்து, விசாரணை அறிக்கையும் சமர்ப்பித்தனர். அவ்வறிக்கையில் ஊழல் மட்டுமல்லாமல் அனாதீன நிலத்தை வாங்கியதும் தெரிய வந்தது.

மா...வில் இருந்து இருவர் வெளியேறியிருந்த சூழலில், அது தொடர்பான வேலைகள், மக்கள் திரள் அரங்கின் மாநாட்டு வேலைகள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த ஊழல் பிரச்சினை தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை மீது மா..க கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. புறநிலையாக பல்வேறு காரணங்கள் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாகவும் இந்த அலட்சியம் நடந்தது.

இந்த நிலையில், 2020 ஜூலை 29-31 தேதியிட்ட நக்கீரன் இதழில் இந்த ஊழல் குறித்த செய்தி வெளியானது. சமூக ஊடகங்களிலும் நூறு கோடி ஊழல் என்றும், இன்னும் பலவாறாக அவதூறாகவும் பலரும் எழுதினர். இதன் பின்னர், தொழிற்சங்கத் தலைமைக் குழுவானது தங்கராசுவை உடனடியாக இடைநீக்கம் செய்தது. முறைப்படியான நடவடிக்கைகளுக்குப் பின்னர், தங்கராசு தொழிற்சங்க அமைப்பில் இருந்தும் கட்சி அமைப்பில் இருந்தும் முழுமையாக நீக்கப்பட்டார்.

தங்கராசு விவகாரத்தில் மா... முறையாகச் சோதித்தறியாமல் பாரிய தவறிழைத்துள்ளதை உணர்ந்து சுயவிமர்சனம் ஏற்றது. குறிப்பாக, அவரை நேரடியாக இயக்கிய மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் மா... செயலர் ஆகிய இருவரும், இப்பிரச்சனையில் சொசைட்டி அலுவலகம் மற்றும் வசதிகளை அமைப்பு ரீதியாக உபயோகப்படுத்திய பயன்பாட்டுவாதம், தங்கராசு உடனான சமரசமான சகவாழ்வில் இருந்த குட்டி முதலாளித்துவத் தன்மை, முறையாக சோதித்தறியாதது, தனிச்சலுகை அளித்து அவரை நடத்தியது போன்றவற்றை சுயவிமர்சனமாக ஏற்றதை கடந்த 2021 ஜனவரி 1-3 தேதிகளில் நடந்த எமது அமைப்பின் பிளீனம் ஆகப் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்டது.

மேலும், தங்கராசு மீது ஊழல் புகார் வந்தவுடன், விசாரணைக்குழு அமைப்பதில் மா.அ.க விரைந்து செயல்பட்டதை பிளீனம் அங்கீகரிக்கும் அதே வேளையில், அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்ததற்கான சுயவிமர்சனத்தை பிளீனத்தின் ஆகப் பெரும்பான்மை ஏற்கவில்லை.

ஓர் மா..க உறுப்பினர் மற்றும் மா...வின் செயலர் ஆகிய இருவரையும் இந்த மா...வின் பொறுப்புக்காலம் முடிவடையும் நிலையில் இருந்தாலும் மா...வில் இருந்து நீக்க வேண்டும் என்றும், புதிய மா...வுக்கு தேர்வு செய்யப்படக் கூடாது என்றும், இத்தவறு நிகழ்ந்த காலத்தில் பொறுப்பில் இருந்த மற்ற மூன்று மா... தோழர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், இந்தப் பிளீனம் ஆகப் பெரும்பான்மையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த ஊழல் பிரச்சினையானது, கட்சியின் வலது திசை விலகலின் ஓர் அங்கமாகவே உருவாகி, வளர்ந்து, வெளிப்பட்டுள்ளது என இந்தப் பிளீனம் பரிசீலித்து உணர்கிறது.

எமது அமைப்பில் 30-40 ஆண்டுக் காலமாகப் பணிபுரிந்து தலைமைக் குழுவிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு, அற்ப அமைப்புப் பிரச்சினைகளை முன்வைத்து அமைப்பிலிருந்து விலகுவதாக பொதுவெளியில் அறிவித்துவிட்டு ஓடிப்போன இரண்டு மா... உறுப்பினர்களும், மா...விலியே மறைந்திருந்து மா... வுக்கு நெருக்கடி கொடுத்துவிட்டு ஓடிப் போயுள்ள மேலும் இரண்டு மா... உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினையை நன்கு அறிந்தவர்கள்தான்.

தங்கராசுவை முறையாக சோதித்தறியாமல் தாராளவாதமாக மா... நடந்துகொண்ட தவறில் இவர்களுக்கும் பங்கிருக்கிறது. ஆனால், தற்போது மா...மீது கேடாக அவதூறு பிரச்சாரம் செய்து தங்களை உத்தமர்களைப் போல காட்டிக் கொள்ளும் நயவஞ்சக கபட வேடதாரிகளாக இந்தக் கும்பலை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும் என்று இந்தப் பிளீனம் அறைகூவல் விடுக்கிறது. தங்கராசுவுடன் சமரசமாக நடந்து கொண்டு கலைப்புவாத நடவடிக்கைகளால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறரையும் இந்தப் பிளீனம் வன்மையாக க் கண்டிக்கிறது.

இவர்கள் தவிர்த்த, இப்பிரச்சினையில் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடைய இப்பிரச்சினை குறித்து கண்டிக்காத பிற தோழர்கள் மீதும் பிளீனம் தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறது. இந்த ஊழல் பிரச்சனையில் படிப்பினையாக, பிரபலமான முன்னணியாளர்களுக்கு சிறப்புச் சலுகைக் காட்டுவது, பயன்பாட்டுவாதம், தாராளவாதம், முறையாக சோதித்தறியாதது ஆகியவற்றுக்கெதிராக தோழர்கள் அனைவரும் அமைப்பு முழுவதும் விழிப்புணர்வுடன் இருந்து போராட வேண்டும். அமைப்பு முழுவதும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு நெறிமுறை மற்றும் கண்ணோட்டத்தில் ஊன்றி நின்று குறிப்பாக தலைமையாக செயல்படக்கூடிய தோழர்கள் செயல்பட வேண்டும் என்று பிளீனம் ஆகப் பெரும்பான்மையாக முடிவு செய்கிறது.

மா...வின் மீதிருந்த அதிருப்தியின் காரணமாக, சதிகாரகலைப்புவாதக் கும்பலின் அவதூறுகளுக்கு பலியாகியுள்ள, புரட்சியை நேசிக்கின்ற தோழர்களே!

கட்சியைக் கைப்பற்றும் நோக்கில் நடைபெற்ற சதியை அம்பலப்படுத்தியுள்ளோம். சதிகாரர்கள், கலைப்புவாதிகள், சீர்குலைவுவாதிகள் ஆகியோரின் தன்மையை வெளிக் கொணர்ந்துள்ளோம். தற்போது அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கு கட்சி வலது திசைவிலகல் அடைந்திருப்பது அடிப்படை காரணமாக அமைந்துள்ளது என்று உணர்ந்துள்ளோம். இதில் இருந்து அமைப்பை மீட்டு சரியான மாலெ அடிப்படையிலான நமது மக்கள்திரள் வழியில் அமைப்பை நிலைநிறுத்த இந்தப் பிளீனம் உறுதி பூண்டுள்ளது. தவறுகளை அடையாளம் கண்டு சுயவிமர்சனத்துடன் திருத்திக் கொள்வதற்கான வழியைக் கண்டடைந்துள்ளது.

எனவே, நமது புரட்சிகரக் கட்சியின் அடிப்படையை, பாரம்பரியத்தினை உயர்த்திப் பிடித்து முன்னேறுவதற்கு, சீர்குலைவுவாதிகள் கலைப்புவாதிகளைப் புறக்கணித்துவிட்டு, மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட முன்வாருங்கள் என இந்தப் பிளீனத்தின் மூலமாக அழைக்கிறோம்!

எமது அமைப்புக்குப் பலவகையிலும் உதவி வந்துள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளே, எமது அமைப்பை நேசிக்கும் உழைக்கும் மக்களே,

எமது அமைப்பின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திய சதிகாரர்கள் பிளவுவாதிகளை எமது அமைப்பிலிருந்து வெளியேற்றி, சரியான திசையில் நாங்கள் மீண்டும் பயணிக்கத் தொடங்கியுள்ளோம். எனவே, உங்களிடம் நிலவிய குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் கைவிட்டு எப்போதும் போல எங்களுக்கு ஆதரவாக நிற்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்! புரட்சியைச் சாதிக்கும் மகத்தான கடமையை நிறைவேற்ற எல்லா வகையிலும் எமக்கு உதவியாக நின்று தோள் கொடுப்பீர்கள் என்றும் நாங்கள் திடமாக நம்புகிறோம்!

புரட்சிகர வாழ்த்துகள்!

47 மறுமொழிகள்

  1. வாழ்த்துகள் தோழர்களே
    அப்படியே வைக்கும் விமர்சனங்களை பதிலளிக்க முயற்ச்சி செய்வீர்களா தோழர்களே?

  2. மகிழ்ச்சியான செய்தி!

    பிளீன அறிக்கை என்றால் இப்படி இருக்க வேண்டும்.

    1. மக்களிடமிருந்து நிதி பெற்று மக்கள் ஆதரவோடு இயங்கும் ஒரு அமைப்பு, தாம் செய்த தவறை திருத்திக்கொண்டு மக்கள் முன் வைப்பதற்கு துணிச்சலும், சித்தாந்த தெளிவும், நேர்மையும் வேண்டும்.

    2. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி உட்கட்சி போராட்டம் நடத்தி புரட்சிகர கொள்கையை நிலைநாட்ட புரட்சிகர உணர்வு வேண்டும்.

    3. சதி, துரோகம், சந்தர்ப்பவாதங்களுக்கு மரண அடிக்கொடுக்க புரட்சியை நேசிக்கும் அணிகளும், தலைமையும் அவசியம்.

    இவற்றை சாதித்துகாட்டிய தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

  3. பழைய தலைமை, சீர்குலைவுவாதிகளின் ஆணிவேரைக் காப்பாற்ற பொய்யுரைத்ததையும், பெல் சொசைட்டி ஊழலைத் தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அணிகள் பலரும் புரிந்து கொண்டதால் அதை எதிர்கொள்ள முடியாது என்பதால் ஒரு சிரு பிரிவினர் எழுதியுள்ள கதை இது. மற்றபடி வலது திசை விலகல் என்பதெல்லாம் நாடகத்திற்காக எழுதப்பட்ட புதிய வசனம் மட்டுமே. பிரச்சனையின் மையமான சாரத்தை இந்த ஒரு சிலரை ஆதரிக்கும் விவரமறியாத் தோழர்கள் விரைவில் உணருவார்கள் என்றே நம்புகிறேன்.

    • ஊரான் .. நல்லா இருக்கீங்களா ?

      உங்களப் பாத்து 8 வருசமாச்சு… இன்னும் சிறுபிள்ளைத்தனமா தான் பேசிட்டு இருக்கீங்க…

      • சிறுபிள்ளைத்தனமாக பேசுவது யார் என்பதை பின்னால் வரும் உங்கள் பின்னூட்டங்களே காட்டுகிறதே? அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் அடுத்தவர்களைப் பற்றி மதிப்பீடு செய்யும் உங்கள் அசாத்திய ‘திறமை’ கண்டு வியக்கிறேன்.

        • என்ன ********** சார்…
          வாங்க மகா பிரபோ…
          அப்படியே அந்தக் கேள்விக்கு பதில் சொல்லீட்டிங்கன்னா நல்லாருக்கும்…

    • சீர்குலைவுவாதிகளின் ஆணிவேரைக் காப்பாற்ற பொய்யுரைத்தார் பழைய செயலர்னு சொல்லுறீங்களே .. ஐயா ஊரான்… ஒரே ஒரு சந்தேகம் இருக்கு .. கொஞ்சம் கிளாரிபிகேசன் கொடுக்குறீயளா ?

      சீர்குலைவுவாதிகள்னு யாரச் சொல்றீங்க ? 2019-ல் கீற்று தளத்துல அமைப்பில் பிரச்சினை இருக்குன்னு எழுதுனவங்களத்தான சொல்றீங்க… அவங்களும் அமைப்புல ஜனநாயகம் இல்லைனு, அதிகாரத்துவம் இருக்குன்னு சொன்னாங்க.. வெளில சொன்னாங்க .. அதனால அவங்க சீர்குலைவுவாதி !! ஓகே..

      2020 பிப்ரவரில அமைப்பு சைட்லயே உங்களுடைய தலைவர் மருதையன் என்ன சொன்னார் ? அதையே தான் சொன்னார். அமைப்புல ஜனநாயகம் இல்லைன்னு சொன்னார். .. அதிகாரத்துவம் இருக்குன்னு சொன்னார்… ஆனா அவர் உட்கட்சி போராட்ட வாதியா ?

      சிப்பு சிப்பா வருதுன்னே… உங்க லாஜிக்க நினச்சா…

      அப்படியே இன்னொரு டவுட்டு .. அதுக்கும் பதில் சொல்லிட்டு போயிருங்க…

      கீழே இருக்க அணிகளா இருந்தவங்க தான் கீற்றுல 2019-ல் இந்தப் பிரச்சினையப் பத்தி எழுதுனாங்க… ஆனா 2020-ல் எழுதுனவரு 21 வருசமா தலைமையில இருந்தவரு..

      ஜனநாயகம் கிடைக்கப் பெறாத அணிகள் கீற்று தளத்தில எழுதுனது ஏற்புடையது அல்ல; அவர்கள் சீர்குலைவுவாதிகள் தான்னா, (அதுதான மருதையனோட வாதம்) இவ்வளவு நாளா தலைமையில உக்காந்துட்டு ஜனநாயகத்தை மறுத்துட்டு இருந்த மருதையனும் ஜனநாயகம் இல்லைன்னு பேசுறது கேலிக்கூத்தா தெரியல…

      சரி.. மருதையன் ஏற்கனவே ‘உள்ள’ இருந்து தலைமையின் அதிகாரத்துவத்துக்கு எதிரா போராடுன வரலாறு இருக்கான்னு தேடிப் பாத்தா கடல்லயே இல்லையாமே..

      கேக்குறவன் எல்லாம் கிறுக்கன்னு நினச்சிட்டு பேசிட்டு இருக்கீங்க போல மருதையனியவாதிகளே !

      மருதையன் மாதிரியே 10 வருசமா தலைமையில் உக்காந்துட்டு, மருதையன் குட்டைய குழப்பின பிறகு யோக்கியன் வேசம் போட்டு ரெண்டு பேரு வந்திருக்காங்களே… அவங்க கிட்ட போயி இந்தக் கேள்விய கேளுங்க !!

      அப்புறம் அந்த ஆணிவேரைக் காப்பாத்துன மேட்டர்ல, ஆணிவேர் மேல நடவடிக்கை வேணாம்னு இந்த சம்பவம் நடக்குறதுக்கு கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி பரிந்துரைச்சது மருதையன் தாங்கிற மேட்டரு உங்களுக்கு கொடுக்கப்பட்ட மருதையன், நாதன் – தலைமைக்கமிட்டிக்கு இடையில் நடந்த காதல் கடிதப் போக்குவரத்துகள்ல இருந்து உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே..

      அப்போ காப்பாத்துன மருதையன், செயலர் பொய்யுரைக்கப் போவது அறிந்தும் 2 நாட்கள் பொறுமை காத்து பொய்யுரைத்ததும் ஆள் வச்சி உறுதிப்படுத்திக்கிட்டு, அதுக்குப் பிறகு ஸ்டண்ட் அடிச்ச காரணத்த வெளாவாரியா எழுதலாம்..

      ஆனா இத்தன வருசமா புரட்சிக்காகன்னு வேல செஞ்ச மருதையன் கலைப்புவாதியா சரிய ஆரம்பிச்சபோது அதைத் தடுத்து நிறுத்தாம இப்போ சரிஞ்ச பிறகு அம்பலபடுத்தி என்ன பலன்…

      உங்களாண்ட இருக்குற அணிகள் எல்லாம் இந்தாண்ட வந்திடுவாங்கனு “பயமா இருக்கா குமாரு”. வலது திசை விலகல் நாடகம்னு சொல்றதுல இருந்து கேக்குறேன்?? இவ்வளவு நாள் தலைமைக் கமிட்டியில் இருந்துட்டு இப்போ ஒங்க தரப்புல நேரடியா இருக்குற ரெண்டு பேரும், ஒளிஞ்சிட்டு இருக்குற ரெண்டு பேரும் உங்க தரப்பு அணிகளுக்குச் சொல்லாத பல டீட்டெய்ல் ************ பரிசீலிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்காங்க…

      முடிச்ஞா அந்த நாலு பேருக்கிட்ட அமைப்பின் நிலைமை பற்றிக் கேட்டு ஞானப்பாலை அருந்தவும்.

      செய்விர்களா ? **************

  4. குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு குறிப்பான பதில் இல்லை. இவ்வளவு மோசமான குறைபாடுகளோடு ஒரு மாலெ கட்சி அறிக்கை இருக்கும் என நினைத்தே பார்க்க முடியலை

    சிலர் விலகினார்கள் என்று வரும் அதே பத்தியில் க்னிசமானவர்கள் விலகியதாக உள்ளது. வலது சந்தர்பவாதம் என உணர்ந்துள்ளீர்கள்.. ப்ரச்சினையை அடையாளம் கண்டுகொண்ட வகையில் ஓக்கே. ஆனால் எது சரியான பாதை என்பது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. 92ல் இருந்து தவறான பாதையில் நுழைய துவங்கியது என்றால் 28 வருடங்கள்… என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்? இனி என்ன செய்ய போகிறீர்கள்? விளக்கமில்லையே

    கட்டமைப்பு நெருக்கடி தவறு என்றால் அதை அடிப்படையாக. வைத்து உருவாக்கப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை இனி கலைத்து விடுவீர்களா? சீரமைப்பீர்களா? அந்த அமைப்புக்கு புதிய கொள்கை விளக்கம் தருவீர்களா? புதிய செயல்தந்திரம் என்ன?

    எதற்குமே விளக்கம் இல்லை.

    பு.ஜ தொடர்ச்சியாக கொண்டு வருவது பற்றி ஒன்றும் இல்லை. என்னை போல் சந்தா கட்டியவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்படுமா?

    பெல் சிட்டி குற்றம் என சொல்கிறீர்கள் ஆனால் அந்த குற்றத்தில் ஈடுபட்டவருக்கும் அதை மறைத்து துணை போனவர்களும் எந்த தண்டனையும் இல்லையா? மூடிய அறைக்குள் சுயவிமரிசனம் செய்து மொண்டாலே போதுமா?

    தவறாக நினைக்காதீர்கள். அரசியல் ஓட்டாண்டித்தனம் மேலோங்கி இருப்பது தெளிவாக தெருகிறது

    • *** 92ல் இருந்து தவறான பாதையில் நுழைய துவங்கியது என்றால் 28 வருடங்கள்… என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்? இனி என்ன செய்ய போகிறீர்கள்? விளக்கமில்லையே ***

      இந்தக் கருத்தில்100% உடன்படுகிறேன்…

      • 17 ஆண்டுகாலம் செயல்பட்டதாகச் சொல்லும் நீங்கள் தவறான பாதையில்தான் பயணத்துள்ளீர்கள் போல. ஒருவேளை சிறுபிள்ளைத்தனமாக இருந்து விட்டீர்களோ?

        • அதனை அரசியல்ரீதியான வார்த்தைகளில் வெளிப்படுத்தவில்லை எனினும் 2012-ல் நான் வெளிப்படுத்தினேன். நீங்கள் பிளவு ஏற்படும் வரை அதோடு தானே பயணித்து இருக்கிறீர்கள் ஊரான்?

          • நீங்கள் வெளிப்படுத்திய அரசியல் ரீதியான வார்த்தைகளை அப்படியே அசலாக இங்கே வெளியிடலாமே? சொந்தக் காரணங்களுக்காக வெளியேறுபவர்கள் இப்படித்தான் அமைப்பு சரி இல்லை என்று இட்டுக் கட்டுவார்கள். இந்த யுக்தி ஒன்றும் புதிதல்லவே?

  5. K. R அவர்களே விமர்சனம் வைக்கும் போது அது என்ன? தவறாக நினைக்காதீர்கள்?
    விமர்சனம் தவறாக இருந்தால் அல்லது உங்கள் புரிதல் தவறாக இருந்தால் அவர்கள் விளக்கம் கொடுக்கட்டும்.
    ஆனால் நீங்கள் சொல்வது சரியே, அரசியல் ஓட்டாண்டித்தனம் உள்ளது.
    அணியில் இருந்து விலகியவர்கள் அல்லது அமைப்பை சீர்குலைக்க நினைத்தவர்கள் எனும் நபர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் கடுமையாகவும், சுயவிமர்சனம் என்பது மேலோட்டமாகவும் உள்ளது.
    இன்னும் சரியான பாதைக்கு கட்சி வரவில்லை என்பதையே இந்த சுயவிமர்சனம் காட்டுகிறது.

    • நண்பரே,

      என்னால் ஒரேயடியாக இவர்களை விமர்சிக்க முடியவில்லை. கடந்த காலங்களில் இவர்களின் பணிகள் மற்றும் நானறிந்த தோழர்களின் உழைப்பும் கண் முன்னே வருகிறது.

      இந்த அறிக்கையிலேயே பாருங்க “ மா.அ.க.-வில் மறைந்திருந்த ஓர் உறுப்பினர் மற்றும் ஒரு மாற்று உறுப்பினர் ஆகியோர் இணைந்து மா.அ.க.வில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்து மேலும் நெருக்கடி கொடுத்தனர்” – இதில் ஏதாவது பொருள் உள்ளதா?

      “மக்கள் திரள் வழியில் கட்சியின் திசை வழியை உறுதி செத்வோம்” என்கிறார்கள். பு.ஜ புரட்சி என்றும் சொல்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் எப்படி செய்ய போகிறார்கள்?

      பக்குவமின்மை என்பது வலது சந்தர்பவாதத்திற்கு ஒரு அடிப்படை என்று சொல்வதை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை

      அரசியல் பிரச்சாரங்களை காட்டிலும் பொருளாதார பிரச்சினைகள் முக்கியமானது என புதிய மா.அ.க கருதினால் உங்களால் ஒரு காலத்திலும் சிபிஎம் கட்சியை மிஞ்ச முடியாது என்று மட்டும் சொல்லி கொண்டு விடை பெறுகிறேன்

      • உண்மை .. அளப்பறிய தியாகத்தை பல தோழர்கள் செய்து வளர்க்கப்பட்ட கட்சி இது.
        எட்டாண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 17 ஆண்டுகள் அமைப்பில் பணியாற்றியிருக்கிறேன். எட்டாண்டுகளாக பகுதியில் உள்ள தோழர்களிடம் ஏதாவது மாநாடு இருந்தால் மட்டும் தொடர்பு கொண்டு வருகிறேன்.
        மருதையன் பகிரங்கமாக அறிவித்துவிட்டு வெளியேறிய பின்னர்தான், கட்சிக்குள் நடக்கும் விவகாரங்கள் குறித்து அக்கறை கொண்டு விசாரித்துப் பார்த்தேன்.
        இவர்கள் இந்த பிளீன அறிக்கையில் சொல்லும் பல விசயங்கள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பூடகமாகவே புரிகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் உள்ளே நடக்கும் விவகாரம் குறித்து இரு தரப்பாரின் ஆவணங்களையும் ஒரு தோழர் கொடுத்து படிக்கச் சொன்னார். அதைப் படித்ததால் இந்த அறிக்கை எனக்குப் புரிகிறது.
        அந்த ஆவணங்களைப் படிக்காமல் இதைப் பார்த்தால் புரிவது சிரமம் தான்..

        அதற்கு கூடுதல் அக்கறை செலுத்தியிருக்க வேண்டும்.

        • நசீம்,

          2016ல் விலகிய எனக்கும் இரண்டு தரப்பு ஆவணங்கள் கிடைத்தன.

          இங்கே விரிவாக சொல்ல விரும்பவில்லை. என்றாலும்,

          ***************

          உள்ளே குட்டிமுதலாளிய பண்புகள் பற்றிப் பரவி உள்ளது என்கிற அவதானிப்பு சரியே. என்ன செய்ய வேண்டும் என்கிற ஆய்வு இல்லை.

          வலது சந்தர்பவாதம் வளர்ந்த போக்கை ******* ஆவணம் விவரிக்கிறது. ஆனால், அது ஏற்கனவே நடந்து முடிந்தவைகள் குறித்த வியாக்கியானங்களாக உள்ளனவே தவிர எப்படி தவிர்த்து இருக்கலாம். இனி எப்படி தவிர்க்க போகிறோம் என்கிற ஆய்வு இல்லை. எதிர் தரப்பை சாடும் முனைப்பு உள்ளது ஆனால் அலநிலையான ஆய்வு இல்லை – பெரும் தவறுகளை ஜஸ்ட் லைக் தட் தாண்டி போகின்றனர் (*******)

          ****** ஆவணத்தில் பிரச்சார கட்டத்தில் தேங்கி நின்று விட்டதே .சந்தர்பவாதத்திற்கு வழிகோலியதாக ஓரிடத்திலும், இனி பிரச்சாரத்தை தீவிர படுத்தபோவதாக இன்னோர் இடத்திலும் வருகிறது. எனக்கு ஆவணத்தை கொடுத்தவரிடம் இந்த முரண்பாடு பற்றி கேட்டேன் பதில் இல்லை.

          இன்னும் நிறைய உள்ளது. தவிர்க்கிறேன்.

      • ஆவணங்களைப் படித்ததில் இருந்து ஒரு விசயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இங்கு இவர்கள் பக்குவமின்மை என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

        ஆவணத்தில் பக்குவமின்மை என்பதை என்னசெய்ய வேண்டும் என்ற நூலில் லெனின் குறிப்பிடும் “தேர்ச்சிநயமின்மை” குறித்தும்,
        “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும்….” என்ற அத்தியாயத்தில் லெனின் குறிப்பிடும் பொருளிலான பக்குவமின்மையை குறிப்பிட்டுருக்கிறார்கள்.

        பிரபலமாவதற்கான பிரச்சாரங்களுக்கு (பிரம்மாண்ட மாநாடுகள்) முன்னுரிமை கொடுத்தது தவறு. வர்க்கரீதியாக அணிதிரட்டாமல் பொதுவான மக்களைத் திரட்டுவது என்பதாகச் சரிந்து போனதையே வலது திசைவிலகல் என்று விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

        வெகு நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை எனக்கு உற்சாகம் அளித்தாலும், அதில் இன்னும் முழுமையாக தீர்வுகளைக் கண்டதாக தெரியவில்லை.

        ஆனால் மாற்றத்திற்கான முதல் அடி 25 ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியே.

      • தோழர்களின் தியாகங்களை குறைத்து மதிப்பிட முடியாது தான். ஆனால் அந்த தியாகத்தின் பலன், வலது திசை விலகலில் சென்ற அமைப்பால் வீணாக போய்விடுமோ என்று தான் கவலை கொள்ள வேண்டி உள்ளது.
        தியாகம் செய்ய நிறைய தோழர்கள் உண்டு என்பதால் விமர்சனத்தை குறைக்க முடியுமா.
        அப்படி பார்த்தால் சிபிஎம், சிபிஐ, ஏன் திமுக விலே கூட நிறைய தியாகம் செய்த தோழர்கள் உண்டு.
        இங்கு பிரச்சினை யே, அந்த தியாகம் எந்த பயனை ஏற்படுத்தி இருக்கிறது என்பதே.
        ஒரு புரட்சிகர கட்சி தோழர்கள் உடன் பயணித்து கொண்டு ஒருவரால் ஊழல் செய்ய முடிகிறது என்றால், எவ்வளவு கொழுப்பும், நெஞ்சழுத்தமும் இருக்க வேண்டும். அப்படி என்றால் அவர் பார்வைக்கு இவர்கள் கம்யூனிஸ்டுகளாக தெரியவில்லை யா? இல்லை இவர்கள் கம்யூனிஸ்டாக நடந்து கொள்ளவில்லை யா? இங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட தோழர்களையே, அதுவும் இத்தனை ஆண்டு காலம் கட்சி பணியில் அவர்கள் கற்றுக்கொண்டது என்ன? இவர்களின் தவறால் இத்தனை ஆண்டுகாலம்அமைப்பு வளர எத்தனை யோ பேர் செய்த தியாகங்கள் வீணாகிறது என்ற நெருடல் இல்லையா?

  6. இந்த பிளீன அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வலது திசை விலகலை 8 ஆண்டுகளுக்கு முன்னர் அமைப்பிலிருந்து விலகும் முன்னே நான் சுட்டிக் காட்டினேன்.

    நான் விலகியது சொந்தக் காரணங்களுக்காகத்தான். ஆனாலும் இன்று எண்ணிப் பார்க்கையில் அமைப்பு வலது திசை விலகலுக்குப் போகாமல் இருந்திருந்தால் நான் சொந்தப் பிரச்சினைகளை புறந்தள்ளியிருப்பேனோ என்று தோன்றுகிறது.

    தோழர்களே, வலது சந்தர்ப்பவாதம் என்ற நோயை கண்டுபிடித்து விட்டீர்கள்.. சீர் செய்யத் துவங்குவீர்களா? காத்திருக்கிறேன். முன்னேற்றப் பாதையில் செல்லும் போது சிறு அணிலாகவாவது உதவுவேன்..

  7. தோழர்களே,

    அமைப்பில் வெளிப்பட்ட இந்த மொத்த பிரச்சினை குறித்து விரிவான வகையில் அமைப்பின் அனுபவம் படிப்பினையை தொகுத்து வெளியீடாக விட்டால் சிறப்பாக இருக்கும்.

    மாவோயிஸ்டுகளின் முன்னெடுப்புகள் சீர்குலைவது பற்றி நீங்கள் வெளியிட்டது போல அரசியல் காத்திரமான பார்வையோடு, உங்களது அமைப்பு சீர்குலைவு பிரச்சினையையும் வெளிப்படையாகக் கொண்டு வருவது அவசியம்..

    இது இந்திய மார்க்சிய லெனினிய அமைப்புகளுக்கு ஒரு பாடமாகவும் அமையும்

    • மாஅக வின் சுயபரிசோதனை மற்ற அமைப்புகளுக்கும் பயன்படும்.அதனை ஆவணமாக தொகுத்து வெளியிட முன்வர வேண்டும்.

      அரசியல் தலைமைச் செயலரை நீக்கியது துணிச்சலான முடிவு.

      இதே போல ஓட்டுச்சீட்டு அரசியலில் இருக்கும் CPM ம் காரத்தை தூக்கியெறிய வேண்டும்.

  8. சுயவிமர்சனம் மேலோட்டமாக உள்ளது. 25 ஆண்டு கால அரசியல் தவறை போற போக்குல ஆமா நாங்க தப்பு பண்ணிட்டாம் அதுக்கு மண்ணிசுடுங்கன்னு முடிச்சு இருக்கீரியிற்கள். இது நீங்கள் உண்மையில் தவறை உணரவில்லை என்பதை காட்டுகிறது.

    இந்த 25 ஆண்டுகளில் மக்களை தவறாக அணிதிரட்டி உள்ளீர்கள். அதற்கான சுயவிமர்சனம் எங்கே?

    தங்கராசு விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுதிர்கள் என்பது தான் உங்கள் மீதான நம்பிக்கையை கொடுக்கும். அப்படி நீங்கள் எடுத்த மாதிரி தெரியவில்லை. குறைந்த பட்சம் சம்பந்தப்பட்டவர்களை கட்சியிலூர்ந்து கூட நீக்கவில்லை.

    நீங்கள் சரியான பாதையில் செல்லுங்கள் உங்கள் பின்னால் மக்கள் வருவார்கள். ஒட்டுக்கட்சி கேட்பது போல இருக்கிறது நீங்கள் ஆதரவு கேட்பது.

    புரட்சியை சாதிப்பது என்பது மக்களுக்கோ அனிகளுக்கோ கணக்கு காண்பிப்பது அல்ல.

  9. 28 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நானும் எங்கள் அமைப்பும்(மக்கள் யுத்தம்) socயின் செயல்பாடுகள் தன்னெழுச்சி வகைப்பட்டது என்பதை தொட்ர்ச்சியாக குறிப்பிட்டு வருகிறோம்.

    குறிப்பாக, நான் முதன்மை முரண்பாட்டிற்கு உறவில்லாத செயல் உத்திகள் தன்னெழுச்சி வகைப்பட்டது என்பதை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறேன்.

    2016 மற்றும் 2020 குறிப்பான திட்டங்களில்(புதிய போராளி வெளியீடு) விரிவாகவே குறிப்பிட்டுள்ளேன்.
    ஆனால், SOCயின் மீளாய்வில் காரணங்கள் ஆழமாக குறிப்பிடவில்லை.

  10. “25 ஆண்டுகளாக நிகழ்ந்த வலது திசை விலகல்” வரும் ஆனா வராது – பதில்!

    ஓராண்டு, ஈராண்டு – பத்தாண்டு அல்ல.. 25 ஆண்டுகள் வலது திசைவிலகல் எனில் இன்று முட்டுச்சந்தில் நிற்கிறீர்கள் என்று தானே பொருள்? முட்டுச்சந்திலிருந்து திரும்பி வருவதற்கு முதலில் அதைச் சரியாக பரிசீலிக்க வேண்டுமல்லவா? பரிசீலித்தீர்களா இல்லையா என்பது பீளீனத்தில் பங்கேற்றவர்களுக்கே வெளிச்சம்.

    *********************************************************************

    தலைமை மட்டுமின்றி மொத்த அமைப்புமே 25 –ஆண்டு வலது திசைவிலகலுக்குள் சென்றுள்ளது என்கிறீர்கள். எனில், இது நடக்கும் போது யாருமே கேள்வி கேட்கவில்லையா? கேள்வி கேட்பதற்கான Platform இல்லையா, உட்கட்சிப் போராட்டம் ஏட்டளவில் தானா? அல்லது மாற்றுக் கருத்து கொண்டவர்களை, கேள்வி கேட்டவர்களை நீங்கள் கையாண்ட விதம் என்ன? இதைப் பற்றி தான் பரிசீலித்திருக்க வேண்டும். இவற்றுக்குத் தான் சுயவிமரிசனம் தேவைப்படுகிறது.

    ******************************************************

    ///அமைப்பு விரிவடைந்த அளவுக்குப் போதுமான, தகுதியான இரண்டாம் தலைவர்கள் அனைத்து அரங்குகளிலும் இல்லாததாலும்///

    இரண்டாம் மட்டத் தலைவர்கள் இல்லாததாலா? அல்லது இரண்டாம் மட்டத் தலைவர்கள் வளர்க்கப்படாததாலா? அல்லது அரசியல் சித்தாந்த அடிப்படையை கொண்டு இரண்டாம் மட்டத் தலைவர்களை அடையாளம் காணாமல், எந்தக் கேள்வியுமின்றி நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்பவர்களை – உங்களிடம் ’அதீத விசுவாசம்’ காட்டுபவர்களை இரண்டாம் மட்டத் தலைவர்களாக அடையாளம் கண்டதாலா?

    நீங்கள் வளர்த்த தலைமையில் பெரும்பான்மையினர் எதிர்முகாமில் தானே இருக்கிறார்கள்? இதை எப்படி பரிசீலிப்பது? இவர்கள் உங்களுடன் இருந்தபோது வெளியேற்றியவர்களை / வெளியேறியவர்களை இன்றும் சீர்குலைவுவாதிகள் என்று நீங்கள் சொல்வதை எப்படிப் பரிசீலிப்பது?

    கட்டமைப்பு நெருக்கடி – மக்கள் அதிகாரம் குறித்து சமரன் குழுவினர் ஒரு வெளியீட்டை கொண்டு வந்ததாக நினைவு. அதற்கு அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவும் இல்லை. ******************************** கட்டமைப்பு நெருக்கடி – மக்கள் அதிகாரம் குறித்து பிற குழுக்கள் முன்வைத்தது “பாமரத்தனத்தை கோட்பாடாக்கும்” விமரிசனமாகக் கூட இருக்கட்டும், அது குறித்து எதுவும் சொல்லாமல் புறங்கையால் நிராகரித்ததை பற்றி ஏதும் பரிசீலித்தீர்களா?

    இப்போதும் கூட ”25 ஆண்டுகளாக நிகழ்ந்த வலது திசை விலகலை” மருதையன் – நாதன் வெளியேறியது முதல், மா.அ.க.வில் மறைந்திருந்து பின் வெளியேறிய இருவர், இ.கா.க சதி, அதன் பின் அணிகளில் கணிசமானோர் அவர்கள் பின் சென்றதில் ஏற்பட்ட பிளவு சம்பவங்களுக்குப் பிறகு தான் பரிசீலித்திருக்கிறீர்கள். ஒருவேளை இந்த பிளவு நடக்காமலிருந்திருந்தால் நீங்கள் பரிசீலித்திருப்பதற்கு வாய்ப்பே இருந்திருக்காது என்பதை நினைக்கும்போது அச்சமாக இருக்கிறது.

    இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் அமைப்புத்துறையில் பிரச்சினை எதுவும் இல்லையென்றோ, நடைமுறைப்படுத்தப்பட்ட கோட்பாடு சரியானதென்றோ நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இவற்றைப்பற்றி பரிசீலிப்பதற்கான பெரிய சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    கோட்பாட்டிலிருந்து நடைமுறைக்கு செல்வது, நடைமுறையிலிருந்து மீண்டும் கோட்பாட்டுக்கு செல்வது என்ற அடிப்படையில் பரிசீலிக்கவில்லை. மக்களிடமிருந்து மக்களுக்கு, மக்களை திரட்டி மக்களுக்காக புரட்சி நடத்தபோகிறோம் என்ற அடிப்படையில் நீங்கள் பரிசீலிக்கவே இல்லை. இந்த பத்திரிக்கைச் செய்தியில் அப்படியொன்றுமே இல்லை. எந்த அடிப்படையில் மக்களிடம் ஆதரவு கேட்கிறீர்கள்?

    • ஐயா,

      நான் போட்ட கமெண்ட்டில் நிறைய வெட்டியிருக்கிறீர்கள். அதில் தனிநபர் தகவல் இல்லை. அனுமானக்கள், அவதூறுகள் இல்லை. அமைப்பின் ரகசியத்தை “காட்டி” கொடுக்கும் விதமாகவும் எதுமில்லை என்று கருதுகிறேன். இருந்தும் வெட்டியிருக்கிறீர்கள்.

      ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா? பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன்.

      //பிளீனத்தின் கூட்டத்தில் பல சுற்றுக்கள் நடந்த வாதப்–பிரதிவாதங்களில், கட்சியின் அணிகள் ஜனநாயக பூர்வமாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர், தலைமையில் தவறுகளைக் கூர்மையாக விமர்சித்தனர்.//

      இங்கு மறுமொழிகளை மட்டுறுத்துவதிலேயே தெரிகிறது.

      • வெளியிடப்பட்ட அறிக்கையின் மீதான உங்களது கருத்துக்களில் எவ்வித மட்டறுப்பும் செய்யப்படவில்லை. அறிக்கைக்கு சம்பந்தப்படாத சில விசயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

        மற்றபடி, வினவு மட்டறுத்தலை அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களோடு ஒப்பிடுவது சரியான அணுகுமுறையல்ல.

  11. 25 ஆண்டுகளாக கட்சியை சீரழித்த வலது திசை விலகல் பிரச்சினை முக்கியமானது. அதை கண்டுபிடித்து வெளுத்து வாங்கிய தோழர்களுக்கு முதற்கண் எனது நன்றி.

    *************************************************************************************************
    வங்கத்து பாப்பாத்தி ஸ்ரேயா கோஷலை ரசித்து உருகி உருகி நான்காம் ஆண்டு வினவு பிறந்த நாளன்று வெளியிட்டது இதே நாதன் கும்பல்தான். இப்படி மேட்டுக்குடி ரசனையை நெஞ்சைத் தொட்டு நக்கிய ஒரு கட்டுரையை ஒரு பாட்டாளி வர்க்க போராளியோ, பாட்டாளி வர்க்க இணைய தளமோ எழுதுமா? அந்த கட்டுரை வெளியான போதே அதை கண்டித்து நானும் பலரும் கமெண்டு போட்டோம். ஆனால் நாதன் கும்பல் திருந்தவில்லை. தொடர்ந்து ஏகாதிபத்திய சீரழிவு நாயகம் மைக்கேல் ஜாக்சனை போற்றி விதந்தோதும் கட்டுரை, பிகினி உடையில் சாஃப்ட் ஃபோர்னோ காட்டும் ஜேம்ஸ்பாண்டை பற்றிய ஆய்வு, ஆபாசப்படம் 8mm பற்றிய விமர்சனம் என்று நிறைய உள்ளது. ஒரு காலத்தில் வினவு என்றாலே சினிமா என்று இருந்தது. இதையும் நான் அவ்வப்போது கண்டித்திருக்கிறேன். தனியாக மெயிலே போட்டிருக்கிறேன். *********************************************************************
    *********************************************************************

    முடிந்தால் இந்த ஏகாதிபத்திய சீரழிவுக் கட்டுரைகளை நீக்கும் படி வினவு தளத்தின் புதிய பொறுப்பு தோழர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    • வணக்கம் கலகம்,

      உங்களது கமெண்டில் பல வரிகள் மட்டறுக்கப்பட்டுள்ளன. காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.. அவை வெளியிடத்தக்கவை அல்ல.

      ஷ்ரேயா கோஷல் கட்டுரையை தவிர்த்துப் பார்த்தால், நீங்கள் கூறிய பிற கட்டுரைகள் அனைத்தும் ஏகாதிபத்திய கலாச்சாரத்தை விமர்சிப்பதாகவும், சமகாலத்திய பிரச்சினைகளில் இயங்கியல்பூர்வமாகப் பார்ப்பதாகவும் தான் எழுதப்பட்டிருக்கின்றன.

      அந்த வகையில் இந்தக் கட்டுரைகள் இன்றளவும், கலாச்சார விவகாரங்களை விமர்சனபூர்வமாகப் பார்ப்பதற்கான அடிப்படைக் கட்டுரைகள் என்பதே இன்றும் வினவு தளத்தின் நிலைப்பாடு..

      ஷ்ரேயா கோஷல் கட்டுரை கலை ரசனை என்ற அளவில் மட்டுமே எழுதப்பட்டிருந்த கட்டுரை என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அதனை தளத்தில் இருந்து எடுத்தே ஆகவேண்டும் எனும் அளவிற்கு சீரழிவான கட்டுரை அல்ல.

      ஏகாதிபத்திய சீரழிவுக் கட்டுரைகள் என்று அவற்றை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று விரிவாகக் குறிப்பிட்டால் அதனை விவாதிக்கலாம். விளக்கமளிக்க தயாராக இருக்கிறோம்.

    • பாட்டாளி வர்க்கத்துக்கான – பரந்து பட்ட மக்களுக்கான தளமாக வினவு செயல்பட வேண்டும் என்றாலே, மக்களின் ரசனைகளுக்குள் பயணித்து அதன் சரி தவறுகளை அலசி ஆராய்ந்து அனைவருக்கும் உணர்த்தும் வகையிலும், அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலும் எழுதுவதே சரியானது. அவசியமானது. வெறுமனே மார்க்சிய பேராசான்களின் கட்டுரைகள், மேற்கோள்கள் மட்டும் இந்தப் பணியைச் செய்யாது.

      இவ்வளவு காலம் வினவு அந்தப் பணியை செய்துவந்தது. இனியும் தொடர்ந்து செய்யும்.

  12. ஆற்றல் மிக்க அப்பழுக்கற்ற எண்ணற்றத் தோழர்களை கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்திய நீங்கள் வினவு செய்து வந்த பணியை இனி ஒரு போதும் உங்களால் செய்ய இயலாது. கடந்த சில மாதங்களில் அதை நிரூபித்தும் வருகிறீர்கள்.

    • //வினவு செய்து வந்த பணியை இனி ஒரு போதும் உங்களால் செய்ய இயலாது.//

      உங்களைப் போன்றவர்கள் இவ்வாறு பேசுவதற்கு காரணம் தனிநபர் வழிபாடு தானே தவிர வேறொன்றுமில்லை. ஒன்றும் கவலைப்பட வேண்டாம், யார் இல்லை என்றாலும் பூமி தன் சுழற்சியை நிறுத்திக் கொள்ளாது.

    • வினவு தளத்தின் பின்னூட்ட விதிமுறைப்படி தான் கமெண்டுகள் மட்டறுக்கப்படுகின்றன. அந்த விதிமுறைக்கு உட்பட்டே பின்னூட்டங்கள் வெளியிடப்படுகின்றன.

  13. //இவ்விருவர் தொடுத்த திடீர்த் தாக்குதலைத் தொடர்ந்து, ……………. ………… ……….. …………, மா.அ.க. தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது.//
    இந்த பத்தி புரியவில்லை..

  14. வாசகர்களுக்கு ஜனநாயகத்தை மறுக்கக்கூடாது என்று உங்களில் ஒருவர் முழங்கியதாகக் கேள்வி. அதிகாரத்தைச் சுவைப்பதில் அப்படி என்ன ஆசையோ?

    • அந்த அடிப்படையில்தான் உங்களது கமெண்டுகள் பிரசுரிக்கப்படுகின்றன. சங்கிகள் பேசும் அவதூறுகளையொத்த செய்திகளை ஜனநாயகம் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாது.

  15. வினவு மீதான உங்கள் அக்கறை மகிழ்ச்சியை தருகிறது. தளம் தற்போது அந்த அளவுக்கு சோபிக்கவில்லை உண்மைதான். வினவை தொடங்கும்போதும் இத்தகைய சூழலில் தான் நிலவியது என்று கருதுகிறேன் ஆகையால் சிறிது காலம் பொறுத்திருங்கள் உங்கள் ஆதரவுடநே நீங்கள் விரும்பும் அளவிற்கோ அதற்கு மேலாகவோ கண்டிப்பாக வினவு சோபிக்கும்.

  16. தோழர்களுக்கு வணக்கம்
    என்னுடைய கமெண்டுகள் வெளியாகவில்லையே ஏன்?

    • உங்களது கமெண்டுகள் வினவின் செயல்பாடு பற்றியதாக இருந்ததன் காரணமாக இங்கு வெளியிடப்படவில்லை. இந்த பதிவின் மையமான பொருளை ஒட்டி விவாதித்தால் பிரசுரிக்கலாம்.

      வினவு தளத்தின் செயல்பாடுகள் குறித்து அதற்கான பதிவில் விவாதிக்கலாம். இதன் காரணமாகவே உங்களது கமெண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டன

  17. கருத்தைச் சொன்னால் கடைசியில் சங்கிப் பட்டமா? இதெல்லாம் அவதூறு இல்லையா? கழுத்தை நெறிக்கும் உங்களோடு களமாடுவது வீண் வேலை என்பதைப் புரிய வைத்தைக்கு நன்றி!

    • அவதூறு பேசிவது சங்கிகளின் நடைமுறையில்லையா ? பல வாசகர்களும் உங்களுடன் ஜனநாயகப் பூர்வமாக விவாதிக்கிறார்களே.. அவர்களுக்கு பதில் அளிக்கலாமே..

Leave a Reply to ஊரான் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க