ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு : மோடியின் பாசிச நடவடிக்கை | தோழர் சுரேசு சக்தி

மோடி அரசின் இந்துராஷ்டிர கனவிற்கான பாசிச செயல்திட்டத்திற்கும், கார்ப்பரேட் சேவைக்கும் மக்களை கண்காணிக்க முனையும் இச்சட்டத்தின் அபாயங்களை தோழர் சுரேஷ் விளக்குகிறார்.

மோடி அரசு நாடாளுமன்றத்தில் எந்தவித விதாதங்களும் இன்றி, எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021-ஐ நிறைவேற்றியுள்ளது.
இது நாட்டின் உழைக்கும் மக்களின் ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து தகவல்களையும் சேகரிக்கும் ஓர் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை பறித்து தான் வெற்றி பெறுவதற்கான அடைப்படையை உருவாக்குவதற்கான திட்டத்தின் ஓர் அங்கம்தான் இந்த சட்டம்.
தேர்தல் கமிசனுக்கு தெரிந்த வாக்காளர்களின் தனி உரிமை விவரங்கள் தற்போது ஆளும் வர்க்கத்தின் கார்ப்பரேட் முதலாளிகளின் அனைவருக்கும் கிடக்கபெறும் தகவல்களாக மாறும். ஓர் தனி மனிதனின் அனைத்து உள் விவகாரங்கள் வெளிப்படையாகவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பாசிச மோடி அரசுக்கும் தெரிய வழிவகை செய்து கொடுக்கும் சட்டம்தான் இது.
பாசிசம் அரங்கேறுவதற்கு முன் ஹிட்லர், தான் ஒடுக்க நினைக்கும் மக்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்தான். அதன்பின் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதேபோல் தற்போது மோடி அரசு தன் இந்துராஷ்டிர கனவிற்கான பாசிச செயல்திட்டத்திற்கும், கார்ப்பரேட் சேவைக்கும் மக்களை கண்காணிக்கவே இந்த திட்டத்தை பயன்படுத்த முனைகிறது.
எனவே உழைக்கும் மக்கள் அனைவரும் பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக ஒன்றினைந்து போராடவேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த சட்டத்தின் அபாயங்களை விரிவாக இந்த காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள் !!