கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த யூட்யூப் சேனல்கள், வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அளித்த உத்தரவை திரும்பப் பெறப்பட வேண்டும்! | மக்கள் அதிகாரம்

நீதிமன்றத் தீர்ப்புகளே விமர்சனத்திற்கு உட்பட்டவை தான் என்பதை பலமுறை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பின்னரும்கூட, இவ்வழக்கு குறித்து விவாதித்த ஊடகங்கள் மீதும் வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.

01.09.2022

கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த யூட்யூப் சேனல்கள், வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அளித்த உத்தரவை திரும்பப் பெறப்பட வேண்டும்!

ள்ளக்குறிச்சி சக்தி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் இறந்து போன மாணவியின் வழக்கை முறையாக விசாரிக்காமல் அரசும் போலீசும் செயல்பட்டதை வலைத்தள ஊடகவியலாளர்களும்  வழக்கறிஞர்களும்தான் அம்பலப்படுத்தினர்.

இதன் விளைவாகவே,  இறந்து போன அந்த மாணவி மட்டுமல்ல இதற்கு முன்பு பலர் அப்பள்ளியில் மர்மமான முறையில் இறந்து போனதும் அச்சம்பவங்களில் அடாவடியாக அப்பள்ளி நடந்துகொண்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும், அப்பள்ளி பிஜேபியின் பின்புலம் கொண்டது என்பதையும் ஜூலை 17 பள்ளியின் மீதான தாக்குதலுக்கு பிறகு அச்சம்பவத்தில் சிறிதும் தொடர்பற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் திட்டமிட்டு வேட்டையாடப்பட்டு கைது செய்யப்பட்டதும் அதில் ஆதிக்க சாதி வெறியர்கள் ஈடுபட்டது விவாதங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்புகளே விமர்சனத்திற்கு உட்பட்டவை தான் என்பதை பலமுறை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பின்னரும்கூட, இவ்வழக்கு குறித்து விவாதித்த ஊடகங்கள் மீதும் வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கக் கூடிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

கள்ளக்குறிச்சி பிரச்சினை தொடர்பாக ஊடகங்களில் பேட்டி அளித்த,  விவாதித்த வழக்கறிஞர்கள் அனைவருமே இறந்துபோன மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நியாயத்திற்காகவே உரையாடினார்கள். அவ்வழக்குரைஞர்கள் அவர்களுடைய தனிப்பட்ட இலாபத்துக்காக எதையும் செய்யவில்லை.

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று பெருமை பொங்க ஒருபுறம் தேசியக்கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தனியார் பள்ளியில் இறந்துபோன ஒரு மாணவிக்கு நீதி வேண்டும் என்று உரைத்ததற்காக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஜனநாயக கேலிக்கூத்தாகும்.

மேற்கண்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெறும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க