ப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜுலை 8-ஆம் நாள் பகல் 11.30 மணிக்கு நாரா கிண்டேட்சு இரயில் நிலையம் எதிரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது 41 வயதான டெட்சுயா யமாகமி என்னும் முன்னாள் கப்பற்படை வீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கூட்டத்தில் நின்றிருந்த அவன் மேடையின் மீது பின்புறமாக ஏறிவந்து ஷின்சோ அபேயின் அருகாமையில் நின்று தனது நாட்டுத் துப்பாக்கியால் ஒருமுறை சுட்டான். உடனே அருகேயிருந்த பாதுகாப்புப் படையினர் கொலையாளியை வளைத்துப் பிடித்து கைது செய்தனர். எனினும் ஷின்சோ அபே அதே இடத்தில் உயிரிழந்தார் என்று பாதுகாப்புத் துறையினர் அன்று மாலை 5.03 மணிக்கு அறிவித்தனர். ஷின்சோ அபே நிஹான் கெய்கி எனும் பழம் பெருமை பேசும் தீவிர மதவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதுடன் அதை ஆதரித்து வளர்ப்பவர் அவரே என்பதால் அவரை சுட்டுக்கொன்றதாக கொலையாளியே வாக்குமூலம் அளித்ததாகவும் தெறிவித்தனர்.

தேர்தல் நடக்க இரண்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் மக்கள் முன்னிலையில் ஒரு முன்னாள் பிரதமர், ஒரு தனி மனிதனால் சாதாரணமாக சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு பயங்கரவாத சம்பவத்தை மேற்குலக நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஒரு செய்தியாகவே கடந்துவிட்டன.

ஆனால், அன்று மாலை அரசால் வெளியிடப்பட்ட மருத்துவ உடற்கூறாய்வு அறிக்கையில் ஷின்சோ அபேயின் உடலில் இரண்டு குண்டுகள் பாய்ந்திருந்ததாகவும் மேடையில் மக்கள் கண்டதுபோல் பின்னாலிருந்து அல்லாமல் குண்டுகள் முன்னாலிருந்து பாய்ந்திருப்பதாகவும் மேலும் அந்த குண்டுகள் சாதாரண நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டவை அல்ல என்றும், மாறாக நவீன ரக துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டிருந்தது.

படிக்க : இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !

பாதுகாப்புப் படையினர் சொல்வதைப்போல் ஒரு முன்னாள் பிரதமரின் பிரச்சார மேடையின் மீது ஒரு சாதாரண நபர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஏறிச்சென்றிட முடியாது என்றும் அந்த நபர் பாதுகாப்புப் படையின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டவராக இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் பல அரசியல் வல்லுனர்கள் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

சுடப்பட்ட குண்டுகள் மேடையிலிருந்தல்லாமல் மேடைக்கு எதிரிலிருக்கும் உயர்ந்த கட்டடங்களின் மேலிருந்து நவீன ரகத் துப்பாக்கிகளால் குறிவைத்து சுடப்பட்டிருக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர். மேலும், சொல்லப்படுகின்ற துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் அந்த கொலையாளியை வளைத்துப் பிடித்துக் கைதுசெய்த விதமும் அரங்கேற்றப்பட்ட நாடகக் காட்சி போலவே இருந்தது என்று பொது மக்கள் கூறுகின்றனர்.

நாட்டின் முன்னாள் பிரதமர் ஒரு சாதாரண தனி மனிதனால் பட்டப்பகலில் பிரச்சார மேடையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற செய்தி சர்வதேச ஊடகங்களில் எந்த பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை. ஏன்? எப்படி இந்த கொலை நடந்தது என்பது பற்றி எந்த பெரிய விவாதமும் ஊடகங்களில் நடைபெறவில்லை. உலக நாடுகள் பலவும் வருத்தம் தெரிவித்தன. சம்பிரதாயமான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனாலும் எல்லோரும் கொலையாளி கைது செய்யப்பட்டுவிட்டதிலும் அவன் கொடுத்த வாக்குமூலத்திலும் அனைத்தும் முடிந்துபோனதாக நிறுத்திக் கொண்டனர்.

இவையனைத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது இது நிச்சயமாக மேற்குலக நிதியாதிக்கக் கும்பலின் கூட்டுச் சதியாக இருக்க வேண்டுமென்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

***

ஷின்சோ அபே தனது ஆட்சிக்காலத்தில் ஒரு பக்கம் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளுடன் நட்புறவுடன் இருந்துகொண்டு சீன எதிர்ப்பு என்று பேசி இராணுவ ரீதியில் வளர்த்துக் கொள்வதும், மறுபுறம் ரசியா மற்றும் சீனவுடன் இரகசிய உறவு வைத்துக்கொண்டு பல்வேறு தொழில் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதாரப் பலன்களை அடைவதும் என்று தனது அயலுறவுக் கொள்கையை வகுத்துக்கொண்டு செயல்பட்டு வந்தார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் நேட்டோ நாடுகளுடன் சேர்ந்துகொண்டு சீனா மற்றும் ரசிய எதிர்ப்புக்காகவும் இன்னும் ஐ.நா.வின் சர்வதேச அமைதிப்படை நோக்கங்களுக்காகவும் என்கிற முகாந்திரத்தில் இராணுவத் தளவாடங்களை வாங்கிக் குவித்தார். தொடர்ந்து ஜப்பான் இராணுவத்தை பலப்படுத்திக்கொண்டே வந்தார். அமெரிக்காவும் தமது உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், வர்த்தகப் போட்டியில் ஆதாயம் அடையும் எண்ணத்திலும், தனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகின்ற நட்புநாடு என்ற நம்பிக்கையிலும் ஏராளமான ஆயுத தள்வாடங்களை ஜப்பானுக்கு விற்பனை செய்துள்ளது.

அதேபோல் ரசியாவுடனான தனது வடஎல்லைப் பிரச்சினையை சுமுகமான பேச்சுவார்த்தை மூலமாகவே பேசி சமரச ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் கொண்டார் அபே. அதனால் பொருளாதார ரீதியில் சில முதலீட்டு வாய்ப்புகளையும் பெற்றார் அபே. அதுபோலவே, சீனாவுடன் 15 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி 2019-இல் பல தடையற்ற ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு ரசியா, சீனாவுடனான பொருளாதார உறவுகளை ஒரளவிற்கு மேம்படுத்திக்கொண்டார்.

***

மேற்கூறியவாறு நிலைமை இருக்க, ஜப்பானில் தகவல் தொழில் நுட்பத் துறையிலும் இன்ன பிற அரசுத் துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கத்தை தீவிரப்படுத்தவேண்டும் என்று மேற்குலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தகவல் தொழில்நுட்பச் செயல்பாடுகள் மற்றும் பரிமாற்றங்கள் யாவற்றையும் கூகுள், ஆரக்கிள், SAP, ஃபேஸ்புக் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் மூலமாக டிஜிட்டல் முறையில் நடைபெறச் செய்யுமாறு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தன. அதற்கு அவற்றின் செயல்திறனை காரணமாகக் கூறி வருகின்றன. எனினும் சீனா மற்றும் தென்கொரிய நாடுகளுக்கு இணையாக ஜப்பான் இன்னமும் அத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரவில்லை. தகவல்கள் (Data) தனியார்மயமாவதை ஜப்பான் விரும்பவில்லை.

ஜப்பானில் இன்னமும் அரசு ஆவணங்கள் காகிதத்தில் பராமரிக்கப்படுகின்றன. இந்த முறையானது, நான்காவது தொழில்நுட்பப் புரட்சி என்று மேற்குலகத்தால் போற்றப்படுபவனவற்றுள் ஒன்றான செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை ஜப்பானில் பயன்படுத்துவதற்குத் தடையாக இருக்கின்றது. இவற்றை அறிந்திருந்தபோதிலும் எல்லா உள்நாட்டு, வெளிநாட்டு தகவல் தொடர்புகள் மற்றும் பரிமாற்றங்கள் அனைத்தும் டிஜிட்டல்மயமானால் மேற்குலகின் ஊடுறுவலும் ஆதிக்கமும் அதிகரிக்கும் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் ஜப்பான் அதை தவிர்த்து வருவதாக கருதப்படுகின்றது.

***

ஜப்பானில் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் அரசுத்துறைகளில் டிஜிட்டல்மயமாக்கத்தை அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததையும்; ஷின்சோ அபே சீனா மற்றும் ரஷ்யாவுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொண்டதையும் வைத்து பார்க்கும்போது, ஷின்சோ அபேயின் கொலையில் அமெரிக்கா மற்றும் மேற்குல நிதியாதிக்க கும்பல்களின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

படிக்க : ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும் !

ஒரு நாட்டின் தலைவரை அவ்வளவு எளிதாக கொலை செய்துவிட முடியுமா என்றால், உலகையே அடக்கி ஆள இலட்சிய வெறிகொண்டு அலையும் அமெரிக்காவும் நேட்டோவும் பிற நிதியாதிக்க கும்பலும் மிகப்பெரிய அரசியல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்த நிலையில், இதுபோன்ற கொலைகள் அசாதாரணமானவை அல்ல. அப்படி ஆச்சரியப்பட இது முற்றிலும் புதியது விஷயமுமல்ல. ஏற்கனவே இதுபோலவே அரசியல் காரணங்களுக்காக இரு ஜப்பானிய பிரதமர்கள் (1932-இல் இனுக்காய் சுயோஷி மற்றும் 1936-இல் சாய்ட்டா மக்கோட்டா) பிரதமராக இருக்கும்போதே கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் தென்கொரிய தலைநகர் சியோலின் மேயராக இருந்தவர் பார்க் ஒன் சூன். அவர் கொரோனா காலத்தில் அமெரிக்க வழிகாட்டுதலை புறந்தள்ளி தன்னிச்சையாக செயல்படத் துணிந்ததால் திடீரென்று ஒரு நாள் காணாமல்போனார். மறுநாள் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் தன் அலுவலகப் பெண் ஊழியரின் பாலியல் புகார் காரணமாக தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல், அமெரிக்க சிஐஏ-வின் கொலைப்பட்டியல் மிக நீண்டதாகும். வரலாறு நெடுகிலும் காணக்கிடக்கிறது. பெரும் அரசுத் தலைவர்கள் மட்டுமல்ல அடுத்த நிலைத் தலைவர்கள், அதிகாரிகள், இராணுவத் தளபதிகள், நீதிபதிகள் என்று யாரும் அதற்கு விதிவிலக்கில்லை. ஈராக்கின் சதாமும், லிபியாவின் கடாபியும், ஈரானின் படைத்தளபதியும் அமெரிக்காவின் இலட்சியத்துக்கு பங்கம் விளைவித்ததனால் கொல்லப்பட்டவர்களே. அவ்வரிசையில் தற்போது ஷின்சோ அபேவும் அமெரிக்காவினால் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையே  நமக்கு எழுப்புகிறது.


கஜினி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க