பணி நிரந்தரம் கோரி தற்காலிக செவிலியர்கள் போராட்டம்!

கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது தற்காலிக செவிலியராகப் பணியமர்த்தப்பட்ட 3,290 பேரை நிரந்தர செவிலியர்களாகப் பணியமர்த்தக் கோரி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க தேர்தல் வாக்குறுதி 356-இல் குறிப்பிட்டிருந்தவாறு கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று கோரி தொடர்ந்து இரண்டு நாட்களாகப் போராடி வருகின்றனர்.