நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்துகிறோம்!

தனது வாழ்நாள் முழுவதும் நக்சல்பாரி இயக்கத்தின் அடிப்படைகளையும் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படைகளையும் உயிராகப் பாதுகாத்தார். மா.அ.க.வின் மக்கள் திரள் வழியை உயர்த்திப் பிடித்தார். பல மா-லெ குழுக்களில் நிலவும் இடது தீவிரவாதம், வலது சந்தர்ப்பவாதம், கலைப்புவாதம் மற்றும் பல்வேறு அராஜகவாதப் போக்குகளுக்கு எதிராக உறுதியாகப் போராடினார்.