நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்துக்கு சிவப்பஞ்சலி! || மா.அ.க

புரட்சிகர அரசியலில் 50 ஆண்டு காலம் பணியாற்றிய தோழர் சம்பத், செயல்பட முடியாமல் உடல்நலம் குன்றிவிட்ட கடந்த அக்டோபர் மாதம் வரை, தொடர்ந்து அமைப்புப் பணிகளில் ஊக்கமாகச் செயல்பட்டார். வயது முதிர்ச்சி, சியாட்டிக் நரம்புப் பிரச்சினை மற்றும் அல்சர் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்த போதும் அவர் தனது அமைப்புப் பணிகளை நிறுத்திக் கொண்டதில்லை.