ஆணவப் படுகொலைக்கெதிரான இயக்கம்: பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கெதிரான எமது பண்பாட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சி…!

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நமது போராட்டமென்பது, “சாதி-மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் கீழ், பண்பாட்டுப் போராட்டமாக அமையட்டும். சாதி ஒழிப்புப் போராட்டத்தை இத்திசையில் தொடங்கி முன்னெடுப்போம்! இந்தப் பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுகமாக தோழர்கள் ராதிகா – ரவி மணவிழாவை அமைத்துள்ளோம்.