Tuesday, June 9, 2026
உலக யோகா தினத்தை முன்னிட்டு, மோடியின் ’யோகா’ நாடகத்தை துகிலுரித்து அம்பலப்படுத்துகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல் ! பாருங்கள் ! பாடுங்கள் ! பகிருங்கள் !
”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திருச்சி உறையூர் கடைவீதி, பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தின் நேரலை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்திலும், இந்த பதிவிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
திருடன் போல வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை போலீசு எடுத்துச் சென்றதையும், உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவர் குறித்தும், சுப்புலட்சுமி கண்ணீர் மல்க பேட்டியளிக்கிறார். சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?
சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு தமது நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துக் குரல் கொடுத்த மூதாட்டியைக் கைது செய்தது அடிமை எடப்பாடி அரசின் எடுபிடி போலீசு. தாம் உழைத்து பண்படுத்திய நிலத்தை தம்மிடம் இருந்து பறிக்க நினைக்கும் அரசை எதிர்க்கும் அந்த மூதாட்டியின் பேட்டி
என்.எஸ்.ஏ சட்டத்தில் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் கலிலூர் ரகுமான் அவரது இரு மகன்கள் முகமது அனஸ், முகமது இர்சத் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறித்து அவரது மனைவி, தாயார், தம்பி பேசுகின்றனர் - வீடியோ.
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் அடிமை எடப்பாடி அரசைக் கண்டிக்கின்றனர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பீட்டர் அல்போன்ஸ்.
சிந்திய குருதியில் எங்கள் வீரம் புதையுமா? நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா? புதைந்தது உடலல்ல விதையான வீரமடா! - ம.க.இ.க. பாடல்
துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தவே NSA அடக்குமுறை! கண்டிக்கிறார்கள், சென்னைப் பல்கலை கழக பேராசிரியர் வீ. அரசு; திராவிடர் விடுதலை கழகத்தின் விடுதலை இராசேந்திரன் மற்றும் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.
மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது ! சேலத்தில் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று பேட்டியளித்த மக்கள் கைது ! இது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையன்றி, வேறென்ன? அம்பலப்படுத்துகிறார்கள், டி.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) மற்றும் வீ.சுரேஷ், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.
மக்கள் அதிகாரத்தின் குரல்வளையை நெறிப்பது; அவர்களின் போராடும் உரிமையை, கூட்டம் போடும் உரிமையை மறுப்பதன் மூலம் அநீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதை தடுக்க முனைகிறது, அரசு. - சங்கரசுப்பு.
போராடும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஆலோசனைகளை வழங்குவது தேச விரோதக் குற்றமா? தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்று இந்த அடக்குமுறையை முறியடிப்போம். – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு கண்டன உரை.
வெள்ளிவிழா கொண்டாடும் கீழைக்காற்று பதிப்பகம் இதுவரை கடந்துவந்த பாதைகளை பற்றி, வாசகர்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், தோழர் துரை சண்முகம். பாருங்கள், பகிருங்கள்!
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக மக்கள் அதிகாரம் தோழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீசு. இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் 11.06.2018 அன்று தோழர் காளியப்பன் பேசுகிறார்.
காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் ஏப்ரல் - 2018 இதழில் வெளியான தலையங்கம்.
“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க நிகழ்வில் பேராசிரியர் ஜெ.அமலநாதன், பேராசிரியர் சி.சாந்தி, வழக்கறிஞர் சு.மில்டன், பேராசிரியர் ப.சிவக்குமார் மற்றும் தோழர் கணேசன் ஆகியோர் ஆற்றிய உரை.

அண்மை பதிவுகள்