’புதிய சூரியனுக்கு அனுமதி இல்லை' - நவீன மராத்தி தலித் கவிதைகலின் ஆங்கில நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகள்.
வரிசையில் நின்று காலைக் கடனை அடக்கி கை, கால் உழைப்பை முடிக்கி செல்லாத நோட்டை கொடுத்தது 'இல்லாத' நோட்டை வாங்கத்தானா?
வாழ்க்கை எனும் சாணைக்கல்லில் தீட்டியது இந்தப் பாடல் எப்படி இது நடுநிலை வகிக்கும்? எப்படி இது எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும்?
சூரியன் கண்கசங்கினான் சிதறினான் வழிந்தோடியிருந்தான். கிராமத்துக்கு என்ன வந்தது? நல்ல அறுவடையா? பேரன்மார்கள் தழுவிக் கொண்டார்கள். பறித்த ஆயுதங்களைப் பத்திரப்படுத்தினார்கள்.
காயங்கள் இருக்கத்தான் செய்தன. செய்திகள் பரவின.
நம்ப ஊர் ஆத்துல ஒருவன் மணலைத் திருடுகிறான் எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன், படிக்குற உன் பள்ளிக் கூடத்தை ஒருவன் மூடுகிறான் எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன்.
உரிமையைக் கேட்டால் போய் கடல்நீரை குடிநீராக்கு - என்பது சு. சாமியின் திமிர்வாதம், கேட்பதற்கே தமிழினத்திற்கு தகுதியில்லை - என்பது சமஸ் திமிரின் பிடிவாதம்.
கோமாதாவுக்கு ஒன்றெனில் குதித்துவரும் காவிகளே... உங்கள் கர்நாடகா ஆவிகளுடன் கலந்து பேசி, காவிரியைத் திறந்துவிடத் தடுப்பது பாக்கிஸ்தான் சதியா? பார்ப்பனிய சதியா?
அழுது கதறும் பிள்ளையை அழைத்துக் கொண்டு இறந்த மனைவியின் உடலை தோளிலேயே தூக்கிக்கொண்டு ஊருக்கு பல மைல் நடக்கும் ஒடிசாவின் துயரம் கூட, ரயிலில் அடித்துத் தூக்கி எறியப்பட்ட ஒடிசாவின் பிள்ளைகளுக்கு வாய்க்குமா தெரியவில்லை !
ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள் எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன. எனவே
நான் எதைப் பற்றிச் சொன்னாலும் நீ எதைப் பற்றிச் சொன்னாலும் எல்லாவற்றைப் பற்றியும் சொன்னது போலத்தான்.
தூய்மையாளர்களின் சொர்க்கத்தில் இடம் வேண்டாமல் நான் எழுதும் எளிய வரிகளை வேறு எவரேனும் இவ்வேளை எழுதிக்கொண்டிருக்கலாம் என நன்கு அறிந்தும், என் பாழ்நரகத்துக்குப் போகும் வழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நகரத்தில் குற்றம் பெருகி விட்டதாம் உண்மைதான்! என்னைப் பிழிந்து உழைப்பைக் கொடுக்கிறேன். பணப்பெட்டிச் சாவியோ முதலாளிகள் கையில், அரசின் கையில் நானோ அவர்கள் தயவில் நான் உயிர் வாழ்வதே பேரதிர்ஷ்டம் .
இசையின் சர்வதேசப் பெயர் பால்ராப்சன் என்றால், கவிதைப் போராளியின் சர்வதேசப் பெயர் நசீம் என்று சொல்லலாம்.
முப்பதாம் ஆண்டுகளில் யார் யாரோ தங்களைப் புரட்சிக் கலைஞர்கள் என்று மினுக்கித் திரிந்த போது ’அவர்களின் முகத்திரையைக் கிழியுங்கள்!' என்றொரு விவாதக் கனல்மூட்டி கோடு கிழித்துக் காட்டினார் சரோஜ் தத்தா. ”
நெஞ்சம் நிமிர்த்திச் சொல்வோம் இனி வடக்கே வரும் முதலில் திருவள்ளுவர் சிலை பிறகு பெரியார் சிலை !
ஒருவேளை கனமான ஒரு சுமை போல தளர்ந்து தொங்கிப் போய்விடும் போலிருக்கிறது! அல்லது கனவு
வெடிக்குமா?
























