கையில் கணிணி, கனமான சம்பளம், வார இறுதியில் கும்மாளம், வசதியான சொகுசு கார்... அதனால், அதனால் நீ என்ன அம்பானி வகையறாவா?
சட்லெஜ் நதியில் கரைந்த சாம்பல் முல்லைப் பெரியாறில் முழங்கும்போது, லாகூர் சிறையில் முழங்கிய குரல்கள் இடிந்தகரையில் எதிரொலிக்கும்போது, அவர்கள் இல்லையென்று எப்படிச் சொல்வது?
ஆம்பிளை' சிங்கங்களே ! சொந்த வர்க்கத்தை மனைவியாய் மகளாய் சகோதரியாய் வேலைக்காரியாய் சுரண்டி சுகம் கண்டது போதும்....
சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.
கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட தேசிய கீதம் தயார்… மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு தேசியக் கொடி தயார்…
ஒளிபுகாத அடர்காட்டின் நடுவில் அரிவாள்களைக் கூராக்கி பாதை செய்கிறோம் ஏளனச் சிரிப்புகளும், வன்மம் பொங்கும் ஊளைச் சத்தங்களும், முற்றும் அறிந்த மேதாவித்தனங்களும், திரும்பும் திசைகளிலெல்லாம் எதிரொலிக்கின்றன.
இவர்கள் முற்றுமுழுதான மாற்று அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் மதவாதத்தின் எச்சம்படாமல் ஜனநாயக உணர்வு கொண்டோரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால் வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும் சரத்குமார் வாழும் நாட்டில், ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின் உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள் வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.
திணித்துக் கொண்டு வரும் பெட்டிகளுக்குள்ளிருந்து பிதுக்கித் தள்ளப்படும் பைகளுக்குப் பின்னே, வெளுத்துச் சிவந்த விழிகள் முளைக்கின்றன. இறக்கித் தள்ளப்பட்ட வேகத்தில் எந்தத் திசை என்று தெரியாமல் கால்கள் மரத்துப் பாதை மறக்கின்றன.
கூட்டிப் பெருக்கிப் பாத்தா சில்லறைங்களுக்கு உள்ளாட்சி! நோட்டுக்கு மத்த ஆட்சி ! கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு !
1950'களின் பிரிட்டனில் கறுப்பின மக்கள் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டு, சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்பட்ட நேரத்தில் எழுதப்பட்ட கவிதை
புரட்சி, இயக்கமெல்லாம் பழக்கமில்லை கொடி பிடித்தல்... கோஷமிடுதல் ஒத்து வராது... கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து மேலும் சிவக்குது மே நாள்!
கிணற்றுத் தவளைக்கும் நிலவோடு உறவுண்டு! கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா...
தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும் ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்! நீயாக எதையும் கேட்க முடியாது...
கொலை செய்தே ரன் குவிப்பதில் இந்தியாவில் "மேன் ஆஃப் தி மேட்ச்’ அத்வானி! படுகொலை வேகத்தில் பிணம் குவிப்பதில் இலங்கையில் "மேன் ஆஃப் தி மேட்ச்’ ராசபக்சே! கொலைகாரர்கள் ஒன்றாய் கண்டுகளிக்க கொலைகார ஆட்டம் தயார்...













