சுதந்திரமாய் வாழ முடியாதது மட்டுமல்ல என்னால் சுதந்திரமாக சாகவும் முடியாது ஆதார் இருந்தால்தான் நான் சட்டப்படி சவம்!
பொது மருத்துவமனையை எட்டிப்பார்ப்பதற்கே ஆதித்யநாத் காவிக்கு இருபது குளிர்சாதனப் பெட்டி! உயிர் பிழைக்க ஒரு ஆக்ஜிஜன் சிலிண்டரின்றி உ.பி. குழந்தைகளுக்கு சவப்பெட்டி.
ஊர் என்று சொல்ல ஒரு காக்கை குருவி இல்லை உறவென்று சொல்ல ஒரு புழு, பூச்சி இல்லை யார் என்று கேட்க குரல் ஒன்றுமில்லை...
அரசரே நேற்று நீங்கள் என்னை வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள்
இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்!
விவசாயம் பொய்த்துப் போய் சென்னை நகர ஏடிஎம்-களில் காவலாளிகளாக இருக்கும் விவசாயிகளின் கதை தோழர் துரை சண்முகத்தின் கவிதையாக.....
அவர்களின் குரல் இந்த நகரத்தில் யாருக்கும் கேட்பதில்லை, ஆனால் ஒரு பிரபலமான குசுவின் சப்தம்
நம் காதையே செவிடாக்குகிறது.
கையில் பதாகையுடன் நின்றிருந்தஒரு இளம்பெண்ணை
ஒரு போலீஸ்காரன் தலைமுடியையைப் பிடித்து கீழே தள்ளுகிறான் பிறகு அவள் நக்சலைட் என்று அழைக்கப்படுகிறாள்
பயிர், பச்சை இன்றி உயிர் பிச்சை கேட்கும் கால்நடைகள். கழுநீர் நனைய வழியின்றி உலர்ந்த மோவாயை நாவால் வருடி காம்பு காயும் பசுக்கள். இலை தழை தேடி ஏமாந்து தன்நிழல் மேயும் ஆடுகள். இறுகி, இறுகி ஈரப்பசையற்றுப் போன நிலம் இறுதியில் விவசாயியின் நெஞ்சில் வெடிக்கிறது.
இஸ்லாமியர்கள் தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த இன்னும் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க நிறைய சுயபலிகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
ரத்த வாசனையுள்ள ஒரு கேக்கை சாப்பிட்டு விட்டு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க டீ கடையில்
தேநீர் அருந்துங்கள் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்...
எல்லையில் ஒரு சிறிய யுத்தம் வந்தால் எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் உள் நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமெனில் எல்லையில் கொஞ்சம் பதட்டம் வேண்டும்...
ஒரு தேசமே ஒரு பிக்பாஸின் ரியாலிட்டி ஷோவா மாறிவிட்டது
நூற்றி இருபது கோடி மக்களையும் பிக் பாஸ் கண்காணிக்கிறார், கட்டுப்படுத்துகிறார்.
“முஸ்லீம்கள் யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்காதீர்கள் முக்கியமாக உங்கள் உணவைப்பற்றியோ நீங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்றோ உரத்துப் பேசாதீர்கள் கிசுகிசுக்கக்கூட செய்யாதீர்கள் நீங்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்கு அது மிகவும் அவசியம்’’
ஊரான் மாட்டை அவாள் ஓசியில் தின்றது உபச்சாரம்; இன்று: உழைத்திடும் மக்கள் காசுக்கு கறி வாங்கித் தின்றால் அபச்சாரம்!
கொள்ளையடிப்பதற்கான மணல் இன்னும் மிச்சமிருக்கிறது ஆற்றில், திருடி விற்பதற்கான நீர் இன்னும் மிச்சமிருக்கிறது நிலத்தடியில்,ஒருமுறை சொன்னால் நூறுமுறை வெட்டி எடுக்க
இன்னும் மிச்சமிருக்கிறது கிரானைட்,
























