ஓயாது சுற்றிச் சுற்றி வட்டமிடும் குரல், வைரம் பாய்ந்த குரல்; இது நீக்ரோ பாடகி டிரேஸி சாப்மனின் குரல். அமெரிக்காவில் முப்பதுகளில் எழுந்த நீக்ரோ போராட்ட இசை மீண்டும் பிறந்திருக்கிறது.
சங்கு சக்கரங் கதிகலங்கிடச் சனாதனத்தின் குலைநடுங்கிட கங்கை வார்குழல் 'திங்குதிங்'கெனச் சைவாதீனம் பதை பதைத்திட அசுர கானம் முழங்குகின்றது அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.
தூக்கம் வந்துருச்சி அப்பா இன்னும் வரவில்லை. எங்கே அவர் விழுந்து கிடப்பாரோ தெரியல.அப்பாவை கெடுத்துட்டியே அம்மா. இந்த கடைய மட்டும் யாராச்சு மூடுனாக்க தேவல.
கோவன்... தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும்.