privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மேலாண்மை வாரியம் நிறுத்தி காவிரி ரத்தம் மறித்து கைக்காசையும் செல்லாதாக்கிப் பறித்து நாத்தாங்கால் மூச்சை நெறித்து பச்சை படுகொலை செய்யுது பா.ஜ.க. பாடை கட்டுது அ.தி.மு.க. ஊரையே அறுவடை செய்ய அம்மா, சின்னம்மா.
நடத்தப்படும் அரசாட்சியில் நிலைமை கட்டுக்குள். இந்த நிலைமை மீறினால் சுட்டுக் கொல்! இது ஜனநாயகமல்ல சவ நாயகம்! - தூத்துக்குடி படுகொலை குறித்து தோழர் துரை. சண்முகத்தின் கவிதை!
கார்ப்பரேட் ஆராதனை விளைநிலம் விழுங்கி கொள்ளையிடுது நாட்டை. வாய்‍பேச்சுக்கும் வருத்தமில்லாமல் உங்கள் நாவில் துள்ளுது 'நாட்டை'. மதகோசை முடங்கி பயிரோசை ஒடுங்கி உயிரோசை அடங்கும் புல்லினம். இதற்கொரு உணர்ச்சியில்லாமல் இதயம் மரத்தது இசையா ! நீங்கள் என்ன வகை உயிரினம் ?
சொற்களின் கூட்டுக்குள் ஓர் மௌனப் பறவை! தனிமைப் பெருவெளியில் நின்றபடி பெயர் தெரியாத அப்பறவை பெருந்துயரத்தில் ஆழ்ந்திருந்தது! துடைத்தெறிய முடியாத துயரம் அதன் கண்களில்! நூற்றாண்டு களைப்பைச் சுமந்திருந்தது அதன் உடல்! துயரத்தின் நிலத்திலிருந்து வந்திருக்க வேண்டும் அப்பறவை! நான் கேட்டபோது மெல்ல என் காதுகளில் பாலஸ்தீனத்திலிருந்து வருவதாகச் சொன்னது ஒரு சமயம்! ஈழத்திலிருந்து என்றது மற்றொரு சமயம்! பொய் சொல்கிறதா உற்றுப் பார்த்தேன்! அதன் சிறகுகளில் குண்டு துளைத்த துளைகள் இருந்தன! அலகின் நுனி பெயர்ந்து உணவைக் கொத்துவதற்கு சிரமப்பட்டது! ஒற்றைக் கால் சேதமடைந்திருந்தது! அதிகமாகப் பேசவில்லை அப்பறவை! உனக்கு ஏற்பட்ட துயரத்தை...
ரத்த வாசனையுள்ள ஒரு கேக்கை சாப்பிட்டு விட்டு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க டீ கடையில் தேநீர் அருந்துங்கள் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்...
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்கள் உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன. சில்லிடும் காற்றின் இனிமை உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன. இயற்கையின் உதடுகள் விரும்பும் இன்சொல் தொழிலாளி!
காடுவெட்டிகுரு முதல் குச்சு கொளுத்தி ராமதாஸ் வரை அனைத்து ஆதிக்க சாதி வெறியர்களையும் பதற வைக்கும் ஒரு நெருப்புக் கவிதை!
பல வருசம் ஓட்டுபோட்டு பாராளுமன்றமே உளுத்துப்போச்சு மாத்தி மாத்தி ஓட்டு போட்டு ஊரும் நாடும் பாழாப் போச்சு.
கூட்டத்தில் மோடி பேசக் கண்டேன் - அய்யோ! கொண்டையில் பூவும் கருகக் கண்டேன் ஆந்தைபோல் வை.கோ. அலறக் கண்டேன் - பக்கத்தில் கேப்டன் உளறி சாயக் கண்டேன்!
சூரியன் கண்கசங்கினான் சிதறினான் வழிந்தோடியிருந்தான். கிராமத்துக்கு என்ன வந்தது? நல்ல அறுவடையா? பேரன்மார்கள் தழுவிக் கொண்டார்கள். பறித்த ஆயுதங்களைப் பத்திரப்படுத்தினார்கள். காயங்கள் இருக்கத்தான் செய்தன. செய்திகள் பரவின.
ஈழக்கொலைக்களத்தை இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான்! இந்த உண்மையை உரைக்காமல் இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல், ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்தும் தில்லிவாய்க்கால்களின் மோசடிகள் முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை!
தெய்வத்தையும் நீ கண்டுபிடிக்கவில்லை தேர்தலையும் நீ கண்டுபிடிக்கவில்லை வந்தால் பார்த்துக்கொள்! தந்தால் வாங்கிக்கொள்! ஆஹா.. என்ன ஒரு தெய்வம் என்ன ஒரு தேர்தல்...
தேவதாசிகளின் அவலத்தை சொல்லும் அனுதாரா குரவ்-வின் கவிதை. ஆங்கிலம் வழி தமிழாக்கம் - புதிய கலாச்சாரம், பிப். மார்ச் 1995 இதழிலிருந்து..............
சங்கு சக்கரங் கதிகலங்கிடச் சனாதனத்தின் குலைநடுங்கிட கங்கை வார்குழல் 'திங்குதிங்'கெனச் சைவாதீனம் பதை பதைத்திட அசுர கானம் முழங்குகின்றது அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.
ஊருக்குச் செல்லும் பாதையின் துவக்கத்தில் நிழல் கொடுக்கும் அந்த வேப்பமரம் இப்போது இல்லை, தலைமுறைகளுக்கு சுவாசம் ஊட்டிய பால்சுரந்த கிளைகளின் ஈரம்... இலைகளின் வாசம்...

அண்மை பதிவுகள்