privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தாய் நாவல்

மாக்சின் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

கொடுமையே வாழ்க்கையின் நியதியாகிவிடுகிறது !

இந்த மாதிரியான மிருக வாழ்க்கையில், நீ உன்னையும் மீறி மிருகமாகிவிட முடிகிறது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 48-ம் பகுதி...

தாகம் கொண்ட நிலமாக மக்கள் காத்து கிடக்கின்றனர் !

"ஏதோ ஒரு புத்தகத்தில் அர்த்தமற்ற வாழ்க்கை” என்ற அடியைப் படித்தேன். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 47-ம் பகுதி...

என் மகனை சைபீரியாவுக்கு நாடு கடத்தினாலும் தப்பி வந்து மீண்டும் வேலை செய்வான்

"இந்த மாதிரி விஷயத்தில் ஒருமுறை தலையைக் கொடுத்துவிட்டால், அப்புறம் அதற்காகவே தன் முழு ஆத்மாவையும் அர்ப்பணித்து, முழு மூச்சுடன் ஈடுபடத்தான் நேரும்......" மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 46-ம் பகுதி...

நான் என் இதயத்திலுள்ள எல்லாவற்றையும் திறந்து கூறிவிட்டால் ….

அந்தப் போலீஸ் தலைவன் அவனை எப்படி அடித்தான் தெரியுமா? நான் பக்கத்தில்தான் நின்றேன். கன்னத்தில் கொடுத்த அறையில் அவன் பற்கள் உதிர்ந்துவிட்டன. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 45-ம் பகுதியின் பாகம்-2

உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கி விட்டது

ஜனங்களே பார்த்தீர்களா? இந்த மிருகங்கள் நம் கைகளைக் கொண்டே நம் தொண்டையை நெரிப்பதை நன்றாகப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 45-ம் பகுதி...

மனிதன் ஒரே ஒருமுறைதானே சாக முடியும் ?

ஒரு மனிதனின் கைகள் இரண்டையும் கட்டிப்போட்டுவிட்டு, இவர்கள் இஷ்டப்படியெல்லாம் அவனை வதைக்கிறார்கள். மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 44-ம் பகுதியின் பாகம்-2...

பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான்

வாழ்க்கையின் பெரும்பாகம் அவளது கண்முன்னாலேயே அவளது சம்பந்தத்துடனேயே உருவாக்கப்பட்டு வருவதை அவள் உணர்ந்தாள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 44-ம் பகுதி.

இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம்

அவர்கள் இருவரது இதயங்களும் ஒன்றையொன்று நெருங்கிப் பழகிக் கொண்டதால் ஏற்பட்ட ஆனந்த வெறி அவளது தலைக்குள் காரமான மதுவெறியைப்போல் மேலோங்கிக் கிறங்கியது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 43-ம் பகுதி.

இம்மாதிரி சமயங்களில் அவளது உள்ளத்தில் பெருமையும் அன்பும் பெருகி வழியும்

அவளது பயவுணர்ச்சியின் சாம்பல் குவியலுக்கிடையே அவளது மனம் ஒரே ஒரு சிந்தனைக்கு ஆளாகி உள்ளூரப் போராடிக்கொண்டிருக்கும்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 42-ம் பகுதி.

தோழர்களே ! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள் ?

"செத்தவர்களை அடக்கம் செய்வதோ இப்படி இருக்கிறது! செத்தவர்களுக்கோ அமைதியே கிடையாது!” மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 41ம் பகுதியின் இரண்டாம் பாகம்

உங்களில் அநேகர் சத்தியத்துக்காகப் போராடவே இல்லை !

அந்த மெளன ஊர்வலம் பாதிரிகள் யாருமின்றி, இதயத்தைக் கவ்வும் இனிய கீதம் எதுவுமின்றிச் சென்றது. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் - பாகம் 41

அவன் என் இதயத்தில் எழுப்பிய உணர்ச்சி மறையவில்லை

அவன் என் இதயத்தில் எழுப்பிய உணர்ச்சி மறைந்ததா? நேர்மையும் துணிவும் கொண்ட மனிதன் என்று அவனை நான் உணர்ந்திருந்த என் அறிவு மறைந்ததா? இவையெல்லாம் செத்தா போயின?

வாழ்க்கை முழுவதும் உன்னைப் போல் உழைப்பேன் ! போய் வா தோழனே !!

"நல்லவனுக்கு, வாழ்வதுதான் சிரமமாயிருக்கிறது. சாவதோ லகுவாயிருக்கிறது. நான் எப்படிச் சாகப் போகிறேனோ?" என்று அவள் நினைத்தாள்.

வாழ்வதிலுள்ள இன்பத்தோடு சாவதின் அவசியமும் சேர்ந்துதானே வருகிறது

அடுத்த உலகத்திலுள்ளவர்கள், இந்த உலகத்தில் உள்ளவர்களைப்போல் அவ்வளவு நல்லவர்களாயிருக்க முடியாது. அது மட்டும் நிச்சயம்.

அவனது கண்கள் மட்டும் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளிவீசிக் கொண்டிருந்தன !

என்னை மாதிரி மண்ணுப் பிறவியாக இருந்தால்…! நான் சிறிது நேரத்தில் எவனாவது ஒரு நீதிபதி முன்னால்தான் இழுத்துப் செல்லப்படுவேன் என்று நினைத்தேன்...

அண்மை பதிவுகள்