privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சொற்களின் கூட்டுக்குள் ஓர் மௌனப் பறவை! தனிமைப் பெருவெளியில் நின்றபடி பெயர் தெரியாத அப்பறவை பெருந்துயரத்தில் ஆழ்ந்திருந்தது! துடைத்தெறிய முடியாத துயரம் அதன் கண்களில்! நூற்றாண்டு களைப்பைச் சுமந்திருந்தது அதன் உடல்! துயரத்தின் நிலத்திலிருந்து வந்திருக்க வேண்டும் அப்பறவை! நான் கேட்டபோது மெல்ல என் காதுகளில் பாலஸ்தீனத்திலிருந்து வருவதாகச் சொன்னது ஒரு சமயம்! ஈழத்திலிருந்து என்றது மற்றொரு சமயம்! பொய் சொல்கிறதா உற்றுப் பார்த்தேன்! அதன் சிறகுகளில் குண்டு துளைத்த துளைகள் இருந்தன! அலகின் நுனி பெயர்ந்து உணவைக் கொத்துவதற்கு சிரமப்பட்டது! ஒற்றைக் கால் சேதமடைந்திருந்தது! அதிகமாகப் பேசவில்லை அப்பறவை! உனக்கு ஏற்பட்ட துயரத்தை...
அவர் ஆளுநராம்.. அவர் இருப்பது மாளிகையாம்.. அதன் மீதாம்.. குண்டாம்.. வீசப்பட்டதாம்.. (ஆளுநர் கூறுகிறார்) ரவுடி காணவில்லையாம்.. போலீஸ் தேடுகிறதாம்.. அவர் ஏற்கெனவே கமலாலயத்தில் குண்டு வீசியவராம்.. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லையாம்.. தமிழ்நாட்டில் உள்ள சின்ன குழந்தைகூட இந்த கிள்ளைக் கதையை கேட்டு சிரிக்கிறது. சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
மருது பாண்டியர்கள் தேடப்படுகிறார்கள்! ஜம்புத்தீவு பிரகடனம் மீண்டும் உயிர்த்தெழுகிறது வரலாறு மருது உயிர்த்தெழக் கோருகிறது மருது உயிர்த்தெழும்போது கூடவே தொண்டைமான்களும் உயிர்த்தெழுகிறார்கள் இப்போது சற்று அமைதியாக இருப்போம் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் அன்றும் சாத்தியமானவைகளை பற்றி பேசாமலா இருப்பர்? மருதிருவர் சாத்தியமானவையை அல்ல; சரியைப் பேச வேண்டும் என்றார்கள் ஈன ஐரோப்பியரை அழித்து ஒழிக்காமல் வாழ்வில்லை என்றான் சின்ன மருது அதிகாரப் பீடத்தை நத்திப் பிழைப்போர் தலையில் இடியாய் இறங்கியது மருதுவின் குரல் இரத்த சொந்தங்கள் 500 பேருடன் திருப்பத்தூர்...
மற்ற நாடுகளுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடும் போதும் இயல்பாக பார்த்துவிட்டு கடந்து செல்லும் ரசிகர்களை இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது மட்டும் இயல்பாகக் கடந்து செல்ல விடாமல் கார்ப்பரேட் ஊடங்களும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் திட்டமிட்டே செயல்படுகின்றன.
ஒருவேளை இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் அந்த மைதானத்திலேயே கலவரம் வெடித்திருக்கலாம். அதற்கும் சங்கி கும்பல் தயாராகவே இருந்திருக்கிறது என்பதுதான் பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து சங்கிகள் ஜெய்ஸ்ரீராம் கோசமிட்டது நமக்கு உணர்த்துகிறது.
அக்டோபர் 20-ஆம் தேதியன்று தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் (Khan Yunis) இஸ்ரேலின் குண்டுவீச்சில் “ஆக்சிஜன் இஸ் நாட் ஃபார் தி டெட்” (Oxygen is Not for the Dead) என்ற நாவலின் ஆசிரியரும் கவிஞருமான ஹெபா அபு நாடா (Heba Abu Nada) கொல்லப்பட்டார். பாலஸ்தீன கலாச்சார அமைச்சகம் இத்தகவலை...
உங்கள் பீரங்கி குண்டுகள் எங்கள் உயிரை பலியிடலாம் ஆனால், இவற்றில் எதுவுமே எங்கள் குரலை ஒடுக்கிவிடாது!
ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு மதம் என்பர். அந்த ஏக்கப் பெரு மூச்சினை மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆக்கி பல்லாயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்த்தவர்தான் இந்த பங்காரு.
இப்போது அகமதாபாத் அரங்கத்தில் நடைபெற்ற போட்டியின்‌ பொழுது மதவாத கோஷம் எழுப்பப்பட்டது கூட தன்னிச்சையான மந்தை மனநிலையில் இருந்து அல்ல. இந்த நிகழ்வு வெகுவாக நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒன்று.
தங்களின் சுய விளம்பரத்திற்காக, சமூக சீரழிவை ஏற்படுத்துவதும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக நடத்தப்படுவதுமான பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்த சமூகப் பொறுப்பற்ற பிழைப்புவாத நடவடிக்கையைத் தான் நாம் கண்டிக்கின்றோம்.
சமூகத்தைப் பேரழிவுக்குள் இழுத்துச் செல்லும் மறுகாலனியாக்க கொள்கைகளை ஒழித்துக் கட்டுவதே நம் முன் உள்ள தீர்வு. அதை மறுகாலனியாக்கத்தைப் பாதுகாக்கும்  இந்த அரசுக்கட்டமைப்புக்குள் செய்ய முடியாது. இந்த சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நமக்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.
ஒழுக்கம், விழுமியங்கள், பிறரைப் பற்றி சிந்திப்பது குறித்து அக்கறையற்ற இத்தகைய மனநிலைதான் இந்துமதவெறி பாசிஸ்டுகள் தங்களுக்கான அடியாட்படையைத் திரட்டிக் கொள்வதற்கும் அடிப்படையாக உள்ளது.  எவ்வளவு பெரிய அபாயம் இது. சொல்லப்போனால் பண்பாட்டுத் தளத்தில் இந்துமதவெறி பாசிச கும்பலின் பங்காளிதான் நடிகர் விஜய்.
பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தோழர் பகத்சிங் 117-வது பிறந்த நாள் உன்னோடு நான்... சோர்விலும் ஏக்கத்திலும் தளர்விலும் எப்போதும் என்னுடன் இருக்கிறாய் தடுமாறும் போது எனை நம்பிக்கையூட்டி அழைத்துச் செல்கிறாய் துவளும் போதும் உன்னுடைய தியாகம் என்னை சுட்டுப் பொசுக்குகிறது அடக்குமுறைகள் அச்சுறுத்தும் போது உனது வீரம் எனை எள்ளி நகையாடுகிறது உறவுகளில் லயித்து கிடக்கையில் உன் உறுதி எனை விழிப்படையச் செய்கிறது மக்களுக்காக வாழும் வாழ்க்கையே உன்னதமானதென்ற உன் வாழ்வே எமக்கு ஒளி சமரசமற்ற உன் கம்யூனிச சித்தாந்தமே எமக்கு வழி மருது
நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.

அண்மை பதிவுகள்