This Blog
Linked From Here
Menu
This Blog
 
 
 
 
Linked From Here
 
 
 
Menu
 
 
 
கருவிப்பட்டை 
PathivuToolbar ©2010thamizmanam.com
 

ஹிஹி நானும் பேட்டி எடுப்பேன் :))

2:49 AM Posted by மயில்


உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் வயித்தெரிச்சலையும், பொறாமையையும் அடக்கி கொண்டு ஒரு எழுத்தாளரா வேடம் இடுவது எவ்வளவு கடினம் என்று இந்த வலைபதிவு எழுத்தாளர்களை பார்த்தாலே தெரியும்..யாராவது ஒரு தீயனைப்பு வண்டிக்கு சொல்லி விடுவும். ஏனெனில் பேட்டி ஆரம்பம். இதையெல்லாம் தாண்டி நான்கு பேர் ஒரு குழுமம் ஆகி ஒருவரை ஒருவர் வளர்ப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். அதிலொருவர் நம் நண்பர், பார்த்துக்கொண்டிருக்கும் போதே சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்பவர், என்னதான் அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருப்பது போன்றவை சாட்சிகள்.


நீங்க ஒரு எழுத்தாளர்ன்னு எப்ப கண்டுகினீங்க?

நான் எல்கேஜியில் எழுத ஆரம்பித்த போதே எங்கள் ஆசிரியர் சொன்னார், பிற்காலத்தில் மிகப்பெரிய எழுத்தாளராக வரும் வாய்ப்பு அதிகம் என்று. அன்றே முடிவு செய்த விசயம் வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து அதில் என் எழுத்துக்களை வடித்து அருகில் அமரவேண்டும் என்பது...

என்ன மாதிரியான பொஸ்தகம் படிக்க இஷ்டம்?

தமிழ் எழுத்துக்கள் எல்லாம் வாசிக்க பிடிக்கும், அதிலும் பழைய பேப்பர் கடையில் இருக்கும் பிரபல எழுத்தாளர்கள் அனைவரின் எழுத்தும் பிடிக்கும், ஏனெனில் அதிலிருந்து அப்படியே காப்பி அடிக்கலாம், ஒருத்தனும் அறியப்போவதில்லை. ஆனால் பதிவுலகம் வந்த பின் தான் தெரிந்தது, இங்கே இருக்கும் எல்லாரும் அப்படித்தான் என்று.


இந்த ப்லாக் எழுதி என்னாத்தை சாதிச்சே? அது உனக்கு இன்னா கொடுதுச்சு?

அது எங்கே திறந்தது, படாத பாடு பட்டு கைக்காசை செலவு பண்ணி நானல்லவா திறக்க செய்தேன். பாருங்கள் இப்போது கூட கைக்காசை போட்டு பெட்ரோல் அடித்து, பேட்டி எடுக்க என லஞ்ச் செலவு, கேள்வி எழுதி கொடுத்தும் கூட வெண்ணைய் மாதிரி இழுக்கிறாயே ...

வாசலை தவிர கம்பர்,திருவள்ளுவர் ...அவர்களுக்கு மட்டும் நான் இப்படி அவரை குதறுவது தெரிந்தால் இட்லி பொட்டலம் கட்டும் நூலில் தூக்குப் போட்டு இறந்திருப்பார். நல்லவேளை இல்லை.

நேற்றுகூட நண்பரை போனில் அழைத்து என் எழுத்தை வாசிக்க சொன்னேன், விட்டுப்போன குவாட்டரை ராவாக கவிழ்த்துவிட்டு போனிலேயே வாந்தி எடுத்தார். வல்லமை பொருந்திய எழுத்துக்கள் உருவாக இந்த நட்புக்களே காரணம்.


பலவீனம் என்று பார்த்தால் என்னைத் தவிர வேறு யாரையும் நான் எழுத்தாளரா நினைப்பதுஇல்லை. அது தெரியாமல் இந்த பைத்தியகார பயலுகள் என்னை புகழும் போது எனக்கு வரும் புன்னகையை அடக்க
முடியவில்லை.

ந்த ப்லாக்ல எல்லாரும் ஒரு குரூப்பா கூடி கும்மியடிக்கரானுவளே, அத்த பத்தி என்ன ஃபீல் ??

நம்மை பதிவுலகில வாழவக்கும் தெய்வமே இந்த மனப்பான்மை தானே. கண்டிப்பா தப்பு இல்ல. சொறிதலில் உள்ள சுகம் புரிதலில் இல்ல. எதாவது புரிஞ்சுதா?

அட , இதை ஆரம்பித்து வைத்ததே நாம் தானே. ஒரு எழுத்தாளனை உருவாக்குவது எவ்வளவு சிரமம் தெரியாதா? அவன் சும்மா நான் இன்று காலை கடன் சரியாக முடித்தேன் என்று எழுதினாலும், சூப்பர் தல, :)), ரிப்பீட்டு, எப்படி சகா உன்னால மட்டும், சான்ஸே இல்லை, வாழ்த்துக்கள் என்று மாறிமாறி பின்னூட்டமிட்டு அவனை ஒரு எழுத்தாளனாக மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்க்குள் டவுடர் கழண்டுடும்.

உன்னக்கு முன்னாடி செல வஸ்தாது எழுதிகிரானுவ, அத்த என்ன நெனைக்கறே?
அன்பைப்பெறுவது அவ்வளவு எளிதல்ல , மூத்த பதிவர் இப்படி எல்லாருடைய ப்ரொபைல் முதல் கொண்டு தேடி படித்து அவர்களுக்கு என்ன பிராண்டு பிடிக்கும், எப்படி ஜிங் ஜக் அடிப்பது போன்றவைகளை கற்றுணர்ந்து, அதே பிராண்டு, ஜால்ராவை இன்று வரை தொடர்வதால் தான் முடிகிறது. இல்லனா அவனுகளோட எனக்கு என்ன வேலை.

புதிதாய் எழுத வருபவர்கள் நிஜமாவெ நல்லாவே எழுதித்தொலையாரானுக, அதைப்பார்த்து தினம் வயிறெரிந்து புலம்புவதே வாடிக்கையானது. எனக்கு முன்னாடி இருந்தவனுகளை நான் சரி செய்தது போல் ஒருத்தனும் என்னை கவனிக்கவில்லை. மதிக்கக்கூட இல்லை. ஒரு ஐநூறு பின் தொடர்பவர்கள் இருந்தால் ஒரு ஐம்பது பின்னூட்டங்களாவது வர வேண்டும், நான் பதிவு எழுதி அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்த பின்னும் முப்பது நாற்பது பின்னூட்டம் வரவைப்பதே பெரும்பாடாக உள்ளது. இப்போது புதிதாக எழுத வந்தவர்கள் நல்ல நண்பர்கள் பலரை பெற்றிருப்பதால் எளிதாக பின்னூட்டங்கள் பெறுகிறார்கள், அதை பார்த்து பொறுக்காமல் நான் யாரிடமும் பேசுவதில்லை.

இப்படியே முடிஞ்சிருமா? இல்ல பொஸ்தகம், சினிமான்னு போவுமா?

பின்ன? பத்திரிக்கைகளில் யாரையாவது கரெக்ட் பண்ணி அடிக்கடி நம் பேர் வரவும், மக்கள் வலைப்பூக்களில் வாழ்த்து சொல்லி ப்ரமோட் பண்ணவும் ஏற்பாடு பண்ணனும்.என்ன கொஞ்சம் செலவாகும், முடிஞ்சா நாம் வலைப்பூவில் எழுதியதை ஒரு தொகுப்பா போட்டு ஊறுகாயும் நாட்டு சரக்கும், பொது கக்கூஸ், பழைய மனைவியும் புது காதலியும்ன்னு எதாவது தலைப்பில் புக் போடணும். உடனே நம் சக வளர்த்து விட்ட எழுத்தாளனும் நண்பனும் புக் போடுவான். வேற வழியில்லாமல் சிரிச்சுட்டே வாழ்த்திட்டு வரனும். என்ன அதைவிட கொடுமைன்னா எவனும் அந்த புத்தகத்துக்கு விமர்சனம் எழுதாம இருக்கனும்.

இதையெல்லாம் ஒரு எழுத்துன்னு படிக்கிறானுவளே அவனுகள இன்னா பண்ணரது?

ரொம்ப பாவமா இருக்கு. பதிவ கூட படிச்சிடலாம் பின்னூட்டங்களை எப்படி தாங்கிக்குறாங்கன்னு தெரியல.கிசுகிசுன்னு ஒரு க்ரூப்புக்கே தெரிஞ்ச பதிவர்கள் பத்தி எழுதறத கூட சகிச்சுக்கறாங்க. அவங்க ரொம்ப நல்ல்ல்வய்ங்க. என்ன கொஞ்சம் பிரபலமான வெளியில் போக முடிவதில்லை. எல்லாரும் ஆட்டோகிராப் கேட்டு நச்சரிக்கிறார்கள்.. தூக்கம் கலைந்த பின் தான் தெரியுது அத்தனையும் கனவுன்னு. நடக்கனும்னு சொல்லலை, நடந்தா நல்லாருக்கும்னு தான் சொல்றேன்.


இந்த பொம்பளை பசங்க இன்னாமா கிறுக்கராங்க? உனக்கு காண்டாவுல?
ம்ம் அவர்கள் இம்சை தாங்க முடியவில்லை, குழந்தை ஜட்டி மாற்றுவதில் இருந்து, ஆயா வடை சுட்டது வரை எழுதி கொல்கிறார்கள். இதெல்லாம் எதிர்த்து யாருமே கேட்பதில்லை. சில சமயம் நல்லா வேற எழுதி தொலைக்கிறார்கள். எல்லாற்றையும் விட எரிச்சல், நான்கு பெண் பதிவர்களுக்கு மேல் எனக்கு யாரும் பின்னூட்டம் இடுவதில்லை.

நீ எத்தையோ நெனைச்சு எழுதறே, பயலுவ எத்தையோ நினைச்சு படிக்கரானுவலே?

எப்படித்தான் கரெக்டா பாயிண்டை பிடிக்கரானுக என்று தோன்றும்.

இப்படி ராவ எங்க கத்துகின?

அதெல்லாம் தானா அப்படியே வரும்.

மத்தவனுக எல்லாரும் ரொம்ப மிஸ்டேக்கா எழுதுரானுவ, இத்த நீ தட்டி கேக்க கூடாது?

ஆக்சுவலி ஐ லவ் டமில் வெரி மச் யா. யாராவது என்னத்தவிர தப்பா எழுதினா கன்னா பின்னான்னு கோபம் வர்ற அளவுக்கு டமில லவ் பண்றேன். அலட்சியமா எழுதும் பதிவர்களை பார்த்து பிரமிக்கிறேன். பய ரொம்ப தெளிவா இருக்கானுக என்று.

இப்பாலிக்கா இந்த ப்லாக் எப்படி இருக்கு? இனி எப்படி இருக்கும்?

நான் வரும் வரை ஆரோக்கியமாத்தான் இருந்தாது. வந்தபின் எப்படி என்பதை நாடு சொல்லும்.

உனக்கு யாருனாச்சும் எழுதுனா புடிக்குமா?

வேற யார் இருக்கிறார்கள் எப்போதும் நானும் , நீரும் , நம் சகோக்களூம் தான்.

அதை தவிர யாரையும் நான் ஊக்கு விக்க விரும்புவதில்லை..

நான் எதாச்சும் கேட்க உட்டுட்டனா?
இந்த முதுகு சொறியற சுகம் ரொம்ப நல்லாயிருக்கு. உங்களுக்கு எப்ப சொறியனும்?

டிஸ்கி : நல்லா கும்ம மட்டுமே இந்த பதிவு.

107 comments:

சந்தனமுல்லை said...

வாசகரும் பேட்டி கொடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு போல இருக்கே! :))

தாரணி பிரியா said...

கமெண்ட் மாடரேஷன் போட்டா எப்படி மகளே கும்மறது

சந்தனமுல்லை said...

இந்த சொம்பை ச்சே..அம்பை பெறுவது எப்படின்னுதான் எனக்கு புரியலை...:-))

தாரணி பிரியா said...

துணி துவைக்கறது போல கும்மினா போதுமா

தாரணி பிரியா said...

யாரோ நான் எழுத்தாளராக போறேன்னு வீடு முழுக்கா லைப்ரரி புக்கா வெச்சு இருந்தாங்களே அவங்க பேட்டியா இது

தாரணி பிரியா said...

நீங்க LKG படிச்சிங்களா படிச்சிங்களா படிச்சிங்களா !!!!!!!!!!!!!!!!1

சின்ன அம்மிணி said...

நர்சிம் மாதிரி ஆகணும்னு கறுப்புக்கண்ணாட்டி போட்டு போட்டோ எடுத்து வச்சிருக்கறதா செல்வேந்திரன் சொல்லியிருந்தாரே. அவங்க குடுத்த பேட்டியா இது :)

சின்ன அம்மிணி said...

//இப்படி ராவ எங்க கத்துகின?

அதெல்லாம் தானா அப்படியே வரும்.//

அடங்கமாட்டீங்களா மயிலு :)

கார்த்திகைப் பாண்டியன் said...

தெய்வமே.. நீங்க எங்கேயோ போயிட்டீங்க.. எக்கச்சக்க உள்குத்து வேற.. ரைட்டு.. ஸ்டார்ட் மீஜிக்..:-)))

ஆயில்யன் said...

//
ஆக்சுவலி ஐ லவ் டமில் வெரி மச் யா. //

ஐ லைக் திஸ் அப்ரோச்!

டமில் ஆல்வேஸ் நல்லா வாளணும் அம்புட்டுத்தேன் ஐ ஆல்சோ கோவைக்கு கம்முறேன் செம்மொளி மாநாட் வாள்க

ஆயில்யன் said...

// தாரணி பிரியா said...

யாரோ நான் எழுத்தாளராக போறேன்னு வீடு முழுக்கா லைப்ரரி புக்கா வெச்சு இருந்தாங்களே அவங்க பேட்டியா இது///

ஓ பாவம் அந்த லைப்ரரியன் தயவு செஞ்சு ரிடர்ன் கொடுத்திடுங்கப்பா அந்த புக்ஸெல்லாம்

மணிஜீ...... said...

என்னத்தை சொல்றது ? சல்லிப்பயங்கிறதை தவிர(கலகம் ஆரம்பம்)

மணிஜீ...... said...

முந்தைய பின்னூட்டம் சிரிக்கவும், கொஞ்சம் கொளுத்தி போடவும் மட்டுமே..அதில் எந்த தூஸ்ராவும் இல்லை என்று சாத்தாங்குளம் சுடலைமாட சாமி மீது சத்தியம் செய்து இந்த பின்னூட்டத்தை நிறைவு செய்யலாமா என்ற முடிவை யோசிக்கும் வேளையில்...

தாரணி பிரியா said...

//தமிழ் எழுத்துக்கள் எல்லாம் வாசிக்க பிடிக்கும், //

வீட்டுல இருக்கிற அ ஆ இ ஸ்டிக்கருக்கு இப்பதான் அர்த்தம் புரியுது

அதிஷா said...

கும்தலக்கடி கும்மா !

தாரணி பிரியா said...

//பெட்ரோல் அடித்து, பேட்டி எடுக்க என லஞ்ச் செலவு, //

லஞ்ச் எல்லாம் தருவிங்களா அப்ப நானும் பேட்டி எடுக்கிறேன்

சந்தனமுல்லை said...

ஏன் ஒரு கண்டன பின்னூட்டம் கூட இல்லை...டூ பேட்! ;-)))

தாரணி பிரியா said...

//இட்லி பொட்டலம் கட்டும் நூலில் தூக்குப் போட்டு இறந்திருப்பார்.//

இது எதுக்கு நீங்க சமைச்ச இட்லி குடுத்து இருந்தா சாப்பிட்டு சங்கடமில்லாம செத்து போயிருப்பாரே

தாரணி பிரியா said...

//சொறிதலில் உள்ள சுகம் புரிதலில் இல்ல.//

ஆத்தா தத்துவ நம்பர் போடலையே

சந்தனமுல்லை said...

எதிர்பாருங்கள்.."ஹிஹி..நானும் பேட்டி கொடுப்பேன்" - பார்ட் டூ - மிக விரைவில்!

மணிகண்டன் said...

சந்தனமுல்லை, நான் சிரிப்பான் போட்டிருக்கிறேனே. இன்னமும் கண்டனம் வரவில்லை என்று எப்படி சொல்லலாம் ?

தாரணி பிரியா said...

// சில சமயம் நல்லா வேற எழுதி தொலைக்கிறார்கள்.//

என்ன இப்படி எல்லாம் புகழக்கூடாது விஜி :)

தாரணி பிரியா said...

// ஆயில்யன் said...

ஐ லைக் திஸ் அப்ரோச்!

டமில் ஆல்வேஸ் நல்லா வாளணும் அம்புட்டுத்தேன் ஐ ஆல்சோ கோவைக்கு கம்முறேன் செம்மொளி மாநாட் வாள்க//

யூ கம்மிங்க. வீ கோவை பீப்பிள்ஸ் வெல்கம்மிங்க‌

தாரணி பிரியா said...

ஆயில்யன் said...

// ஓ பாவம் அந்த லைப்ரரியன் தயவு செஞ்சு ரிடர்ன் கொடுத்திடுங்கப்பா அந்த புக்ஸெல்லாம்//

ஆமாம் பாஸ் அதுவும் அது எல்லாம் லைப்பரியனுக்கு தெரியாம எடுத்த புக்ஸ் :(

மணிகண்டன் said...

சந்தனமுல்லை, நான் சிரிப்பான் போட்டபிறகும் கண்டன பின்னூட்டம் வரவில்லை என்று கூறினால் எப்படி ?

மணிகண்டன் said...

முல்லை, நீங்கள் எல்.கே.ஜியில் பெயில் :)-

வால்பையன் said...

கும்மி ஸ்டார்ட்!

யாரு இருக்கா கடையில!

கொல்லான் said...

//பய ரொம்ப தெளிவா இருக்கானுக//
இது தானே ஆகாது. புகழ்றதுக்கு ஒரு அளவு இல்ல?

கொல்லான் said...

வால், நான் இருக்கேன்னன்ன்ன்ன்.

Uma said...

கடைசிக் கேள்வியைத்தான் தேடி முதலில் படித்தேன்! LOL!

முகிலன் said...

ஒரு தேர்ந்த எழுத்தாளரை இப்படி நேரடியாக விமர்சிப்பது நாகரீகம் இல்லை என்று என் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன்..

(மகிழ்ச்சியா சந்தனமுல்லை)

முகிலன் said...

கன்னா பின்னானு கலாய்ச்சிட்டீங்க..சிரிச்சிக்கினே கீறேன். :)))

மணிகண்டன் said...

இதற்கு பதிலாக எழுதப்பட்டு அழிக்கப்படும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களின் கவுன்ட் யாராவது வைத்துக்கொள்ளவேண்டும். சரியாக கணக்கு வைத்தால் இந்த பேட்டி அளித்த முல்லையின் பெயரில் விருது அறிவிக்கப்படும். நன்றி மணற்கேணி

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

////அவன் சும்மா நான் இன்று காலை கடன் சரியாக முடித்தேன் என்று எழுதினாலும், சூப்பர் தல, :)), ரிப்பீட்டு, எப்படி சகா உன்னால மட்டும், சான்ஸே இல்லை, வாழ்த்துக்கள் என்று மாறிமாறி பின்னூட்டமிட்டு அவனை ஒரு எழுத்தாளனாக மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்க்குள் டவுடர் கழண்டுடும்.///


சூப்பரு...! கலக்கல்...! எப்படி உங்கலால மட்டும்...!சான்ஸே இல்ல...! அசத்துரீங்க பாஸ்...! ;;;)))))

சந்தனமுல்லை said...

ஹிஹி..நான் எல்கேஜிக்கே போகலையே..

கண்டன பின்னூட்டம் போடறதுலே எல்கேஜியை தாண்டி வாங்க...இல்லேன்னா அணுகவும் அதிஷா..:-))

சந்தனமுல்லை said...

முகிலன்..மிக்க நன்றி..இப்போதான் இந்த இடுகையின் பலன் முழுமையடைகிறது!! :-)

சந்தனமுல்லை said...

பதிவை அழிக்கறதா..பொதுநலன் கருதி இங்கே வெளியிட்டா..ஹ்ம்ம்...எங்க கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே...;-))

வால்பையன் said...

//நான் எல்கேஜியில் எழுத ஆரம்பித்த போதே எங்கள் ஆசிரியர் சொன்னார், பிற்காலத்தில் மிகப்பெரிய எழுத்தாளராக வரும் வாய்ப்பு அதிகம் என்று.//


அந்த ஆசிரியர் எங்களுக்கு சுனாமி எச்சரிக்கை கொடுத்திருந்தா நாங்க இந்த பக்கம் எட்டியே பார்த்திருக்க மாட்டோமே!

மணிகண்டன் said...

அதிஷா கும்தலக்கடி கும்மாவிற்கு பிறகு லாலா பாட தான் வருவார் :)- அதுவரைக்கும் என்னையை மாதிரி ஆளுங்க தான் முயற்சி பண்ணனும் ! என்ன செய்ய :)-

வால்பையன் said...

//பதிவுலகம் வந்த பின் தான் தெரிந்தது, இங்கே இருக்கும் எல்லாரும் அப்படித்தான் என்று.//


உங்களுக்கு முன்னாடியே பழைய பொஸ்தக கடையில பயங்கர கூட்டம் இருக்கும் போதே கண்டுக்க வேணாமா!

வால்பையன் said...

//நேற்றுகூட கும்மத்தலக்கடி கும்மாவை போனில் அழைத்து என் எழுத்தை வாசிக்க சொன்னேன், விட்டுப்போன குவாட்டரை ராவாக கவிழ்த்துவிட்டு போனிலேயே வாந்தி எடுத்தார். //


அது யாரு, என்னை விட பெரிய குடிகாரன், கும்தலக்கடி கும்மா!?

வால்பையன் said...

//சொறிதலில் உள்ள சுகம் புரிதலில் இல்ல.//


பெரிய சைஸ்ல நாலஞ்சு பிரஸ் இருக்கும் போதே சந்தேகபட்டேன்!

வால்பையன் said...

//நான் இன்று காலை கடன் சரியாக முடித்தேன் என்று எழுதினாலும், சூப்பர் தல, :)), ரிப்பீட்டு, எப்படி சகா உன்னால மட்டும், சான்ஸே இல்லை, வாழ்த்துக்கள் என்று மாறிமாறி பின்னூட்டமிட்டு//


உங்கள் சேவை பதிவுலகத்துக்கு தேவை!

வால்பையன் said...

//நாம் வலைப்பூவில் எழுதியதை ஒரு தொகுப்பா போட்டு ஊறுகாயும் நாட்டு சரக்கும், பொது கக்கூஸ், பழைய மனைவியும் புது காதலியும்ன்னு எதாவது தலைப்பில் புக் போடணும். //


முதல் தலைப்போட காப்பிரைட்ஸ் எங்கிட்ட இருக்கு, அதை மறந்துருறாதிங்க!

Deepa said...

Amazingly witty. You are truly one of a kind Viji!

வால்பையன் said...

//குழந்தை ஜட்டி மாற்றுவதில் இருந்து, ஆயா வடை சுட்டது வரை எழுதி கொல்கிறார்கள்.//


சுடுதண்ணி வைப்பது எப்படின்னு கூட ஒரு அக்கா பதிவு போட்டாங்க!
சாராயம் காய்ச்சுவது எப்படின்னு பதிவு போட்டா மனிதருள் மாயாக்கான்னு பட்டம் கொடுக்கலாம், யாரும் எழுதலையே!

மணிகண்டன் said...

யோவ் வாலு - எந்த பதிவுல என்ன மாதிரி கும்மனும்ன்னு தெரியாம என்னையா நீரு :)- முல்லை படிச்ச ப்ரீ.கே.ஜி கூட நீங்க படிக்கல போல

சின்ன அம்மிணி said...

நல்ல பதிவு..

ஆழ்ந்த கருத்துக்கள், அர்த்தமுள்ள கேள்விகள்

நன்றி விஜி

மணிகண்டன் said...

அதானே பார்த்தேன்! எங்கடா தீபாவை காணமேன்னு :)-

சந்தனமுல்லை said...

மணிகண்டன், உங்கள் ஆழ்ந்த வாசிப்பு மரணிக்க வைக்கிறது. உங்கள் கருத்துகளுடன் உடன்படுகிறேன்! :-)

சின்ன அம்மிணி said...

//கும்மி அடிப்பதும் முன்னேற்றம் தராது என்பதை விட முன்னேற்றத்தைத் தடுக்கும் //

இதைப்படிச்சு குசும்பன் திருந்திட்டாரு. இங்க கும்மிக்கு வரமாட்டாரு :)

மணிகண்டன் said...

மீ வாஸ் தி 50. ஹவ் கம் சின்ன அம்மிணி கம்ஸ் அஸ் 50 நௌ :)- மீ நோ லைக் இட் !

வால்பையன் said...

//முல்லை படிச்ச ப்ரீ.கே.ஜி கூட நீங்க படிக்கல போல//


கும்முறதுக்கு ஸ்கூலெக்கெல்லாம் போகனுமா!?
அய்யய்யோ நான் மிஸ் பண்னிட்டேனே!

சின்ன அம்மிணி said...

//Blogger மணிகண்டன் said...

மீ வாஸ் தி 50. ஹவ் கம் சின்ன அம்மிணி கம்ஸ் அஸ் 50 நௌ :)- மீ நோ லைக் இட் !//

மணிகண்டன். நோ ஜெலசி. வீ லிவ் இன் தி சேம் வெர்ல்ட்.

மயில் said...

குசும்பன் இல்லையேன்னு கவலையா இருக்கு :)

சந்தனமுல்லை said...

நோ ஃபீலிங்ஸ் மணிகண்டன்...யாருக்கிட்டேயாவது பேசி ஏதாவதொரு கமெண்டை டெலீட் பன்ணிட்லாம்..அப்புறம் நீங்கதான் 50!

மயில்ஸ்...4000 க்கு வாழ்த்துகள்..! :-)

Deepa said...

//வால்பையன் said...
//முல்லை படிச்ச ப்ரீ.கே.ஜி கூட நீங்க படிக்கல போல//
கும்முறதுக்கு ஸ்கூலெக்கெல்லாம் போகனுமா!?
அய்யய்யோ நான் மிஸ் பண்னிட்டேனே!//

மீ டூ வால்!

சந்தனமுல்லை said...

4000 க்கு மயிலுக்கு வாழ்த்து சொல்லுங்கப்பா...வரலாறு முக்கியம் அமைச்சரே! :-)

நிழலன் said...

இதற்கு பதிலாக எழுதப்பட்டு அழிக்கப்படும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களின் கவுன்ட் யாராவது வைத்துக்கொள்ளவேண்டும்
:))

நிழலன் said...

/சொம்பை ச்சே..அம்பை பெறுவது எப்படின்னுதான் எனக்கு புரியலை...:-/
அவ்வ்வ் முடியல. ஏன் இந்த கொலவெறி..மம்மி பாவம் ச்சே டாடி பாவம்

சந்தனமுல்லை said...

வாவ்..நிழலன்..வாங்க..வாங்க..உங்களைத்தான் எதிர்பார்த்தோம்! :-)

நிழலன் said...

/தவிர கம்பர்,திருவள்ளுவர் ...அவர்களுக்கு மட்டும் நான் இப்படி அவரை குதறுவது தெரிந்தால் இட்லி பொட்டலம் கட்டும் நூலில் தூக்குப் போட்டு இறந்திருப்பார்./

சான்ஸே இல்ல யாராச்சிம் இத சொன்னா எலக்கியவாதிகள் திட்டுராங்கன்னு கோன்னு அழ வேண்டியது சிரிச்சி மாள முடியல

நிழலன் said...

/நிழலன்..வாங்க..வாங்க..உங்களைத்தான் எதிர்பார்த்தோம்!/

எப்படி வந்தாலும் கண்டுபுடிச்சிர்ராங்கய்யா

நிழலன் said...

பார்ட் டூ - மிக விரைவில்

அளவில்லா ஆவலுடன் :)

சந்தனமுல்லை said...

பின்ன சும்மாவா...;-) சுடச்சுட ஃப்ரொஃபைல் க்ரியேட் பண்ணிட்டு வந்துருக்கீங்க...:-)

மணிகண்டன் said...

நிழலன் என்ற பெயரில் எழுதுபவர் யார் ? களவும் கற்று மற என்ற தலைப்பு வைத்திருக்கும் ப்ளாக் எழுத்தாளரா ?

நிழலன் said...

/கண்ணம்பாப்பேட்டை கண்ணு, குண்டன் முத்து, ரோஸ் மண்டையன், , தானே பேசி வீணாப்போனவன் இப்படி எல்லாருடைய ப்ரொபைல் முதல் கொண்டு தேடி படித்து அவர்களுக்கு என்ன பிராண்டு பிடிக்கும், எப்படி ஜிங் ஜக் அடிப்பது போன்றவைகளை கற்றுணர்ந்து, அதே பிராண்டு, ஜால்ராவை இன்று வரை தொடர்வதால்/
மயில் பயங்கர அரசியல் நுண்ணணுர்வு இருந்தா மட்டுமே இப்படிலாம் அடிக்கமுடியும் /தானே பேசி வீணாபோனவன்/ - அசால்டு

மயில் said...

களவும் கற்று மற எனக்குத்தான்.. ஆவ்வ்வ்வ்வ் நிழலு வேனாம் :))

நிழலன் said...

/நான் எதாச்சும் கேட்க உட்டுட்டனா?
/போதும் போதும் இதுக்கே எம்புட்டு பீலிங் வரும்னு தெர்லயே

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

//// ////அவன் சும்மா நான் இன்று காலை கடன் சரியாக முடித்தேன் என்று எழுதினாலும், சூப்பர் தல, :)), ரிப்பீட்டு, எப்படி சகா உன்னால மட்டும், சான்ஸே இல்லை, வாழ்த்துக்கள் என்று மாறிமாறி பின்னூட்டமிட்டு அவனை ஒரு எழுத்தாளனாக மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்க்குள் டவுடர் கழண்டுடும்.///


சூப்பரு...! கலக்கல்...! எப்படி உங்கலால மட்டும்...!சான்ஸே இல்ல...! அசத்துரீங்க பாஸ்...! ;;;)))))////


ரிப்பீட்டு...!

மணிகண்டன் said...

***
ஏன்னா..ஃபோனை போட்டு சொல்லி..ரூம் போட்டு அழுது ....எதிர்பதிவு போடவைக்கணுமே.
***

மீ நோ லைக் திஸ் கமெண்ட் :(- டூ பேடு

நிழலன் said...

ஃபோனை போட்டு சொல்லி
பதிவுலாம் போன் வழியா படிக்கிறாங்களா பாஸ் என்னா ஒரு வாசிப்பு :)

நிழலன் said...

ஃபோனை போட்டு சொல்லி
பதிவுலாம் போன் வழியா படிக்கிறாங்களா பாஸ் என்னா ஒரு வாசிப்பு :)

மணிஜீ...... said...

அடுத்த பதிவுக்கு மேட்டர் கொடுத்த மயிலுக்கு செம்மொழி மாநாட்டில் சிறப்பு கவிதை வாசிக்கப்படும்.

மணிகண்டன் said...

சோ, மீ கோயிங் டு கெட் முல்லை அவார்ட் பார் பீயிங் கணக்கு வாத்தியார் :)-

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதற்கு பதிலாக எழுதப்பட்டு அழிக்கப்படும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களின் கவுன்ட் யாராவது வைத்துக்கொள்ளவேண்டும்//

இது வேறயா..?

முரளிகுமார் பத்மநாபன் said...

வெறும் நகைச்சுவை உணர்வோடு மட்டும் அணுக முடியவில்லை என்பதே நிஜம். ஒருவேளை எனக்கு நகைசுவை உணர்வு குறைந்துவிட்டது என்று சொல்பவர்கள் பற்றி பிரச்சனையில்லை. முதுகு சொறிவது என்கிற சொல் பிரயோகம் சரியா? கை தட்டினா வளருவோம். குட்டினா.. சாரி விஜி அண்ணி.

SanjaiGandhi™ said...

அடப்பாவிகளா.. இவ்ளோ பேரா இதை ரசிக்கிறிங்க? எதிர்பார்க்கவே இல்லை :(

நீங்க 2 பேரும் ரொம்ப நல்ல நண்பர்களாச்சே.. அந்த உரிமைல சும்மா கலாய்ச்சி இருக்கிங்களோ?

ஏன்னா, அசோக், சக பதிவரைப் பற்றி எழுதியதற்கே நர்சிம் ஆவேசப் பட்டார்.. இப்போ தன்னைப் பற்றியே எழுதி இருப்பதற்கு என்ன செய்யப் போகிறாரோ.. அதுக்கு நீங்க விளக்கம் குடுக்கனும்.. இதெல்லாம் தேவையா?.. சீரியசான பதிவா இருந்தால் டூ பேட்..

SanjaiGandhi™ said...

// சந்தனமுல்லை said...

பதிவை அழிக்கறதா..பொதுநலன் கருதி இங்கே வெளியிட்டா..ஹ்ம்ம்...எங்க கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே...;-))//

அப்போ இது தனி ஒருவர் பதிவில்லையா? குரூப்பா தான் எழுதினிங்களா?

செல்வேந்திரன் said...

கவுண்டமணியோட ’லாஜிக்லெஸ்’ காமெடில திடீர்னு ரோட்டோரமா நிக்கிறவனைக் கூப்பிட்டு செவிட்டில் அடிப்பான். அதுமாதிரி இருக்கிறது மணிஜீயின் பின்னூட்டம் :(

SanjaiGandhi™ said...

மணி மாம்ஸ்.. ஏன் இப்டி? அவசரப்படறிங்களே..

வெண்பூ said...

//
அப்போ இது தனி ஒருவர் பதிவில்லையா? குரூப்பா தான் எழுதினிங்களா?
//

:(

Chitra said...

நான் எதாச்சும் கேட்க உட்டுட்டனா?
இந்த முதுகு சொறியற சுகம் ரொம்ப நல்லாயிருக்கு. உங்களுக்கு எப்ப சொறியனும்?


....... கலக்கல் பேட்டி!
கலக்கல் பின்னூட்டங்கள்!

இராமசாமி கண்ணண் said...

ஹா. ஹா. ஹா. இது என்ன எதிர் கவுஜ மாதிரி எதிர் பேட்டியா :-).

கும்க்கி said...

செல்வேந்திரன் said...
கவுண்டமணியோட ’லாஜிக்லெஸ்’ காமெடில திடீர்னு ரோட்டோரமா நிக்கிறவனைக் கூப்பிட்டு செவிட்டில் அடிப்பான். அதுமாதிரி இருக்கிறது மணிஜீயின் பின்னூட்டம் :(

ஆக உம்ம கைங்கர்யம் இல்லையா...?

வழக்கம் போல சீரியஸா எடுத்துக்கிடாதீரும்...சும்மாத்தான் கேட்டேன்.

சுசி said...

உள்ளேன் அம்மா..

ரெண்டாவது ஓட்டுக்கே தமிழ் மணம் விரட்டும்.. இதில நான் நாலு ஓட்டுக்கு எங்க போக..

ஆவ்வ்வ்..

butterfly Surya said...

கும்தலக்கடி கும்மாவா..

மயிலுன்னா சும்மாவா..

சின்ன அம்மிணி said...

//SanjaiGandhi™ said...

அடப்பாவிகளா.. இவ்ளோ பேரா இதை ரசிக்கிறிங்க? எதிர்பார்க்கவே இல்லை :(

நீங்க 2 பேரும் ரொம்ப நல்ல நண்பர்களாச்சே.. அந்த உரிமைல சும்மா கலாய்ச்சி இருக்கிங்களோ?//

ஆவ்வ்வ் சஞ்சய். அப்ப இது கும்மியில்லையா. விஜி கும்மின்னு டிஸ்கி போட்டதை நம்பி நான் வேற ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டனே.

ஜெய்லானி said...

//சொறிதலில் உள்ள சுகம் புரிதலில் இல்ல. எதாவது புரிஞ்சுதா?//

இப்பதானே பேட்டி குடுத்திருக்கீங்க . ஹி..ஹி...

தமிழ் உதயன் said...

மே ஐ கம் இன்??

இன்னாமே இப்படி போட்டு வாரிகினுகீர?

ஆனா ஒண்ணு (ஆகாட்டி இரண்டானு? கேக்கறது தெரியுது) இப்படி சல்லிசா உண்மை பேசறது உன்னாண்டதான் முடியும்...

நன்றி

தமிழ் உதயன்

குசும்பன் said...

//அடப்பாவிகளா.. இவ்ளோ பேரா இதை ரசிக்கிறிங்க? எதிர்பார்க்கவே இல்லை :(//

சேம் ப்ளீங், பின்னூட்டங்களால், இதுல கும்மி அடிக்க நான் இல்லைன்னு பீலிங் வேற அவ்வ்வ்வ்வ்வ்:((

ரிஷபன் said...

நல்லாத்தான் இருக்கு..! ம்.ம்.ம்.