முகப்புகான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!
Array

கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!

-

சிவந்த கண்கள் கவனிக்கட்டும்

vote-012சமீப ஆண்டுகளாக சென்னை மாநகரத்தில் வானுயர்ந்த கட்டிடங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. காங்கிரீட் காடுகளின் கட்டிடங்களுக்கு ரெடிமேடான காங்கிரீட் கலவையை சுமந்தவாறு செல்லும் லாரிகளை பலரும் பார்த்திருக்கலாம். எழிலான கட்டிடங்களை ரசிக்கும் நம் கண்களுக்கு இந்த லாரிகளின் ஓட்டுநர்கள் படும் இன்னல்கள் தெரியாது. உழைத்து தேய்ந்து வதங்கும் இந்த தொழிலாளர்களின் உழைப்பில்தான் பளபளக்கும் கட்டிடங்கள் வளருகின்றன.

சென்னை, கேளம்பாக்கத்தின் அருகில் இருக்கும் கிராமம் தையூர். இங்கு ரே மிக்ஸ் (Ray mix) எனும் காங்கிரீட் கலவை நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் முதலாளி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ். இவரும், இவரது இரண்டு சகோதரர்களும் பூந்தமல்லி, வல்லக்கோட்டை என மூன்று இடங்களில் காங்கிரீட் கலவை நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

தையூரில் இருக்கும் காங்கிரீட் கலவை நிறுவனத்தில் கலவையை தயார் செய்வதற்கு 80 தொழிலாளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ஒரிசா, பீகாரைச் சேர்ந்தவர்கள். அங்கேயே தங்கி, உண்டு இரவு பகல் என  24 மணிநேர ஷிப்டை முடித்தால் அவர்களுக்கு கிடைக்கும் கூலி 250 ரூபாய். இப்படி குறைந்த கூலிக்கு கடுமுழைப்பு தேவைப்படும் வேலைகள் அனைத்திலும் இம்மாநில தொழிலாளர்களே வேலை செய்கின்றனர். இப்போது சென்னை முழுவதும் நிலைமை இதுதான்.

தயார் செய்யப்படும் காங்கீரிட் கலவையை லாரிகளில் கொண்டு செல்வதற்கு நாற்பது ஓட்டுநர்கள் உள்ளனர். இவர்களும் பகல், இரவு என 24 மணிநேர வேலை செய்யவேண்டும். ஊதியம் ரூ.550. இப்படி மாதத்தில் பதினைந்து நாட்கள் வேலைசெய்தால் சுமார் 7,500 ரூபாய் கிடைக்கும். இவர்களும் தினக்கூலி அடிப்படையில்தான் வேலை செய்கிறார்கள். மாதசம்பளம், பி.எஃப், காப்பீடு, மருத்துவம், இ.எஸ்.ஐ என எந்த உரிமைகளும் இவர்களுக்கில்லை. 24மணிநேர ஷிப்டில் இவர்கள் குறைந்தது பத்து லோடுகள் அடிக்கவேண்டும். ஒரு லோடின் விலை 20.000 ரூபாய். இதில் இலாபம் பாதிக்கு மேல் இருக்கும்.

காங்கிரீட் கலவையை தயார் செய்து மூன்று மணிநேரத்திற்குள் அது பயன்படுத்தப்பட வேண்டும். அந்நேரத்தை தாண்டிவிட்டால் அது காலாவதியான கலவையாகிவிடும். இதனால் ஓட்டுநர்கள் எவ்வளவு நெருக்கடியிலும் பதட்டத்திலும் வண்டிகளை ஓட்டவேண்டியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஒருவேளை மூன்று மணிநேரத்தை தாண்டிவிட்டால் அந்தக்கலவையை பயன்படுத்தக் கூடாது. ஆனால் அதில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி அதை மீண்டும் தயார் செய்வது முதலாளியின் தந்திரம். இப்படி தயாரிக்கப் படும் கலவையில் உண்மையான உறுதி இருக்காது. மேலும் காங்கிரீட் கலவையில் கூட சிமெண்டோடு கருங்கல் தூசி கலவையை கலந்து போர்ஜரி செய்வதும் பிரான்சிஸின் வழக்கம். இப்படிப்பட்ட மோசடிக் கலவைதான் இந்தக் கம்பெனியிலிருந்து கல்பாக்கம் அணுமின்நிலைய வேலைகளுக்கும், பல மேம்பாலங்களுக்கும், அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

நாற்பது ஓட்டுநர்களில் பாதிப்பேர் பிரான்சிஸின் ஊர் மற்றும் அவரது சாதியை ( நாடார்)  சேர்ந்தவர்கள். சாதிக்காரன் என்ற பெயரில் ஆட்களை ஊரிலிருந்து கொண்டு வந்து இறக்கி, அவர்களை மாடு போல வேலைவாங்குவது பொதுவில் எல்லா தமிழ் முதலாளிகளுக்கும் வழக்கம்தான். இதற்கு நாடார் முதலாளிகளும் விதிவிலக்கல்ல. மேலும் இந்த முதலாளி எல்லா தொழிலாளிகளையும் அநாகரீக மொழியில்தான் அதட்டி வேலைவாங்குவான். யாராவது தெரியாமல் தவறிழைத்தால் கூட உடனே அண்ணாநகரில் இருக்கும் நிறுவன அலுவலகத்திற்கு வரச்சொல்வது வழக்கம். அங்கே அந்த தொழிலாளிக்கு பெல்ட்டால் அடிகிடைக்கும். ஒரு தொழிலாளி அண்ணாநகருக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்றாலே பெரும்பீதி கிளம்பும்.

இத்தகைய அடக்குமுறை சிறையில் ஓட்டுநராக இருக்கும் தோழர் வெங்கட்ராமன் ஜேப்பியார் கல்லூரி ஓட்டுநர் போராட்டத்தில் வேலையிழந்து வந்தவர். இவர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஓட்டுநர் சங்க நிர்வாக குழுவில் இருப்பவர். பலநாட்கள் அந்த நாற்பது ஓட்டுநர்களிடமும் தொழிற்சங்கத்தின் அவசியத்தை புரியவைக்க போராடி வந்தார். ஆனால் பிரான்சிஸின் அடக்குமுறைக்கு அஞ்சிய தொழிலாளிகள் இந்த முயற்சிக்கு ஆதரவு தரவில்லை.

இறுதியில் முதலாளிக்கு தெரியாமல் இரகசியமாகவாவது தொழிற்சங்கத்தை கட்டலாம் என்றதும் பாதி ஓட்டுநர்கள் அரை மனதோடு முன்வந்தனர். இந்நிலையில் முதலாளியின் சுயசாதி, ஊரைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் மூலமாக இந்த தொழிற்சங்க முயற்சி பிரான்சிஸ்ஸின் காதுகளுக்கு சென்றவுடனே, 24.10.09 அன்று நான்கு ஓட்டுநர்களை வேலைநீக்கம் செய்கிறான். அன்றுதான் சங்கம் ஆரம்பிப்பதாக இருந்தது. தொழிற்சங்கம் உதயமாகும் அன்றே முதலாளியின் காட்டுதர்பாரை காட்ட நினைத்தான் பிரான்சிஸ். ஆனால் இந்த அடக்குமுறை தொழிலாளர்களை அஞ்சி ஓடுமாறு செய்யவில்லை.

இதுநாள் வரையிலும் மந்தைகளைப்போல அடிமையாக இருந்த தொழிலாளர்கள் முதன்முறையாக சினம் கொண்டு இந்த அநீதியை தட்டிக் கேட்டனர். தன்னிடம் பெல்ட்டால் அடிபடும் மந்தைகள் இப்போது கூட்டமாக வந்து எதிர்த்துப் பேசுகிறதே என்று உறுமிய பிரான்சிஸ் மேலும் மொத்தம் 25 தொழிலாளிகளை பணிநீக்கம் செய்கிறான். மிச்சமுள்ள தொழிலாளிகள் பிரான்சிஸின் சாதி, சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மட்டும் தொழிற்சங்க முயற்சிகளுக்கு முன்வரவில்லை.

இப்படி சனிக்கிழமை வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்கத்தை முறையாக ஆரம்பித்து நிர்வாகக் குழுவை தெரிவு செய்து போராட முடிவு செய்கின்றனர். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் இந்த சங்கத்தின் போராட்டத்தை முன்நின்று நடத்துகிறார்.

26.10.09 திங்களன்று நிறுவனத்தின் வாயிலில் மறியல் போராட்டம்.  அடாவடி முதலாளியின் கண் முன்னாலேயே நிறுவனத்தின் கதவுகளை இழுத்து மூடுகின்றனர் தொழிலாளர்கள். உள்ளே இருக்கும் வடமாநில தொழிலாளிகளோ பீதியில் உறைந்து போய் வேடிக்கை பார்க்கின்றனர்.

முதலாளியின் அழைப்பின் பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசு படை உடன் வருகிறது. மறியலில் வெற்றிவேல் செழியன் மற்றும் பு.ஜ.தொ.முவின் வாகன ஓட்டுநர் சங்கத்தின் ஐந்து தோழர்களும் அடக்கம். இவர்களைத் தவிர மற்றவர்கள் அங்கேயே வேலைபார்க்கும் ஓட்டுநர்கள். மறியல் என்பது தங்களது தொழிற்சங்க உரிமை என வாதிட்ட தொழிலாளர்களை சிலமணிநேர விவாதம், தள்ளுமுள்ளுக்குப் பின் இறுதியில் கைது செய்கிறது போலீசு.

மொத்தம் 21பேர் மீது 147, 294B,342, 352 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுராந்தகம் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். காவல் நிலையத்திலும், சிறையிலும் தொழிலாளிகளிடம் அவர்களது சாதியைக் கேட்டபோது “நாங்கள் தொழிலாளிகள், எங்களுக்கு சாதி கிடையாது. சொல்லவும் மாட்டோம்” என்று அவர்கள் போராடி நிலைநாட்டியிருக்கின்றனர்.  தொழிலாளிகளை ஒன்றுபடுத்தும்  வலிமையான வர்க்க அடையாளம் இருக்கும் போது பிளவு படுத்தும் சாதி எதற்கு என்று பேசிய தொழிலாளிகளை  போலீசு, சிறை அதிகாரிகள் முதன் முறையாகப் பார்த்தார்கள்.  இறுதியில் சாதியில்லாமலே அவர்களுடைய பெயர்களைப் பதிந்தார்கள்.

சங்கத்தில் சேரத் தயங்கிய தொழிலாளிகள் பிரான்சிஸின் ஊரையும், சாதியையும் சேர்ந்தவர்கள். சங்கத்தில் சேர்ந்தவர்களுக்கோ சாதி மயக்கம் இல்லை. இந்த கைது, வழக்கு, சிறை இவற்றையெல்லாம்  தொழிலாளிகள் முன்னர் கண்டதில்லை. காணாத வரைதானே அச்சம். கண்டபின் முன்னிலும் வேகமாய் போராட முடிவு செய்திருக்கின்றனர். தற்போது இரண்டு நாட்களுக்கு பிறகு பிணையில் வெளிவந்திருக்கும் அந்த தொழிலாளிகள் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் வேலையை உற்சாகமாக செய்து வருகின்றனர். பிரசுரம், சுவரொட்டி, தெருமுனைக்கூட்டம், மக்களிடம் பிரச்சாரம் என போராட்டம் சூடுபிடிக்கிறது. வேலையிழந்தாலும், வருமானமிழந்தாலும் இந்த தொழிலாளிகள் வர்க்க உணர்வு என்ற அற்புதத்தை உணர்ந்து பெற்றிருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்வுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் வசந்தத்தை கொண்டுவரும்.

தமிழ் சினிமா பண்ணையாரைப் போல தொழிலாளிகளை அச்சுறுத்தி ஆதிக்கம் செய்து பிரான்சிஸ், தன் வாழ்நாளில் முதன்முறை அச்சத்தை அனுபவித்திருக்க வேண்டும். தற்போது தனது ஊர்க்கார தொழிலாளிகள், லைசன்சு இல்லாத கிளீனர்களை வைத்து சில லாரிகளை இயக்கி வருகிறான். வெகுவிரைவில் இந்த சாதி அபிமானத்தில் இருந்து அந்த தொழிலாளிகளும் விடுபடுவார்கள். சாதி அபிமானத்தைத் துறந்து ஏற்கனவே ஒருவர் சங்கத்தில் சேர்ந்து விட்டார். இனிவரும் நாட்களில் பிரான்சிஸின் தர்பாருக்கு முடிவுரை எழுதப்படும்.

தொழிற்சங்கம் ஆரம்பித்த அன்றே போராட்டம், கைது, சிறை என ஆகிவிட்ட போதிலும் அந்த தொழிலாளிகள் அஞ்சவில்லை. தொழிற்சங்கமாக இணைந்த பின்னர்தான் தங்களது பலத்தை மட்டுமின்றி, சுயமரியாதையையும்  தொழிலாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த வலிமைதான் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் எதிர்க்கும் வல்லமையை அவர்களுக்குத் தந்திருக்கிறது.

சாதி, மொழி, இனம் கடந்த தொழிலாளி வர்க்க ஒற்றுமையை, இந்தியிலும், ஒரியாவிலும், தமிழிலும் எழும்பவிருக்கும் போராட்ட முழக்கங்களை விரைவிலேயே அந்த முதலாளி கேட்கவேண்டியிருக்கும். மொழி புரியாவிட்டாலும் அந்த முழக்கங்களின் பொருள் முதலாளிக்கு நிச்சயம் புரியும். புரிய வைப்பார்கள் தொழிலாளர்கள்.

ஆனால் கான்கிரீட் காடுகளை உருவாக்கும் இந்த தொழிலாளிகளின் போர்க்குணம், அந்தக் காடுகளின் ஏ.சி அறைகளுக்குள் அடிமைகளாய் மேய்க்கப்படும் ஐ.டி ஊழியர்களை தீண்டி எழுப்புமா?

போராடும் தொழிலாளர்களுக்கு வினவு சார்பில்  புரட்சிகர வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவுகள்

 1. தகவல்களுக்கு நன்றி. தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

  //அந்தக் காடுகளின் ஏ.சி அறைகளுக்குள் அடிமைகளாய் மேய்க்கப்படும் ஐ.டி ஊழியர்களை தீண்டி எழுப்புமா?//

  நிச்சயமாக எழுப்பாது என்று தீர்க்கமாகக் கூற முடியும். ஐ.டி ஊழியர்கள் பூர்ஷ்வா நிலையிலிருப்பவர்கள். அவர்களது சொகுசான வாழ்க்கை மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி அமைக்கப்பட்டது (அதில் அவர்களது பங்கு அதிகமில்லையென்றாலும்). அவர்களிடம் போராட்ட குணத்தை (நெடுங்காலமாகவே) எதிர்பார்த்துக் காத்திருக்கும் வினவை நினைத்து எனக்கு சிரிப்புதான் வருகிறது.

  • Whatever happens, you guys will say it is because of IT Employees.
   These orissa, bihar people worked in the the new bridge that was constructed at kathipara. So can i beleive from now on you and your supporters are not going to use it?

   Think of the other side of IT Employees. Lots of IT companies are having welfare foundations to which their employees contribute. How many people working in other sectors are doing this. This way IT employees are helping the society. No one will speak about the good side

   • shunmuga, you are mistaken… if you could read the short essay again you can easily understand that this is not against IT workers, but it is supporting them. Asking them to unionize to put an end to all the misery of long working hours, layoffs, depression, anxiety etc.

   • I dindnt see any such thing in the article,

    Anyway the comment was in reply to the statement from voice on wings

    ஐ.டி ஊழியர்கள் பூர்ஷ்வா நிலையிலிருப்பவர்கள். அவர்களது சொகுசான வாழ்க்கை மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி அமைக்கப்பட்டது (அதில் அவர்களது பங்கு அதிகமில்லையென்றாலும்).

    how did he know we are earning without putting any needed effort?

   • //how did he know we are earning without putting any needed effort//

    he is not saying that you are not putting efforts.. He is saying that to pay you more somebody has to be paid less.. I accept that it will take a great deal to understand this, but I am sure you can. Think about this You pay the maid in you house 2000 bucks a month for tidying your house, but you spend 15k on getting an expensive mobile. There can be innumerable examples like this. And as Voice on Wings says, you are not responsible for this unless you know about this…

    Also note the point that Voice on Wings acknowledges the statement from the essay

    ஆனால் கான்கிரீட் காடுகளை உருவாக்கும் இந்த தொழிலாளிகளின் போர்க்குணம், அந்தக் காடுகளின் ஏ.சி அறைகளுக்குள் அடிமைகளாய் மேய்க்கப்படும் ஐ.டி ஊழியர்களை தீண்டி எழுப்புமா?

    I also suggest you reading the related posts linked above
    ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!
    இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !

   • nobody is targeting you, and even if someone is it is only the corporates and MNCs who are sucking out your life by paying you a few dollar$ more than the others. Sucking you so badly that you are forced to become an alien in your own society.

    Look at you guys you are very well educated, great job, great money with perks and stuff… but you do not even have the right to unionize and fight the injustice made against you like mass lay offs, pink slips, salary cuts, extended working hours etc… This is what we want you to understand…

   • @mani,

    The article accuses us for sitting inside A/C hall built by hardwork of labours.
    The kathipara bridge was also built by their hardwork. so can i start accusing the users of the flyover.

    “அரசின் பொறுப்பை தட்டிக்கழிக்க தாங்கள் உதவினோம் என்ற குற்ற உணர்ச்சி எழும்புவதற்கு பதில் தங்களலால் இந்நிலைக்கு ஆளான மக்களை தூக்கிவிட அற உணர்ச்சி முன்நிற்பது வேடிக்கைதான்.”

    So if we are sucking labours blood, what about you.

    Are you sure that the farmer who produced the grain *you* eat, got enough to fullfil his life needs. Definetely not. So from now on can you stop eating..

    “பாலியல் வல்லுறவு செய்தவன் அப்பெண்ணையே திருமணம் செய்யுமளவு தயாள குணமுடையவன் என ஒரு வன் சொல்வது போல உள்ளது நீங்கள் சொல்வது”

    If you continue to eat then then, above stmt is applicable to you too.

    Before asking my platform and domain, tell me how you are making your bread. I will tell 1000 things about that

    Summa oruthana parthu kathurathala onnum nadakathu boss.

    Ellarum nalla irukanumnu ninaikanum.

   • This incident happened to me 3 months back

    I brought a PC to my native in a moffusil bus. When i got down from the bus, the loadmen gathered there, came and said only they can unload any luggage from the bus. Just for unloading it they asked for rs.100 Absolutely day robbery. I am healthy enough to do it myself.

    Now think what gave them the courage for such a thing? Its because they are some 5 to 6 men. A group. In my place these guys gather in important places and hung a board which is labeled with some union names.

    This is the actual way it works in our society. When we have a problem the union may helps. But these are the side effects of an union.

  • The article accuses us for sitting inside A/C hall built by hardwork of labours.///////\

   Shanmuga, The article does NOT accuse you please read the sentence again

   ஆனால் கான்கிரீட் காடுகளை உருவாக்கும் இந்த தொழிலாளிகளின் போர்க்குணம், அந்தக் காடுகளின் ஏ.சி அறைகளுக்குள் அடிமைகளாய் மேய்க்கப்படும் ஐ.டி ஊழியர்களை தீண்டி எழுப்புமா?

   It is asking whether the IT Employees will get inspired by the revolt of the Construction workers, form a union for themselves and fight against being treated as a glorified slaves

 2. //இப்படி குறைந்த கூலிக்கு கடுமுழைப்பு தேவைப்படும் வேலைகள் அனைத்திலும் இம்மாநில தொழிலாளர்களே வேலை செய்கின்றனர். இப்போது சென்னை முழுவதும் நிலைமை இதுதான்.//

  தமிழகத்தின் பெரும்பாலான தொழில்நகரங்களிலும் இது தான் நிலைமை.

  இங்கே அவர்களுக்கு ஒரு முறையான தங்கும் வசதி கூட செய்து தரப்படுவதில்லை.. இவர்கள் தங்க முதலாளிகள் அமைத்துத் தந்திருக்கும் தரக் கூரையோடு கூடிய ஷெட்டுகளை விட பன்றிகளை அடைக்கும் தொழுவம் கூட நன்றாக இருக்கும்..

  பெரும்பாலும் ஒரிசா, பீகார், மேற்கு வங்கத்திலிருந்து வரும் இந்தத் தொழிலாளர்கள் புதிய இடம், புதிய மொழி பேசும் மக்கள் என்று வினோதமான ஒரு சூழலில் வாழ்வதால் ( இவர்களுக்கு அமைத்துத் தரப்பட்டிருக்கும் ஷெட்டுகள் ஊருக்கு ஒதுக்குப் புறமாகவே இருக்கிறது – எங்கள் பகுதியில்) உள்ளூர் மக்களோடு சகஜமாக கலந்து பழக முடிவதில்லை.. மேலும் இவர்கள் செய்யும் வேலைகளை இவர்கள் வருகைக்கு முன்பு உள்ளூர் தலித் மக்கள் செய்து வந்தார்கள் – இப்போது அவர்கள் வேறு வேலைகளுக்கும் வேறு நகரங்களுக்கும் குறை கூலிக்கு விரட்டப்பட்டிருக்கிறார்கள்.

  இப்படி வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து தங்கியிருக்கும் முறைசாராத் துறைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் பற்றிய எந்தக் கணக்கெடுப்பும் கிடையாது – எந்த பாதுகாப்பும் கிடையாது.

   • ஏம்பா எழில், … நம்மாளுங்க ஆந்திரா , கர்நாடகா, பம்பாய் பக்கம் போனா தேவலாம் ஆனா அவங்க இங்க வற்றது நம்மாளு வேலைய தட்டிப்பறிக்கவா … பால் தாக்கரே கூட இத சொல்லித்தான் மதராஸி அடிங்கறான்.

 3. போராட்டம் வெற்றி பெரும் !!!
  தங்கள் கருத்து சரிதான் ஒவ்வொரு மனிதனும் யோசிக்க வேண்டியது.
  //இப்படிப்பட்ட மோசடிக் கலவைதான் இந்தக் கம்பெனியிலிருந்து கல்பாக்கம் அணுமின்நிலைய வேலைகளுக்கும், பல மேம்பாலங்களுக்கும், அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் அனுப்பப்படுகிறது.//
  தமிழர் யாவரும் சிந்திக்க வேண்டியது
  ஆனால் எதற்காக ஐ.டி மக்களை முன்மொழிகீறீர்கள் என தெரிய வில்லை .
  //அடிமைகளாய் மேய்க்கப்படும் ஐ.டி ஊழியர்களை//
  அதுவும் அவர்களை சிறுமை படுத்தி…….

 4. தோழர்கள் தொடர்ச்சியாக போராடி, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  //ஆனால் கான்கிரீட் காடுகளை உருவாக்கும் இந்த தொழிலாளிகளின் போர்க்குணம், அந்தக் காடுகளின் ஏ.சி அறைகளுக்குள் அடிமைகளாய்
  மேய்க்கப்படும் ஐ.டி ஊழியர்களை தீண்டி எழுப்புமா?//

  பதிவுக்கும் இந்த வார்த்தைகளுக்கும் சம்பந்தமில்லை. எடுத்துவிடலாம் என்பது என் கருத்து

 5. முதலாளியின் பணத்தைப்பார்க்காமல் தொழிலாளிகளுடைய ஓட்டுகளுக்காகவாவது அரசு ஆவன செய்யவேண்டும்.

  நாட்டில் இருக்கும் விலைவாசியில் இவர்களின் சம்பளத்தை வைத்துகொண்டு, இவர்களின் தலைமுறையை எப்படி முன்னேற்ற முடியும்.

 6. Hi,
  Whatever you write is having some truth or truth. I accept it. Please write about some good things happeneing in india as well and do some thing, if possible. I came to know some one who left job and feeding mentally ill people. This will create positive attitude to people.
  Dinesh

 7. அந்த சிமிட்டிக்கலவையைப்போலவே நாளுக்கு நாள் அவர்களின் போராட்டம் உறுதிப்பட்டு வெற்றியை ஈட்டட்டும்
  தோழமையுடன்செங்கொடி

 8. Nice to see your article about francis. One thing we need to understand. But I could see there is mistake in employees also. See, right now in chennai (almost all tamilnadu) not like 10 or 15 years before. There are lot of chance to grow yourself and everybody is having money. Again there is lot of ways. If employee don’t like to work in francis company they can go outside and seek good job. Because I discussed with so many travels owners,. They are feeling that they don’t drivers. Because of that they are selling their cabs/vans/mini buses. That is very nice job in terms of work as well as money. Today we have n number of alternatives. There is no point in blaming francis and taking this to too much level. Because employee has to suffer ( in terms of money and family). One thing that we need to keep it in mind that francis never go to change . I feel that it is all un necessary effort. Employees has to think. Choose right alternative if possible suggest others rather than creating un – necessary voice.

  • குமார்,
   நல்ல யோசனை சொல்றீங்க! நீங்க சொல்கிற மாதிரி பார்த்தா, தொழிற்சங்கமே தேவையில்லை. போராட்டம் தேவையில்லை. முதலாளிகள் அடுத்து ஊரிலிருந்து ஆள் அழைத்து வந்து சுரண்டுவார்கள். கொழுப்பார்கள்.

 9. உழைக்கும் வர்க்கத்தின் எதிரிகள் என இரண்டை குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் – ஒன்று பார்ப்பனீயம், மற்றொன்று முதலாளித்துவம்.

  இந்தியாவில் உழைக்கும் மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் கிளர்ந்தெழுந்து அடிமை விலங்கை உடைக்க முற்பட்டால் ஒன்று அவர்களை சாதியை முன்னிறுத்தி ஒடுக்குவதும் அவர்களை தீவிரவாதியாக சித்தரிப்பதும் தான் இந்திய ஆளும் வார்க்கத்தின் கொள்கை. கேரள மாநிலம் varkala அருகே Dalits Human Rights Movement (DHRM) எனும் அமைப்பில் போராடி வரும் தலித் மக்களை கேரள அரசும் சிவசேனா அமைப்பினரும் தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர். இதுதான் இம்மக்களின் தலைவிதியா?

 10. இந்தக் கட்டுரைக்கு அதியமான் அண்ணாச்சி ஆஜராகி எங்களது ஊர்க்காரவுகன்னு சொல்லிக்கிட கேவலமா இருக்குற பிரான்சிஸ் முதலாளிக்கு வக்காலத்து வாங்குவாகன்னு எதிர்பாக்கேன். இன்னும் காணமே? அப்புறம் அதியமான் அண்ணாச்சி அவுக நிறுவனத்துல தொழிலாளிகளுக்கு போனஸ் எல்லாம் கொடுத்தாகளா இல்லை பட்டை நாமத்தை போட்டாகளான்னு தெரிஞ்சிக்கட அசைப்படுதேன். 

 11. சண்முகா

  கத்திப்பாரா பாலத்தை ஏன் இவர்கள் பயன்படுத்தக் கூடாது என நினைக்கின்றீர்கள். அதனை விளக்க முடியுமா..

  ஐடி நிறுவனங்களின் சமூக அக்கறை அதன் ஊழியர்களுக்கு அவ்வளவாக புரிந்துவிடுவது இல்லை. முதலில் இப்படி செய்வதற்கு அரசு தனது பொறுப்பிலிருந்து விலகி விடும். நிறுவனங்களுக்கு அரசு சில கைமாறுகளைச் செய்வதை நான் நேரடியாக அறிந்திருக்கிறேன். இந்த நடைமுறையை பயனாளிகளிடம் பிரச்சாரம் செய்வதன் மூலம் ஒரு உயர்ந்த‌ தொழிலாளிவர்க்கத்தினரை மக்களுக்கும் தங்களுஃக்கும் இடையில் பாலமாக பயன்படுத்துகின்றனர் முதலாளிகள். பாலங்களுக்கு அரசின் பொறுப்பை தட்டிக்கழிக்க தாங்கள் உதவினோம் என்ற குற்ற உணர்ச்சி எழும்புவதற்கு பதில் தங்களலால் இந்நிலைக்கு ஆளான மக்களை தூக்கிவிட அற உணர்ச்சி முன்நிற்பது வேடிக்கைதான். அதாவது பாலியல் வல்லுறவு செய்தவன் அப்பெண்ணையே திருமணம் செய்யுமளவு தயாள குணமுடையவன் என ஒரு வன் சொல்வது போல உள்ளது நீங்கள் சொல்வது…

  நீங்கள் ஐடி துறையில் இருந்தால் உங்களது பிளாட்பாரம் மற்றும் டுமைன் என்ன என்றும் விபரங்கள் சிலவற்றை தோராயமாக சொன்னால் கூட இதனை நான் எளிதாக விளக்க முடியும். அதாங்க உங்க எபர்ட்ட பத்தி

 12. சண்முகா

  நீ ஏசி அறையில் உட்கார்ந்து இருப்பது தவறு என்று சொல்வில்லை. முதலில் கோர்வையாக படிக்கவும், படித்த்தை புரிந்து கொள்ளவும் முயற்சியுங்கள். தமிழை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத பலர் இத்துறையில் இருப்பது குறித்து வருத்தமாக உள்ளது…

  அடுத்து நீங்கள் தொழிலாளியின் இரத்த்த்தை உறிஞ்சுவதாக நான் இதுவரை சொல்லவில்லை. மாறாக நீங்களே முன்வைத்த்தால் கேட்கிறேன். ஐடி துறைக்கு வழங்கப்படும் அதிகப்படியான சம்பளம் இதனைவிட அறிவுத்திறைமையும், மூளை உழைப்பும் உள்ள பொதுத்துறை அறிவியல் ஆராய்ச்சி துறைகளுக்கு இல்லையை அது ஏன் எனச் சொல்ல முடியுமா.. உங்க டுமைன் மற்றும் பிளாட்பார்ம் கேட்டதற்கு காரணம் அது எப்படி மற்றவற்றை விட முதனைமையானது என உங்களை விளக்க சொல்லத்தான்.. இது மற்றவர்களைப் பார்த்து கத்துவது அல்ல•.

  சோசியல் ரெஸ்பான்சிபிலிடி என்பது முதலாளிகளின் தொழில் அமைதியை ஒரு நாட்டில் பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதால்தான் அவர்களே அறிமுகம் செய்கின்றார்கள் சிலருக்கு தங்களது என்ஜிஓ நிறுவன மூளைசலவை மூலம் செய்ய வைக்கின்றனர். இதன் மூலம் இதுவரை அரசு அம்மக்களுக்கு செய்துவந்த உரிமைகளை நீங்கள் தலையிட்டு பிச்சையாக்கி இருக்கின்றீர்கள். இது அயோக்கியத்தனமா இல்லையா…

  • “அதாங்க உங்க எபர்ட்ட பத்தி”

   இது நக்கலா, இல்ல இதுக்கும் எதாவது விளக்கம் கொடுபீங்கள?
   எனக்கு இது நக்கலா தான் தெரியுது.

   “இதன் மூலம் இதுவரை அரசு அம்மக்களுக்கு செய்துவந்த உரிமைகளை நீங்கள் தலையிட்டு பிச்சையாக்கி இருக்கின்றீர்கள். இது அயோக்கியத்தனமா இல்லையா…”

   If government do something its harmless. If the same is done by someone else you will say its a harmful thing.

   Unga logic … 🙁

 13. தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  நண்பர் சண்முகா, நீங்கள் மின்சாரத்தை, நீரை, சாலையை பயன்படுத்துவதற்கு ஏன் உங்கள் வீட்டில் வசிப்பதற்கே வரி கட்டுகிறீர்களே.. அது எதற்காக..? அரசாங்கம் என்பது நமது நாட்டில் ஒரு வரி வசூலிக்கும் “கம்பனி” என்ற அளவில்தான் உள்ளது.. அரசாங்கம் தனது மக்களுக்கு செய்யும் கடமையை நீக்கி/மறைத்து , எதோ சில தொண்டு நிறுவனங்கள் போடும் பிச்சையாக உள்ளது சரியா?

  • ok, if all the NGOs stop functioning, do you think then goverment will interfere then in everything and do the needful?

   Until our people become sane enough to choose a government that do good to them, I feel these activities are necessary.

  • நண்பரே, பிரச்சினை ஒரு நல்ல அரசாங்கத்தை தேர்ந்து எடுப்பதில் தான் உள்ளது என நீங்கள் கருதுவது சரியானதா? தமிழகத்தில் கடந்த 2௦,3௦ ஆண்டுகளாக அ.தி.மு.க, தி.மு.க என இரண்டு கட்சிகள் ஆட்சி செய்து என்னத்தை கிழித்து விட்டன… அவனவன் குடும்ப வாரிசுகள் மதிய மந்திரி பதவியில் உள்ளனர். இந்த இரு கட்சிகளை தவிர்த்து வேறு ஏதாவது மாற்று கட்சியை, தேர்ந்து எடுத்தால் ஐந்து வருடங்களில் தமிழகம் மாறி விடுமா..? இங்கு நம் நாட்டில் உள்ள சமூக, அரசியல் அமைப்பில் எப்படிப்பட்ட அரசாங்கம் வந்தாலும் அதன் மூலம் மக்களின் வறுமை குறைய போவது இல்லை.. நமக்கு தேவை ஒரு புதிய சமூக, அரசியல் அமைப்பு…
   மக்கள் இணைந்து போராடாமல் எதுவும் அவர்களுக்கு நிரந்தரமாக கிடைக்காது. மக்கள் இன்னும் அந்த அளவுக்கு அறிவு பெறவில்லை என்றால் அவர்களை விட கொஞ்சம் அதிகம் அறிவு பெற்ற நீங்களும், நானும் அவர்களுக்கு அதனை புரிய வைப்பது அவசியம் இல்லையா..?

   • நல்லா சொன்னிங்க Mr.பகத்… மக்களே இங்க சொரண கேட்டுப் போய் பிழைப்புவாதம் மட்டுமே குறி என்றிருக்கும் போது நல்ல அரசாங்கம் எப்படி வரும்? அப்படி வந்தாலும் இப்படிப்பட்ட மக்களை வச்சிக்கிட்டு என்ன பயன்…

 14. இணையம் என்பது ஒரு அரட்டைக் கச்சேரி என்பது சரியான மதிப்பீடுதான். ஒரு புக இதழை தொடர்ச்சியாக படிக்கும் நபருக்கும் வினவின் பின்னூட்டமிடுபவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தங்களையே சுயவிமர்சனம் செய்து கொள்ள வைத்தது புக. ஆனால் இங்கு இது போன்ற நிகழ்வை காணமுடிவதில்லை. அவரவர்கள் தத்தம் கருத்துக்களிலேயே நிலைகொண்டுள்ளனர். தமிழகத்தின் தமிழர்கள் சினிமாக்காரன் பின் செல்வதை கேலி செய்பவர்கள், ஒரு தவறான போராட்டத்தின் மூலம் தனது எண்ணற்ற சகோதர சகோதரிகளை காவு வாங்கிய தனது தலைவனின் மேல் விமர்சனம் வைப்பதில்லை. தமிழகத்தின் மீனவர்கள் மீது இவ்வளவுதானா அக்கரை என கிண்டல் செய்யும் இவர்கள்,போர் நடைபெற்ற சமயத்தில் புலம்பெயர் நாடுகளில் நடத்திய‌ போரட்டங்களைப் போல் இலட்சக்கணக்கான மக்கள் முள்வேலிகம்பிக்குள் அவதிப்படும் இச்சமயத்தில் நடத்தவில்லை. வன்னித்தமிழனின் அரசியல் தலைவிதியை உங்களால் மாற்றமுடியவில்லை என குற்றம் சுமத்துகிறீகள். உண்மைதான் அதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்.ஏற்றுக்கொள்கிறோம். தோழர் மாவோவின் தலைமையில் நடந்த சீனப்புரட்சியின் போது சீனத்திலிருந்து வெளியேரியவர்கள் எல்லாம் மீண்டும் திரும்பி வந்து புரட்சியை தங்கள் தோள்களில் தாங்கினர். அதுபோல் ஏன் உங்களால் பங்குகொள்ள முடியவில்லை என எண்ணிப்பாருங்கள்.பிழைப்புவாதத்திலும் நுகர்வுகலாச்சாரத்திலும் சீரழிந்துவிட்ட  தமிழகத்தின் தமிழர்களைப்போல் புலம்பெயர்ந்தவர்களும் மாறிக்கொண்டிருக்கிருக்கின்றனர். இதே நிலை நீடித்தால் இனிவரும் காலங்களில் நங்கள் மட்டுமல்ல உங்களாலும் வன்னி மக்களுக்காக எதையும் செய்ய இயலாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க